நினைவில் நீ நாவ ல் பிடி எஃப் ஆக
-----------------------------------------------------
சில செய்திகள் மனசுக்கு இதம் தருகின்றன அவற்றை நம்கவனத்துக்கு கொண்டு வருபவர் பாராட்டலுக்குரியவர்கள் சில நாட்களுக்கு முன் முனைவர் ஜம்புலிங்கம் என் எழுத்தின் சில வரிகளைஒருவர் எடுத்தாண்டு எழுதி இருந்ததை கூறி மகிழ்வித்தார் நம் எழுத்துகள்நாம் அறியாமலேயே வாசிக்கப்படுகின்றன என்பது மகிழ்ச்சி தருகிறது என் மன திருப்திக்காக எழுத துவங்கினேன் சில நாட்களுக்குப் பின் என்ன எழுதுவது என்னும் தேடலே நிறைய இருந்தது
எழுதியவற்றை சேமிப்பில் வைக்கவும் நாமும் எழுத்தாளர்தான் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளவும் புஸ்தகாவில் சிலவற்றை மின்னூலாக்கினேன் பிறர் அவற்றை படிக்க வேண்டுமென்று கருதி பலருக்கு என் நூல்களை பரிசளித்தேன் அப்படியாவது படிக்கிறார்களா என்று பார்க்கத்தான் ஆனால் அந்தோ வெகுசிலரே படித்ததாகக் கூறினார்கள் என்னை பிரபல ஆசிரியராகப்ளாக் வாசகர்கள்கருதவில்லை போலும்
இது இவ்வாறிருக்க நம் எழுத்துகள் படிக்கப்பட்டு மேற்கொள் காட்டப்படுவதும் அறிந்தால் மகிழ்ச்சிதானே
அண்மையில் இன்னொரு விஷயமும்தெரிந்தது நான் எழுதி இருந்த ஒரே நாவல் புஸ்தகா இல்லாமல் வேறு ஒரு நிருவனத்தாலும் டெலெக்ராம் ஆப்பில் வந்திருக்கிறதுஎன்று செய்தி கிடைத்தது அதை டௌன் லோட் செய்து இலவசமாகப் படிக்கலாம் PDF இணைப்பையும் தருகிறேன் இது சரியோ இல்லையோ தெரியவில்லை புஸ்தகாவுக்கும் எழுதிக்கேட்கவேண்டும் புஸ்தகாவில் வாடகைக்கோ அல்லது வாங்கியோ படிக்கலாம் ஆனால் இங்கு இலவசமாகப் படிக்கலாம் என் எழுத்துகள் என் எண்ணங்களையும் அபிலாக்ஷைகளையும் கொண்டிருக்கும் 1960 களில் எழுதிய ”நினைவில் நீ” யு,ம் அப்படிப்பட்டதே விருப்பமுள்ளவர்கள் படித்து கருத்துசொல்லலாம்
இதுவரை இந்த பிடிஎஃப் 360 வசகர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது இந்த பிடிஎஃப் கோப்பை பதிவில் கொண்டு வர தொழில்நுட்பம் தெரியாமல் இருந்தது நண்பர் தனபாலன் உதவியுடன் அவர் சொல்லி இருந்தவழிகளில் 90%செய்து விட்டு முடிக்கத்தெரியாமல் இருந்தது தீபாவளிக்கு வந்திருந்தஎன்பேத்திக்கு தமிழ் படிக்கத்தெரியாதுஅவளுக்கு தனபாலனின் கடிதத்தை வாசித்துக்காட்டி அவளுதவியுடன் பிடிஎஃப் கோப்பை என் தளத்துக்குகொண்டு வந்து விட்டேன் தனபாலனுக்கு நன்றி பலபதிவுகளாக என் தளத்தில் வந்த இந்தநாவலை ஒரே இடத்தில் படிக்கமுடியும் பதிவுகளில் படிக்காதவர்கள் இங்கு படித்து அவர்கள் கருத்தைவெளியிடலாம் இந்த நாவலின் முடிவில் பலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தது தெரியவந்தது அவர்கள் இந்தபதிவையும் சேர்த்து வாசித்தால் அந்தமுடிவின் ஜஸ்டி ஃபிகேஷன் அதன் ஆசிரியர் என்னும் வகையில் நான் எழுதி இருப்பதுபுரியலாம்
இந்தபதிவை+ நான் எழுதி முடித்தபின் வாசகப் பெருமக்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று அறிய ஆடியன்சை பார்த்தேன் இந்தியா தவிரபிற நாடுகளிலும் என்பதிவுகள்வெகுவாக வாசிக்கப்படுகின்றனஎன்பதை அறியும் போது மகிழ்ச்சி தருகிறது
இதுவரை இந்த பிடிஎஃப் 360 வசகர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது இந்த பிடிஎஃப் கோப்பை பதிவில் கொண்டு வர தொழில்நுட்பம் தெரியாமல் இருந்தது நண்பர் தனபாலன் உதவியுடன் அவர் சொல்லி இருந்தவழிகளில் 90%செய்து விட்டு முடிக்கத்தெரியாமல் இருந்தது தீபாவளிக்கு வந்திருந்தஎன்பேத்திக்கு தமிழ் படிக்கத்தெரியாதுஅவளுக்கு தனபாலனின் கடிதத்தை வாசித்துக்காட்டி அவளுதவியுடன் பிடிஎஃப் கோப்பை என் தளத்துக்குகொண்டு வந்து விட்டேன் தனபாலனுக்கு நன்றி பலபதிவுகளாக என் தளத்தில் வந்த இந்தநாவலை ஒரே இடத்தில் படிக்கமுடியும் பதிவுகளில் படிக்காதவர்கள் இங்கு படித்து அவர்கள் கருத்தைவெளியிடலாம் இந்த நாவலின் முடிவில் பலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தது தெரியவந்தது அவர்கள் இந்தபதிவையும் சேர்த்து வாசித்தால் அந்தமுடிவின் ஜஸ்டி ஃபிகேஷன் அதன் ஆசிரியர் என்னும் வகையில் நான் எழுதி இருப்பதுபுரியலாம்
இந்தபதிவை+ நான் எழுதி முடித்தபின் வாசகப் பெருமக்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று அறிய ஆடியன்சை பார்த்தேன் இந்தியா தவிரபிற நாடுகளிலும் என்பதிவுகள்வெகுவாக வாசிக்கப்படுகின்றனஎன்பதை அறியும் போது மகிழ்ச்சி தருகிறது
மகிழ்ச்சி ஐயா. வாசிப்பேன்.
ReplyDeleteவாசித்துக் கருத்ஹுகூறுங்கள் நன்றி
Deleteஎன் விமர்சனம் இங்க பதியலாமான்னு சொன்னீங்கன்னா பதியறேன்.
ReplyDeleteபொதுவா விமர்சனத்தை இணையத்துல யாரும் விரும்புவதில்லை. பெரும்பாலானவர் கருத்து, பின்னூட்டம்னு எதிர்பார்ப்பது, தாங்கள் தன் படைப்பைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறோமோ அதையே எழுதணும்னு நினைக்கறாங்க.
இல்லைனா, ஸ்டாண்டர்டா படித்தேன், மிக ரசித்தேன், அருமை என்று எழுதப்படுவதையோ இல்லை படைப்பிலிருந்து ஓரிரு வரிகளை எடுத்துப்போட்டு, சிலாகித்தேன், அருமையான நடை என்று எழுதணும்னு எதிர்பார்க்கிறாங்க.
"நீங்க மனசில் நினைப்பதை எழுதுங்கள்" என்று வெளிப்படையாச் சொல்வது ஓரிரு தளங்கள்தாம். படைப்பாளிகள்ல, சாரு நிவேதிதா எப்போவும் சொல்வது, எழுதுவது என் நினைவுக்கு வருது.
எழுத்தாளர்களின் படைப்பை நெகடிவோ பாஸிடிவ்வோ விமர்சனம் பண்ணுங்க. அப்போதான் படுக்கும் வாசகர்கள் எண்ணிக்கை (அதாவது எந்தப் படைப்புகளையும், தன்னோடது என்று அவர் சொல்லிக்கலை) பெருகும். மெதுவா நாமும் கேரளாவில் படைப்பாளிகளை மதிப்பதுபோன்ற நிலைக்கு வரமுடியும் என்பார்.
விமரிசனம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாய் இருக்க வேண்டும்கதையையோ நாவலையோ ஊன்றிபடித்திருக்க வேண்டும் வெறுமே வாய் புளித்ததோ காய் புளித்ததோ என்று இருக்கக்கூடாது இவனிப்படித்தான் என்று இருக்கக் கூடாது கதையில் சொல்லப்படாத கருத்துகளை தவிர்க்கவேண்டும் நெகடிவ் பாசிடிவ்விமர்சனத்துக்கு பொருள் புரிந்து கொள்ள வேண்டும் போற்றுதல் பாசிடிவ் ஆகாதுகுறைகளை சுட்டுதல் நெகடிவ் ஆகாது/ உங்கள் வாழ்க்கை, திருமணம் மற்றும் முதல் வேலையை ராஜினாமா செய்யும் வரையில். நாவல் உருவுக்காக காரணமின்றி பாபுவைச் சாகடித்துவிட்டீர்கள். 😂கருத்து பிறகு சொல்கிறேன்/ கதையைப்புரிந்து கொள்ளாமல் கருத்துதான் சொல்லப்பட்டு விட்டதேஎழுத்துகளை ஒப்பிட்டும் போதே ஒரு bias வந்து விடும் என் தாம் விமரிசிக்கவெ இருக்கிறது என்கருத்துகள் என் கதைகளிலோ கட்டுரையிலோ தெரிய வரும் அது பிடிக்காவிட்டால் அதுகுறித்து சொல்லலாம் வ்மரிசனமாகைருந்தால் தாராளமாக பதியுங்கள்
Delete/என் தாம் விமரிசிக்கவெ இருக்கிறது /இதற்கு மேல் விமரிசிக்க என்னதான் இருக்கிறது
Deleteபடுக்கும்-படிக்கும்.. ஐபேட் அல்லது மொபைல்ல தட்டச்சுப் பிழைகள் வருது
ReplyDeleteஅஹெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவையே
Deleteவாசித்து விட்டு சொல்கிறேன் ஐயா.
ReplyDeleteஇது சிறுகதை அல்ல நாவல் சார் நேரம்பிடிக்கும்வாசிக்க
Deleteஅருமையாக வந்துள்ளது... நன்றி ஐயா...
ReplyDeleteமின்னஞ்சலில் மற்றொரு செய்தியும் அனுப்பி இருந்தேன்...
விமர்சனம் பிறகு...
விமர்சனம் எதிர் நோக்குகிறேன்
Deleteமின்னஞ்சலில் அதைப்பற்றி விவரம் அனுப்பியுள்ளேன், அதன் விவரம் :வலைத்தளத்திற்கு ஏற்ப pdf அகலத்தை மாற்றினால், வாசகர்களுக்கு ஒரு வசதி ஏற்படும்...
ReplyDelete1) கருத்திடும் வாசகர்கள் அவரவர் வலைத்தள மின்னஞ்சலில் sign-in செய்து இருப்பார்கள்...
2) இணைத்துள்ள pdf file-ல் வலது பக்கம் மேல் pop-out என காட்டும் பெரிய arrow icon-யை சொடுக்கினால், அவரவர் drive.google.com-ல், இந்த pdf file திறக்கும்...
3) அங்கு download icon-ம் இருக்கும்... அதை சொடுக்கி download செய்து கொண்டு விடும் பிறகு வாசிக்கலாம்...
இங்கு இணைத்துள்ள pdf file-வலைத்தள அகலத்திற்கு மேல் செல்வதால், arrow icon-யை சொடுக்க முடியவில்லை...
நன்றி ஐயா...
என்புரிதல் மிகவும்குறைவு இது மாதிரி pdf கள் இனி இருக்காதென்று நினைக்கிறேன் உங்கள் கருடை நான் 80 வயதானவன் புரிடல் குறை வாய் இருக்குமென்றூப்க்களுக்கு தெரியும்தானே அடுத்த முறை சரிசெய்ய முயற்சிக்கிறேன் நன்றி
Deleteசெல்வழி வந்தேன் ஐயா பிறகு கணினியில் படிப்பேன் நன்றி.
ReplyDeleteஆவலுடன் எதிர்நோக்கி
ReplyDeleteநினைவில் நீ – நாவல் ஆசிரியர் திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் (http://gmbat1649.blogspot.com)
ReplyDeleteவிமர்சனம் – நெல்லைத் தமிழன்
சென்ற சனிக்கிழமை, பிரபல மூத்த பதிவர் ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள், அவர் எழுதிய நாவலான ‘நினைவில் நீ’ என்ற நாவலின் மின்னூலை அனுப்பியிருந்தார். மறுநாளுக்குள் ஒன்பது அத்தியாயங்கள் படித்துவிட்டேன். பிறகு பயணம் இருந்ததால், மீதி அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். நாவலைப் பற்றிய என்னுடைய கருத்தை அவர் கேட்டிருந்தார். எனக்கு நாவலைப் பற்றிய என்னுடைய விமர்சனமாக எங்கள் பிளாக் சனிக்கிழமைக்கு எழுதி அனுப்பலாமே என்று தோன்றியது. முகம் தெரியாதவர் எழுதும் நாவலை விமர்சிப்பதோ இல்லை நூல் அறிமுகம் எழுதுவதோ சுலபமானது. நமக்குத் தெரிந்த இணையதளப் பதிவரின் நாவலை விமர்சிப்பதா என்று மனதில் ஒரு ஐயம். பதிவுலக வழக்கம் ‘ஆஹா ஓஹோ’ ‘மிக அருமை’, ‘மனதைக் கவர்ந்தது’, ‘கண்ணில் நீர் துளிர்த்தது’ என்று எழுதுவதுதானே. இன்னொன்று, விளையாட்டை விமர்சிக்கப் புகுந்தால், இவர் தமிழ்நாட்டுக்காரர், அவர் நமக்குப் பிடிக்காத பீகார்காரர் என்றெல்லாம் யோசிக்க முடியுமா? அதே வரிசையில், நானும், முகம் தெரியாத ஆசிரியரின் நாவலை எப்படி விமர்சிப்பேனோ அதேபோல் எழுதுகிறேன்.
இந்த நாவலை ஜி.எம்.பி சார், கலைமகள் நாவல் போட்டிக்காக 1966ல் எழுதியிருக்கிறார். நமது தபாலாபீசின் குளறுபடி காரணமாக (அங்கிருந்த ஊழியர்களின் கவனக்குறைவு), இந்த நாவல் வைக்கப்பட்டிருந்த தபாலை அனுப்பாமலேயே வைத்துவிட்டார்கள். இளம் எழுத்தாளரின் எதிர்பார்ப்பை தபால் அலுவலக ஊழியர்களே ஏமாற்றியது, ஜி.எம்.பி சாருக்கு பின்னடைவாக இருந்திருக்கும். அந்த நாவலை பிறகு அவரது தளத்தில் 2012ல் அத்தியாயம் அத்தியாயமாக வெளியிட்டிருக்கிறார். நாவலை நான் படிக்க ஆரம்பித்ததும், இது ஜி.எம்.பி. சாரின் வாழ்க்கையில் நடந்தனவைகளைப் பெருமளவு கொண்டிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அதை நினைவில் நிறுத்தித்தான் நாவலை நான் ஒரே மூச்சில் படித்தேன். ஆனால், அவர், இது தன் மனதில் தோன்றிய கதைதான் என்று சொன்னார். அதனால் நானும் நாவல் என்ற எண்ணத்திலேயே இதனை விமர்சிக்கிறேன்.
தன் மனைவி இறந்ததும் பிராமணரான தந்தை ரங்கசாமி வேற்று சாதிப் பெண்ணான கல்யாணியை மணக்கிறார். முதல் மனைவிக்கு நான்கு குழந்தைகள் (சுந்தரம், கண்ணன், கமலா, பாபு). இரண்டாவது மனைவிக்கும் நான்கு குழந்தைகள் (ராஜு,, விசு, சந்துரு, ரவி) இருக்கின்றன. சித்தி, மூத்த தாரத்துக் குழந்தைகளையும் தன் குழந்தைகளைப்போல் நன்றாகவே வளர்க்கிறார். தந்தைக்கு மூத்த இரு பையன்களும் பெண்ணும் உறவினர்களின் (தங்கள் பாட்டி, தாய்மாமா) பேச்சைக் கேட்டு எதிர்ப்பாக இருக்கிறார்கள். கடைசிப் பையன் பாபுதான் அப்பாவைப் புரிந்துகொள்கிறான். தந்தைக்கு அந்திம காலம் வந்ததும், பாபுவிடம்தான் தனக்குப் பின் கல்யாணியையும் பாபுவின் தம்பிகளையும் (கல்யாணியின் குழந்தைகள்) பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளோடு இறந்துவிடுகிறார். அப்போதுதான் பாபு மும்பையில் வேலைக்கான பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அதற்குப் பிறகு பெங்களூரில் வேலை பார்க்க ஆரம்பிக்கவேண்டும். இந்த நிலையில் குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்று பாபு உணர்ந்தாலும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாபு மும்பையில் ஒரு பெண்ணைச் (சியாமளா) சந்திக்கிறார். நாவல், பாபு தன் தாயையும் தம்பிகளையும் காப்பாற்றினாரா, தன் உடன் பிறந்தவர்களை ஒரு குடும்பமாக இணத்தாரா, தான் காதலித்த சியாமளாவை மணந்தாரா, தான் நம்பிய புரட்சிகரமான சிந்தனைகள் அவரை எப்படி வடிவமைத்தது என்பதைப் பற்றி நாவல் பேசுகிறது.
பாபுவிடம் உதித்த சாதி சமயமற்ற, மற்றவர்களிடம் பேதம் பார்க்காத குணமும், லட்சியங்களும் இருந்ததாக 66களிலேயே ஆசிரியர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. அது 30களிலேயே வர ஆரம்பித்த புரட்சிகர சிந்தனைதான். பல நாவல்களில் வந்திருந்தாலும், ஜி.எம்.பி சாரிடம் அப்போதே இத்தகைய சிந்தனைகள் இருந்தன என்பது புரிகிறது. பாபு காதல் வயப்பட்டபோது அவன் எழுதிய கவிதைகளாக ஆசிரியர் எழுதியிருப்பதும் படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் இவை மட்டுமே நாவல் வடிவத்தை ரசிக்க வைக்கப் போதுமா என்றால் அதற்கு ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்க முடியும்.
முதல் அத்தியாயத்திலேயே, தந்தை தன் வாழ்வில் நிகழ்ந்ததையும், தன் முடிவுகளுக்குக் காரணம் என்றும் நிறைய தன்னிடம் மட்டும் ஆஸ்பத்திரி அறையில் பேசியதாக பாபு சொல்கிறான். நமக்கும் அது என்னவாயிருக்கும் என்ற ஆவல் வருகிறது. எது அவரை இரண்டாம் தாரத்தைத் திருமணம் செய்துகொள்ள வைத்தது, அப்போது சமூகக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் எது அவரை வேற்று சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டியது என்பதற்கெல்லாம் ஆசிரியர் பின்பு பாபு என்ற பாத்திரத்தின் மூலமாகச் சொல்லுவார் என்று எதிர்பார்க்க வைக்கிறது.
பாத்திரங்கள் விளக்கப்படாததால், இரண்டாவது அத்தியாயமாக பாட்டி, மாமா, அவர் பெண் நிஷா, பாபுவின் அண்ணன் கண்ணன் என்று கதை எங்கோ பயணிக்கிறது. பாபு தன் பாட்டியின் குறைகளாக எழுதும் சம்பவம் எல்லாமே, பாட்டி செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்றுதான் என்னை எண்ணவைத்தது. அதன் பிறகு வரும் குடும்பச் சண்டையிலெல்லாம் பாபுவின் முன் யோசனையற்ற கோபங்களும், அவனுடைய அண்ணங்கள், அக்கா செய்வதில் பெரிய தவறு ஏதும் இல்லாதது போலவும் எனக்குத் தோன்றியது.
ReplyDeleteஇதற்கிடையில் தன் சாதி மதம் பார்க்காத தன்மையை, தான் ஒரு மராத்திப் பெண்ணைக் காதலித்ததன் மூலம் பாபு காண்பிக்கிறான். கல்யாணி அம்மாவின் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பாபு முடிந்த அளவு உதவி செய்ததும் போகிறபோக்கில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழ் மன்றத்தின் பேச்சாளனாக பாபு புகழ் பெறுவதையும் தமிழ் மன்றத்தை இன்னும் சிறப்பாக விரிவாக்கி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவும் சமதர்ம சமுதாய எண்ணமும் புகட்டப்படவேண்டும் என்ற லட்சியமும் சொல்லப்படுகிறது.
பாபு எப்படி தன் தமிழ் மன்ற லட்சியங்களை நிறைவேற்றினான், தான் விரைவில் இறந்துவிடுவோம் என்று பாபு ஏன் நினைக்கிறான் என்பதெல்லாம் பிடிபடவில்லை. சியாமளாவுடன் திருமணம் நடந்தது என்றோ இல்லை பெரிய லட்சியங்களை பாபு சாதித்தான் என்றோ இல்லை அவன் அப்பாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினான் என்றோ நாவல் பயணித்திருந்தால் முழு நாவலுக்கான ஜஸ்டிபிகேஷன் இருந்திருக்கும். பாபு கடைசியில் என்னதான் சாதித்தான் என்று கேட்டால் ஒன்றும் இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது. தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, கல்யாணியையும் அவள் குழந்தைகளையும் காப்பாற்றி, அவர்களை பெரிய அளவுக்குக் கொண்டுவந்தான் என்றோ இல்லை, குடும்ப ஒற்றுமையைச் சாதித்தான் என்றோ இருந்திருந்தாலும் நாவல் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் எனக்குத் திருப்தி இல்லை. இன்னொன்று, நாவல், பாபுவின் எண்ணங்களின் மூலமாகவே பயணிக்கிறது. இதுவும் நாவல் ரசனையைக் குறைக்கிறது. பாபு மற்றவர்கள் செய்வது எல்லாம் தவறு என்ற தன் எண்ணத்திலேயே அவர்களைப் பற்றி நாவலாசிரியரும் எழுதியிருக்கிறார்.
நாவலை உபயோகப்படுத்தி தான் நம்பும் கருத்துக்களை ஆசிரியர் பாபு என்ற பாத்திரத்தின் மூலம் திணித்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அவைகள் தனியாகப் படிப்பதற்கு இண்டெரெஸ்டிங் ஆக இருக்கும். ஆனால் பாபு என்ற கதாபாத்திரத்தில் புகுத்தியது, பாபு என்னவோ பெரிய புரட்சி பண்ணப்போகிறான் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, படக் என்று பாபு செத்துப்போவதில் கதை நிறைவுறுகிறது. பாபுவின் ‘பாரதியார், ஏழை, சாதி சமயமற்ற’ என்ற பேச்சுக்களுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லாமல் நாவல் முடிவுறுகிறது.
ஜி.எம்.பி சார், தன் வாழ்க்கை அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் என்ற மறைமுக எண்ணத்தில்தான் என்னால் நாவலை வாசிக்க முடிந்தது. அதற்குக் காரணம் அவர் வாழ்க்கையின் சில விஷயங்களை அவ்வப்போது அவருடைய தளத்தில் எழுதியிருப்பதுதான். அப்படி இல்லாத பட்சத்தில், நாவல் வெகு சுமார் என்பது என் அபிப்ராயம். நாவல் வடிவம் நன்றாக வரவில்லை.
விமரிசனம் விமரிசனமாக இருக்க மறுமொழி எழுதுவதை தவிர்க்கிறேன்
ReplyDeleteநீங்கள் மெய்யாகவே சிறந்த எழுத்தாளர்தான் என்று முன்னமே தெரியும் ; படைப்பாளியுங்கூட என்பதை இப்போது அறிகிறேன் .புதினத்தின் முன்னுரையை வாசித்தேன் , நாவலைப் படிக்க நேரமில்லை; வருந்தற்க ; என்னிடமுள்ள நூல்களை வாசிக்க்வே பொழுது சரியாய் இருக்கிறது ;
ReplyDeleteநாவல் தொடரக வந்து கொண்டிருந்தபோதுஅதை முழுவதுமா வாசிக்கவேண்டு என்னும் கருத்து இருந்தது இபோது அது சாத்தியமாகும் போது பார்க்கவேணும்
Deleteஜிஎம்பீ சார் நாடக ஆசிரியர் என்றும் அவர் சில நாடகங்களை சிறப்பாக அரங்கேற்றியிருக்கிறார் என்பதையும் அறிவேன்.
ReplyDeleteநாடகம் என்பது மேடையில் நிகழ்த்துவது. நாவல் என்பது எழுதப்பட்டு வாசிப்பது. ஆக நாடகத்திற்கும் நாவலுக்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு.
நாடகம் எனபது கதாபாத்திரங்கள் பேசுவதற்கேற்ப வசனங்கள் எழுதுவது. அந்த காட்சி அமைப்புக்கேற்ப ஒவ்வொரு சீனுக்கும் குறிப்புகள் கொடுத்தால் போதும்.
இதையே நாவலில் என்றால் கதாபாத்திரங்களின் வசனங்கள் ஒரு பக்கமிருக்க வசனங்களுக்கு இடையே தொடர்பேற்படுத்த சில வரிகள் எழுதுகிறோம். வெறும் வசனங்கள் என்றில்லாது உணர்வுகள் வெளிப்படுத்த நாவலாசிரியர் பல 'சித்து' வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஜன்னல் கதவு காற்றில் 'டப்'பென்று சாத்திக் கொண்டதையும் சொல்லி நிகழ்வின் தத்ரூபத்தை எழுத்தில் கொண்டு வர வேண்டீயிருக்கிறது.
===================
நிர்மலாவுக்கு ஏக்கமாக இருந்தது. அவளுக்குத் தெரிந்த மட்டில் அவள் நட்பு வட்டாரத்தில், சொந்தத்தில் இப்படி யாருக்கும் இல்லை. தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆயாசமாக இருந்தது.
மனசுக்குத் தெரிந்து யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லை. யாரையும் எடுத்தெறிந்தது பேசினது இல்லை. சொல்லப் போனால் அவள் இயல்பிலேயே சாது. எல்லாருக்கும் வஞ்சனையில்லாது குழந்தைச் செல்வத்தை வழங்கிய இறைவன் அவளுக்கு மட்டும் ஏன் இப்படி ஓர வஞ்சனை செய்ய வேண்டும்?.. அது தான் அவளுக்கு பதில் தெரியாத கேள்வியாக இருந்தது.
==================
இது ஒரு நாவலில் இடையில் வரும் வரிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வரிகளை நாடக அமைப்பில் மிகச் சரியாக வெளிப்படுத்த முடியாது. அதற்கு நாவல் சேர்ந்த வேறு திறமைகளும் வாசிப்பு அனுபவமும் வேண்டும். வாசிப்பு அனுபவம் என்பது ஒரு நாவலையோ, கதையையோ வாசித்து விட்டு வாசித்த புத்தகத்தை தூர கடாசுவதல்ல. அந்த நாவலை எழுதியவர் எப்படி எப்படியெல்லாம் தன் திற்மையை எழுத்தில் காட்டி அந்தக் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் என்று உன்னிப்பாக கவனித்து, எழுதுவதையும் ஒரு கல்வியாகக் கற்றுத் தேர்வது.
ஜிஎம்பீ திறமையான நாடக ஆசிரியர் என்பதினால் அவருக்கு ஒரு கதையை உருவாக்குவதில் சிரமமில்லை. கதாபாத்திரங்களுக்கு வசனத்தை எழுதுவதைச் சிறப்பாக செய்ய முடிகிறது. இருந்தும்
ஒரு நாவல் எழுதுவதின் பிரத்யேக புற வேலைகள் (side jobs)
வசமாகாமல் இருக்கலாம்.
இதே மாதிரி தான் ஒரு நாவலாசிரியரால் சிறப்பாக திரைக்கதை அமைக்க முடியாது. அதானாலேயே திரைக்கதையாசிரியர் என்று தனியாக செயல்படுகிறார்கள்.
ஜிஎம்பீ சாரால் நாவலுக்கான எழுத்தமைப்பில் சோபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அவரால் ஒரு நாவலை சிறப்பாக திரைக்கதையாக, நாடகமாக ஆக்க முடியும்.
இந்த நுண்மையான விஷயங்களைத் தான் நெல்லைத் தமிழன்
ஒரு வாசகர் என்ற அளவில் தன் வாசிப்பு அனுபவமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான விமரிசனம். அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த குறிப்புகள் ஜிஎம்பீ சாருக்கும் அவரது எழுத்தாக்கத்தில் உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
//மனசுக்குத் தெரிந்து யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லை. யாரையும் எடுத்தெறிந்தது பேசினது இல்லை. சொல்லப் போனால் அவள் இயல்பிலேயே சாது. எல்லாருக்கும் வஞ்சனையில்லாது குழந்தைச் செல்வத்தை வழங்கிய இறைவன் அவளுக்கு மட்டும் ஏன் இப்படி ஓர வஞ்சனை செய்ய வேண்டும்?.//
Deleteஜீவி சார்... இதை நாடக வடிவில் கொண்டுவரும்போது,
1. இயல்பிலேயே சாது - இது அவசியம் பார்ப்பவர்களுக்குத் தெரியணும் என்றால் ஓரிரு காட்சிகளில் அவள் பேசுவதை வைத்தோ அல்லது மற்றவர்கள் பேசுவதற்கு அவளின் ரியாக்ஷனை வைத்தோ காண்பித்துவிடலாம். ஏதாவது காட்சியில் இன்னொரு பாத்திரம், 'பாவம் அவ. ரொம்ப சாது. பார்த்தியோ. அவளைச் சுத்தி எல்லாருக்கும் நிறைய குழந்தைகள். அவள் மட்டும் பட்ட மரம் மாதிரி இருக்கா. எனக்கு நினைச்சா கண்ணுல ஜலம் வந்துடுது' என்ற வசனத்தினூடாக சொல்வதைச் சொல்லிவிட முடியும்.
ஆனா, நாடகத்தின் போக்குக்கோ அல்லது கிளைமாக்ஸிற்கோ இது அவசியமாக இருக்கணும். நாவலாசிரியர்கள் நிறைய தடவை இயற்கை காட்சி, வர்ணனை என்று நிறைய பக்கங்கள் எழுதுவார்கள் (சாண்டில்யன்-ரொம்ப அதிகம், கல்கியும்). அதையெல்லாம் காட்சி ஜோடனைகள் அல்லது வசனத்தில் டபக் என்று சுருக்கிவிட முடியும்.
எனக்கு எழுத்து அனுபவம் கிடையாது. ஆனால் வாசித்த அனுபவம் நிறையவே உண்டு. அவ்ளோதான்.
என்மறுமொழி ஏதுமில்லை
Deleteகதையோ புதினமோ எழுதும்போது அதை கதா மந்தர்களின் நிலையில்தான் காணவேண்டும் அந்தக் கதாமாந்தர்களோ நாம்கண்டுபழகும்மனிதர்களாக இருப்பது முக்கியம் அது அனுபவத்தால் வருவது எல்லா குணாநன்களுடனும் இருப்பவரில் ஆசிரியரதுகருத்துகளும் இருக்கும் அவர்கள் ஆசிரியர் ஆக மாட்டார்கள் எழுதுவது என் பணி அதுபற்றிகருத்து வாசிப்பவர் பாடு
ReplyDeleteஎழுதுவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை வாசகர் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு சுவையாகச் சொல்வது என்பது ஒரு கலை தான். அது பழக்கத்தில் வருவது. அவ்வளவே.
ReplyDeleteஇதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
வாசகர்கள் பலவிதம் ஈடுபாடுகளும் பலவிதம் எல்லோரும் திருப்தி அடைவதில்லை உங்கள் வாழ்க்கை, திருமணம் மற்றும் முதல் வேலையை ராஜினாமா செய்யும் வரையில். நாவல் உருவுக்காக காரணமின்றி பாபுவைச் சாகடித்துவிட்டீர்கள். 😂இது ஒன்றே போதுமே biased என்று விளங்க பல்வேறு நேரங்களில் பல்வேறு கருத்துகள் எழுதி இருக்கிறேன்எல்லவற்றிலும் என்னை காண்பது விமரிசனமல்ல நியாயமானவிமரிசனம் எப்போதுமே வரவேற்கப்படும்
ReplyDeleteஜி.எம்.பி. சார்.... கொஞ்சம் பொறுமை.
Deleteஒரு சினிமா வெளியாகிறது. எத்தனையோ விமர்சனங்கள் வருகிறது.
படம் பார்க்கிறோம். அப்போ தெரிந்துவிடும் இந்த விமர்சனங்களில் எவை நேர்மையானவை, எவை ஒருதலைப்பட்சமானவை என்று.
வாசகர்கள் அல்லது படத்தை ரசிப்பவர்கள், விமர்சனத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.
நீங்க பொதுவெளில உங்க நாவலை இப்போ கொடுத்திருக்கீங்க. என் விமர்சனத்தையும் இங்க எழுதியிருக்கேன். அவர்களுக்கு நிச்சயமாக விமர்சனம் ஒருதலைப்பட்சமானதா இல்லையான்னு தெரியும். அவ்ளோதான்.
நம்ம குழந்தை சூப்பர் என்று நினைப்பதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும். அதில் தவறில்லை.
அது ஒருதலைப்பட்சமா என்பது நிச்சயம் தெரியும்
Deleteநன்றி ஐயா
ReplyDeleteதரவிறக்கம் செய்து வாசிக்கிறேன்
நேரம்கிடைக்கும்போதுசெய்யவும் நன்றி
Deleteசற்றே நீளமான நாவல். பிடிஎஃப் கோப்பின் தரமும் மிகமிக சுமார்தான். கணினியிலேயே வாசிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது.
ReplyDeleteஇருப்பினும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். உங்கள் கதை என்பதால் என் ஆர்வமும் அதிகரித்தது. விமர்சனம் என்ற பெயரில் உங்களுடைய நாவலைப் பற்றி கருத்து கூறி என் மேதா விலாசத்தை காண்பித்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. கதையில் வரும் நிகழ்வுகளும் கதா பாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷணை ஆகியவை மிக மிக எதார்த்தமாக இருந்தது. இது உங்கள் நாவல். இதில் வரும் நிகழ்வுகளுக்கும் வசனங்களுக்கும் நீங்கள்தான் காரணகர்த்தா. அதை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு பிடித்திருந்தது. அதுதான் எனக்கு முக்கியம்.
ஒரு கதையை எழுதி அதை வாசகர்களுக்கு வாசிக்க பதிந்து விட்டால் அதை விமர்சிக்கும் தகுதி அனைவருக்கும் உண்டு என்பது உண்மைதான் என்றாலும் அந்த விமர்சனங்கள் கதையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் அதில் கூறப்பட்ட கருத்துக்களையும் ஆசிரியரையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது அந்த தவறை பல விமர்சனங்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் அப்படி ஒரு விமர்சனம் செய்ய எனக்கு விருப்பமில்லை.
உங்களுடைய எழுத்தாற்றல் இந்த நாவல் வழியாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில்காணும் வரிகள்சிலபாராட்டுக்குரியவை
ReplyDelete