புதுக்கோட்டை via மலைக்கோட்டை( 4)
ஞாயிறு
காலை சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்னும்
என் அரிப்பை உதாசீனப் படுத்தி காலை உணவுக்குப் பிறகே போவோம் என்றனர்
மனைவியும் மகனும் காலையிலேயே போனால் அங்கு காலை உணவு கிடைக்கும் என்று உறுதியாகச்
சொல்லாத நிலையில் நானும் சம்மதித்தேன் கார் ட்ரைவரும் 45 நிமிடத்தில் போய்ச்
சேர்ந்து விடலாம் என்றார் சரியாக
எட்டேகால் மணிக்குக் கிளம்பினோம் சாலை நன்றாகவே இருந்தது வழியில் ஒரு டோல் போகவர என்று 40 ரு. க்கு டிக்கட் வாங்கினோம் நாங்கள் போய்ச் சேர்ந்தபோது
மணி ஒன்பதாகி இருந்தது பதிவர்களின் வருகை
பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தார்கள்
இத்தனை
ஏற்பாடுகள் செய்து புதுக் கோட்டைக்கு வந்ததே முகமறியா வலைப்பதிவு நண்பர்களைச்
சந்திக்கவும் பரிச்சயப் பட்டு நட்பினை உறுதி செய்து கொள்ளவும்தான் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வலைப் பதிவர்
வருகைப் பட்டியல் படி வருவோரில் பலரையும் சந்திக்க விரும்பினேன் முதலில் ஏற்கனவே
சந்தித்திராதவர் பட்டியல் புலவர் இராமாநுசம் , எம் கீதா, எஸ்பி. செந்தில்குமார்,
வைகறை, அரசன் ஏகாந்தன் சேட்டைக்காரன் கர்னல் கணேசன் தில்லையகத்து கீதா ,தென்றல்
சசிகலா,திருமதி ருக்மிணி சேஷாசாயி, கரந்தை சரவணன் மணவை ஜேம்ஸ்,ஆகியோரே இப்போது
நினைவுக்கு வருகிறார்கள் ஏற்கனவே
அறிமுகமாயிருந்த பதிவர்களின் பட்டியல் நீளம் அதிகம் டாக்டர் கந்தசாமி, செல்லப்பா
சீனா கரந்தை ஜெயக்குமார் மதுரை சரவணன் ரமணி, திண்டுக்கல் தனபாலன் தமிழ்வாசிப்
பிரகாஷ்சீனா அவர்களின் துணைவியார், பகவான்
ஜி, துளசிதரன் கோவை ஆவி, சீனு, பாலகணேஷ் குடந்தை சரவணன் ஹரணி, தி தமிழ் இளங்கோ
டிஎன் முரளிதரன் தருமி கவியாழி கண்ணதாசன் போன்றோர்
நினைவுக்கு வருகிறார்கள் பார்த்து
பரிச்சயப்பட விரும்பி வராதவர்கள் எட்வின் தளிர் சுரேஷ் சுப்புத் தாத்தா
ஈரோடுவழக்கறிஞர் ராஜசேகரன் , திருமதி ராஜராஜேஸ்வரி போன்றோர் முக்கியமானவர்கள்
என்னை அறிந்தும் அறிமுகப்படுத்திக் கொள்ள
வராத பதிவர்களும் நிறைய பேர் இருக்கலாம்
நன்கு
அறிமுகமான ஹரணி அவர்களது முகம் மறந்து போய் அவரே என்னிடம் வந்து பேசிய போது குற்ற
உணர்ச்சியால் வேதனைப் பட்டது நிஜம் இதைத்தான் நான் ஒரு பதிவில் முதுமை என்பது
செய்யாத குற்றத்துக்குதண்டனை என்று எழுதி
இருந்தேனோ?பார்த்த முகம் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அவரிடம் மன்னிப்புக்
கேட்டுக் கொண்டேன்
விழா நிகழ்வுகள் குறித்து இப்போது நான் ஏதும்
சொல்லப் போவதில்லை அதைப் பதிவர்கள் அறிவார்கள் நேரடி ஒளிபரப்பும் இருந்தது. நான் என் கருத்துக்கள் சிலவற்றை மட்டுமே பகிரப் போகிறேன் நாங்கள் சுமார் மூன்று
மணிக்கு திருச்சி நோக்கிப் பயணப் பட்டோம் திருமதி ருக்மிணி சேஷாசாயி திருச்சியில்
இருந்து தனியே வந்திருந்தார் எங்கள் காரில் இடமிருக்கிறதுவருகிறீர்களா என்று கேட்டபோது ஒப்புக் கொண்டு எங்களுடன்
பயணித்தார் அவரும் என் மனைவியும்
சிநேகிதிகளாகி விட்டனர் இனி சில புகைப்
படங்கள்
|
வருகை பதிவு |
|
புதுகை சந்திப்பில் |
|
தருமியுடன் |
|
தருமி கந்தசாமி நான் புலவர் |
|
கரந்தை ஜெயக்குமாருடன் |
|
நான் கரந்தை சரவணன் ஹரணி கரந்தை ஜெயக்குமார் |
|
திரு ஹரணியுடன் |
|
தென்றல் சசிகலாவுடன் |
|
சுய அறிமுகம் |
|
க(ல்)னல் கணேசனுடன் |
|
வைகறை நான் கரந்தையார் கர்னல் கணேசன் |
|
கவிதைக்கு ஓவியம் |
|
கவிதைக்கு ஓவியம் |
|
பதிவர் நண்பர்கள் |
|
புலவர் இராமாநுசம் எஸ்பி செந்தில் குமாருடன் நான்
புகைப்படம் வெளியிட விரும்பாதவர் பட்டியல் நீள்கிறது சந்திப்பின் போது எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொரு வரையும் தனியே எடுக்கப் பட்டதல்ல. பலரும் சேர்ந்தே இருக்கும் படங்கள் அதில் ஒருவர் தன் படம் வெளியிட விரும்பவில்லை என்றால் அவருடன் நிற்கும் பிறரது படமும் வெளியிடப் படாமல் போகும் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது ஆனால் அதில் இருக்கும் ஒருவர் விரும்பவில்லை என்பதற்காக அதில் இருக்கும் மற்ற வர்களையும் அடையாளப் படுத்த முடிவதில்லை. படம் வெளியிட விரும்பாதவர் படம் எடுக்கும் போது தன்னைத் தவிர்த்துக் கொண்டிருந்தால் ஒரு இக்கட்டான நிிலையைத் தவிர்த்திருக்கலாம் எடுத்த சில படங்களைத் தவிர்க்க நேருவது சங்கடமாக இருக்கிறது தவிர்க்கப் பட்டவர் தவிர மற்றவர்கள் என்னை மன்னிக்கட்டும்
இந்தக் காணொளிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அடுத்து வரும் புதுக் கோட்டை சந்திப்பு பற்றிய பதிவு என் எண்ணங்களைத் தாங்கி வரும் தவற விடாதீர்கள் |
கர்னல் கணேசன் பதிவர் அல்ல என்று நினைக்கிறேன். அவர் எழுதி இருந்ததை நண்பர் கரந்தை ஜெயக்குமார் பகிர்ந்திருந்தார்.
பதிலளிநீக்குஅந்தக் குழுவில் இருக்கும் அந்த புப வெளியிடுவதைத் தவிர்க்க நினைப்பவர் படத்தை எடிட் செய்து, மற்றவர்கள் படத்தை வெளியிட முடியுமே!
கர்னல் கணேசன் ஒரு பதிவர்தான். வலைப்பதிவர் கையேட்டில் அவர் பெயர் இருக்கிறது. அவர் பதிவின் விலாசம்:colonelpaaganesanvsm.blogspot.com
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு பற்றிய பகிர்வுகளும், படங்களும் ,
பதிலளிநீக்குகாணொளிகளும் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்..
ஆமாம், ஶ்ரீராம் சொல்வது போல் யார் படம் தவிர்க்க வேண்டுமோ அவர்களை நீக்கிவிட்டுப் போடலாம். சமீபத்தில் என்னுடைய படம் ஒன்றைப் பகிர்ந்தபோது கூடவே இருந்த மகன், மகள் படங்களை நீக்கிவிட்டே வெளியிட்டேன். :)
பதிலளிநீக்குஉங்களை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி!நன்றி!
பதிலளிநீக்குநன்றி...
பதிலளிநீக்குஉங்களை சந்திக்க விரைவில் வருவேன் ஐயா...
நீங்கள் ஆசைப்பட்டது போல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும் நிறைய பேச முடியா விட்டாலும், புதுக்கோட்டையில் அன்றையதினம் நிறையபேரை சந்தித்து இருக்கிறீர்கள் என்பதே நிறைவான விஷயம்தான் அய்யா. திருமதி ருக்மிணி சேஷாசாயி அம்மாள் அவர்கள் திருச்சிக்கு எப்படி போய்ச் சேர்ந்தார்களோ என்று கவலைப் பட்டேன். நல்லவேளையாக உங்கள் குடும்பத்தோடு அவர்களையும் அழைத்து சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் வலைப்பதிவர் சந்திப்பில் எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றும் அதனை அவரவர் பதிவினில் வெளியிட்டுக் கொள்வது என்பது மகிழ்வான ஒன்றாகப் போய்விட்டது. நீங்கள் சொல்வது போல, ” படம் வெளியிட விரும்பாதவர் படம் எடுக்கும் போது தன்னைத் தவிர்த்துக் கொண்டிருந்தால் ஒரு இக்கட்டான நிிலையைத் தவிர்த்திருக்கலாம் எடுத்த சில படங்களைத் தவிர்க்க நேருவது சங்கடமாக இருக்கிறது “
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
புகைப் படத்தை எடிட் செய்யும் நுட்பம் எனக்குத் தெரியாது. வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
என் சார்பில் ஸ்ரீராமுக்கு பதில் கொடுத்ததற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
உங்களை சந்திக்க ஆவலாய் இருந்தேன் வந்து பாராட்டியதற்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
நன்கு திட்டமிட்டு குறைந்தது இரண்டு நாட்களாவது என்னுடன் தங்குமாறு வாருங்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன் நன்ற் இ டிடி.
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
திருமதி ருக்மிணி சேஷாசாயியை எனக்கு அறிமுகம் இல்லை. அன்று நாம் சந்தித்தபோது யாரோ அவர் தனியாகவே புதுகை செல்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது கேட்டேன் வந்தார்கள்
பதிலளிநீக்கு@ புலவ இராமாநுசம்
உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஐயா. அது நீங்கள் என்னுடன் தொலை பேசினபோது இரட்டிப்பாகியது நன்றி ஐயா
நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்களும் ஒரு பதிவர்தான்
அவரது வலைப் பூ முகவரி
http://colonelpaaganesanvsm.blogspot.in/
http://pavadaiganesan.blogspot.in/
நன்றி நண்பர் ஜெயக்குமார். நேரலையில் நிகழ்ச்சியைப் பார்த்தபோது பேசிய திரு கர்னல் கணேசன் (என்றுதான் நினைக்கிறேன்) நான் உங்களைப்போன்ற பதிவர் அல்ல என்று பேசியதைக் கேட்டதாக நினைவு. அதை வைத்துதான் பின்னூட்டத்தில் அப்படி எழுதினேன்.
நீக்குசந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் விடாமல் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. உங்களது நினைவாற்றலும், பகிரும் பாணியும், எழுத்து நடையும் எங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றன, மறுபடியும். நன்றி.
பதிலளிநீக்குபுதுகை வலைப்பதிவர் சந்திப்பின்போது தங்களுக்கேற்பட்ட அனுபவங்களை தங்கள் எழுத்து வாயிலாய் அறிவதில் மகிழ்ச்சி. படங்களும் காணொளிகளும் தகவல்களோடு பகிரப்படுவது சிறப்பு. உடனுக்குடன் நினைவுகளை மீட்டி தொடரெழுதுவது தங்கள் சுறுசுறுப்பைக் காட்டுகிறது. பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது ,அன்று ,சில பதிவர்களை நான் சந்திக்கவில்லை orபதிவர்கள் சிலர் என்னை சந்திக்க வில்லையென்று :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅருமை ஐயா புகைப்படங்கள் நன்று
புகைப்படம் எடுப்பது பற்றி முடிவில் தாங்கள் சொல்லிருந்த விடயங்கள் அருமை நாசூக்காக அழகாக சொன்ன விதம் மிகவும் நன்று
காணொளி கண்டு ஏமாந்து விட்டேன் ஸூப்பர்
/// @ தி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குதிருமதி ருக்மிணி சேஷாசாயியை எனக்கு அறிமுகம் இல்லை. அன்று நாம் சந்தித்தபோது யாரோ அவர் தனியாகவே புதுகை செல்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது கேட்டேன் வந்தார்கள் ///
அன்று திருச்சியில் நீங்கள் தங்கி இருந்த Hotel Breeze இல் உங்கள் அறையில் நடைபெற்ற, மினி வலைப்பதிவர் சந்திப்பின் போது, அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களும் நானும்தான் அய்யா, திருமதி ருக்மிணி சேஷாசாயி அம்மாள் பற்றி குறிப்பிட்டோம்.
உங்களிடம் அன்று நிறைய பேச முடியாத வருத்தம் இன்னும் உள்ளது சார்..
பதிலளிநீக்குசந்திப்பு பற்றிய தங்கள் சிந்தனைகளை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் கண்களுக்கு விருந்து..
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துகள் - சிந்தனைக்கு விருந்து..
வாழ்க நலம்!..
//திருமதி ருக்மிணி சேஷாசாயி திருச்சியில் இருந்து தனியே வந்திருந்தார் எங்கள் காரில் இடமிருக்கிறதுவருகிறீர்களா என்று கேட்டபோது ஒப்புக் கொண்டு எங்களுடன் பயணித்தார் அவரும் என் மனைவியும் சிநேகிதிகளாகி விட்டனர்..//
பதிலளிநீக்குகும்பலாக அடுத்தடுத்த நிறைய பேர்களுடனான சந்திப்புகளுக்கும், தனிப்பட ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இதான் வித்தியாசம்.
இந்தப் பதிவை வாசிப்பவர்களுக்குக் கூட அவரையும் உங்கள் காரில் திருச்சிக்குக் கூட்டி வந்தது நிறைவைத் தந்த விஷயமாக இருக்கும். நல்ல காரியம் செய்தீர்கள், ஐயா!
புகைப்படங்களைப் பார்க்கிற பொழுது கல்யாண வீடு களைகட்டிய மாதிரி இருக்கிறது.
விழா ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள்!..
முதுமை செய்யாத குற்றத்துக்கு தண்டனை!
பதிலளிநீக்குசூப்பர் வார்த்தை!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிருமதி. ருக்மணி சேஷசாயி அம்மாள் அவர்களை தங்களுடன் புதுக்கோட்டையிலிருந்து திருச்சிவரை காரில் பத்திரமாகக் கூட்டி வந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த மகத்தான செயலுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
பதிலளிநீக்குதிருச்சியிலிருந்து புதுக்கோட்டை போகும்போதே அவர்களை தங்களுடன் காரில் அனுப்பலாமா என நான் எனக்குள் சற்றே சிந்தித்தேன். திரு. தமிழ் இளங்கோவும் நானும் இதுபற்றி எங்களுக்குள் கலந்து ஆலோசித்தோம். ஆனால் தாங்கள் தங்கியிருந்தது திருச்சியில் ஏதோ ஒரு கோடியில். அவர்கள் வீடு ஸ்ரீரங்கத்தில் அதுவும் மேலூர் ரோட்டில் வேறொரு கோடியில்.
முதல்நாள் இரவு நாம் சந்தித்தபோதே பலத்த இடியுடன் கூடிய மழைவேறு பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆங்காங்கே டிராஃபிக் ஜாம் வேறு. மேலும் இதுவரை அறிமுகமில்லாத தங்கள் இருவரையும் சேர்த்து அனுப்ப முயற்சிப்பதில் இருவருக்குமே சில தர்மசங்கடங்கள் ஏற்படலாம்.
அதாவது புறப்படும் நேரம் முதலியன ஒருவராமல் மற்றொருவருக்கு தாமதம் ஆகலாம். அதனால் இந்த விஷப்பரிட்சையில் இறங்க அன்று நான் தயாராக இல்லை. ஒருவரால் மற்றொருவர் பயணத்திற்கு தாமதமோ, இடையூறோ, சிரமங்களோ ஏற்படக்கூடாது என்பதும் எனது எண்ணமாக இருந்தது.
பிறகு திருமதி. ருக்மணி சேஷசாயி அம்மா அவர்களுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை விழா மண்டபம்வரை தகுந்த வழித்துணையாக நம் பதிவர் திரு. எஸ்.பி.செந்தில் குமார் அவர்கள் அமைந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்.
மீண்டும் தங்களுக்கு என் நன்றிகள்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
ஸ்ரீராமுக்குப் பதில் சொல்லப் பல்ரும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிகலந்த விஷயம் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
எனக்குண்டான முகம் மறந்த விஷயம் நீங்கள் கவனிக்க வில்லையா ?வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
பாராட்டுக்களுக்கு நன்றி மேம் .
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
பதிவர்களை நாம் சந்திக்காவிட்டாலும் அவர்கள் நம்மை சந்திக்கா விட்டாலும் நெட் ரிசல்ட் ஒன்றுதானே. வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ கில்லர் ஜி
என் எழுத்தைப் படித்து போரடித்தவர்களுக்காகக் காணொளி ரசித்ததற்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
திருமதி ருக்மிணி சேஷா சாயி பற்றிக் குறிப்பிட்டது நினைவில் இருந்தது. யார் என்பது தெளிவாய் நினைவிருக்கவில்லை. நன்றி சார்
பதிலளிநீக்கு@ எம் கீதா
நீங்கள் பல அலுவல்களுக்கிஐயே இருந்தீர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அட் லீஸ்ட் நேரில் அறிமுகப் படுத்திக் கொண்டதற்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
சந்திப்பு பற்றிய சிந்தனைகள் பலருக்கும் கசக்கலாம் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
தொடர்ந்து வாருங்கள். இதே எண்ணம் தொடர்கிறதா என்று பாருங்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ ஜீவி
மினி சந்திப்பின் போதே தெரிவித்திருந்தேன் எங்களுடன் காரில் இருவர் வரலாம் என்று ஆனால் தேர் வாஸ் நோ டேக்கர்ஸ். வருகைக்கு நன்றி ஐயா.
@ ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
பதிலளிநீக்குஇந்த வரிகளைக் கொண்டு நான் எழுதிய கவிதை வலையுலகில் பலருக்கும் தெரியும் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
என் நினைவு சரியானால் என் இந்தக் கவிதையில் ஜீவியின் முதல் வருகையும் பின்னூட்டமும் இருந்தது.
பதிலளிநீக்கு@ கோபு சார்
திருமதி ருக்மிணி சேஷாசாயியை அவர்கள் விருப்பப்படி ஜங்ஷன் அருகே இறக்கி விட்டோம் அவர்கள் நலமுடன் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் டெலிபோன் நம்பர் இல்லாததால் தொடர்பு கொள்ள வில்லை. நன்றி சார்
அய்யா அவர்களுக்கு வணக்கம்,
பதிலளிநீக்குகடந்த சில தினங்களாக வெளியூர் சென்றுவிட்டதால் வலைப்பதிவு பக்கம் வரமுடியவில்லை. வந்ததும் தங்களின் பதிவைக் கண்டேன். புதுக்கோட்டை சந்திப்புப் பற்றி அசத்தலாக நான்கு பதிவுகளை பதிவிட்டிருந்தீர்கள். அனைத்தையும் வாசித்தேன். அத்தனையும் அருமை. வலைப்பதிவர் சந்திப்பும், தங்களைப் போன்ற பிரபல வலைப்பதிவர்களையும் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகள். தொடருங்கள் அய்யா! நானும் தொடர்கிறேன்.
ஐயா வணக்கம்!
பதிலளிநீக்குhttp://veesuthendral.blogspot.in/2015/10/blog-post_19.html
எனது வாசிப்பு அனுபவம்.
நேரமிருப்பின் படித்து கருத்திட வேண்டுகிறேன்.
அய் என் படமும் இருக்கிறதே. நன்றிங்க ஐயா.
புதுக்கோட்டைக்கு வராத என்போன்றோர் பதிவுலக நண்பர்களை பார்ப்பதற்கு உதவியமைக்கு நன்றி! இணைத்திருந்த காணொளியை முன்பே ‘இரசித்திருக்கிறேன்’!
பதிலளிநீக்குஅருமையான புகைப்படங்களும் நினைவு ஓட்டப்பகிர்வும் சிறப்பாக இருக்கு ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கரந்தையாரின் பதிவுகளின் தாக்கம் திரு கணேசனையும் பதிவராக்கி விட்டதோ என்னவோ உங்கள் கேள்விக்குப் பதிலாக பின்னூட்டங்கள் இருந்ததே
பதிலளிநீக்கு@ எஸ்பி. செந்தில் குமார்
இதுவரை வாசித்த பதிவுகள் எல்லாம் வெகு சாதாரணம் இனிவரும் இரு பதிவுகளை ரசிப்பீர்களோ தெரியாது தொடர்ந்து வாருங்கள் மனதில் பட்டதைச் சொல்லுங்கள் நன்றி குமார்
பதிலளிநீக்கு@ சசிகலா
நான் உங்கள் தளத்தின் தொடர்பாளன் நீங்கள் பதிவிட்டதும் என் டாஷ் போர்டில் வந்துவிடும் என் சிறு கதைத் தொகுப்பின் விமர்சனங்களைக் கோர்த்து ஒரு பதிவாக்கி இருக்கிறேன் படித்தீர்களா. விமரிசனத்தை ஊன்றிப் படிக்க வேண்டும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
தொடர்ந்துவர வேண்டுகிறேன் இதுவரை வெளியிட்டது ஆங்கிலத்தில் சொல்வதானால் mundane இனி வருவது என் எண்ணங்கள் வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ தனிமரம்
என் எண்ணங்களைப் பகிரும் விதத்தில் எதிர் வரும் இரு பதிவுகள் இருக்கும் தொடர்ந்து வர வேண்டுகிறேன் நன்றி ஐயா.
Tamil font problem. So following in English! After all language is first, the medium for communication!
பதிலளிநீக்குThanks for a very elaborate posting with nice pics on Pudukkottai Bloggers' Meet. Nice to meet you there with your son. Wish we could have chatted a little longer.
Saw your comment on 'bloggersmeet2015' webpage. Thanks for invitation. Will call and try to meet before my departure for New Delhi
-Aekaanthan
தங்கள் பதிவும் படங்களும் எங்களையும் புதுவைக்கே அழைத்துச் சென்றன ஐயா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது. உங்கள் தொலைபேசியைஒயும் வருகையையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
இந்தப் பதிவுகள் உங்களை புதுக் கோட்டைக்கே அழைத்ட்க்ஹுச் சென்றது என்றால் எதிர் வரும் பதிவுகள் உங்கள் சிந்தனைக்குக் கேள்விகளாக இருக்கும் . வருகைக்கு நன்றி ஐயா.
நீங்க தென்றல் சசிகலாவுடன் பேசும் படத்தில் உங்கள் முதுகுக்குப்பின் வருபவர் நம்ம ஜோதிஜி.
பதிலளிநீக்குநண்பர்களை சந்தித்தது தனி மகிழ்ச்சி! தெரிந்த முகங்களைப் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.
@ துளசி கோபால்
பதிலளிநீக்குஜோதிஜியை எனக்கு அறிமுகமில்லை. தெரியவில்லை. அவருக்கும் என்னை அறிமுகமில்லை தெரியவில்லை போலும் வருகைக்கு நன்றி நீங்கள் இல்லாதது ஒரு குறை. அதற்கு யாரையும் பொறுப்பேறகச் சொல்ல மாட்டேன்