வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஓலா..ஓலா...


                                                 ஓலா ஓலா
                                                 ------------------
    முகநூலில் ஸ்ரீராம் அவர்கள்சென்னையில் ஃபாஸ்ட் ட்ராக் காரில் பயணம் செய்தது பற்றி எழுதி இருந்தார்  பெங்களூரின்  ஓலா செர்வீஸ் பற்றி எழுதலாம் என்று தோன்றியது அதுவே இந்தப்பதிவு


ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றால் நீங்கள் புறப்படும் இடத்துக்கே  வந்து உங்களைப் பிக் அப் செய்து நீங்கள் போகுமிடத்துக்கு கொண்டு விடும் வசதி இந்த ஓலா வாடகைக்காரில் கிடைக்கிறது தொலை பேசி அழைப்பெல்லாம் கிடையாது  ஓலா ஆப்ஸை  நீங்கள்  டௌன் லொட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் எங்காவது பயணிக்க விரும்பினால் அந்த தரவிறக்கப்பட்ட  ஆப்ஸைச் சொடுக்கினால்  ஒரு மாப் வருகிறது. அதில் நீங்கள் இருக்குமிடம் காட்டப்படுகிறது
உங்களுக்குத் தேவையான கார் , செடான் போன்றவை எவ்வளவு நிமிஷத்தில் வரும் என்று காட்டப்படுகிறதுஎப்பொழுது தேவை . உடனேயா பிற்பாடா  என்று குறிப்பிடவேண்டும் உடன் என்று குறிப்பிட்டால்  சற்று நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வருகிறது வண்டி ஓட்டியின் தொலைபேசி எண்வருகிறது நாம் அவரைத் தொடர்பு கொண்டு நாம் இருக்குமிடம்  அவரது வண்டி எண் அவர் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரை நம் இருப்பிடத்து எந்த சிரமமும் இல்லாமல்  வரவழைக்கலாம்
பெங்களூரில்  ஓலாவில் பயணம் செய்ய காருக்கு வாடகையாக  முதல் நான்கு கிமீ/ -க்கு ரூ80-/ ம்  அதன் பின் ஒவ்வொரு கி.மீ.க்கும்  ரூ 10-ம் சார்ஜ் என்கிறார்கள். உதாரணத்துக்கு 20 கிமீ தூரத்துக்கு ரூ240 ஆகும்  இது அப்படியே என்றால் பரவாயில்லை. ஆனால் நாம் செல்லும் இடத்தை அடைந்தபின்  ரூ 300க்கும் மேல் வாடகை காட்டுகிறது  எப்படி என்றால்  பயணம் செய்யும் நேரத்துக்கும் பணம் வசூலிக்கப் படுகிறது  20 கி மீ தூரத்துக்கு பெங்களூரில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆகும்  பயணம் செய்யும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ ஒன்று என்று வசூலிக்கிறார்கள் இது எல்லாம் பீக் அவர்ஸ் க்கு ஒத்துவராது  பீக் அவர்ஸில் பயணம் செய்தால்  வாடகை கூடும்  அது பற்றி ஆப்ஸில் எந்த செய்தியுமில்லை.  வாடகைக் காரில் ஏறி அமர்ந்தால் எவ்வளவு பணம் கொடுக்கப்படவேண்டும் என்பது தெரியாத ஒன்று
ஓலா கம்பனியினர்  நமக்கு அடிக்கடி மெயில் அனுப்பி சலுகைகளை அறிவிக்கின்றனர்  ஆனால் நம் மெயில் எதுவும் அவர்களுக்குப் போகாது
அது ஒரு ஒன் வே ட்ராஃபிக் நாம் மெயில் அனுப்பினால் டெலிவரி ஃபெய்ல்ட் என்று வரும் பெங்களூரில் ஆட்டோவுக்கு ஒரு கிமீக்கு  ரூ13 வாங்குகிறார்கள்   மூன்று பேர் போகலாம் பொதுவாக பிரச்சனை இல்லை. சில ட்ரைவர்கள் மட்டும் வரத் தயங்குவார்கள் அல்லது அதிக கட்டணம் கேட்பார்கள் பணம் பற்றிய கவலை இல்லாமல் நம்மிடத்துக்கே வந்து நாம் போகுமிடத்துக்குக்  கூட்டிப்போகும் வசதி ஓலாவில் உண்டு. ஆனால்  இதே சேவையை இவர்கள் இன்னும் திறந்த மனத்துடன் செய்தால் நன்றாக இருக்கும்    
   
   


                              


28 கருத்துகள்:

  1. தாங்கள் சொல்வதைப் பார்த்தால் நல்ல வசதி செய்து தருகிறார்கள் என்பது உண்மையே.... ஆனால் சில மோசடியும் இருக்கும் போல தெரிகிறதே... ஐயா இது நடுத்தர வர்க்கங்களுக்கு சரியாகுமா ?

    பதிலளிநீக்கு
  2. >>> வாடகைக் காரில் ஏறி அமர்ந்தால் எவ்வளவு பணம் கொடுக்கப்படவேண்டும் என்பது தெரியாத ஒன்று.. <<<

    நியாயமான வார்த்தை!..

    பதிலளிநீக்கு
  3. ஶ்ரீராமின் அனுபவத்தை நானும் படித்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ட்ராக் தான் குறைந்த கட்டணம் வாங்குகிறது. சென்னையில் ஓலா அறிமுகம் ஆன புதிதில் குறைவாக ஃபாஸ்ட் ட்ராக்கை விடக் குறைவாகவே வாங்கினார்கள். ஆனால் சூடு பிடித்ததும் கூட வாங்குவதோடு தொலைபேசியில் அழைத்துப் பதிவு செய்யும் முறையும் இல்லை. மொபைல் ஃபோன் அதுவும் ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலமே அவர்களின் தளத்துச் செய்தியை தரவிறக்க இயலும். எங்களிடம் அந்த வசதி இல்லை. என்றாலும் ஃபாஸ்ட் ட்ராக் அடிக்கடி செல்வதால் நாங்கள் பெயரைக் கூறியதுமே விலாசம், அலைபேசி எண், தொலைபேசி எண் ஆகியவற்றைக் கூறி உறுதி செய்துவிடுவார்கள். இப்போது சமீபத்தில் நாமக்கல்லுக்குப் போனது கூட ஃபாஸ்ட் ட்ராக்கின் மூலமாகவே.

    பதிலளிநீக்கு
  4. ஓலாவில் ஆபர் என்று சொல்லி ஒரு முறை பணம் வாங்கவில்லை..

    ஒரே இடத்திற்குச்செல்ல ட்ராபிக் இருந்தால் ஒவ்வொரு முறையும் கட்டணம் மாறுகிறது..

    வந்து காத்திருந்தாலும் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  5. திறந்த மனத்தில் பரந்த மனம் இல்லையே....! (சில)

    பதிலளிநீக்கு
  6. வாடகை கார்களின் கட்டணம் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. எனக்கு வாடகைக்கார் அனுபவம் குறைவு. அதனால் ஒன்றும் சொல்லத்தோணவில்லை.

    பதிலளிநீக்கு
  8. என் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்!!

    ஓலாவோ, ஃபாஸ்ட் ட்ராக்கோ... ஒரே குட்டை, ஒரே மட்டை! அனுபவங்கள் இப்படியும் உண்டு, அப்படியும் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல வசதிதான்
    ஆனாலும் இன்னும் வெளிப்படைத் தன்மையுடன்
    செயல்பட்டால் நல்லதுதானே ஐயா

    பதிலளிநீக்கு
  10. சில சௌகரியங்களைப் பார்க்கும்போது சில தொந்தரவுகளையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அதற்கு ஓலா ஓலாவும் விதி விலக்கல்ல.

    பதிலளிநீக்கு

  11. @ கில்லர்ஜி
    மோசடி என்று சொல்வதைவிட வெளிப்படையான செயல்பாடு இல்லை என்று கூறலாம் வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  12. @ துரை செல்வராஜு
    செலவுக் கணக்கை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் கஷ்டம் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  13. @ கீதா சாம்பசிவம்
    பெங்களூருவில் ஃபாஸ்ட் ட்ராக் செர்வீஸ் இல்லை என்றே நினைக்கிறேன் எங்கு போவதானாலும் இன்ன செலவு என்று தெரிந்து கொண்டால்தான் நிம்மதி. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  14. @ இராஜராஜேஸ்வரி
    என்ன செர்வீஸ் எப்படி இயங்குகிறது என்று தெரிவிக்கவே இதை எழுதினேன் இதல்லாமல் பீக் அவர்ஸ் பயணத்தில் நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டும் போல......! வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    இல்லையே...! வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  16. @ எஸ்பி செந்தில் குமார்
    சொல்லி இருந்தபடி கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  17. @ டாக்டர் கந்தசாமி
    சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் அனுபவத்தில்தான் தெரிய வேண்டுமா. நீங்கள் கொடுத்து வைத்தவர் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  18. @ ஸ்ரீராம்
    அவ்வப்போது ஃபேஸ் புக் பக்கம் வருவதுண்டு. வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  19. @கரந்தை ஜெயக்குமார்
    வெளிப்படையாக இல்லை என்பதே என் குறையும் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    சரியாகச் சொன்னீர்கள். வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். சுலபமாக கைப்பேசியில் பயணம் செய்யும் கார் கம்பெனியுடன் தொடர்பு கொள்ள முடியாதிருப்பது அவ்வளவு உசிதமானது அல்ல.

    பதிலளிநீக்கு

  22. @ ஜீவி
    ஆனால் ஓலா ட்ரைவருக்கு கம்பனியுடன் தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. வருகைக்கு நன்றி சார் .

    பதிலளிநீக்கு
  23. சில வசதிகள் இருந்தாலும் ஆப்ஸ் மூலமே தொடர்பு கொள்வது என்பது கொஞ்சம் சிரமம்தான் பலருக்கும். பொதுவாகவே கால்டாக்சிகள் சொல்லியபடி பணம் வசூலிப்பதில்லை கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவிடுகின்றார்கள் இது என் அனுபவம்!

    பதிலளிநீக்கு

  24. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  25. சென்னையிலும் ஒலா வாடகை சிற்றூந்து உண்டு. ஆரம்பத்தில் காத்திருப்புக்கு மட்டும் தனியாக வசூல்லித்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது பயணிக்கும் நேரத்திற்கும் வசூலிக்கிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் அலுவலக நேரம் பள்ளிகள் திறக்கும் அல்லது மூடும் நேரத்தில் பயணித்தால் அதிகம் தரவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு

  26. @ வே.நடனசபாபதி
    விவரங்கள் தெரிய வந்தால் அதில் பயணிப்பது பற்றி முடிவெடுக்க உபயோகமாய் இருக்கும் . வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  27. திருச்சியிலும் ஓலா உண்டு. ஒன்றிரண்டு முறை பயன்படுத்தி இருக்கிறேன்.....

    ஃபாஸ்ட் ட்ராக் ஓலா என எதுவானாலும், சில நல்ல அனுபவங்களும், மோசமான அனுபவங்களும் உண்டு....

    பதிலளிநீக்கு

  28. @ வெங்கட் நாகராஜ்
    அவசர நேரங்களில் மோசமான அனுபவங்கள் கசப்பான நினைவுகளையே தரும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு