Wednesday, October 7, 2015

பதிவர் திருவிழா- விமரிசனப் போட்டி- statistical probabilities

  
        பதிவர் திருவிழா- விமரிசனப் போட்டி- statistical probabilities
        -----------------------------------------------------------------------------------------

இந்தப் பதிவை எழுதும் முன் நானெழுதி இருந்த பஞ்சாபில் நான் என்னும் பதிவில்  பஞ்சாப் ஒரு கொதிகலன் போலிருந்த நேரத்தில் நான் பஞ்சாப் போக முடிவு செய்தது பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது

BHEL நிறுவனம் அகில இந்தியாவில் எல்லா இடங்களிலும்  நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு நவரத்னா கம்பனி பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில வால்வுகளை உற்பத்திசெய்ய கோவிந்த்வால்என்னுமிடத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவினார்கள் அங்கு டெக்னிகல் மற்றும் தரக் கட்டுப்பாடு குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஆலோசனை கூறவும் டிசைன் பிரிவு அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து யாராவது போக வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்து பஞ்சாப் ஒரு கொதிகலன் போல் இருந்த நேரம்  யாரும் அங்கு செல்ல முன்வராத நேரத்தில் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமைப்பொறுப்பில் இருந்த என்னைப் போகக் கேட்டுக் கொண்டார்கள். தினமும் 25 கொலைகளாவது நிகழும் பஞ்சாபுக்கு  நான் போகஒப்புதல் கொடுத்தேன்  நான் போக ஒப்புதல் அளிக்கக் காரணம் எனக்கு பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வது பிடிக்கும் என்  பொறுப்பை நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. மூன்றாவது காரணம் எனக்கு ஏதாவது நடக்க இருக்கும் ஸ்டாடிஸ்டிகல் ப்ராபபிலிடி மிகவும் குறைவு என்று தோன்றியது. பஞ்சாபில் சுமார் 25 லட்சம் பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில்  தினம் 25 பேர்கள் கொல்லப் படுகிறார்கள் என்றால் அதில் நான் ஒருவனாக இருக்கும் வாய்ப்பு லட்சத்தில் ஒன்று என்று கணக்குப் பண்ணினேன்  

   விமரிசனப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்த ஸ்டாடிஸ்டிகல் ப்ராபபிலிடி தான் நினைவுக்கு வருகிறது. கல்லூரிகளில் இதைப் பாடமாகப் படித்தவர்களுக்குப் புரியும்
இப்போது போட்டி பற்றிப் பார்ப்போம்.  ஐந்து வகைகள்  ஒவ்வொன்றிலும் 1. 2 3, என்று போட்டிகளை வரிசைப் படுத்த வேண்டும்  அதாவது 15 வித முடிவுகளை ஒருவர் கணிக்க வேண்டும்
ஒவ்வொரு பதிவையும் எழுதுபவர் அதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருதியே எழுதுகிறார்  ஒரு அனுமானத்துக்கு நாம் இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் மொத்தம் ஐந்து வகைகளில் 260 படைப்புகள் வந்துள்ளன இவற்றில் 15 படைப்புகள் வெற்றி வாய்ப்பு பெறும் இதை அனுமானித்துக் கூறுவதென்பதன் சாத்தியம் நெக்ஸ்ட் டு நதிங்.
 ஒரு சின்ன மாதிரி தருகிறேன் வாசகர்கள் எத்தனை பெர்முடேஷன் காம்பினேஷன் தேவைப் படுகிறது என்று செய்து பார்க்கலாம்
ஒரு போட்டியில்  ஐவர் பங்கேற்கின்றனர் என்று அனுமானித்து விடை காண் முயற்சி செய்து பார்க்கலாம் ஏ,பி, சி. டி, இ என்னும் இவர்களில் ஐவருக்கும் முதல் பரிசு பெறும் வாய்ப்பு இருக்கிறது/. ஏ முதல் பரிசும் பி  இரண்டாம் பரிசும் சி மூன்றாம் பரிசும் பெற மற்ற இருவர் பரிசு ஏதும் பெற வாய்ப்பில்லாமல் இருப்பார்கள்.  இப்படி ஒவ்வொருவருக்கும் ஆன வாய்ப்புகளை அனுமானித்க்துக் கொண்டு போனால்   சரியாகக் கணிக்கமொத்தம்எத்தனை அனுமானங்கள் தேவைப்படும்  என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளவும்  இதுவே 260 போட்டியாளர்களில் வகைக்கு மூன்றாக 15 பேரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற எத்தனை அனுமானங்கள்  தேவைப் படும் என்பதை ஸ்டாடிஸ்டிக்ஸ் படித்தவர்களாலும் சொல்வது கடினம் தேர்தல் நேரத்தில் கணிப்பிடுவது போன்றது என்றும் கூறப்படுகிறது. தேர்தல் நேரக் கணிப்புகள் கூட இத்தனை சதவிகித வாய்ப்பு என்றுதான்  கூறுகிறார்கள். ஆயிரக் கண்க்கில் விமரிசனப் போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும்  யாராவது வெற்றி பெறுவது என்பது வெறும் ஃப்லூக் ஆகத்தான் இருக்கும்
யாராவது புள்ளிவிவரக் கணக்குகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கருத்துக் கூற வேண்டுகிறேன் நான் படித்ததோ சொற்பம் . அதுவும் இப்போது எல்லாமே மறந்து விட்டது.            
 ஒருவேளை பரிசுக்கு பணம் கொடுக்க வந்தவர் இதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ . யாரும் பரிசு வெல்லாத பட்சத்தில்  அவர் அளிக்கும் அந்தத் தொகை வலைப்பதிவர்களின் சங்கமக் குழுவுக்கு கிடைக்க வேண்டும்
நான் எது எழுதினாலும் அது சரியாகப் புரிந்து கொள்ளப் படுவதில்லையோ என்னும் சந்தேகம் எனக்குள்ளது எந்த உள் நோக்கமும் இல்லாமல் மனதில் பட்டதை நான் எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்

      

  

43 comments:

 1. எளிதில் கணிக்கும்படி இருந்தால் போட்டியில் சுவாரசியம் இருக்காது.போட்டிக்கான பதிவுகள் குறைவாக இருப்பதால் ஓரளவுக்கு கணிக்க முடியும் என்று தோன்றுகிறது. என்னதான் ரசனைகள் மாறுபட்டாலும் பரிசுக்கு தகுதியான பதிவுகளை அடையாளம் காணமுடியும் என்றே தோன்றுகிறது.100 சதவீதம் ஒத்துப் போகாது என்றாலும் ஓரளவுக்கு ஒத்துப் போக வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்
  இது பதிவுகளை வாசிக்க வைக்கும் ஒரு உத்தி என்றும் கொள்வோம்.

  ReplyDelete
 2. //நான் எது எழுதினாலும் அது சரியாகப் புரிந்து கொள்ளப் படுவதில்லையோ என்னும் சந்தேகம் எனக்குள்ளது//

  அப்படி நடக்க Statics படி சாத்தியக்கூறுகள் ஆயிரத்தின் ஒன்றுதான்.

  ReplyDelete
 3. மேலே திரு. டி.என். முரளிதரன் - மூங்கில் காற்று அவர்கள் இறுதி வரிகளில் சொல்லியிருப்பது தான் உண்மை.

  அதாவது ‘இது அனைத்துப் பதிவுகளையும் வாசிக்க வைக்கும் ஒரு உத்தி’ மட்டுமே.

  ஆனால் அவ்வாறு முழுவதுமாக வாசித்துப் பார்த்து, தரம் பிரித்து கணித்துச் சொல்லப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் இருந்தாலே மிகவும் அதிசயம்தான்.

  மற்ற அனைவரும் எதையும் வாசிக்காமலேயே ஏதோ 3*5=15 ஐத் தேர்ந்தெடுத்து அனுப்பப்போகிறவர்கள் மட்டுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே தெரிகிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

  நடுவர் குழுவின் தேர்வுடன் முழுவதுமாக ஒத்துப்போகும் கருத்தளிப்பவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவே என்றும் சொல்லலாம்.

  என்னதான் நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 4. ஐந்து தலைப்புகளுக்குமான விமர்சனப் போட்டிகளுக்கான மொத்தப்பரிசுத்தொகை : ரூ. 10000 எனச் சொல்லியுள்ளார்கள்.

  அதனை ஒவ்வொரு தலைப்புக்குமான போட்டிக்கும் ரூ. 2000 வீதம் பிரித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

  முதல் போட்டிக்கு நடுவர் குழுவுடன் முழுவதுமாக ஒத்துப்போய் கணித்துள்ளவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1000, இரண்டாம் பரிசாக ரூ. 600, மூன்றாம் பரிசாக ரூ. 400 என பிரித்துத் தருவார்கள் என நம்புகிறேன்.

  இதுபோலவே ஒவ்வொரு தலைப்புக்கும் பிரித்து அளிப்பார்கள் என நம்புகிறேன்.

  இதுபோல அவர்கள் செய்தால் மட்டுமே, ஒருசிலருக்காவது, விமர்சனத்திற்கான பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  ஐந்து தலைப்புகளுக்குமாகச் சேர்த்து, ஒட்டுமொத்தமாக என்று பார்பார்களேயானால். யாருக்குமே பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகவே அதிக வாய்ப்பு இதில் உள்ளது.
  இது என்னுடைய சொந்தக்கருத்து மட்டுமே.

  விழா வெற்றிபெறவும், போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசு கிடைக்கவும் என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நானும் தங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்
  எனவே நான் இந்தப் போட்டியில்
  கலந்து கொள்ளவில்லை

  வை. கோ அவர்கள் சொல்லுகிறார்ப்போல
  இது அனைவரையும் அனைத்துப் பதிவுகளையும்
  படிக்கச் செய்யும் யுக்தியே

  ஆனாலும் கட்டுரைகள் அனைத்தும்
  மிகச் சிறப்பாக இருப்பதால்
  தொடர்ந்து படித்துவருகிறேன்

  ReplyDelete
 6. அருமையான பதிவு ஐயா! பல வருடங்களுக்கு பின் கல்லூரியில் நான் படித்த புள்ளியியலை நினைவு படுத்தியதற்கு நன்றி.

  நீங்கள் சொல்வது சரி. யாரும் பரிசு வெல்லாத பட்சத்தில், இந்த தொகை சந்திப்பிற்கான சந்திப்பிற்கான சங்கம குழுவிற்கு போக வேண்டும்.

  ReplyDelete
 7. வைகோ ஸார் சொல்லியிருப்பதுதான் எனக்கும் தோன்றுவது. பார்ப்போம். இத்தனையையும் மீறி வெற்றி பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை இப்போதே சொல்லிக்கொள்கிறேன்
  .

  ReplyDelete
 8. நேரில் சந்திக்கும் போது தான் உங்களிடம் பதில் சொல்ல வேண்டும்... (முடியும்...! முக்கியமான வேலைகள் பல உள்ளன...)

  நன்றி...

  ReplyDelete
 9. தங்களின் பதிவு தவறாக புரிந்துகொள்வது பற்றிய தங்கள் ஆதங்கத்திற்கு முனைவர் பழனி. கந்தசாமி ஐயா அவர்கள் சொன்ன கருத்தினை நான் வழிமொழிகின்றேன்.
  அனைத்து பதிவுகளையும் படித்து யார் வெற்றிபெறுவார் என கணிப்பது கடினம் என்பதால் நானும் இந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

  ReplyDelete
 10. @ டி.என் முரளிதரன்
  கணிப்பு என்பதே அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது. யாருடைய கருத்தும் தவறு என்று சொல்ல முடியாது. என் பதிவு இந்தக் கருத்துக்களுக்குஅப்பாற்பட்டது முழுக்க முழுக்க புள்ளி இயல் விதிப்படி இந்தக் கணிப்புகள் சரியாய் இருக்கும் வாய்ப்புகள் நெக்ஸ்ட் டு நதிங் என்பதுதான் கருத்து இதைத்தான் நான் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள் என்கிறேன் எல்லோரது செயலையும் போற்றிப் புகழ்ந்து பாடாவிட்டால் அது சரியாகப் புரிந்து கொள்ளப் படுவது இல்லை. எனக்கு இந்த புள்ளி இயல் கணக்குகள் மறந்து விட்டது. அது மட்டும் என்னால் காட்ட முடிந்தால் எத்தனைப் பேர் பங்கு கொள்ள வேண்டும் ஒருவராவது சரியாய் எழுத என்று சொல்லி இருப்பேன் அதன் தாக்கத்தைக் கூறத்தான் ஐந்து பதிவர்களின் பதிவுகளை எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கொடுத்து வரிசைப்படுத்த எத்தனைவிமரிசனங்கள் தேவைப்படும் என்று குத்துமதிப்பாகவாவது பாருங்கள் என்று வேண்டுகிறேன் நான்கு வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன் எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்றும் எத்தனை பேர் சரியாகக் கணிக்கிறார்கள் என்றும் ஓரளவுக்கு யூகிக்க முடியும் வலைப் பதிவர்களையும் மீறி எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்றும் அனுமானிக்க முடியும் போட்டி குதிரைக்கு முன் காட்டும் காரட் என்று எடுத்துக் கொள்வது சங்கடமாக இருக்கிற்து வருகைக்கு நன்றி முரளி.

  ReplyDelete

 11. @ டாக்டர் கந்தசாமி
  எங்காவது சிறிய எதிர்மறைக் கருத்து என்றால் கூட பலராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.உங்களுக்குத் தெரியாதது அல்ல. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 12. @ கோபு சார்
  வலைப் பதிவர்கள் அல்லாதாருக்குமான போட்டி என்று அறிவித்து விட்டு வலைப்பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று கூறி இருப்பதுபோட்டியாளர்களின் எண்ணிக்கையில் வரும் சந்தேகத்தைத்தானே காட்டுகிறது பதிவுகள் எழுதி விட்டு கொள்வார் உளரா என்று காத்திருக்கும் பதிவர்களுக்கு நன்கு தெரியும்போட்டி என்று அறிவிக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்பையும் சிந்திக்க வேண்டும் என் பதிவு புள்ளி இயல் அடிப்படையைச் சார்ந்தது எல்லாம் சரியாக அனுப்ப பல்லாயிரக் கண்க்கில் போட்டியாளர்கள் இருக்க வேண்டும் என்பதே இந்த இயல் படி அனுமானம் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 13. @ கோபு சார்
  என் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் திரு ஜீவி அவர்கள் இம்மாதிரி பதிவர் திருவிழாக்களை நடத்துவது குறித்து பதிவர்கள் அனைவரும் கூடி அமர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்று எழுதி இருந்தார் திரு அப்பாதுரையும் அது பரிசீலிக்கப் பட வேண்டிய விஷயம் என்றார் அதுமாதிரி இனி நடக்க விருக்கும் பதிவர் சந்திப்பில்தான் முடிவெடுக்க முடியும் என்று மறு மொழி எழுதி இருந்தேன் மற்ற படி அறிவித்ததற்கு மாறாகப் பரிசு வழங்குவது சரி அல்ல என்பதே என் நிலைப்பாடு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete

 15. @ ரமணி
  நடந்து முடிந்தபின் சொல்வதை விட முன்னாலேயே சொல்வது சரி என்று தோன்றியது.எனக்குத் தோன்றியவரை என் கருத்துக்களை எழுதிக் கொண்டுதான் வருகிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ விசுAWESOME
  முதல் வருகை(?) க்கு நன்றி கல்லூரியில் படித்த புள்ளீயல் பகுதிகளைநினைவு படுத்திக் கொண்டு உங்கள் கருத்துக்களால் இப்பதிவுக்கு வலு சேர்த்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்

  ReplyDelete

 17. @ ஸ்ரீராம்
  இத்தனையையும் மீறி வெற்றி பெருபவர் இருந்தால் வாழ்த்தப்பட வேண்டியவரே.வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 18. @ திண்டுக்கல் தனபாலன்
  இதுவரை பதிவர் குழு வலைப்பதிவில் இப்பதிவு காண வில்லை. நன்றி

  ReplyDelete
 19. எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமாகத்தான் இருக்கும் சார்...எல்லோரரும் எல்லா படைப்புகளையும்...

  ReplyDelete

 20. @ திண்டுக்கல் தனபாலன்
  /நேரில் சந்திக்கும் போது தான் உங்களிடம் பதில் சொல்ல வேண்டும்... (முடியும்...! முக்கியமான வேலைகள் பல உள்ளன...)/ நேரில் சந்திக்கும் போது பேச முடியுமா என்பதும் சந்தேகமே மதுரையில் நாம் உரையாடிய நேரம் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே இருந்தது. நேர அறிவிப்புடன் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டு பதிவர்களுக்கு அறிவிக்கப் பட வேண்டும் என்று ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன் எல்லோரையும் சந்திக்கவோ பேசவோ வாய்ப்பு மிகவும் குறைவு முன்பின் பரிச்சயப்படாத வலைப் பதிவர்களை அறிந்து கொள்வதே சிரம மாய் இருக்கும் இந்த விவாதங்களை சந்திப்புக்கு முன் வைத்துக் கொள்வதுதான் சரியாய் இருக்கும் பதிவர் சந்திப்பு சூழ்நிலை மாசுபடக் கூடாது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 21. @ வே நடனசபாபதி
  கணிப்பது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் நடுவர் கருத்தோடு ஒத்துப்போவதுதான் ஏறக்குறைய இயலாத ஒன்று வருகைக்கு கருத்துக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 22. பரிசு பெறப்போகும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. கணிப்பது கொஞ்சம் சிரமம் என்றுதான் தோன்றுகிறது! அதே சமயம் பதிவுகளை வாசிக்கச் செய்யும் உத்தியான இது ஓரளவு அந்த பதிவுகளை அந்த வலைப்பூக்களை மற்றவர்கள் பார்க்க அல்லது படிக்க உதவும். நானும் விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் முந்தைய படைப்பு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை!

  ReplyDelete

 24. @ கீதா சாம்பசிவன்
  பரிசு பெறப்போகும் பதிவர்கள் சார்பில் நன்றி

  ReplyDelete

 25. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 26. தங்களின் கருத்து உண்மையே போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தாங்களும், நானும் உள்பட தனக்குதான் பரிசு என்ற கொள்கையின்படியே.. நுழைகின்றார்கள் 80ம் உண்மையே...
  தங்களை நான் சரியாக புரிந்து கொண்டு வெகுநாட்களாகி விட்டது ஐயா

  ReplyDelete

 27. @ கில்லர்ஜி
  என்னைச் சரியாகப் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கு நன்றிகள்

  ReplyDelete
 28. ஐயா,
  நான் இளங்கலை அறிவியல் பயின்ற போது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படித்திருக்கிறேன்.
  அதனைப் பயன் படுத்தி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அறியலாம்
  சாதகமான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை, மொத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறு என்ன என்று அறியலாம்
  ஆனாலும் வெற்றி தோல்வி என்பது படிப்பவரது மன நிலையை பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடலாம்,
  மூங்கில் காற்று ஐயா அவர்கள் சொல்வது போல் இப்போட்டியானது, அனைவரையும் படிக்க வைப்பதற்காக உத்தி என்றே எடுத்துக் கொள்வோம்
  நன்றி ஐயா

  ReplyDelete

 29. @ கரந்தை ஜெயக்குமார்
  ஐயா வணக்கம் இந்த 260 பதிவுகளில் ஐந்து வகையில் ஒருவர் 1,2 3, என்று கணித்து வெற்றிபெரும் வாய்ப்பைச் சொல்லி இருந்தீர்களானால் நான் சொல்ல வந்தது பலருக்கும் புரிந்திருக்கும் ஒரு மாதிரிக்காக வெறும் ஐந்து பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,2, 3 சரியாகத் தேர்வு செய்ய ஏறத்தாழ 60 பெர்முடேஷன் காம்பினேஷன் தேவைப்படும் என்று ஒரு குத்து மதிப்பான கணிப்பு கூறுகிறது. என்ன செய்ய வயதானதும் கற்றதும் மறந்து விடுகிறது. வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வணக்கம் அய்யா...
  போட்டிக்கு போட்டி என்பது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதே முதல் காரணம்....சற்று சிரமமான போட்டி தான் என்றாலும் கட்டுரைகளை முழுமையாக படித்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கு..இந்த கருத்து நடுவர்களையும் தீவிரமாக்கும் என்பது உண்மை...நன்றி.

  ReplyDelete

 31. @ எம். கீதா
  அனைவரையும் படிக்க வைக்கும் உத்திக்கு வெல்ல முடியாத பரிசை அறிவிக்க வேண்டுமா. சரி. உத்தியாவது வெற்றி பெறுகிறது என்று தெரிகிறதா. என் பதிவு முழுவதும் ஊன்றிப் படித்தால் நான் சொல்ல வந்தது புரியும் என்று நினைக்கிறேன் வந்து கருத்திட்டதற்கு நன்றி மேம்

  ReplyDelete
 32. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பை முன்னிட்டு நடக்கும் எந்த போட்டிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை. அதே போல போட்டிகளுக்கான வலைப்பதிவர்கள் வெளியிட்ட படைப்புகளிலும் பின்னூட்டம் எழுத ஆர்வம் காட்டவில்லை. அதனால் இங்கு எனது கருத்தாக என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  ReplyDelete

 33. @ தி.தமிழ் இளங்கொ
  இது நல்ல பாலிசி. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 34. //என் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் திரு ஜீவி அவர்கள் இம்மாதிரி பதிவர் திருவிழாக்களை நடத்துவது குறித்து பதிவர்கள் அனைவரும் கூடி அமர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்று எழுதி இருந்தார் //

  ஜிஎம்பீ சார்! நான் இப்படியான அர்த்தத்தில் ஏதும் கூறவில்லையே! :))

  "தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்."

  -- என்று தானே தங்கள் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தேன்?

  அப்பாதுரை சார் கூட எனது இந்தக் கருத்தை வழிமொழிந்திருந்தாரே!

  ReplyDelete
 35. எனக்கு திரு. வை.கோ. சார் நடத்திய அற்புதமான 'சிறுகதை விமரிசனப் போட்டி' இந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது..

  ஒரு தனிநபர் வாராவாரம் எந்தத் தடங்கலும் இல்லாமல் 40 வாரங்களுக்கு எப்படி சமாளித்தார் என்று மலைப்பு தான் ஏற்படுகிறது! தேர்வான பரிசுக் கட்டுரைகளை வெளியிட்டதுடன் மிக அழகாக படங்களுடன் விவரிப்புகள் வேறே!

  புள்ளி விவரங்கள் எல்லாம் நாம் கணக்குப் போட்டு சலிப்பதற்காக மட்டுமே என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 36. ஜீவி said...

  //எனக்கு திரு. வை.கோ. சார் நடத்திய அற்புதமான 'சிறுகதை விமரிசனப் போட்டி' இந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது..//

  அவை என்றும் மறக்கவே முடியாத மகத்தான நாட்கள் அல்லவா .... சார். :)

  //ஒரு தனிநபர் வாராவாரம் எந்தத் தடங்கலும் இல்லாமல் 40 வாரங்களுக்கு எப்படி சமாளித்தார் என்று மலைப்பு தான் ஏற்படுகிறது!//

  போட்டியின் நடுவராக இருந்த தங்களின் மிகச்சிறப்பான வழிகாட்டல், என்னுடனான முழு ஒத்துழைப்பு, இரவு பகல் பாராத கடுமையான உழைப்பு, என்னுடைய அன்புக்காக மட்டுமே ஏற்றுக்கொண்ட பணியில் தங்களின் முழு அர்ப்பணிப்பு, விமர்சனம் எழுதியவர் யார் என்றே தங்களுக்குத் தெரியாதபோதும், அவர்களின் எழுத்துக்களை மட்டுமே நன்கு அலசி ஆராய்ந்து, தாங்கள் வழங்கிய பாரபட்சமற்ற முற்றிலும் நியாயமான தீர்ப்புகள், போட்டியில் ஆர்வத்துடன் பங்குகொண்டு மிகச்சிறப்பாக விமர்சனம் எழுதி அனுப்பிய அன்புள்ளங்களின் தொடர்ச்சியான ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் க்ருபை என எல்லாமே என்னுடன் ஒத்துழைத்ததால் என்னால் அதனை ஒரு சவாலாகவே ஏற்று தொடர்ச்சியாக தொய்வேதும் இல்லாமல் 40 வாரங்களுக்கு சமாளிக்க முடிந்தது.

  அதையேதான் என் நன்றி அறிவிப்புப்பதிவினிலும் நான் விரிவாகச் சொல்லியுள்ளேன்.
  Ref: http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  //தேர்வான பரிசுக் கட்டுரைகளை வெளியிட்டதுடன் மிக அழகாக படங்களுடன் விவரிப்புகள் வேறே!//

  நாம் அளித்த பரிசுத்தொகைகளைவிட, இந்த ஒரு மாபெரும் அங்கீகாரத்தை மட்டுமே வெற்றி பெற்ற அனைவரும் என்னிடமிருந்து மிகவும் விரும்பியதாக அவர்களின் நேயர் கடிதங்கள் வாயிலாகவும், பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்து என்னையும் மகிழ்வித்துள்ளார்கள்.

  தங்களின் அன்புக்கு மீண்டும் என் நன்றிகள், சார்.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
 37. @ ஜீவி
  /"தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்./ நான் புரிந்து கொண்டதற்கும் உங்கள் எழுத்துக்கும் பெரிஅ வித்தையாசம் இருப்பதாக தோன்றவில்லை. நீங்கள் ஆலோசனயாகக் கூறியதை நான் செயல் படுத்த வேண்டியதாக் கூறி உள்ளேன் சரியாகப் புரிய வைத்ததற்கு நன்றி சார்

  ReplyDelete

 38. @ ஜீவி
  போட்டிகளை தனிமனிதர் நடத்துவது வேறு ஒரு பதிவர் குழு நடத்துவது வேறு. காரணங்கள் வேறு வேறுதான் கோபுசார் நடத்திய போட்டி பற்றி நான் அபிப்பிராயம் ஏதும் கூறியதாக நினைவில்லை. நடுவர்களுக்குப் பதிவர்களைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடாது என்பது என் கருத்து. அதை முன்கூட்டியே பதிவிட்டும் இருந்தேன் இருந்தாலும் பதிவர்களை அறிந்த பதிவர்களும் பலரும் நடுவராக இருந்திருக்கிறார்கள் மேலும் விமரிசனப் போட்டியில் இரண்டாவது மூன்றாவது இடம் என்பது எவ்வாறு கணிக்கப் பட முடியும் என்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  ReplyDelete
 39. @ கோபுசார்
  கதை விமரிசனம் எழுதியவர் யாரென்றும் நடுவர் யாரென்று தெரியாமலேயே கதை விமரிசனங்கள் எழுதாப்பட்ட்ன என்பதும் நீங்கள் நடத்திய போட்டியின் முக்கிய அம்சமாகும் ஆனால் தலைப்பு கொடுக்கப் பட்டு அதற்கேற்ப போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பதே விழாக்குழுவின் போட்டிகளில் முக்கிய அம்சம் இது குறித்து நான் பிறகு ஓர் சமயம் விரிவாக எழுத உள்ளேன்

  ReplyDelete
 40. //@ கோபுசார்
  கதை விமரிசனம் எழுதியவர் யாரென்றும், நடுவர் யாரென்று தெரியாமலேயே கதை விமரிசனங்கள் எழுதப்பட்டன என்பதும் நீங்கள் நடத்திய போட்டியின் முக்கிய அம்சமாகும் //

  முக்கிய அம்சம் மட்டுமல்ல. என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி - 2014’ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் போட்டியாகும். இதுவரை இப்படியோர் மெகாப் போட்டியை தொடர்ச்சியாக தொய்வேதும் இல்லாமல் அதுவும் 40 வாரங்களுக்கு வெற்றிகரமாக யாருமே நடத்தியதாகச் சரித்திரமும் இல்லை. இனி நடத்தப்போவதற்கான சாத்தியமும் இல்லை என்பதை மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

  என் சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவர் அவர்களுக்கு விமர்சனத்தை எழுதி அனுப்பியவர் யார் என்பது கடைசிவரை தெரியவே கூடாது என்பதே என் அடிப்படைக் கொள்கையாக நான் வைத்துக்கொண்டு செயல்பட்டேன்.

  போட்டி 80% வெற்றிகரமாக முடிந்த நிலையில் மட்டும், அதுவும் நடுவர் யார் என்பதை மட்டும், அனைவருக்கும் பகிரங்கமாக நான் அறிவித்திருந்தேன்.

  அதன்பிறகும் விமர்சனம் எழுதி அனுப்பியவர் யார் என்பதை கடைசிவரை போட்டிகள் 100% முடியும்வரை நான் நடுவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

  -=-=-=-=-

  //ஆனால் தலைப்பு கொடுக்கப் பட்டு அதற்கேற்ப போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பதே விழாக்குழுவின் போட்டிகளில் முக்கிய அம்சம்.//

  எனக்கும் இது மிக நன்றாகவே புரிகிறது. கட்டுரையோ கவிதையோ எழுதி அனுப்பியவர் பற்றிய இரகசியங்கள் நடுவர் குழுவுக்குத் தெரியாமல் காக்கப்பட்டிருந்தால், நானும் அனைத்து ஐந்து போட்டிகளில் கலந்துகொண்டிருப்பேன். அனைத்து முதல் பரிசுகளையும் நானே வென்றிருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. :)

  அவ்வாறான ஆரோக்யமான அறிவிப்பு ஏதும் இல்லாததால் மட்டுமே நான் எந்தப்போட்டிகளிலும் கலந்துகொள்ளவே இல்லை.

  அதனால் இந்தப்போட்டியையும் நான் நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களையும் நாம் இங்கு ஒப்பிட்டுப்பேசுவது சரியாகவே இருக்காது.

  மேலும் இவர்கள் வைத்துள்ள போட்டிக்குள் போட்டிக்கு இவர்கள் ’விமர்சனப்போட்டி’ என்று பெயர் வைத்துள்ளதையே என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

  யாரும் இதில் விமர்சனம் எழுதும் வேலையே இல்லையே. Just Ranking கொடுக்கப்பட வேண்டும் .... அவ்வளவு தானே. பிறகு எப்படி அது ‘விமர்சனப் போட்டி’ என்று அழைக்கப்படலாம்?

  ’வெற்றி பெறுவோர் பற்றிய கருத்துக்கணிப்புப் போட்டி’ என்று மட்டுமே அதற்கு பெயர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

  //இது குறித்து நான் பிறகு ஓர் சமயம் விரிவாக எழுத உள்ளேன்.//

  தாராளமாக எழுதுங்கோ சார். அனுபவம் வாய்ந்த மூத்த பதிவரான நீங்கள் எழுதாமல் வேறு யார், முடிந்துபோன, இதைப்பற்றியெல்லாம் இனி எழுதப் போகிறார்கள்? வாழ்த்துகள்.

  ReplyDelete
 41. //நான் புரிந்து கொண்டதற்கும் உங்கள் எழுத்துக்கும் பெரிஅ வித்தையாசம் இருப்பதாக தோன்றவில்லை//

  //சரியாகப் புரிய வைத்ததற்கு நன்றி சார் //

  நீங்கள் புரிந்து கொண்டிருப்பது பதிவர் திருவிழாவை நடத்துவது பற்றி. நான் சொல்ல வந்தது தமிழ் வலையுலகை இன்னும் முன்னெடுத்துச் செல்வது பற்றியதான கருத்துப் பரிமாற்றங்கள்.

  இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?.. இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் அந்தப் பதிவில் டூ லேட் என்று சொல்லியிருப்பதும் என் கருத்தை சரிவர புரிந்து கொள்ளாததாலேயே.


  ReplyDelete
 42. //போட்டிகளை தனிமனிதர் நடத்துவது வேறு ஒரு பதிவர் குழு நடத்துவது வேறு.//

  இதெல்லாம் எனக்கும் தெரிந்தது தான். நடத்தும் முறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.

  //காரணங்கள் வேறு வேறு தான்..//

  இரண்டிற்கும் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூட்ட வேண்டும் என்பது தான் பொதுவான காரணமாக இருக்க முடியும். இது நம் இப்படியான முயற்சிகளால் கண்ணுக்கு பூதாகாரமாய் தெரியாமல் உள்பொதிந்திருக்கும் வளர்ச்சி. நீங்கள் வேறு என்ன காரணம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் தெரியவில்லை.

  கோபு சார் நடத்திய விமர்சனப் போட்டி பாசறையில் பட்டை தீட்டப்பட்ட திறமையாளர்களில் பலர் இந்த வலைப்பதிவர் திருவிழா போட்டிகளிலும் ஆகச்சிறந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள் பாருங்கள். இது தான் பாறையைப் பிளந்து கொண்டும் பூ மலரும் என்பதற்கு நிதர்சன உதாரணம். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் பெருமைகளைப் பெறுவர். போட்டிகள் அவர்களுக்கான வாய்ப்பு. அவ்வளவு தான்.

  ReplyDelete