புதன், 4 நவம்பர், 2015

இவரைத் தெரிகிறதா ....?


                  இவரைத் தெரிகிறதா....?
                  ------------------------------------
எனக்கு வலை உலக நட்புகளை வலை மூலமில்லாது நேரிடையாகவும் சந்தித்து நட்பினைப் பேண வேண்டும் என்பது ஆவலும்  குணமும்  வலைப் பதிவர் சந்திப்பு அல்லாமலும் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் போது நான் போயோ அல்லது நான் இருக்குமிடம் நண்பர்களை வரவழைத்தோ அளவளாவுவது வழக்கம் இப்படியாகப் பல நட்புகளைப் பெற்றிருக்கிறேன்  பதிவிலும் பதிந்திருக்கிறேன் இம்முறை புதுக் கோட்டையில் ஒரு நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அழைத்தார் உணவு உண்டு திரும்பும்போது பார்த்தார்  கைகழுவி வரும் முன் மறைந்து விட்டார்  ஆனால் ஒரு பதிவின் பின்னூட்டத்தில்  பெங்களூர் போவதாகக் கூறி இருந்தார் . அதே பின்னூட்டத்தில் நானும் அவர் பெங்களூரில் இருந்தால் சந்திக்க விரும்புவதாக எழுதினேன்  ஆச்சரியம் அவர் பெங்களூரில் என்னைத் தொடர்பு கொண்டு அழைத்தார் / நானும் அவரை என் வீட்டுக்கு வருமாறு வேண்டினேன்  அவர்தான் இவர்/ யாரென்று தெரிகிறதா ? வலை உலகில் புனைப்பெயரில் உலவும் ஒருவர். பதிவில் தளத்தில் புகைப்படமும் கிடையாது.  எப்போதாவது என் தளம் வருவார் / நானும் போவேன் என் புகைப்படமும் தொலைபேசி எண்ணும்  தள முகவரியும் பலருக்கும் தெரியும் இவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசியது புரிந்தது நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன் என் வீடு தேடி வந்தவருடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன் என் பழைய பதிவுகள் பலவற்றைக் காட்டினேன் 2012-13  களில் இருந்த  எழுத்தின்  ஓட்டம் இப்போது இல்லை என்று அபிப்பிராயப் பட்டார்  எங்களுடன் மதிய உணவு அருந்தினார்  தன் பெயரையும் குறிப்பிட்டார்  பதிவுலகப் பெயரிலேயே நான் அவரை அறிந்தேன்  அவரும் ஏதோகாரணம்கொண்டு அவரது நிஜப் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்ளாதபோது நானும் தவிர்க்கிறேன்  இவரையும் என்னையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்க என் மனைவியிடம் சொன்னேன்  ஆனால் அது செயல் படுத்தப் படும் முன் அவர் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.  இவர் யாரென்று தெரிந்தவர் பின்னூட்டத்தில் குறிப்பிடலாமே . பல வலை உலக நண்பர்களுடன்  நேருக்கு நேர் சந்தித்து  மகிழ்வது தனி இன்பமே.எழுத்தின் மூலம் அறிந்து கொள்வது இன்னொரு வகை இன்பம் 


வலை நண்பர் யார் தெரிகிறதா?
(தெரியாதவர்களுக்குப் பின்னூட்ட மறு மொழியில் கூறுவேன் )

29 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. தெரியல.. சென்ஷியா.. இல்ல பித்தன்னு இன்னொருத்தர் முன்னே சமையல் எல்லாம் போடுவார் ப்லாகுல அவரா.. சரியா தெரில..

    பதிலளிநீக்கு
  3. பதிவின் சுட்டி கொடுத்திருந்தால் அங்கே சென்று பார்த்து யாரென ஒரு வேளை கண்டுபிடிக்க முயலலாம். :) யார் எனத் தெரியவில்லை. :)

    பதிலளிநீக்கு
  4. தெரியாதோர் பட்டியலில் நானும்

    பதிலளிநீக்கு
  5. யார் என்று தெரியல பெங்களூர் என்றால் திரு மகேஸ் அவர்களோ பதில் சொல்லுங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வருகை தந்த அனைவருக்கும் நன்றி புதுக் கோட்டையில் இவர் என்னை அடையாளம் கண்டு பேசி இருக்கவில்லை என்றால் எனக்கும் தெரிந்திருக்காது என்னை அடையாளம் தெரிந்து கொள்வது சுலபம் என் பெயர் வயது புகைப்படம் எல்லாமே ஓரளவு பிரசித்தி பெற்று இருக்கிறது இவரது தளத்துக்கு நான் சென்றதுண்டு .இவரும் என் தளத்துக்கு வருவதுண்டு. புகைப்படம் இல்லை புனைப் பெயரில் எழுதுகிறார் டெல்லி வாசி இவர்தான் ஏகாந்தன் என்னும் பெயரில் எழுதி வருகிறார் புதுக் கோட்டைக்கு சென்று வந்தவர்களாவது இவர் புகைப்படம் பார்த்து இவரை அடையாளம் காட்டுவார்கள் என்று நினைத்தேன். வெளி உறவு இலாக்காவில் பணி புரிந்தவர் பெங்களூரிலேயே வசிக்கப் போகும் வாய்ப்பும் அதிகம் aekaanthan.wordpress.com என்னும் தளம் இவருடையது பதிவர் கையேட்டில் தேடிக் கண்டு பிடிப்பதும் சிரமம் ஏகாந்தமாகப் பதிவிடும் இவர் தளத்துக்கும் சென்று இவரிடம் நட்பு பாராட்டலாமே

    பதிலளிநீக்கு
  7. முதலில் தெரியலே ,இப்போ தெரியுது :)

    பதிலளிநீக்கு

  8. பதிவிட்டிலிருந்து தங்களது தளத்தை அலசிக்கொண்டு இருந்தேன் ஐயா பிடி கிட்டவில்லை. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. புது தில்லி வாழ் திரு ஏகாந்தன் அவர்களுடன்
    புதுகை பதிவர் சந்திப்பின் போது,ஒரு சில வார்த்தைகள்
    பேசும் வாய்ப்பினைப் பெற்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  10. இவரைப் புதுக்கோட்டையில் பார்த்தேன். பேசமுடியவில்லை. தாங்கள் அன்புபாராட்டிய விதம் அருமையாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஏகாந்தன் அவர்களை தெரியும் டெல்லிவாசி என்று, அவர் புகைப்படம் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு

  12. @ பகவான் ஜி
    முதலில் தெரியல இப்போ தெரியுது/ ஆச்சரியமில்லை வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  13. @ கில்லர்ஜி
    /அலசிக் கொண்டிருந்தேன் பிடி கிட்டவில்லை/ எப்படிக் கிடைக்கும் ? பெயரும் தெரியாமல் புகைப்படமும் இல்லாமல்....? முயற்சித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    அவராகவந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டால் அல்லாமல் அறிய வாய்ப்பு மிகவும் குறைவே வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  15. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அவர் புதுகைக்கு வந்திருந்தார். யாரென்று தெரியாமல் பார்த்த முகமாய் இருந்திருக்கும் .வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  16. @ கோமதி அரசு
    அவர் புகைப்படம் பதிந்திருக்காத தளம் ஏகாந்தன் என்பதும் புனைப்பெயரே. பெரும்பாலான வலை நட்புகளைத் தெரிவதில்லை. பதிவர் சந்திப்புகளில்தான் சந்திக்க வாய்ப்பு. அதனால்தான் எப்போது பதிவர்களை சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறதோ அப்போது அதை நான் பயன் படுத்துகிறேன் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  17. ஏகாந்தம்-விரும்பிதான் நான் சின்னவயதிலிருந்தே. அதனால்தான் அந்தப்பெயரில் வலையில் வலம் வருகிறேன். ஆனால் மனிதரை, அவர்தம் சினேகத்தைப் பெரிதும் மதிப்பவன். எல்லோரையும் சந்தித்துப் பேசவே புதுக்கோட்டை சந்திப்புக்கு ஆவலாய் வந்தேன். அன்று விழாவினூடே சில பதிவர்களுடனும், மாலையில் விழா 5 1/2 மணிக்கு முடிந்தவுடன் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சிலருடனும் உரையாடினேன். மற்றவர்களையும் பார்த்துக் கொஞ்சம் பேசலாம் எனத் திரும்பினால், எல்லோரும் கூடு திரும்பும் மாலைப்பறவைகளாகப் பறந்துவிட்டார்கள் என அறிந்துகொண்டேன். இருந்தும் கொஞ்சம்பேருடனாவது அன்று பேச முடிந்தது மகிழ்வு தந்தது. நான் பிரபலமானவன் அல்லன். சாதாரணன். என்னைப்போன்ற ஏழைக்கு இப்படி ஒரு வெளிச்சம்போட்டு காண்பித்திருக்கிறீர்களே, ஜிஎம்பி சார்! பதிவ நண்பர்கள் ஒவ்வொருவராக உமது சூட்சுமமான கேள்விக்கு (கூடவே படமிட்டிருந்தும்!) யாரிது, தெரியவில்லையே..ஒருவேளை அவரோ! என்றெல்லாம் அடித்த கமெண்ட்டுகள் படிப்பதற்குச் சுவாரஸ்யம் தருபவை.
    நேற்றுதான் (4/11/15) டெல்லி திரும்பினேன். என் தளத்தில் கிரிக்கெட் கட்டுரைக்கான உங்களது பின்னூட்டம் படித்தபின்பே, உங்களது பதிவை, பின்னூட்டங்களைப் பார்க்க நேர்ந்தது. அன்று உங்களுடனான பெங்களூர் சந்திப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை அழைத்து, உபசரித்து மகிழ்ந்த உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    என்னைப் பதிவுலக நண்பர்களுக்கு நீங்கள் மீள்அறிமுகம் செய்தது என்னை நெகிழவைக்கிறது. ஜிஎம்பி-சாரின் வேண்டுகோளுக்கிணங்கி `யாருடா இந்த ஆளு!` என சிறிது நேரம் ஆராய்ந்து கவனம் செலுத்திய நண்பர்கள், தோழிகளுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள். தோழமை தொடர்வோம் அன்பர்களே..!

    பதிலளிநீக்கு
  18. யாரென்று தெரியாமல் யோசனையோடு வாசித்துக் கொண்டு வந்தேன்... எல்லாருமே தெரியலை என்று சொல்லியிருக்க யாராக இருக்கும் என்று வந்தால் தாங்கள் சொல்லிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு

  19. @ ஏகாந்தன்
    அன்று நம் சந்திப்பு பற்றி எழுத நினைத்தபோது எழுந்த ஐடியாதான் இப்பதிவு. உங்கள் புகைப்படமே இல்லாமல்வெறும் பதிவை வைத்து மட்டும் அடையாளம் காண்பது கடினம் என்று எனக்குத் தெரியும் புதுக் கோட்டையில் நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் என்னாலும் அடையாளம் கண்டிருக்க முடியாது. ஏதோ சிலரை சிந்திக்க வைத்ததில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  20. @ பரிவை சே குமார்
    அவரே பின்னூட்டத்தில் வந்து விட்டாரே. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  21. இதுவரை நான் இவரது தளத்தினை பார்த்ததில்லை... இவரையும். இவரது தளத்தினை இப்போதே பார்க்கிறேன்.....

    உங்கள் மூலம் மேலும் ஒரு வலைப்பதிவரை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு