Tuesday, October 8, 2019

எங்கேயோ கேட்ட குரல்


                                   


                          எங்கேயோகேட்ட குரல்
                          --------------------------------------------

எங்கேயோ கேட்டகுரல்

 டிரிங் டிரிங்

இந்த டெலிபோன் மணி அடித்தாலேயே உடம்பெல்லாம் என்னவோ செய்கிறது  ஷாலினிக்கு இதை மாலதியும்கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள் ஆனால் இது பற்றி ஏதும்கேட்கவில்லை  டெலிபோன் சம்பாஷணை   அவரவர் சொந்த விஷயம் ஆனால்  இரண்டு முன்று நாட்களாகவே டெலிபோன்மணி அடித்தாலேயே ஷாலினி சிலிர்ப்பதும் முகம் வெளிறிப்போவதும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை

“என்னம்மா ஷாலு நானும் க்வனித்துக் கொண்டுதான் வருகிறேன் அப்படி என்ன விஷயமிந்தடெலிபோன் மணி யில் ?”

 ஒண்ணும்  இல்லம்மா  வெறும் நியூசென்ன்ஸ் கால்” என்று ஏதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தாள் ஷாலினி

”வெறும் நியூசென்ஸ் காலா இருந்தா கட் பண்ணவேண்டியதுதானே”

 ”இல்லம்மா இது அதுக்கும் மேல.  தொடர்ந்து கேட்க முடியாத வார்த்தைகள் ச்சே ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ வக்கிர புத்திகள் தொடர்ந்து கால்கள்  ஒரு தடவை நீங்களே கேட்டுப்பாருங்கள் அவ்வளவு அசிங்கம் ”

”நாம்போலீசில் ஏன் கம்ப்லைண்ட் செய்யக் கூடாது”
  
”இவர் கிட்ட முதல்ல சொல்லிப் பார்க்கிறேன் பிறகு உசிதம் போல செய்யலாம்”  ]பேசிக்கொண்டே இருக்கும்போதே மீண்டும் டெலிபொன் மணி ஒலித்ததுஷாலினி எடுக்கும் முன்  அவள் அம்மா  எடுத்தாள்

”மணி அடித்தால்உடனே எடுக்கமாட்டியா செல்லம்”

 பேச்சக்கேட்டதும்ஷாலினியின் அம்மாவுக்கு கோபம்வந்தது

”யாருடா நீ நாயே ஏண்டா போன் போட்டு தொந்தரவுசெய்கிறாய்”

 ”அப்போ நீ நான்சொல்வதைக் கேளுபோனை ஷாலினி கிட்டக் கொடு உங்கிட்ட என்னபேச்சு  எனக்கு என் டார்லிங் ஷாலினி தான் வேண்டும் கிழவி கிட்ட என்ன பேச்சு”
 அம்மாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது

 மாலையில் கணவன் வந்ததும் ஷாலினி அவரிடம்செய்திகளைச் சொன்னாள்  அம்மாவும் சொன்னாள்  கூடவே அம்மா ஒரு விஷயமும்  சொன்னாள்
“ போனில் பேசிய குரல் எங்கோ கேட்டமாதிரி இருக்குது இன்னொரு முறைபோன் வந்தால் கொஞ்சம் பேச்சுக் கொடு எங்கே பார்த்தான்  எங்கு பார்க்கலாமென்று இந்தமாதிரி” என்றாள்
 மகனிடம் இந்தக் குரல் பரிச்சயப்பட்டது போல் இருக்கு அநேகமாக  தெரிந்தவனாக இருக்கலாம் நன்றாக ஊர்ஜிதப்ப்டுத்திக் கொண்டு  என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றாள்

எதிர்பார்த்தபடியெ சிறிது நேரத்தில்மீண்டும் டெலிபொன் அடித்தது வந்தபோன் எங்கிருந்து வருகிறது  எந்தநம்மபரில் இருந்துவருகிறது என்று  குறித்துக் கொண்டார்கள்  ஷாலினியும்  போனில் வந்து சற்று உரையாடினாள்  பேசினவன்  இவளைப்பற்றி எல்லாம்தெரியுமென்றான்  பிறகு போன்  எங்கிருந்துவருகிறது  என்று ட்ரேஸ்  செய்ய முயலவேண்டாம் என்றும் சொன்னான் எல்லா  நேரமும் ஒரே போனில்பேசமாட்டேன் என்றான்
மகனும் பேச்சை கேட்டான் கோபம் உச்சஸ்தாயிக்கு போய் விட்டதுஎன்றாலும் அம்மா அடக்கி வாசிக்கச்சொன்னாள் அந்த நேரத்தில் மகனின் நண்பன் வந்தான் நல்ல  ஆஜானுபாகுவான   சரீரம் நாடகங்களில் நடிக்க ஆர்வமுள்ளவன் அம்மாவுக்கு ஒரு யோசனை தொன்றியது நண்பனிடம் நிஜ வாழ்வில்  நடிக்க விருப்பமாஎன்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா என்றான் 
அவனிடம் வரும் நியூசென்ஸ் கால்கள் பற்றிக் கூறி அம்மாதிரி  கூப்பிடுபவன்குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கு  அது சரியானால் அவனைக் கண்டுபிடித்து மிரட்டி  வைக்கவேண்டும்
 ”அது சரிம்மா குரலை வைத்து ஆளைஅடையாளம் காண்பது முடியுமா என்னும்சந்தேகம் கிளப்பினான் பழைய புகைப்படங்களில்  இருந்து  சந்தேகமிருப்பவனை அடையாளம் காட்டி அந்த போட்டோவையும் கொடுத்தார்கள் நண்பனொரு போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் அந்த போன்செய்பவனை அடையாளம் சரியாக இருந்தால் மிரட்ட் வைக்க வேண்டும் தேவைப்பட்டால் இரண்டு போடு போட்டாலும் பரவாயில்லை ஆனால் அதிகம்பலப்பிரயோகம்வேண்டாம் என்றும்கூறினார்கள்

 அடுத்த போன்கால் வந்ததும்  ஒரு பப்ளிக்  பூத்திலிருந்து வருவதும்  அந்த பூத் இருக்கும் இடம் தெரிந்து கொண்டு மகனும்  நண்பனும் கிளம்பினார்கள் அவர்கள் போய் இருக்கும் போது போன்  வந்தால் அது எங்கிருந்துவருகிற்து  என்று கூறும்படியும்சொல்லிச்சென்றார்கள்   போன் வருவதையே வேண்டாதவர்கள் இப்போதுபோன் வராதா என்றுகாத்திருந்தார்கள்

அவர்கள்போய் ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது  அவர்களால் அவன் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்று தெரியாமல் காத்டிருந்தார்கள்
சற்று நேரத்தில்   மகனிடமிருந்து போன்வந்தது குறிப்;பிட்ட போன்  பூத்திலிருப்பவரால் எந்த பிரயொசனமும் இல்லைஎன்று சொன்னான் 
சொல்லி வைத்தாற்போல்  போன்கால்  வந்ததுஇம்முறை அவனிடமிருந்து மிரட்டல்லாகவே போன் வந்தது

”மயிலே மயிலே இறகு போடுஎன்றால்ப் போடாவிட்டால் அவளைப்பற்றி ஊடகங்களுக்கு  தெரியப்படுத்துவதாக மிரட்டினான்

””என்ன ஒரு வேளை என்னோடு இரு என்றுதானே சொல்கிறேன்  கிடைக்கும் சுகம் இருவருக்கும்தானே””  என்று என்னவெல்லாமோ சொல்லி வழிந்தான் ஒரு வழியாய் அவன் போனை வைத்ததும்  எங்கிருந்து வந்த கால் என்று தெரிந்தது  பொதுவாகபப்ளிக் பூத்தாகவே உபயோகப்படுத்தினான்  அவர்களும் மகனுக்கும் நண்பனுக்கும்  தெரியப்படுத்தினார்கள்
 விஷயங்கள் உடனுக்குடன் நடந்ததால்  நண்பனும் மகனும் உடனே அந்தபோன் பூத்துக்குச்சென்று  போட்டொவைக்காட்டி இவன் இங்கிருந்தானா  இங்கிருந்து போன் செய்தானா என்றுகேட்டார்கள் இவர்கள் நல்லகாலம சில நிமிஷங்களுக்கு முன் தான்  வந்தான் என்றும் அவன் அடிக்கடி வரும் பூத்தான்  என்றும் தெரிந்தது
 
மகனின் நண்பன்  மகனை ஓரிடத்தில் நிற்க வைத்து மோட்டார் சைக்கிளில் தேடத் துவங்கினான்  அவன் மகனை விட்டு வந்தது நல்லதாகி விட்டது இல்லாவிட்டால் அவனைப்பார்த்ததும்  எசகு பிசகாக ஏதாவது நேரலாம்
    போட்டொவில் இருந்த ஆள் ஒருவீட்டுக்குள்  நுழைந்து  சன்னலோரம் இருந்த ஒரு சேரில் அமர்ந்தான்  மகனின் நண்பன் ஒரு மிடுக்கான தோரணையில்
”வீட்டில் யார்” என்று சத்தமாகக் கேட்டான்  அடுத்துள்ளவர்கள் என்ன ஏது என்று  விசாரிக்க  தனக்கு ஒரு கம்ப்லைண்ட் வந்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்கவந்தபோலீஸ் அதிகாரிஎன்றும்கூறினான்   இவனது தோரண்யில் அவர்களும் நம்பினார்கள்
 சத்தம் கேட்டு போன் செய்பவனும் வெளியே வந்தான்  அவன்கழுத்தைப்பிடித்து ”நீதான் போன்செய்து கலாட்டா  செய்கிறாயா நடடா போலிஸ் ஸ்டெஷனுக்கு” என்று அவனை இழுத்து கொண்டு போக முயன்றவனைப் கையை கூப்பி காலைப் பிடித்து மன்னிக்க  வேண்டி நின்றான்   இதை பார்த்த அவன் மனைவியும்   அடுத்த வீட்டுக்கார்களும்இனி அவன் அம்மாதிரி போனில் பேசமாட்டான்  என்று  வாக்குறுதி அளித்தார்கள் போலிஸ் வேஷம்போட்ட நண்பனும்   அவனை எச்சரித்து  விட்டான்  இதற்கு மேல் அங்கு இருப்பது உசிதமல்ல என்று நண்பனும்  மோட்டார் சைக்கிளில் தன் நண்பனைத்தேடிச்சென்றான்
 வீட்டுக்குச் சென்று விலாவாரியாக  எல்லாவற்றையும் கூறினான்  அவனுக்குஏகப்பட்ட பாராட்டுகள் ஷாலினிக்கு ஏதோ ஒரு பாரம் இறங்கியதாகத் தோன்றியது  ஷாலினியின்  அம்மாவுக்கு தன் செய்கை க்காக தன்னையே பாராட்டிக் கொண்டாள் மாறாக போலீசுக்குபோய் இருந்தால் குடும்பத்துக்கே எத்தனை அவமானமாய்  இருந்திருக்கும்  மகனின்  நண்பனுக்கும்  மகிழ்ச்சி தாள வில்லை  அசல் போலீஸ் போலவே நடித்துஒரு சிக்கலை நீக்கியதில் மகிழ்ச்சி இருந்தது 

   
இதுவரை பதிவிடாத கிருஷ்ணா  ஓவியம் 





23 comments:

  1. நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கதை சரிதான் செல்போன் வருவதற்கு முன்பு நடக்கும் சம்பவங்கள் மாதிரி இருக்கிறதே ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சம்பவங்கள் கற்பனையே இரண்டு வகைப் போன்களும் புழக்கத்தில் இருந்திருக்கலாம் அல்லவா

      Delete
  3. அருமையான கற்பனை கலந்த கதை. பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. பாரட்டுக்கு நன்றி சார்

      Delete
  4. ஒரு தற்செயல் என்ன என்றால்,  எங்கள் அலுவலகத்துக்கு இதே போல ஒரு ஃபோன் வருகிறது.  ஆள் யாரென்று தெரியும்.  ஆனால் எங்கிருக்கிறான் என்று தெரியாது. ஒரு பெண் ஊழியர் பற்றிய இதே போன்ற அசிங்கப் பேச்சுகள்.  போலீசில் கம்பிளெயின்ட் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தவர் என்பதால் போலீசுக்குப் போக தயக்கம் இருக்கலாம்
      தெரிந்தவரென்று நிச்சயமானல் இருப்பிடம்போய் தட்டு தட்டலாம்

      Delete
  5. மேலே மயில். கீழே கிருஷ்ணா. நடுவிலே ‘குரல்’. புரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. மேலெ மயில்குட் மார்னிங் சொல்கிறது கீழே கிருஷ்ணா இதுவரை பதிவிடாத என் ஓவியம் நடுவில்எங்கேயோ கேட்டகுரல்கதை புரியாமல் இருக்க வழி இல்லையே

      Delete
  6. இந்த மாதிரி இல்லைன்னாலும் பணம் கேட்டு, உதவி கேட்டு, கன்னாபின்னாவென தொலைபேசி அழைப்புக்கள் வரும். இப்போ அலைபேசியில் ஏதேனும் வங்கி அல்லது வேறே யாரானும், அந்தப் பரிசு கிடைத்திருக்கு, இந்தப் பரிசு கிடைத்திருக்கு, நடிகரோடு டின்னர் என வருகின்றன. அதிலும் ஓர் பெண்மணி 10000/-மதிப்புள்ள முத்துமாலை எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பதாகவும், அதைப் பெற வேண்டுமானால் நடிகர் சூர்யாவுடன் டின்னர் சாப்பிடக் குறிப்பிட்ட ஓட்டலுக்கு முன்பதிவு செய்து பணம் கட்டச் சொன்னார். எனக்கு சூர்யாவையே பிடிக்காது என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிட்டேன். இது நடந்தது சுமார் ஒரு வருஷம் முன்னால்!

    ReplyDelete
  7. சரியான காரியம் செய்தீர்கள்

    ReplyDelete
  8. மயில் வீடியோக்கள் இப்படி நிறையப் பார்த்ததுண்டு.. மயில் என்றாலே அழகுதான்.

    கிருஸ்ணர் ஓவியம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. இந்த மயில் உங்களை வரவேற்க வீடியோ ஓவியம்பற்றி சொன்ன நீங்கள் பதிவு பற்றி ஏதும் கூறவில்லையே

      Delete
  9. சிறந்த கற்பனை; ஆண்களுக்கும் பெயர் சூட்டியிருந்தால் இன்னம் தெளிவாய் இருந்திருக்கும் .

    ReplyDelete
  10. பல கதைகள் கண்டும் கேட்டும் கிடைக்கின்றசெய்திகளின் கற்பனைத் தொகுப்பே கதைகளெழுதும்போது நான் சிரமப்படுவது பாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவதில் தான்

    ReplyDelete
  11. நாட்டில் அங்குமிங்கும் பலவாக நிகழ்ந்து கொண்டு இருக்கும் விஷயம் ஐயா அவர்களின் கைவண்ணத்தில் அபாரம்... அருமை...

    ReplyDelete
  12. >> நான் சிரமப்படுவது பாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவதில் தான்.. <<

    உண்மை தான்...

    ReplyDelete
  13. எழுத்தாளர்களுக்கு இருக்கும் சிரமம் அறிகிறேன் தெரிவித்ததற்கு நன்றி

    ReplyDelete
  14. காலையில் எழுந்தவுடன் எனது மெயில் படிக்க, ஜி மெயில் என்று அடிக்க துவங்கிய உடனே ஜி எம் பி அட் என்று பிரவுசரில் வருகிறது. என்றோ உங்கள் பதிவுக்கு வந்தது கம்ப்யூட்டர் நினைவுக்கு கொண்டு வந்து என்னை திசை திருப்பி விட்டது .
    நமது அன்றாட வாழ்வில் சில வக்கிரங்கள் இருப்பதை காண முடிகின்றது.    சிலவற்றை ஒதுக்கி விடுகிறோம். சிலவற்றை எதிர் கொள்கிறோம். சிலவற்றை முடிக்கிறோம். சிலவற்றால் நாமும் சிதைபடுகிறோம்.  வக்ரமான சிந்தனை, பேசசு , செயல் ( எழுத்து உட்பட ) காலத்தின் பரிமாண வளர்சசி போலும் ! 
    தீபாவளி அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  15. காலையில் எழுந்ததும் இந்த மாதிரி அடிக்கடி நிகழட்டும் நன்றி சார்

    ReplyDelete