புதுக்கோட்டை via மலைக் கோட்டை (2)
----------------------------------------------------------
சென்ற பதிவின் தொடர்ச்சியாக
நாங்கள்
மூவரும் 9-ம் தேதி மாலை பெங்களூரில் ரயில் ஏறினோம் 3AC கோச்/ மறு நாள் காலை நான்கு மணிக்கேல்லாம்
திருச்சி சேர்ந்து விட்டோம் நான்கு மணியை நினைத்துக் கொண்டே படுத்ததில் இரவு
உறக்கமே இருக்கவில்லை. உறக்கம் வந்தபோதும்
கலர் கலராய் புதுக் கோட்டைக் கனவுகள் காலையிலேயே எங்கள் தேவைக்கு யூஸ் செய்யக்
கார் வந்திருந்தது.ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்ததும்சூடாக ஃபில்டர் காஃபி ரூ 10-க்கு கிடைக்கிறது குடித்தோம் BREEZE RESIDENCY யில்
நான்கு படுக்கை ஏசி அறை முன் பதிவாய்
இருந்ததுநல்ல விசாலமான அறை நான் இதுவரை
பார்த்திராத சில வசதிகளுடன் இருந்தது குறிப்பாக குளியல் டப்புடன் கூடிய பாத் ரூம். காலையில் நாமே காஃபி போட்டுக் கொள்ளும் வசதியுடைய ஒரு மினி பார் ஆனால் மது பானங்கள் இருக்கவில்லை. நான் டெல்லி விமான
நிலையத்தில் இருந்த ஐந்து நட்சத்திர
ஹோட்டலில் தங்கி இருந்தாலும் பாத்
டப்பில் குளித்த அனுபவம் இல்லை. இங்கு நன்கு நீரில் அமிழ்ந்து குளித்தது 77 வயதில்
ஒரு புது அனுபவம் என் மனைவி அதை வீடியோ
பதிவாக்கி இருக்கிறாள். ஆனால் அதைப் பதிவிடப் போவதில்லை. குளித்து முடித்து காலை
உணவுக்குக் கீழே போனோம் என்ன வெரைட்டி
இருந்தாலும் காலை உணவாக இட்லி வடைதான்
தோதுப் படுகிறது. எட்டரை மணி சுமாருக்கு
சமயபுரம் கோவில் பார்க்கப் போனோம். கடந்த
25 ஆண்டுகளாக வருடா வருடம் போகும் எங்களால் சென்ற ஆண்டு செல்ல முடியவில்லை. அதை ஈடு கட்டுவது போல் சமயபுரம் அம்மனை சுமார் ஆறு அடி தூரத்தில் இருந்து தரிசிக்கும்
வாய்ப்பும் கிடைத்தது உபரியாக அர்ச்சகர்
ஒரு பெரிய ரோஜா மாலையையும் எனக்கு அணிவித்தார் தரிசனத்தின் போது ரூ. 200/- கை மாறி இருந்தது வேறு விஷயம் பணம்
இருந்தால் அம்மனின் அருள் இருக்கிறதோ இல்லையோ
அர்ச்சகரின் மதிப்பைப் பெற்று விடலாம் சில புகைப்படங்கள் எடுத்தோம்
அர்ச்சகர் சுமார் 25 எலுமிச்சை பழங்களும் கொடுத்தார் அம்மன் கோவிலில் தரிசனம் திவ்யமாக இருந்தது அனுபவங்களும் கூடத்தான் கோவிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் சுற்றி
வளைத்துப் போக வேண்டி இருந்தது அதன் பின் ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனோம் சாதாரணமாக ரங்கநாதரை தரிசிப்பது என் போன்ற எப்போதாவது போகிற யாத்திரிகர்களுக்குச்
சிரமம் அது என் அனுபவத்தில் உணர்ந்தது. என் மகன் அவனது நண்பர்கள் சிலருக்குத்
தகவல்கள் கூறி இருந்தான் குவைத்தில்
இருந்து எங்களுக்குக் கார் கொடுத்து உதவிய நண்பன் கோவில் தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்ய சிலரிடம் கேட்டுக்
கொண்டிருந்தான் அவன் தயவில் எந்த சிரமமும்
இல்லாமல் கோவிலுக்குள் சென்று வந்தோம் அங்கும் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் மூலவர் தரிசனம் இல்லை. உற்சவரையே காண முடிந்தது கோவிலுள்ளேயே நடந்து
போவது வெயிலின் தாக்கத்தால் எனக்குக்
கடினமாக இருந்தது. தரிசனம் முடித்து வெளியே வந்தோம் தாயாரை தரிசிக்க சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்ததால் என் மகன்
வேண்டாம் என்று கூறிவிட்டான் போகும் வழியில் திருச்சிப் பதிவர் திருமதி கீதா
சாம்பசிவம் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறி இருந்தேன் அவர்களுக்கும் நாங்கள் வருவது குறித்து
தொலைபேசியில் மகன் தெரிவித்தான் கோசி
நெஸ்ட் என்னும் அடுக்கு மாடி யில்
நான்காவது தளத்தில் இருக்கும் திருமதி கீதாவையும் திரு சாம்பசிவத்தையும்
சந்தித்தோம் நாங்கள் அங்கு காஃபி குடிக்கவில்லையே
காலை உணவுக்கு வரவில்லையே என்னும்
ஆதங்கம் தெரிந்தது அவர்களிடம்
பேசும்போது . என் மனைவியும் திருமதி கீதா சாம்பசிவமும் நன்கு பழக்கப்பட்டவர்கள் போல்
உரையாடினார்கள் THEY JELLED WITH EACH
OTHER WELL. சுடச்சுட வடை வாங்கிக்
கொடுத்தார் திரு சாம்பசிவம் எதையும்
உண்ணும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. வடை சாப்பிட்டேன் அவர்களது குடியிருப்பின் டெரசில் இருந்து திருச்சியின் எல்லா திசைகளும் தெரியும்
என்றும் பார்க்கும் படியும் சாம்பசிவம் சொன்னார் அவர்கள் வீட்டுப் பூசை அறைப் படங்கள் பற்றியும்
கூறினார் நான் அவர்களுக்கு அனுப்பி இருந்த ஆலிலைக் கண்ணனின் கண்ணாடி ஓவியதையும் குரிப்பிட்டார். மதிய ஆனைக்கா போகும் திட்டம் வெயில் காரணமாகக் கை விடப் பட்டது. நாங்கள் கிளம்பும் போது என் மனைவிக்கு குங்குமத்துடன் ஒரு சிறிய ராமர்
பட்டாபிஷேக விக்கிரகமும் ஒரு குங்குமச்
சிமிழும் ரவிக்கைத் துண்டும் கொடுத்தார்கள்
வலை நண்பன் எனக்கு எதுவுமே இல்லை….!
மதிய உணவு பற்றியும் மாலை சந்திப்புகள்
பற்றியும் அடுத்த பதிவில் தொடர்வேன்
இந்தப் பதிவின் சில புகைபடங்கள் இன்னும் சில அடுத்த பதிவில்
-------------------------------------------------------------------------------------------------------------------------
| சோப்பு சீப்பு எல்லாம் இருந்த வாஷ் பேசின் |
| கண்ணாடி அறை குளியல் அறை |
| டெரசில் இருந்து ஸ்ரீரங்கம் கோபுரம் |