பதிவர் சந்திப்பு படங்களுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு படங்களுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

புதுக்கோட்டை via மலைக் கோட்டை(4)




                          புதுக்கோட்டை via மலைக்கோட்டை( 4)

ஞாயிறு காலை சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்னும்  என் அரிப்பை உதாசீனப் படுத்தி காலை உணவுக்குப் பிறகே போவோம் என்றனர் மனைவியும் மகனும் காலையிலேயே போனால் அங்கு காலை உணவு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லாத நிலையில் நானும் சம்மதித்தேன் கார் ட்ரைவரும் 45 நிமிடத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் என்றார்  சரியாக எட்டேகால் மணிக்குக் கிளம்பினோம் சாலை நன்றாகவே இருந்தது வழியில் ஒரு டோல்  போகவர என்று 40 ரு. க்கு  டிக்கட் வாங்கினோம் நாங்கள் போய்ச் சேர்ந்தபோது மணி ஒன்பதாகி இருந்தது  பதிவர்களின் வருகை பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தார்கள்
இத்தனை ஏற்பாடுகள் செய்து புதுக் கோட்டைக்கு வந்ததே முகமறியா வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்கவும் பரிச்சயப் பட்டு நட்பினை உறுதி செய்து கொள்ளவும்தான்  முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வலைப் பதிவர் வருகைப் பட்டியல் படி வருவோரில் பலரையும் சந்திக்க விரும்பினேன் முதலில் ஏற்கனவே சந்தித்திராதவர் பட்டியல் புலவர் இராமாநுசம் , எம் கீதா, எஸ்பி. செந்தில்குமார், வைகறை, அரசன் ஏகாந்தன் சேட்டைக்காரன் கர்னல் கணேசன் தில்லையகத்து கீதா ,தென்றல் சசிகலா,திருமதி ருக்மிணி சேஷாசாயி, கரந்தை சரவணன் மணவை ஜேம்ஸ்,ஆகியோரே இப்போது நினைவுக்கு வருகிறார்கள்  ஏற்கனவே அறிமுகமாயிருந்த பதிவர்களின் பட்டியல் நீளம் அதிகம் டாக்டர் கந்தசாமி, செல்லப்பா சீனா கரந்தை ஜெயக்குமார் மதுரை சரவணன் ரமணி, திண்டுக்கல் தனபாலன் தமிழ்வாசிப் பிரகாஷ்சீனா அவர்களின் துணைவியார்,  பகவான் ஜி, துளசிதரன் கோவை ஆவி, சீனு, பாலகணேஷ் குடந்தை சரவணன் ஹரணி, தி தமிழ் இளங்கோ டிஎன் முரளிதரன் தருமி கவியாழி கண்ணதாசன்  போன்றோர் நினைவுக்கு வருகிறார்கள்  பார்த்து பரிச்சயப்பட விரும்பி வராதவர்கள் எட்வின் தளிர் சுரேஷ் சுப்புத் தாத்தா ஈரோடுவழக்கறிஞர் ராஜசேகரன் , திருமதி ராஜராஜேஸ்வரி போன்றோர் முக்கியமானவர்கள் என்னை அறிந்தும் அறிமுகப்படுத்திக் கொள்ள  வராத பதிவர்களும்   நிறைய பேர் இருக்கலாம்
நன்கு அறிமுகமான ஹரணி அவர்களது முகம் மறந்து போய் அவரே என்னிடம் வந்து பேசிய போது குற்ற உணர்ச்சியால் வேதனைப் பட்டது நிஜம் இதைத்தான் நான் ஒரு பதிவில் முதுமை என்பது செய்யாத  குற்றத்துக்குதண்டனை என்று எழுதி இருந்தேனோ?பார்த்த முகம் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்
 விழா நிகழ்வுகள் குறித்து இப்போது நான் ஏதும் சொல்லப் போவதில்லை அதைப் பதிவர்கள் அறிவார்கள் நேரடி ஒளிபரப்பும் இருந்தது.  நான் என் கருத்துக்கள் சிலவற்றை மட்டுமே பகிரப் போகிறேன்   நாங்கள் சுமார் மூன்று மணிக்கு திருச்சி நோக்கிப் பயணப் பட்டோம் திருமதி ருக்மிணி சேஷாசாயி திருச்சியில் இருந்து தனியே வந்திருந்தார்  எங்கள்  காரில் இடமிருக்கிறதுவருகிறீர்களா  என்று கேட்டபோது ஒப்புக் கொண்டு எங்களுடன் பயணித்தார்  அவரும் என் மனைவியும் சிநேகிதிகளாகி விட்டனர்  இனி சில புகைப் படங்கள் 
வருகை பதிவு
                            
                    
புதுகை சந்திப்பில் 
தருமியுடன் 

தருமி கந்தசாமி நான் புலவர் 
கரந்தை ஜெயக்குமாருடன் 
நான் கரந்தை சரவணன்  ஹரணி  கரந்தை ஜெயக்குமார்
திரு ஹரணியுடன் 
தென்றல் சசிகலாவுடன் 
சுய அறிமுகம்
க(ல்)னல் கணேசனுடன் 
வைகறை நான் கரந்தையார் கர்னல் கணேசன் 
கவிதைக்கு  ஓவியம் 
கவிதைக்கு ஓவியம் 
பதிவர் நண்பர்கள்
   
புலவர் இராமாநுசம் எஸ்பி செந்தில் குமாருடன் நான்


புகைப்படம் வெளியிட விரும்பாதவர்  பட்டியல் நீள்கிறது சந்திப்பின் போது எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொரு வரையும் தனியே எடுக்கப் பட்டதல்ல.  பலரும் சேர்ந்தே இருக்கும் படங்கள்  அதில் ஒருவர் தன் படம் வெளியிட விரும்பவில்லை என்றால் அவருடன் நிற்கும் பிறரது படமும் வெளியிடப் படாமல் போகும்  ஒரே ஒரு படம்தான் இருக்கிறது  ஆனால் அதில் இருக்கும்  ஒருவர் விரும்பவில்லை என்பதற்காக  அதில் இருக்கும் மற்ற வர்களையும்  அடையாளப் படுத்த முடிவதில்லை.  படம் வெளியிட விரும்பாதவர் படம் எடுக்கும் போது தன்னைத் தவிர்த்துக் கொண்டிருந்தால் ஒரு இக்கட்டான நிிலையைத் தவிர்த்திருக்கலாம் எடுத்த சில படங்களைத் தவிர்க்க நேருவது சங்கடமாக இருக்கிறது தவிர்க்கப் பட்டவர் தவிர மற்றவர்கள் என்னை மன்னிக்கட்டும்


இந்தக் காணொளிக்கும்  இந்தப் பதிவுக்கும்  எந்த சம்பந்தமும் கிடையாது அடுத்து வரும் புதுக் கோட்டை சந்திப்பு பற்றிய பதிவு என் எண்ணங்களைத் தாங்கி வரும்  தவற விடாதீர்கள்