காந்தியால்
வரும் எண்ணங்கள்
காந்தி என்றதும் நினைவுக்கு
வருவது அவரை நான் சிறுவனாக இருந்தபோது
அரக்கோணத்தில் இருந்து அப்போதைய மதராஸுக்கு
என்னை என் தந்தை கூட்டிச் சென்றதுதான் காந்தி என்றதும் நினைவுக்கு வருவது
அவரது அஹிம்சைகொள்கையும் பொய்
பேசாதிருத்தலும்தான் அதை எழுதப்பொனால் அரதப் பழசு என்பார்கள் என் ஆசிரியர்
காந்தியின் வாக்காக சொன்னது நினைவுக்கு
வருகிறது the sole justification for
existence is the search for truth என்பார்
சிலருக்கு சர்ச் ஃபர் ட்ருத் என்றாலேயே கடவுளை கண்டறிவதுதான் ஆனால் நான்
உண்மையை கண்டறிவதில் முயற்சி செய்கிறேன்மேலும் பொய் கூறுவதை
தவிர்க்கிறேன் தெரியாமல் பொய் சொல்லி
இருக்கலாம் அதனால்தான் தவிர்க்கிறேன்
என்றேன் உண்மையை அறிய கேள்விகள்
கேட்பதுண்டு ஆனல் கேள்விகள் கேட்காமலேயே
பிறர் சொல்வதை நம்ப முடியவில்லை
இதை எழுதும்போது காந்தியைப்
போல் இருக்கமுடியுமா என்னும்கேள்வியும் எழுகிறதுகாந்தியைப்போல் எல்லோராலும் இருக்க
முடியாததால் தானே அவருக்கு இந்தப்பெயரும் புகழும்ஒரு இண்ட்ராஸ்பெக்ஷன்
செய்யும்போது என்குறை எனக்கு தெரிகிறது
என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஆனால் குறை தெரிவதே கட்டுப்படுத்த
முதல்படி என்று தெரிகிறது இதுவே டூ லேட்டோ?