சனி, 28 நவம்பர், 2015

சென்னைக்கும் எனக்கும் ராசி இல்லை


                                சென்னைக்கும் எனக்கும் ராசி இல்லை.
                                -------------------------------------------------------------



நவம்பர் மாதம் 10-ம் தேதி தீபாவளி  11-ம் தேதி என் பிறந்த நாளும் மண நாளும்ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்தேன்  தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் முன்னைப் போல் இல்லை. என் பிள்ளைகள் சிறுவர்களாக  இருந்தபோது காலை எப்போது விடியும் எப்போது வெடிச் சத்தம் கேட்கும் என்னும் நினைப்பில் பாதி நேரம் உறங்காமலேயே இருப்பார்கள். காலை சுமார் நான்கரை  மணிக்கு எங்காவது முதல் வெடிச்சத்தம்  கேட்டால்  என்னை எழுப்பி விடுவார்கள் முதலில் நான் எழுந்து  ஒரு வெடியை வைத்து தீபாவளியை வரவேற்போம்  முதலில் ஐந்து மணிக்குள்ளாக நான்

பிள்ளைகளுக்கு தலையில் எண்ணை  வைத்து விட என் மனைவி அவர்களை வெந்நீர் ஸ்நானம்  செய்விப்பாள்.  புதுத் துணிகள் அணிந்து அவர்கள்  பட்டாசு வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள் சரவெடிகளைப் பிரித்து ஒவ்வொன்றாக்கி வெடிப்பார்கள் அப்போதுதானே நீண்ட  நேரம் வெடித்துக் கொண்டிருக்க முடியும் பிறகு காலை ஆகாரம் இனிப்புவகைகளுடன்  ஹூம்….! அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது
இப்போதெல்லாம் தீபாவளி இன்னொரு விடுமுறைநாள். நிதானமாக எழுந்து, எங்காவது பட்டாசுச் சத்தம் கேட்டால் அவர்களை நாய்ஸ் பொல்யூஷனுக்காக வைது கொண்டு / வழக்கம் போல் காலை உணவு அருந்திகொண்டு டீவி முன்னால் நிகழ்த்தப்படும் பட்டி மன்றங்களை ரசித்துக் கொண்டு, என்ன ஆயிற்று இந்த தலை முறையினருக்கு. ?

என்னைப் பொறுத்தவரை தீபாவளி போன்ற தினங்களில் மகன்களும் பேரக் குழந்தைகளும் அருகிருந்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தாலேயே போதும் / ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கென்று அவர்களுக்கு ஏதாவது புதுத் துணி வாங்கிக் கொடுப்பது வழக்கம் . அதை அவர்கள் உடுத்துவதைப் பார்ப்பதே மகிழ்ச்சி. ஆனால் அதை உடுத்தி என்னை மகிழ்விக்கும் எண்ணமே இல்லாதது போல் இருப்பார்கள் இந்த முறை என் மச்சினனும் ( எனக்கு அவனும் ஒரு மகன் போல ) வந்திருந்தான்  ஆனால் நான் முழு சந்தோஷமும் அனுபவிக்கக் கூடாதே. என் இரண்டாம் மகன் எட்டாம் தேதி காலை கேரளாவுக்குப் போய் BUDDY ஐ கொண்டு வர இருந்தான் அவன் வந்து சேரவே மாலை மணி மூன்றாகி விட்டது( அவன் வந்தது நாயைக் கொடுக்கப் போனது பற்றி எல்லாம் என் சென்ற பதிவில் எழுதி இருந்தேன் )என் இரண்டாம்
பேரனுக்கு பட்டாசு வெடிக்க ஆசை பத்து வயதுதானே ஆகிறது ஆனால் அது எதுவும் இருக்கவில்லை. விடியலிலிருந்தே மழை தூறிக் கொண்டு இருந்தது. மேலும் பட்டாசுகள் ஏதும் வாங்கவில்லை. ஆக பட்டாசு இல்லாமல் விடியற்காலை எண்ணைக் குளியலும் இல்லாமல்  தீபாவளி கழிந்தது. அடுத்தநாள் 11-ம் தேதி காலையிலேயே சென்னை செல்ல என் மூத்தமகன் திட்ட மிட்டு இருந்ததால்  அன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்களும்  ஏதும் இல்லாமல் போயிற்று. ஒரு முறை கில்லர்ஜி உங்கள் 100-வது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புவீர்கள் என்று கேட்டிருந்தார்  என் 77-வது பிறந்தநாளே உப்பு சப்பில்லாமல் போய் விட்டது ஆக தீபாவளியும் பிறந்த நாளும் இன்னொரு நாளாகிப்போனது
வாழ்க்கையின் சில நிகழ்வுகள் திட்டமிடப்படாமலேயே நடந்தேறுகிறது எனக்கு பிரயாணம் பிடிக்கும்/ அதுவும் நாம் செல்லும் வாகனம் நம் கட்டுக்குள் இருக்கும்போது பயணிப்பது இன்னும்  பிடிக்கும்  சுமார் 12- மணி அளவில் கிருஷ்ணகிரி அருகே இருந்த ஏ2பி யில் காஃபி அருந்தினோம்  மதிய உணவை போகும் வழியில் எங்காவது பார்த்துக் கொள்ளலாம்  ஆம்பூரில் என் பேரன் பிரியாணி வாங்கிக் கொண்டான்   சாலை நன்றாக இருந்தாலும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததால் சற்றுநிதானமாகவே போனோம் மாலை ஆறரை மணிவாக்கில் சென்னை சென்றடைந்தோம் சென்னை நெருங்க நெருங்க மழை வலுத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.வீடு வந்து சேர்ந்ததும் ஒரு ஃபோன் கால். திரு ரிஷபன் ஸ்ரீநிவாசன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்எதிர்பார்க்காத மகிழ்ச்சி.   சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டு என் மகன் கடைக்குப் போய் இட்லி பார்சல் வாங்கி வந்தான்  மழையும் விட்டு விட்டு வந்தது.  12-ம் தேதி என் மருமகள் என் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் செய்தாள் கேக் வெட்டி என் பிறந்தநாள் ஒரு நாள் தாமதமாகக் கொண்டாடப்பட்டது. இந்த முறை சென்னையில் பலரையும்  சந்திக்க வேண்டும் என்றிருந்தேன் வெயிலினால் என் சென்னை வருகை தாமதப் பட்டுக் கொண்டிருந்தது நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் மழையும் கூடவே வருகிறது ஓரிரு நண்பர்களுக்கு நான் வந்து விட்ட செய்தியை தொலைபேசியில் சொன்னேன் சந்தர்ப்பம் சரியானால் சந்திக்கலாம் என்றார்கள்
13-ம் தேதி என் பழைய நண்பரும் அவரது மகனும் மருமகளுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள் மறு நாள் நண்பரின் வீட்டுக்குவருவதாகச் சொன்னேன் அஷோக்நகரில் அவர்கள் இருந்தார்கள் அங்குதான் திரு ஜீவி இருக்கிறார்  என்று ஸ்ரீராம் சொல்லி இருந்தார்.  அஷோக் நகர் போகும் போது அவரையும் சந்திக்கலாம் என்று நினைத்தேன்  நான் இதுவரை சந்திக்காத நண்பர் அவர்
எங்களை உத்திர மேரூர் என்னும் இடத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினான் மகன் எல்லா திட்டங்களும் மழைமுன் தவிடு பொடியாகிவிட்டதுஅன்று ஃபினிக்ஸ் மாலில் கமலஹாசனின் தூங்காவனம் திரைப்படம் இரவு நேரக் காட்சியாகக்  கண்டோம் கடைசியாக நான் மேஜர் ரவியின் காந்தஹார் படத்தை அவர் அழைப்பின் பேரில்  ப்ரிவியு வாகத் திரை அரங்கில் கண்டது. அதன் பின் இது.  நான் விமரிசனம் ஏதும் எழுதப் போவதில்லைபடம் நன்றாக இருந்தது என்று மட்டுமே கூறுவேன்


மறு நாள் குரு நானக் கல்லூரி அருகே என் இன்னொரு பழைய நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று தெரியவந்து அவரைப் போய்ப் பார்த்தோம் அப்போதே அவர் வீட்டின் முன் மழை நீர் தேங்கத் துவங்கி இருந்தது. அன்றிரவு மழை விடாமல் பெய்து  ஒரு ரெகார்ட் ஏற்படுத்திவிட்டது. பின் என்ன  எங்கும் மழையும் நீர்த்தேக்கமும்  வீட்டுக்காவலில் இருப்பதாகவே உணர்ந்தோம்  தொலைக்காட்சி செய்திகள் திருப்தி அளிப்பதாய் இல்லை.  ஸ்ரீராம் தண்ணீரால் அவதிப்படுவதாக அறிந்தேன் தில்லையகத்து கீதா திரு செல்லப்பா ஆகியோர் மழை விட்டால் சந்திக்கலாம் என்றார்கள்.  கல்னல் கணேசனுடன் தொலை பேசியில் பேசினேன்  அவரும் மழை பற்றிக் குறை பட்டுக் கொண்டார்.மழை நீர் தேக்கத்துக்குப் பெயர் போன வேளச்சேரியில்  நாங்கள் இருந்த அடுக்குமாடி குடி இருப்பு அருகே 100 அடிச்சாலையில் மழை நீர் அதிகமாகத் தேங்கவில்லை. ஆனால் சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் நீர்மயம் தான்
மழை குறையும் அறி குறியே இருக்கவில்லை. மேலும் மேலும் மழை நீடிக்கும் என்றே தகவல்

எத்தனை நேரம்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க முடியும்  என் உபயோகத்துக்காகக் கணினி கிடைக்கவில்லை வலை உலகில் நடப்பது ஏதும் தெரியவில்லை.  எப்படா பெங்களூரு போய்ச் சேருவோம் என்றாகி விட்டது புத்தகம் படிக்கலாமென்றால் படிக்கும் போது கண்முன்னே நிழலாடி படிக்க முடியாமல் செய்கிறது இந்த விடுமுறையிலும்  ஒருகைவேலைக் கற்றுக்கொண்டேன். அது பற்றி அடுத்தபதிவில்
இனி சில புகைப்படங்கள் எடுத்த ஓரிரு காணொளிகள் அப்லோடாவது மிகவும் தாமதமாவதால் பதிவிடவில்லை. 

belated birthday cake

finishing touches
friend near guru nanak college

friend' s family who visited us

with my first grandson
a selfie photoo being taken
 குடி இருப்புக்கு முன்னால் 100 அடி சாலை மழையின் போது





37 கருத்துகள்:

  1. ஆம், மழை மிகவும் படுத்தி விட்டது. மீண்டும் இந்த வாரம் படுத்தப் போவதாக வரும் செய்திகளும் பீதியூட்டுகின்றன. அதிக வெயிலைக் கூடச் சமாளித்து விடலாம். பெருமழை, அதுவும் மின்சாரஇம் கட்டான இரவின் இருளில் நிற்காமல் பெய்யும் மழை பயங்கரம்.

    உடல்நிலையும் சரியில்லாமல் போனதால் இந்த முறையும் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு தட்டிப் போனது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மழையும் தூறலும் மகிழ்ச்சியானவை.. சுகமானவை..

    ஆனாலும் - இந்த முறை மழை!?....

    பதிலளிநீக்கு
  4. புதிதாக ஏதேனும் ஒன்றை விரும்பி கற்றுக் கொள்ள முயற்சி செய்தால் இனிமை கூடும் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. தாமதம் ஆனாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிமையாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. மழை அளவு இம்முறை நூறாண்டுகளுக்குப் பின்னர் அதிகம் என தினசரிகளில் வந்திருந்தது. என்றாலும் 2005 ஆம் ஆண்டு மழையைப் போல் இல்லை! அதைவிடக் குறைவு தான். மழையும் வேண்டும் தானே! மழை பெய்யவில்லை எனில் குடிநீர் ஏது? அளவுக்கதிகமாகவெல்லாம் பெய்யவும் இல்லை. நம் பராமரிப்புக் குறைவு காரணமாகச் சிரமங்கள்! :( அதோடு ப்ளாஸ்டிக் குப்பைகளை அதிகம் சென்னையில் பார்க்கலாம். யாரும் சொன்னால் கேட்கவும் மாட்டார்கள். இந்த மழை முடிந்ததும் மீண்டும் இதே போல் ஆரம்பிப்பார்கள்! :(

    பதிலளிநீக்கு

  6. உண்மைதான் ஐயா தீபாவளி என்றொரு நாள் வருகிறது போகிறது அவ்வளவுதான்
    என்னையும் மறக்காமல் நினைவில் நிறுத்தி எழுதியமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. நல்லவங்க இருக்குமிடத்தில் மழை பெய்யுமாம். சென்னையில தண்ணீர்ப் பஞ்சம் வரப்போ, நீங்க அங்க போனா உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் அய்யா, வர வர தீபாவளியும் ஒரு நாளாகவே போகிறது. பழைய உற்சாகம் இல்லை. பெரியவர்களுக்கு என்றில்லை, குழந்தைகளுக்கும் பழைய பரவசம் இல்லை. அதற்கு காரணம் இன்றைய செழிப்பு. எந்தவொரு அடைதலுக்கும் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. எல்லாமே எப்போதும் கிடைக்கக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஏக்கமும் காத்திருத்தலும் இருந்தால்தானே கிடைப்பதில் மகிழ்ச்சி இருக்கும்.

    காதலியை பார்க்கவே பல நாட்கள் காத்திருந்த அன்றைய காதல்கள் முறியாமல் பலமாக இருந்தன. முறிதலுக்கு வெளிக் காரணிகள்தான் இருக்கும். இன்று 24 மணி நேரமும் செல்போனில் பேசுகிறார்கள். அவர்களாகவே முறித்துக் கொள்கிறார்கள். அடைதலுக்கான ஏக்கமே சந்தோசம்.

    அய்யாவுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! எனது பிறந்தநாளும் நவம்பர் 11 தான்.

    பதிலளிநீக்கு
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்லோரிடத்தில் பெய்யும் மழை என்பது உங்கள் விஷயத்தில் சரி போல!

    எதிர்பாராமல் பாயசத்தில் முந்திரி வருமே, அது போல பின்னூட்டத்தில் கிடைத்த முந்திரி!
    "அடைதலுக்கான ஏக்கமே சந்தோசம்"


    பதிலளிநீக்கு
  10. மழை படுத்தியிருந்தாலும் போட்டோக்கள் சந்தோஷத்தைச் சொல்கின்றன...
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  11. இப்போதெல்லாம் சிறுவர்களுக்கெல்லாம் கூட புத்தாடை அணிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை. காரணம் முன்பு பண்டிகைகளை முன்னிட்டு புதிய ஆடைகள் வாங்குவது வழக்கம். இப்போதைய ஷாப்பிங் கலாசாரத்தில் எப்போது வேண்டுமானாலும் வாங்கி அணிவதால் புது மகிழ்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை

    பதிலளிநீக்கு

  12. @ ஸ்ரீராம்
    மழைபற்றியும் நிலைமைப் பற்றியும் கேட்டு தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால்தான் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. மீண்டும் சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  13. @ துரை செல்வராஜு
    எதுவும் அளவோடு இருந்தால் ரசிக்கக் கூடியதே வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  14. @ திண்டுக்கல் தனபாலன்
    கற்றுக் கொள்வது எப்போதுமே விரும்பித்தான் டிடி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  15. @ கீதாசாம்பசிவம்
    மழையால் துன்பம் அனுபவித்தவர்களிடம் அது பற்றிப்பேசுவதே சிரமமாய் இருக்கிறது/ யாரைக் குறை கூறியும் பயனில்லை. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  16. @ கில்லர்ஜி
    எனக்கு இந்த நாள் கிழமைகள் பற்றிக் கவலை இல்லை. ஆனால் அதன் பெயரால் நமக்கு வேண்டியவர்கள் கூட இருப்பது மகிழ்ச்சியேவருகைக்கு நன்றி ஜி. உங்களை என்றும் மறக்க இயலாது.

    பதிலளிநீக்கு

  17. @ டாக்டர் கந்தசாமி.
    உங்கள் ஆலோசனை பரிசீலிக்கத் தகுந்தது ஐயா வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  18. @ எஸ்பி செந்தில்குமார்
    நவம்பர் 11-ல் பிறந்த இன்னொரு பெரிய மனிதரை அடையாளம் கண்டுகொண்டேன் வருகைக்கு நன்றி செந்தில் சார்

    பதிலளிநீக்கு

  19. @ bandhu
    என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தால் நிறையவே முந்திரிகள் கிடைக்கலாம் வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  20. @ பரிவை சே குமார்
    மழை திட்டங்களைக் கலைத்து விட்டது / மற்றபடி மகிழ்ச்சிக்குக் குறை இல்லை வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  21. @ வே நடனசபாபதி
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  22. @ முரளிதரன்
    ஒருவேளை இவற்றுக்கு நாம்தான் காரணம் திரு செந்தில் குமார் பின்னூட்டமும் சிந்திக்க வைக்கிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  23. //நான் இதுவரை சந்திக்காத நண்பர் அவர்.. //

    நினைவு கொண்டதற்கு நன்றி. அடுத்த முறை நிச்சயம் சந்தித்து விடலாம்..

    அசோக்நகர் ஜீவி

    பதிலளிநீக்கு

  24. @ ஜீவி
    அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்.? நான் சந்திக்க நினைக்கும் நண்பர்களில் நீர் முக்கியமானவர். பெங்களூரில் வெப்பநிலை இதமாக இருக்கிறது. சந்தர்ப்பம் இருந்தால் வரலாமே. சந்திக்கலாம் நிறையப் பேசலாம்

    பதிலளிநீக்கு
  25. புதிதாக ஏதேனும் ஒன்றை விரும்பி கற்றுக் கொள்ள முயற்சி செய்தால் இனிமை மட்டுமல்ல இளமையும் கூடும் ஐயா...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. அருமையான பகிர்வு ஐயா,
    வாழ்த்துக்கள், தாமதமாகிவிட்டது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. அய்யா, மழைக்காலம் அல்லாத மாதங்களில் சென்னைக்கு பயணம் செய்யுங்கள். எல்லாம் இன்ப மயமே!

    பதிலளிநீக்கு

  28. @ கரந்தை ஜெயக்குமார்
    விரும்பிக் கற்க நினைப்பது எவ்வளவோ இருக்கிறது ஆனால் முடிவது சொற்பமே. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  29. @ மகேஸ்வரி பால சந்திரன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  30. @ தி தமிழ் இளங்கோ
    ஐயா வணக்கம் ஜூன் மாதமுதலே சென்னை போக திட்டமிருந்தது ஆனால் சென்னை வெயில் அதிகம் வெயில் இறங்கட்டும் என்றான் மகன் அதனால்தான் இப்போதைய பயணம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....... வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. உங்களது மழையனுபவத்தை ரசித்தோம். ரசித்தோம் என்பதைவிட சிரமத்தைப் பகிர்ந்துகொண்டோம் என்பதே சரி.

    பதிலளிநீக்கு

  32. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    மழையால் சிரமம் என்பதைவிட ஏமாற்றமே மிகுந்திருந்தது வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  33. பேய் மழை என்பார்கள் ,அதை இப்போதுதான் பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு

  34. @ பகவான் ஜி
    மதுரையிலும் பேய் மழையா? வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  35. தீபாவளி நேரத்தில் சென்னை சென்றும் உற்சாகமாம அனுபவிக்கமுடியாது போய்விட்டது உங்களுக்கு. நாமொன்று நினைக்க அவனொன்று நினைப்பான்! மழையை அனுப்பி எல்லாவற்றையும் ஈரத்தில் பதபதக்கச்செய்துவிட்டான்.
    பரவாயில்லை. இருந்தும் குடும்பத்தினரோடு கழித்திருக்கிறீர்கள். நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஏதோ கொஞ்சம் முடிந்திருக்கிறது.
    அந்தக்காலத் தீபாவளி பற்றி எழுதியிருப்பது மனதை எங்கெங்கோ கொண்டு சென்றது. கைநழுவிப்போனது காலமும். என் செய்வது? செந்தில்குமார் சொல்வதுபோல் காத்திருத்தலோ, ஏக்கமோ இன்றி, கேட்பதற்குமுன்னேயே எல்லாம் கிடைத்துவிட்டால் ஆசை ஏது, அன்பு ஏது, சுகம் தான் ஏது? எப்போதும் காதில் இயர்ஃபோனை நுழைத்துக்கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டு அலையும் பைத்தியங்களைப்போல் திரியும் இந்தக்காலத்தவருக்கு இதையெல்லாம் சொன்னால் புரியப்போவதில்லை. அவர்கள் நம்மை ஒருமாதிரிப் பார்த்துவிட்டுக் கடந்து செல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  36. @ ஏகாந்தன்
    கஷ்டப்பட்டுதான் அனுபவிக்க வேண்டுமா ? வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு