திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக் கோட்டை via மலைக் கோட்டை (1)


                                   புதுக் கோட்டை via மலைக்கோட்டை
                                    --------------------------------------------------------
ஒரு முன்னோட்டம்

புதுக் கோட்டையில் வலைப் பதிவர் திருவிழா நடைபெறும் என்பது மதுரைப் பதிவர் சங்கமத்திலேயே அறிவிக்கப் பட்டது மதுரைப் பதிவர் சந்திப்பை முன்  நின்று நடத்தியவர்களோடு நான் ஏற்கனவே  பரிச்சயப் பட்டவன்  நானும் என் தம்பியும்  மதுரை சென்றிருந்தபோது எங்கள் ஓட்டல் அறையில் திரு சீனா, திரு ரமணி. திரு மதுரை சரவணன் , திரி தமிழ்வாசி பிரகாஷ் , திருவெங்கட் திரு சிவகுமாரன் ஆகியோர் வந்து சந்திக்க ஒரு மினி பதிவர் சந்திப்பே நிறைவேறியது பெரிய அளவில் பதிவர் சந்திப்பு மதுரையில் என்றபோது எனக்கு நான் முகம் காணாத பதிவுலக நண்பர்களை  சந்திக்கும் வாய்ப்பு என்றே கருதினேன் ஆனாலும் என்னால் நான் சந்தித்திராத பதிவர்களின் நட்பைப் பெரும் பாக்கியம் குறைவாகவே இருந்தது.  புதிய நண்பர்களாக பகவான் ஜியும் கில்லர்ஜியும்  அறிமுகமானார்கள் இன்னும் சிலரை நான் ஏற்கனவே சென்னையில் சந்தித்து இருந்தேன் குறிப்பாக பாலகணேஷ், கார்த்திக்  சரவணன்  திடங்கொண்டு போராடு சீனு போன்றோரைக் கூறலாம் சந்திப்புக்கு வருகிறேன்  என்று சொல்லி வராதவர்கள் பட்டியலும் அதிகம்  திருச்சியில் நான் சந்தித்து இருந்த திரு தி தமிழ் இளங்கோவும்வந்திருந்தார் சென்னையில் சந்தித்திருந்த திரு செல்லப்பா யக்ஞசாமி, கவியாழி கண்ணதாசன் போன்றோரும் துளசிதரன்  போன்றோரும் வராததில் சற்று ஏமாற்ற மாகவே இருந்தது. எனக்கு முகம் காணாப் பதிவர்களைச் சந்தித்துப் பரிச்சயப் பட விருப்பம் அதிகம் ஆகவே புதுக் கோட்டைக்கு போக விரும்பினேன் .ஆனால் எனக்கு எங்கும் தனியே போக அனுமதி இல்லை.  என் மனைவியும் என்னுடன் தனியே வரப் பயப்படுகிறாள்  ஆகவே பயணம்  என்றால் அது என் மகன்களுடனோ  அல்லது மச்சினனுடனோதான் இருக்க வேண்டி உள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு நான் போவதாயிருந்தாலும் அவர்களுடைய  விடுப்பு தொழில் முறையில் அவர்கள் பயணத்தில் இல்லாதபோதுதான்  நடக்க முடியும் இவர்கள் யாருக்கும் ஒரு மாத முன்பாக அவர்களின் வசதி பற்றிக் கூற முடியாதுஆனால் புதுக் கோட்டை சந்திப்பு ஒரு ஞாயிறன்று என்றிருந்ததனால்  அவர்கள் டூரில் இல்லாத பட்சம் என்னை அழைத்துப் போவதாகக் கூறினர். செப்டம்பர் 18-ம் தேதி புக் செய்த டிக்கட்  காத்திருப்பு பட்டியலில்  இருந்தது.  பயணம் கடைசி வரை உறுதி செய்யாத நிலையில்  கடைசி நேரத்தில்  தத்கலில் டிக்கட் வாங்கப் பட்டது எப்படியும் போய் விடலாம் என்னும்  நம்பிக்கையில்  திருச்சியில் நான் சந்தித்திராத பதிவர்கள் திரு ரிஷபன் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, திரு ஜோசப் விஜு. திருமதி கீதா சாம்பசிவம்  ஆகியோரைச் சந்திக்க விரும்பினேன் அவர்களது சௌகரியம் கேட்டு எழுதி இருந்தேன் கூடவே என் பழைய நண்பர்கள் திரு. தி தமிழ் இளங்கோ திரு வைகோ ஆகியோரின் வசதியும் கேட்டிருந்தேன் எனக்கு எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்  திட்டமிட்டதைச் செய்ய வேண்டும். இருந்தாலும் சில நேரங்களில் என் திட்டங்கள் பிறரது திட்டங்களோடு ஒத்துப் போவது கஷ்டமாய் இருக்கிறது இதுவரை நான் நினைத்ததைச் செய்து கொண்டு வருகிறேன்  என்னைப் புரிந்து கொண்ட மனைவியும் மக்களும் இருப்பது என் பாக்கியமே ஆக முதலில்  திருச்சிக்கும் அதன் பின்  புதுக் கோட்டைக்கும் போவதாகத் திட்டமிடப்பட்டது ஒவ்வொரு வருடமும் சமயபுரம் ஸ்ரீரங்கம் திருவானைக்கா என்று போகும் நாங்கள் சென்ற  ஆண்டு போக முடியவில்லை.  ஆகவே இந்த ஆண்டு எப்படியும் குறைந்த பட்சம்  சமயபுரம் ஸ்ரீரங்கம் ஆனைக்கா  என்று போகலாம் என்று என் மனைவி விருப்பினாள்.  திருச்சிக்கு  ரயிலிலும் திருச்சியிலும்  புதுக்கோட்டை சென்று வரவும் கார் என்றும்  தீர்மானிக்கப் பட்டது என் மகனின் நண்பன் குவைத்தில் இருப்பவன் அவனது காரையும் ட்ரைவரையும்  நாங்கள் உபயோகிக்கலாம்  என்று கூறி இருந்தான்  ஆக திட்டங்கள் எல்லாம்  அதனதன் ஸ்லாட்டில் வந்து நினைத்தது நடந்தது. அது பற்றி அடுத்து தொடர்கிறேன்                 

 






49 கருத்துகள்:

  1. வலைப்பதிவின் மீதும், வலைப்பதிவர்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பு, தூய்மையானது அய்யா! உங்களை திருச்சியிலும் மற்றும் புதுக்கோட்டையிலும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா. மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. தங்களைச் சந்தித்தது
    மிக்க மகிழ்வாய் இருந்தது
    குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வந்து
    சிறப்பித்தது அனேகமாக நீங்கள் மட்டுமாகத்தான்
    இருக்கவேண்டும் என நினைக்கிறேன்
    பதிவு முதல் கியரில் வெகு சுவாரஸ்யமாகத்
    துவங்குகிறது..தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை நான் நேரலையில் கண்டு மகிழ்ந்தேன் தங்களின் பெயர் எப்படி பள்ளிக்காலத்தில் இருந்து GMB என்ற பெயர் வந்தது பற்றி நேரலையில் அறிமுக உரையில் தாங்கள் பேசியதை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. விழாவில் தங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. இந்த நிலையிலும் நீங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டி வந்தது குறித்து பெருமையாக உள்ளது அய்யா ..மிக்கநன்றி...

    பதிலளிநீக்கு
  6. விழாவில் தங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது அய்யா!
    எத்தனை சிரமத்தில் வந்திருக்கிறீர்கள் என்பதை அறியும்போது தங்கள் மீதான அன்பு மேலும் கூடுகிறது.
    தொடருங்கள். தொடர்கிறேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆர்வமும் அதற்கு ஒத்துழைக்கும் சுற்றமும் பாராட்டத்தக்கது. பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது ஐயா. தங்கள் திட்டமிடலும் செயற்படுத்தும் ஆர்வமும் வெகுவாகக் கவர்ந்தன, அதற்கு துணை புரியும் குடும்பத்தவர்களும் இருப்பது எத்தனை சிறப்பு. தங்கள் பதிவு காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . நன்றி!வாழ்த்துக்கள் ! உங்களை சந்தித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களே. தொடர்கிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. அன்பு குடும்பத்தாருடன் புதுக்கோட்டை பதிவர் விழாவில் கலந்து கொண்டு அதை சுவைபட பகிர்வது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. //சமயபுரம் ஸ்ரீரங்கம் ஆனைக்கா என்று போகலாம் என்று என் மனைவி விருப்பினாள்.//

    தங்களின் துணைவியாரின் இந்த விருப்பங்கள் ஓரளவு நிறைவேறியதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற மகிழ்ச்சிகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. #உங்களை சந்தித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களே#
    இனியாவின் இந்த கூற்றுக்கு சொந்தமானவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
  12. Namasthe/-

    You are eligible to celebrate, your achievement - planning & implementing successfully-
    CONGRATULATIONS...

    பதிலளிநீக்கு
  13. உங்களை சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்தது. ஆனாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் என் பயணம் தடைபட்டதில் புதுகை வர இயலவில்லை! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு

  14. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களுடன் நிறையப் பேச வேண்டும் என்றிருந்தேன் . ஆனால் பேச வேண்டிய விஷயங்களில் பலவற்றில் கருத்து வேறு பாடு இருக்கும் என்று தோன்றியது இனிய சந்திப்பில் அது வேண்டாம் என்றுதான் உங்களை பெங்களூர் வர வேண்டினேன் நமக்குள் நிறையவே பேச உள்ளது ஆகவே மீண்டும் அழைக்கிறேன் ஓரிரு நாள் விடுப்பெடுத்து வரமுடிந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் என் வீட்டுக் கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும் . வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  15. @ டாக்டர் கந்தசாமி
    வருகை தந்து வாசித்ததற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  16. @ தி.தமிழ் இளங்கோ
    என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா. மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் நிச்சயம் சந்திப்போம்

    பதிலளிநீக்கு

  17. @ ரமணி
    இந்த முறை பதிவை விலாவாரியாக எழுத உத்தேசம் தொடர்ந்து வாருங்கள் நிறையவே எதிர்பார்க்கலாம் . நன்றி.

    பதிலளிநீக்கு

  18. @ ரூபன்
    என் பெயர் ஜி.எம் பாலசுப்பிரமணியம் பதிவுலகில் ஜீஎம்பி என்றே அறியப்படுகிறேன் என்று பேசியதாக நினைவு. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  19. @ கரந்தை ஜெயக்குமார்
    எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் மூலம் கல்னல் கணேசனின் அறிமுகமும் இருந்ததே நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  20. @ எம் கீதா
    உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள் பலரும் சொல்லத் தயங்கும் சில விஷயங்கள் என் பதிவுகளில் வரலாம் நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  21. @ செந்தில் குமார்
    எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா. தொடர்ந்து வாருங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

  22. @ இனியா
    அதைத்தான் நான் பாக்கியசாலி என்று சொல்லி விட்டேனே . உங்கள் பின்னூட்டம் நிறைவு தருகிறது நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  23. @ கோமதி அரசு
    புதுகை சென்று வந்த அனுபவங்களைப் பகிர்வதில் நானும் மகிழ்கிறேன் நான் எழுதுவதும் எழுதப் போவதும் என் கண்ணோட்டத்தில் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  24. @ கோபு சார்
    உங்களையும் நண்பர்களையும் திருச்சியில் சந்தித்தது மகிழ்ச்சி. உங்கள் பதிவில் இருந்து ஓரிரு புகைப்படங்களை எடுத்து உபயோகிக்கலாம் என்றிருக்கிறேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  25. @ ஸ்ரீ ராம்
    தொடர்ந்து வாருங்கள் ஸ்ரீ ஏமாற்ற மாட்டேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  26. @ பகவான் ஜி
    சென்றமுறை மதுரையில் அறிமுக்சமான உங்களுடன் நிறையப் பேச அவகாச மிருக்க வில்லை என்பது ஒரு குறையாகவே படுகிறது. பதிவர்களை சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  27. @ வி. மாலி
    வாழ்த்துக்கு நன்றி சார். உங்களையும் சந்தித்திருந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடி இருக்கும்

    பதிலளிநீக்கு

  28. @ தளிர் சுரேஷ்
    நான் எதிர்நோக்கி வராதவர்களுள் நீங்களும் ஒருவர். அதனால் என்ன இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போகும் தொடர்ந்து வாருங்கள் நன்றி,

    பதிலளிநீக்கு

  29. @ கீதா சாம்பசிவம்
    நான் சந்திக்க விரும்பிய உங்களை திருச்சியில் சந்தித்தது மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா தங்களது மனதில் என்னையும் நிறுத்தி வைத்து எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சி ஐயா எனது பாக்கியமான விடயமே....
    தொடர்கிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  31. @ கில்லர் ஜி
    மறக்க முடியாத நண்பரல்லவா நீங்கள். வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  32. உங்களை புதுக்கோட்டையில் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு

  33. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    முதலில் மதுரையில் இப்போது புதுக் கோட்டையில் . பதிவர் விழாக்களில்தா சந்திக்கிறோம் பெங்களூர் வரும் வாய்ப்பு உள்ளதா ஐயா ? தொடந்து வாருங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. தங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  35. அன்பின் நண்பர்களை நினைவு கூர்ந்தது - பதிவின் மதிப்பைக் கூட்டுகின்றது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  36. தொடருங்கள் பதிவர் சந்திப்பு பற்றி தொடர்கின்றேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  37. இனியதோர் சந்திப்பு. சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

  38. @ டி என் முரளிதரன்
    முதலில் சென்னையில் பின் மதுரையில் இப்போது மீண்டும் புதுக்கோட்டையில் எனத் சந்திப்புகள் தொடர்கின்றன. இருந்தாலும் மனம் விட்டுப் பேசி யிருக்கவில்லை. மகிழ்ச்சி எனக்கும் உண்டு. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

  39. @ துரை செல்வராஜு
    சந்திப்பு மட்டும் அல்ல அன்னியோன்னியமும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது தொடர்ந்து வாருங்கள் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  40. @ தனிமரம்
    பயணம் பற்றியும் பதிவர் சந்திப்பு பற்றியும் விலாவாரியாக எழுத இருக்கிறேன் தொடர்ந்து வாருங்கள் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  41. @ வெங்கட் நாகராஜ்
    வாருங்கள் ஐயா தொடர்ந்து வாருங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  42. கட்டுரையைத் தொடர்கின்றோம்.

    உங்களை புதுகையில் சந்த்தித்தது எங்கள் இருவருக்குமே மிகவும் சந்தோஷம்.

    கீதா: சார் நீங்கள் எங்களை எடுத்த புகைப்படத்தை எங்கள் மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா முடிந்தால்...புகைப்படத்தை வலையில் வெளியிட வேண்டாம் சார்...

    மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு

  43. @ துளசிதரன் தில்லையகத்து
    அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள் நீங்கள் இருக்கும் புகைப்படத்ட்க்ஹில் வேறு நண்பரும் இருந்தால்....? உங்களுக்கு கட்டாயம் அனுப்பித் தருகிறேன் எப்படி நீங்கள் மட்டும் இருக்கும் படம் இருக்கும் தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
  44. உங்கள் வருகை எனக்கு ஒரு பெரிய motivating factor. நன்றி

    பதிலளிநீக்கு