Wednesday, October 14, 2015

புதுக் கோட்டை via மலைக்கோட்டை (2)


                          புதுக்கோட்டை via மலைக் கோட்டை (2)
                           ----------------------------------------------------------
 சென்ற பதிவின் தொடர்ச்சியாக
நாங்கள் மூவரும் 9-ம் தேதி மாலை பெங்களூரில் ரயில் ஏறினோம் 3AC  கோச்/ மறு நாள் காலை நான்கு மணிக்கேல்லாம் திருச்சி சேர்ந்து விட்டோம் நான்கு மணியை நினைத்துக் கொண்டே படுத்ததில் இரவு உறக்கமே  இருக்கவில்லை. உறக்கம் வந்தபோதும் கலர் கலராய் புதுக் கோட்டைக் கனவுகள் காலையிலேயே எங்கள் தேவைக்கு யூஸ் செய்யக் கார் வந்திருந்தது.ஸ்டேஷனை  விட்டு வெளியில் வந்ததும்சூடாக ஃபில்டர் காஃபி ரூ 10-க்கு  கிடைக்கிறது குடித்தோம்  BREEZE RESIDENCY  யில்  நான்கு படுக்கை ஏசி அறை முன் பதிவாய் இருந்ததுநல்ல விசாலமான அறை  நான் இதுவரை பார்த்திராத சில வசதிகளுடன் இருந்தது குறிப்பாக குளியல் டப்புடன் கூடிய பாத் ரூம்.  காலையில் நாமே காஃபி போட்டுக் கொள்ளும் வசதியுடைய ஒரு மினி பார் ஆனால் மது பானங்கள் இருக்கவில்லை. நான் டெல்லி விமான நிலையத்தில் இருந்த ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் தங்கி இருந்தாலும்  பாத் டப்பில் குளித்த அனுபவம் இல்லை. இங்கு நன்கு நீரில் அமிழ்ந்து குளித்தது 77 வயதில் ஒரு புது அனுபவம்  என் மனைவி அதை வீடியோ பதிவாக்கி இருக்கிறாள். ஆனால் அதைப் பதிவிடப் போவதில்லை. குளித்து முடித்து காலை உணவுக்குக் கீழே போனோம்  என்ன வெரைட்டி இருந்தாலும் காலை உணவாக  இட்லி வடைதான் தோதுப் படுகிறது.  எட்டரை மணி சுமாருக்கு சமயபுரம் கோவில் பார்க்கப் போனோம்.  கடந்த 25 ஆண்டுகளாக வருடா வருடம் போகும் எங்களால் சென்ற ஆண்டு செல்ல முடியவில்லை. அதை ஈடு கட்டுவது போல் சமயபுரம் அம்மனை சுமார் ஆறு அடி தூரத்தில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது  உபரியாக அர்ச்சகர் ஒரு பெரிய ரோஜா மாலையையும் எனக்கு அணிவித்தார் தரிசனத்தின் போது  ரூ. 200/- கை மாறி இருந்தது வேறு விஷயம் பணம் இருந்தால் அம்மனின் அருள் இருக்கிறதோ இல்லையோ  அர்ச்சகரின் மதிப்பைப் பெற்று விடலாம் சில புகைப்படங்கள் எடுத்தோம் அர்ச்சகர் சுமார் 25 எலுமிச்சை பழங்களும் கொடுத்தார்  அம்மன் கோவிலில் தரிசனம் திவ்யமாக இருந்தது  அனுபவங்களும் கூடத்தான்  கோவிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் சுற்றி வளைத்துப் போக வேண்டி இருந்தது அதன் பின் ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனோம்  சாதாரணமாக ரங்கநாதரை தரிசிப்பது என் போன்ற  எப்போதாவது போகிற யாத்திரிகர்களுக்குச் சிரமம்  அது என் அனுபவத்தில்  உணர்ந்தது. என் மகன் அவனது நண்பர்கள் சிலருக்குத் தகவல்கள் கூறி இருந்தான்  குவைத்தில் இருந்து எங்களுக்குக் கார் கொடுத்து உதவிய நண்பன் கோவில் தரிசனத்துக்கும்  ஏற்பாடு செய்ய சிலரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்  அவன் தயவில் எந்த சிரமமும் இல்லாமல்  கோவிலுக்குள் சென்று வந்தோம்  அங்கும் பராமரிப்புப் பணிகள் நடப்பதால்  மூலவர் தரிசனம் இல்லை.  உற்சவரையே காண முடிந்தது கோவிலுள்ளேயே நடந்து போவது  வெயிலின் தாக்கத்தால் எனக்குக் கடினமாக இருந்தது. தரிசனம் முடித்து வெளியே வந்தோம்  தாயாரை தரிசிக்க  சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்ததால் என் மகன் வேண்டாம்  என்று கூறிவிட்டான்  போகும் வழியில் திருச்சிப் பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறி இருந்தேன்  அவர்களுக்கும் நாங்கள் வருவது குறித்து தொலைபேசியில் மகன் தெரிவித்தான்  கோசி நெஸ்ட் என்னும் அடுக்கு மாடி யில்  நான்காவது தளத்தில் இருக்கும் திருமதி கீதாவையும் திரு சாம்பசிவத்தையும் சந்தித்தோம் நாங்கள் அங்கு காஃபி குடிக்கவில்லையே  காலை உணவுக்கு வரவில்லையே என்னும்  ஆதங்கம்  தெரிந்தது அவர்களிடம் பேசும்போது . என் மனைவியும் திருமதி கீதா சாம்பசிவமும்  நன்கு பழக்கப்பட்டவர்கள் போல் உரையாடினார்கள்   THEY JELLED WITH EACH OTHER WELL.  சுடச்சுட வடை வாங்கிக் கொடுத்தார் திரு சாம்பசிவம்  எதையும் உண்ணும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. வடை சாப்பிட்டேன்  அவர்களது குடியிருப்பின் டெரசில் இருந்து  திருச்சியின் எல்லா திசைகளும் தெரியும் என்றும்  பார்க்கும் படியும் சாம்பசிவம் சொன்னார்  அவர்கள் வீட்டுப் பூசை அறைப் படங்கள் பற்றியும் கூறினார்  நான்  அவர்களுக்கு அனுப்பி இருந்த ஆலிலைக் கண்ணனின்  கண்ணாடி ஓவியதையும்  குரிப்பிட்டார்.  மதிய ஆனைக்கா போகும் திட்டம்  வெயில் காரணமாகக் கை விடப் பட்டது.  நாங்கள் கிளம்பும் போது என்  மனைவிக்கு குங்குமத்துடன் ஒரு சிறிய ராமர் பட்டாபிஷேக விக்கிரகமும்  ஒரு குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் கொடுத்தார்கள்  வலை நண்பன்  எனக்கு எதுவுமே இல்லை….! மதிய உணவு பற்றியும்  மாலை சந்திப்புகள் பற்றியும்  அடுத்த பதிவில் தொடர்வேன் 
இந்தப் பதிவின் சில புகைபடங்கள் இன்னும் சில அடுத்த பதிவில்
 -------------------------------------------------------------------------------------------------------------------------
சோப்பு சீப்பு எல்லாம் இருந்த வாஷ் பேசின்
கண்ணாடி அறை குளியல் அறை

      
பாத் டப்
 
         
 
மினி பார்

 
சமயபுரத்தில் மாலையுடன் நான்
 
சமயபரத்தில் ஒரு சாலை
 
திருமதி கீதா சாம்பசிவம் வீட்டு ராமர் படம்
 
திருமதி கீதா வீட்டு டெரசில் இருந்து காவிரி ஆறு
  

டெரசில் இருந்து ஸ்ரீரங்கம்  கோபுரம்
43 comments:

 1. திருவானைக்கா கோவிலின் பிரம்மாண்டத்தைக் காணாமல் விட்டு விட்டீர்கள் போல. கீதா மேடம் வீட்டு மொட்டை மாடி நடைப் பயிற்சி மேற்கொள்ள சிறந்த இடம். மாலை வேளைகளில் அழகாய் அங்கு நிறுவப் பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்ச்சில் அமர்ந்து புத்தகங்கள் படிக்கலாம்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. //வலை நண்பன் எனக்கு எதுவுமே இல்லை….!//

  ஹாஹாஹா, உங்களுக்கு எதுவும் கொடுக்கலை தான்! உடல் நலம் காரணமாக என்னால் கடைகளுக்குப் போகமுடியலை. அவர் வாங்கிட்டு வரதை நான் ஒத்துக்கணும்! :) ஆகையால் போக முடியலை! :)) அடுத்த முறை பார்ப்போம்.

  ReplyDelete
 4. அருமையான பயண அனுபவம்.

  ReplyDelete
 5. //நாங்கள் கிளம்பும் போது என் மனைவிக்கு குங்குமத்துடன் ஒரு சிறிய ராமர் பட்டாபிஷேக விக்கிரகமும் ஒரு குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் கொடுத்தார்கள் வலை நண்பன் எனக்கு எதுவுமே இல்லை….! //

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நியாயமான ஆதங்கம்.

  தங்கள் துணைவியாருக்கு ரவிக்கைத்துண்டு போல தங்களுக்கு ஒரு கைக்குட்டையாவது (கரிச்சீப்) கொடுத்திருக்க வேண்டும்தான். :)

  ReplyDelete
 6. அருமையான பயண அனுபவம்! தொடர்கின்றேன் ஐயா!

  ReplyDelete
 7. பக்கத்தில் அமர்ந்து கேட்பதைப் போலிருக்கின்றது - தங்களின் நடை!..

  ReplyDelete
 8. GMB சார்! முந்தைய பதிவையும் இதையும் இப்போதே படித்தேன். உங்களின் உற்சாகம் அளப்பரியது. திருச்சியில் நான் வாழ்ந்த நான்கு ஆண்டுகளும் என் நெஞ்சில் உறைந்தவை. தெய்வாம்சம் நிரம்பிய ஊர். உங்கள் அனுபவத்தை நானும் கூட இருந்து அடைந்தது போன்ற வகையில் எழுதியிருந்தீர்கள்.

  அந்த சமயம் நானும் கன்யாகுமரி, சுசீந்தரம்,திருவட்டார், நெல்லை, நவதிருப்பதிகள்,திருச்செந்தூர், சென்னை என பத்து நாள் பயணத்தில் இருந்தேன். அடுத்த பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள திட்டமிடவேண்டும். உங்கள் பாத் டப் வீடியோ மாமிக்கு மட்டும் தானா?!

  ReplyDelete
 9. வணக்கம்
  ஐயா
  அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தது நன்று...ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. நல்ல அனுபவங்கள் சார்...

  ReplyDelete
 11. அர்ச்சகர் ரோஜா மாலை கொடுத்தார். அதற்கு முன்பே ரூ 200 கை மாறி இருந்தது.// என்ன செய்வது இப்போது அர்ச்சகர்களும் வியாபாரிகளாகத்தான் மாறி வருகிறார்கள். புகைப்படங்களுடன் பயண அனுபவ பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 12. நேரில் பேசுவதைப் போன்ற பதிவு

  ReplyDelete
 13. ஆஹா திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஐயா சுவாரஸ்யம் தொடர்கிறேன்...

  ReplyDelete

 14. @ ஸ்ரீராம்
  நாங்கள் பலமுறை திருவானைக்கா சென்றிருக்கிறோம் இம்முறை வெயிலின் கடுமையால் என் மகன் வீடோ செய்து விட்டான் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 15. @ கீதா சாம்பசிவம் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் பதிவுக்கு சுவை சேர்க்க தமாஷுக்கு எழுதினேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 17. @ கோமதி அரசு
  வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 18. @ கோபு சார்
  அது சும்மா தமாஷுக்கு எழுதியது எனக்கும் சில நியமங்கள் பரிச்சயம் உண்டு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 19. @ தனிமரம்
  தொடர்ந்து வாருங்கள் நன்றி ஐயா

  ReplyDelete

 20. @ துரை செல்வராஜு
  பாராட்டுக்கு நன்றி ஐயா தொடர வேண்டுகிறேன்

  ReplyDelete
 21. // கீதா சாம்பசிவம் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் //

  அதெல்லாம் இல்லை. நிஜமாகவே ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அதைத் தான் நான் சொன்னேன். :)

  ReplyDelete

 22. @ மோகன் ஜி
  நங்களும் ஒரு பத்து நாள் பயணம் திட்டமிட்டிருக்கிறோம் மதுரை ராமேஸ்வரம் நாகர் கோவிலில் தங்கி அருகில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வர திட்டம் பத்து பெண்டிரும் இரண்டே ஆண்களும் . தேவைப் பட்டால் ஆலோசனை கேட்பேன்
  என் குளியலை என் மனைவி தவிர யாரும் காண்பது நன்றாயிருக்காதே வருகைக்கு நன்றி

  ReplyDelete

 23. @ ரூபன்
  பாராட்டுக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 24. @ எம் கீதா
  இந்த நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்ததுதானே அனுபவம் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 25. @ தளிர் சுரேஷ்
  நிகழ்வுகளைக் கூறினேன் அவ்வளவுதான் இதெல்லாம் காலத்தின் தேவை வருகைக்கு நன்றி

  ReplyDelete

 26. @ அபயா அருணா
  பதிவை ரசிப்பதற்கு நன்றி மேம்

  ReplyDelete

 27. @ கில்லர் ஜி
  இதுவரை எழுதியதில் என் சுபாவம் வெளியாக வில்லை. அதை இன்னொரு பதிவில் காணலாம் வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete
 28. நீங்கள் எதிர்பார்த்ததை விட, உங்கள் மனைவி மற்றும் மகன் பயந்ததற்கு மாறாக, இந்த புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு பயணம், இறைவன் அருளால் நல்ல பயணமாக அமைந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எடுத்த படங்களில் நான் இருக்கின்றேனா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 29. சுவாரஸ்யமாக இருக்கிறது அனைத்தும் நேரில் பேசுவது போல் ம்..ம் கொட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஹா ஹா ஓ அப்போ இன்னும் இருக்கிறது ஆஹா சரி சரி அப்போ தொடர்கிறேன்.

  //நாங்கள் கிளம்பும் போது என் மனைவிக்கு குங்குமத்துடன் ஒரு சிறிய ராமர் பட்டாபிஷேக விக்கிரகமும் ஒரு குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் கொடுத்தார்கள் வலை நண்பன் எனக்கு எதுவுமே இல்லை….! //
  அட ஒரு கர்சீப்பாவது கொடுத்து இருக்கலாம் இல்ல. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா ஹா ஹா just kidding .......
  சிரமம் என்று பாராமல் சென்றமையால் பெருமகிழ்வு உங்களுக்கும் மற்றும் தங்களை சந்தித்த அனைவர்க்கும்.
  பதிவுக்கு நன்றி ஐயா! வாழ்க வளமுடன் ...!

  ReplyDelete
 30. நீங்கள் தங்கியிருந்த ரூம் அழகாக இருக்கின்றதே...

  கீதா: சார் பொதுவாகவே இந்த நவராத்திரி இல்லைனா சும்மா போனாக் கூட பெண்களுக்கு ஏதேனும் வைத்துக் கொடுக்கப்படும். ஆண்களுக்கு இல்லை..அதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு நண்பர் நகைச்சுவையாகச் சொல்லுவார்..ஹும் நம்ம அம்மணிகளை வீடு வீடா அழைத்துக் கொண்டு போவதே நாமதான்...ஆனா அவங்களுக்கு மட்டும் கலெக்ஷன்..பேக்...நம்மள கண்ண்டுக்கவே மாட்டேங்கறாங்கப்பா....ஒரு கர்சீஃப் பிட்டாவது கொடுக்கலாமே ...

  நான் வரும் ஆண்களுக்கும் ஏதேனும் கொடுப்பேன்...

  ReplyDelete

 31. @ தி தமிழ் இளங்கோ
  நிகழ்வுகள் எல்லாமே நல்லபடியாக அமைந்தது நான் எப்போதுமே ஒரு ஆப்டிமிஸ்ட் புதுக் கோட்டையில் எடுத்த புகைப்படங்கள் சில வெளியிடுவேன் நீங்கள் இருக்கும் படங்கள் இருக்க வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 32. @ இனியா
  நம் குடும்பங்களில் ஒரு சம்பிரதாயம் அது. எனக்கும் தெரியும் இருந்தாலும் பதிவுக்குச் சுவை கூட்ட ந்ழுதினேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 33. @ துளசிதரன் தில்லையகத்து
  ஒன்றரை நாளுக்கு ரூ 5000/ த்துக்கு மேல் தீட்டி விட்டார்கள் எதுவுமே தன் தந்தைக்கு பெஸ்ட் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம் காலங்காலமாகக் கடைபிடித்துவரும் ஒரு வழக்கம் அது. எனக்கு நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்

  ReplyDelete

 34. @ கீதா சாம்பசிவம்
  அதனாலென்ன பரவாயில்லை.

  ReplyDelete
 35. திருவரங்கம் கீதாம்மா வீட்டு மொட்டைமாடி ரொம்பவே பிரபலம் தான்.....

  திருச்சியில் நடந்த சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி......

  ReplyDelete

 36. @ வெங்கட் நாகராஜ்
  கீதாம்மா வீட்டுக்கு வருபவரை எல்லாம் மேலே போய் பார்க்கச் சொல்வார்களாமே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 37. படித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் அருகிலிருப்பதுபோல உள்ளது. வாசகர்களை உங்கள் பக்கம் முழுமையாக ஈர்க்கும் தங்களது பாணி போற்றத்தக்கது. நன்றி.

  ReplyDelete

 38. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 39. உங்கள் பயணக் கட்டுரையை படிக்கும்போது, நாமும் இதுபோல் பல இடங்களுக்கு செல்லவேண்டும் என்ற வேட்கை ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 40. அங்கே வாங்கி இங்கே கொடுப்பது ,இங்கே வாங்கி அங்கே கொடுப்பது ...அர்ச்சகர்கள் தொழில் ரகசியம் புரிந்தது :)

  ReplyDelete

 41. @ வே நடனசபாபதி
  எனக்குப் பயணம் பிடிக்கும் அதுவும் வலையுலக நட்புகளை காண வாய்ப்பு என்று வரும்போது எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete

 42. @ பகவான் ஜி
  ஆண்டவனைத் தரிசிக்க அர்ச்சகர் அருள் வேண்டும் வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete