பதிவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக் கோட்டை via மலைக் கோட்டை (1)


                                   புதுக் கோட்டை via மலைக்கோட்டை
                                    --------------------------------------------------------
ஒரு முன்னோட்டம்

புதுக் கோட்டையில் வலைப் பதிவர் திருவிழா நடைபெறும் என்பது மதுரைப் பதிவர் சங்கமத்திலேயே அறிவிக்கப் பட்டது மதுரைப் பதிவர் சந்திப்பை முன்  நின்று நடத்தியவர்களோடு நான் ஏற்கனவே  பரிச்சயப் பட்டவன்  நானும் என் தம்பியும்  மதுரை சென்றிருந்தபோது எங்கள் ஓட்டல் அறையில் திரு சீனா, திரு ரமணி. திரு மதுரை சரவணன் , திரி தமிழ்வாசி பிரகாஷ் , திருவெங்கட் திரு சிவகுமாரன் ஆகியோர் வந்து சந்திக்க ஒரு மினி பதிவர் சந்திப்பே நிறைவேறியது பெரிய அளவில் பதிவர் சந்திப்பு மதுரையில் என்றபோது எனக்கு நான் முகம் காணாத பதிவுலக நண்பர்களை  சந்திக்கும் வாய்ப்பு என்றே கருதினேன் ஆனாலும் என்னால் நான் சந்தித்திராத பதிவர்களின் நட்பைப் பெரும் பாக்கியம் குறைவாகவே இருந்தது.  புதிய நண்பர்களாக பகவான் ஜியும் கில்லர்ஜியும்  அறிமுகமானார்கள் இன்னும் சிலரை நான் ஏற்கனவே சென்னையில் சந்தித்து இருந்தேன் குறிப்பாக பாலகணேஷ், கார்த்திக்  சரவணன்  திடங்கொண்டு போராடு சீனு போன்றோரைக் கூறலாம் சந்திப்புக்கு வருகிறேன்  என்று சொல்லி வராதவர்கள் பட்டியலும் அதிகம்  திருச்சியில் நான் சந்தித்து இருந்த திரு தி தமிழ் இளங்கோவும்வந்திருந்தார் சென்னையில் சந்தித்திருந்த திரு செல்லப்பா யக்ஞசாமி, கவியாழி கண்ணதாசன் போன்றோரும் துளசிதரன்  போன்றோரும் வராததில் சற்று ஏமாற்ற மாகவே இருந்தது. எனக்கு முகம் காணாப் பதிவர்களைச் சந்தித்துப் பரிச்சயப் பட விருப்பம் அதிகம் ஆகவே புதுக் கோட்டைக்கு போக விரும்பினேன் .ஆனால் எனக்கு எங்கும் தனியே போக அனுமதி இல்லை.  என் மனைவியும் என்னுடன் தனியே வரப் பயப்படுகிறாள்  ஆகவே பயணம்  என்றால் அது என் மகன்களுடனோ  அல்லது மச்சினனுடனோதான் இருக்க வேண்டி உள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு நான் போவதாயிருந்தாலும் அவர்களுடைய  விடுப்பு தொழில் முறையில் அவர்கள் பயணத்தில் இல்லாதபோதுதான்  நடக்க முடியும் இவர்கள் யாருக்கும் ஒரு மாத முன்பாக அவர்களின் வசதி பற்றிக் கூற முடியாதுஆனால் புதுக் கோட்டை சந்திப்பு ஒரு ஞாயிறன்று என்றிருந்ததனால்  அவர்கள் டூரில் இல்லாத பட்சம் என்னை அழைத்துப் போவதாகக் கூறினர். செப்டம்பர் 18-ம் தேதி புக் செய்த டிக்கட்  காத்திருப்பு பட்டியலில்  இருந்தது.  பயணம் கடைசி வரை உறுதி செய்யாத நிலையில்  கடைசி நேரத்தில்  தத்கலில் டிக்கட் வாங்கப் பட்டது எப்படியும் போய் விடலாம் என்னும்  நம்பிக்கையில்  திருச்சியில் நான் சந்தித்திராத பதிவர்கள் திரு ரிஷபன் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, திரு ஜோசப் விஜு. திருமதி கீதா சாம்பசிவம்  ஆகியோரைச் சந்திக்க விரும்பினேன் அவர்களது சௌகரியம் கேட்டு எழுதி இருந்தேன் கூடவே என் பழைய நண்பர்கள் திரு. தி தமிழ் இளங்கோ திரு வைகோ ஆகியோரின் வசதியும் கேட்டிருந்தேன் எனக்கு எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்  திட்டமிட்டதைச் செய்ய வேண்டும். இருந்தாலும் சில நேரங்களில் என் திட்டங்கள் பிறரது திட்டங்களோடு ஒத்துப் போவது கஷ்டமாய் இருக்கிறது இதுவரை நான் நினைத்ததைச் செய்து கொண்டு வருகிறேன்  என்னைப் புரிந்து கொண்ட மனைவியும் மக்களும் இருப்பது என் பாக்கியமே ஆக முதலில்  திருச்சிக்கும் அதன் பின்  புதுக் கோட்டைக்கும் போவதாகத் திட்டமிடப்பட்டது ஒவ்வொரு வருடமும் சமயபுரம் ஸ்ரீரங்கம் திருவானைக்கா என்று போகும் நாங்கள் சென்ற  ஆண்டு போக முடியவில்லை.  ஆகவே இந்த ஆண்டு எப்படியும் குறைந்த பட்சம்  சமயபுரம் ஸ்ரீரங்கம் ஆனைக்கா  என்று போகலாம் என்று என் மனைவி விருப்பினாள்.  திருச்சிக்கு  ரயிலிலும் திருச்சியிலும்  புதுக்கோட்டை சென்று வரவும் கார் என்றும்  தீர்மானிக்கப் பட்டது என் மகனின் நண்பன் குவைத்தில் இருப்பவன் அவனது காரையும் ட்ரைவரையும்  நாங்கள் உபயோகிக்கலாம்  என்று கூறி இருந்தான்  ஆக திட்டங்கள் எல்லாம்  அதனதன் ஸ்லாட்டில் வந்து நினைத்தது நடந்தது. அது பற்றி அடுத்து தொடர்கிறேன்