தொடரும் விவாத மேடை
-----------------------------------------
இப்போதெல்லாம்
பத்திரிக்கைகளில் அதிகமாக அடிபடும் செய்தி
beef எனப்படும் மாட்டிறைச்சி பற்றியதே பசுவின் இறைச்சி காளையின் இறைச்சி எருமையின் இறைச்சி என்பவை
எல்லாம் ஏனோ விவாதப் பொருளாகி விட்டது. அதற்கு மத சாயம் பூசப்பட்டு மனிதனின்
உணர்வுகளை எல்லாம் தூண்டிவிட்டு அரசியல் நடக்கிறது இது பற்றி என் பேரனும் ஒரு பதிவு ஆங்கிலத்தில்
எழுதி இருந்தான் அதில் என்னை ஈர்த்தது
I had so many jokes running in my head
when they said they are planning to ban b**f but later when the news came
out about a poor man's death cause some blondes, they thought he had something
to do with cooking/eating/or anything to do with b**f. The first question that
hit my mind is, killing a human being is okay but killing an animal is bad?
Man, these guys really need education! Mr PM ji, please stop beti padao
campaign and start "sabko padao" campaign! I'm Okay, if you're
against killing animals on a whole i am totally with you ( though i won't be
doing it wholeheartedly ) cause there is a point and does make sense but i'm
not okay with people who say ban only b**f cause it is sacred! Dude, what did
the other animals do if a million"Man-made" gods didn't pick
them! It's not their fault that our ancestors didn't think they are worthy to
be the gods pet, maybe they thought we wouldn't be so dumb! முழு பதிவையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்
இது தவிர என் மனதில் விருப்பு வெறுப்பற்ற ஒரு விவாதம்
பதிவாக்கப் பட்டிருந்தது நினைவில் ஓடியது .
நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
விவாதத்தின்
எல்லாதரப்புகளையும்
சிந்திக்கும் பதிவு அது. திரு காஷ்யபன்
அவர்கள் தளத்தில் மூன்றாண்டுகளுக்கு முன் வாசித்தது. என்றும் வாசிக்கத் தகுந்தது. அவரது அனுமதி
பெற்று அதைப் பதிவிடுகிறேன் முழு
பதிவையும் மீண்டும் எழுதாமல் அதன் சுட்டியை மட்டும் தருகிறேன் சற்றே நீளமான பதிவு. பொறுமையாக வாசித்துக்
கருத்தைப் பகிர வேண்டுகிறேன் ஒரு சில நல்ல விஷயங்களை ஒரு சில வரிகளில் சொல்லிப் போக முடிவதில்லை. படித்ததும் அவசியம் கருத்திடுங்கள்
is the link correct. does not open any specific post!
பதிலளிநீக்குஎன்ன கருத்தைச் சொலறதுன்னு தெரியவில்லை. நியாமா, இந்த விவாதங்களை மாடடுக்கறி சாப்பிடறவன் செய்வதுதான் சரி் அய்யர்களெல்லாம் இந்த விவாத்தில் ஈடுபடக்கூடாது.
பதிலளிநீக்குஎன்ன கருத்தைச் சொலறதுன்னு தெரியவில்லை. நியாமா, இந்த விவாதங்களை மாடடுக்கறி சாப்பிடறவன் செய்வதுதான் சரி் அய்யர்களெல்லாம் இந்த விவாத்தில் ஈடுபடக்கூடாது.
பதிலளிநீக்குஉங்கள் பதிவினையும், நீங்கள் சுட்டிய காஷ்யபன் பதிவினையும் படித்தேன். மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் என்னால் கருத்துரை தர முடியும் போலிருக்கிறது. மீண்டும் வருவேன்.
பதிலளிநீக்குNo comments...!
பதிலளிநீக்குஇதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம். இதில் விவாதங்களுக்கு இடம் இல்லை. :)
பதிலளிநீக்குகீதா: சார் சைவம் மட்டுமே உண்ணும் என்னால் இதில் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. சைவம் அசைவம் என்பது அவரவர் விருப்பம். அதுமட்டுமல்ல, மாட்டை மிகவும் நேசித்து அவற்றிற்காகவும், அதை வளர்க்கும் விவசாயிகளுக்கும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு நேர்மையான கால்நடை மருத்துவனின் தாய். அவனிடம் இருந்து தெரிந்து கொண்டவற்றை வேண்டுமென்றால் மாட்டின் கோணத்தில் நான் எழுதி வைத்திருக்கும் ஒரு பதிவை நான் வெளியிடாமல் வைத்துள்ளதை முடித்து வெளியிடுகின்றேன் அடுத்த வாரத்தில்.
பதிலளிநீக்குதுளசி: சார் இது அவரவர் விருப்பம். நாங்கள் இதனை சிறிய அளவில் வெளிப்படுத்தி ஒரு பதிவில் போட்டோம்....இதில் விவாதத்திற்கு வழியில்லை எல்லாம் அரசியல்...
பதிலளிநீக்குநோ கமெண்ட்ஸ்!!!
பதிலளிநீக்குஉயிரினக் கொலை செய்து உண்ணும் உணவுப் பழக்கம் சரியா தவறா என்பது ஒரு பக்கம். ஆனால் அதற்காக மனிதரைக் கொல்வது ஏற்புடையதா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
பதிலளிநீக்குஎனக்கு என்னவோ
பதிலளிநீக்குஇவர்கள் மாட்டுக் கறி பிரச்சினைனை பூதாகரமான பிரச்சினையாக மாற்றி விட்டு,
மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் தந்திரமோ என்று எண்ணுகின்றேன்
நான் எதை உண்ண வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்
அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை
அனைத்தும் அரசியல்......
பதிலளிநீக்குஅவரவர்களின் விருப்பம் என்பதே சரி!
பதிலளிநீக்குஇதெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலமே அன்றி வேறில்லை ஐயா..
பதிலளிநீக்குசுட்டிக்குப்போவேன்.
பதிலளிநீக்குஇது எல்லாம் மதஅரசியல் எனலாம். மாட்டு இறைச்சி வைத்திருந்தற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படு இருக்கிறார் என்று செய்தியில் படிக்கிறோம் ஆனால் மாட்டு இறைச்சி வைத்திருந்தற்காக ஒரு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் கொல்லப்படுவதில்லையே. ஏன் இந்துக்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவதில்லையா? அதனால்தான் சொல்லுகிறேன் இதுமதம் சார்ந்த அரசியல். அதாவது அரசியலில் செய்யப்படும் ஊழல்களை,தகிடு தத்தங்களை மறைக்க மதத்தை முன்னிருத்தி அதன் பின்னால் செய்யும்படு அரசியல் இது
எல்லாமே அரசியல். எப்படியாவது மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தணும் என்பதில் அவுங்களுக்கு (அரசியல் வியாதிகளுக்கு) வெற்றி :-(
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தருமி
என்னப் பிரச்சனையோ ? மீண்டும் இந்த லிங்குடன் அனுப்பி இருக்கிறேன் ஆனால் உங்கள் பின்னூட்டம் மட்டும் வந்திருக்கிறதே இதுவும் புரியவில்லை. நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் கநத சாமி
இரு சாராரின் கருத்துக்களும் இருந்தால்தான் விவாதம் ருசிக்கும் வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
மீண்டும்வந்து கருத்துப் பதிவிட வேண்டுகிறேன் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
நோ கமெண்ட்ஸ் / பிரச்சனை தீர்ந்தது. நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
உண்பதும் உண்ணாததும் அவரவர் விருப்பமாகலாம் ஆனால் அது ஒருவனைக் கொலை செய்வதில் முடிந்தால் நம் நிலைப்பாடு என்ன என்று தெரிய வேண்டாமா.? வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து கீதா
மேடம் கேள்வி சைவமா அசைவமா என்பதல்ல. மதத்தின் பெயராலும் புனிதத் தன்மை என்று சொல்வதாலும் ஒருவனைக் கொலை செய்யும் போது நம் நிலைப்பாடு என்ன என்று தெரிதல் அவசியம் திரு காஷ்யபனின் பதிவு ஒரு நடுநிலை விவாதம் என்று படித்திருந்தால் புரிந்திருக்கும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ தில்லையகத்து துளசிதரன்
இதில்தான் விவாதத்துக்கு உரிய பொருள் இருக்கிறது ஏனோ பலரும் கருத்து சொல்ல விரும்புவதில்லை.திரு காஷ்யபனின் பதிவு மூன்றாண்டுகளுக்கு முந்தையது படித்துப்பார்த்தால் அதில் இருக்கும் பொருண்மை விளங்கும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
/ நான் எதை உண்ண வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்
அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை/ ஆனால் இந்த உரிமை மறுக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டது திசை திருப்பும் செயல் என்று எவ்வாறு கூற முடியும் ? வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
அனைத்தும் அரசியல் என்று ஒதுக்கி விடமுடியாது இதில் பொருளாதாரம் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் அடங்கி இருக்கிறது இன்னும் விரிவான பின்னூட்டம் எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி சார்
@ எஸ்பி செந்தில்குமார்
பதிலளிநீக்குஅவரவர் விருப்பப்படி செய்ய முடிவதில்லையே செந்தில் சார்
பதிலளிநீக்கு@கில்லர் ஜி
இதெல்லாம் அரசியல் வாதிகளின் சுய நலம் என்றால் அதனால் பாதிக்கப்படுவது நாம்தானே ஜி ஆனால் நம்மில் பலரும் கருத்துக் கூறக் கூடத் தயங்குகிறோம் சுட்டியையும் படியுங்கள் பலதரப்பட்ட நியாயங்களும் விளங்கக் கூடும்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
நோகாமெண்ட்ஸ் ... உங்களுக்குமா ஸ்ரீ ?
பதிலளிநீக்கு@ தேனம்மை லக்ஷ்மணன்
/உயிரினக் கொலை செய்து உண்ணும் உணவுப் பழக்கம் சரியா தவறா என்பது ஒரு பக்கம். ஆனால் அதற்காக மனிதரைக் கொல்வது ஏற்புடையதா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்/ இரண்டு கேள்விகளுக்குமே பதிவில் பதில் சொல்ல முயற்சி தெரியும் மேடம் திரு காஷ்யபனின் சுட்டியைப் படித்தீர்களா/?.
பதிலளிநீக்கு@ அவர்கள் உண்மைகள் நீங்களாவது உங்கள் கருத்தைப் பதித்தீர்களே அதற்கு நன்றி சார் திரு காஷ்யபனின் பதிவு இவற்றை மதத்துக்கும் அப்பால் ஆராய்கிறதுபொருளாதாரம் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே மதவாதிகளின் ஆதிக்கத்துக்கு வருவது சரியில்லையே ஐயா
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
நாம் பேசாமல் இருந்தால் அரசியல் வியாதிகள் முற்றி வெற்றி கொண்டாட மாட்டார்களா மேடம் வருகைக்கு நன்றி.
நான் ஏற்கனவே இதே கருத்தினை மய்யப் படுத்தி பதிவு ஒன்றினை எழுதி நிறையவே மறுமொழிகள் தந்து விட்டேன். இருந்தாலும் எனது கருத்து இதுவே. யாரோ எதுவோ சாப்பிட்டுவிட்டு போகட்டும்.. அது அவரவர் விருப்பம். இதற்காக இத்தனை நாள் இல்லாத வகையில் இப்போது மட்டும் எதற்காக எதிர்ப்பு? நீங்கள் சைவம் சாப்பிடக் கூடாது, என்று என்னிடம் சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். மாட்டுக்காக மனிதநேயத்தை இழக்கிறார்கள். எல்லோருமே இப்படி என்று சொல்ல முடியாது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தி.தமிழ் இளங்கோ
/ இதற்காக இத்தனை நாள் இல்லாத வகையில் இப்போது மட்டும் எதற்காக எதிர்ப்பு?/ இந்தக் கேள்வியே சிந்திக்க வைக்கிறது. ஏதோ உள்நோக்கம் கொண்டு சில கருத்துக்கள் பிறர் மீது திணிக்கப் படுகின்றன உடன் படாதவரை ஒழித்துக் கட்டுகிறார்கள் மீள்வருகைக்கு நன்றி ஐயா.
திரு தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். இதுநாள் வரை ஏதும் சொல்லாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எதிர்ப்பதேன்?
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி
பதிலளிநீக்குதிரு தி தமிழ் இளங்கோவுக்குச் சொன்ன மறு மொழியே உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா