மந்திரங்கள் கேள்வியும்பின்னூட்டங்களும்
----------------------------------------------------------------------
நான்
வலைத்தளத்தில் எழுதத் தொடங்கி ஆகிறது பத்தாண்டுகள் இடுகைகளை
என் எண்ணங்களைப் பகிர்வே நான் உப்யோகப் படுத்தினேன் ஆரம்ப காலத்தில் என் இடுகைகளைப் படித்தவர்கள் எனக்கு உற்சாக
மூட்டினார்கள் எந்த எழுத்தையும் பொதுவாக
அவர்களது கோட்பாடுகளுக்குப் புறம்பாக இருந்தாலும்
அதை அவர்களுக்கு எதிரானது என்று கருத வில்லை ஆனால் இப்போதெல்லாம் என் எழுத்துகளை கருத்துப் பகிர்தல் என்று
எண்ணாமல் ஏதோ குற்றம் புரிந்தவனைப்போல் பார்க்கிறார்கள் என் எழுத்துகள் வெகுஜன
புரிதலுக்கு மாறு பட்டிருக்கும் அவை
என் எண்ணங்களின் வெளிப்பாடே யாரையும்
குறைகூறுவதற்கல்ல எல்லோரும் ஒரே[போல் நினைக்க முடியாது என்சந்தேகங்கள் சரிவரப் புரிந்து கொள்ள
வில்லையோ என்றும் தோன்றுகிறது
யாராவது என் சந்தேகங்களை சரியாக
அணுகி எனக்குப்பின்னூட்டம் தர மாட்டார்களா
என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு. பல பின்னூட்டங்கள் என் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்படுகிறதோ என்னும்
சந்தேகமும் உண்டு பழைய பதிவுகளைப் படிப்பதில் எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடே இந்த
எழுத்துகள் எந்தக் கோட்பாட்டையும் அப்படியே
ஏற்றுக் கொள்ளும் மனநிலை எனக்கில்லைகேள்விகள் கேட்பேன் அவை எனக்கு யாராவதுஏற்றுக் கொள்ளும் விதத்தில் பதில் தருகிறார்களா என்று நோக்க வைக்கும்யாரையும் யாருடைய கொள்கையையும் குறை சொல்ல அல்ல சில நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு புறம்பாக
இருக்கும்போது கடுமையாகச் சாடி இருக்கிறேன் பலருக்கும் அது சரியாகப் பட்டாலும் ஏனோ அவற்றை சரி என வாதிடுகிறார்கள் என்றும்தோன்றும் எனக்கு நமது சமுதாயத்தில்
நிலவி வரும் ஏற்ற தாழ்வுகள் மனசை காயப்படுத்தும்
அதை சீர்செய்ய என் எண்ணங்களையும்
பதிவு செய்து இருக்கிறேன்
அவற்றின் தாக்கம்வெளிப்பட என்
எழுத்துகள் மீண்டும் மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் நாம் யூனிடி இன் டைவர்சிடி என்று சொல்வதை நான் என்வாழ்விலேயே
உண்ர்கிறேன் எல்லோரும் நன்றாகவே
ஏற்றுக் கொள்கிறார்கள் நானும்
ஏற்றுக் கொள்கிறேன் எனக்குஎழும் சந்தேகங்களுக்கு
பதில் கூற பலரும் முயன்றிருக்கிறார்கள்
நானும் புதிதாகக் கற்றிருக்கிறேன் சான்றுக்கு ஒன்றாக மந்திரம் என்றால் என்ன என்றுகேள்வி கேட்டிருந்தேன் மந்திர வழிபாடுகள்மந்திர வழிபாடுகள்பற்றி தெளிவு பெற முயன்றிருக்கிறேன் அதற்கு
வந்த பின்னூட்டங்கள் ஒன்றிரண்டை இங்கே பதிவிடுகிறேன் பார்க்க மந்திர
வழிபாடுகள்
அகத்திலே ஆண்டவனை இருத்தியவர்க்கு
ஆயிரம் நாமாக்கள் தேவையில்லை தான்.
ஆயினும் ஒரு கணம் அவனை நினைந்து
அடுத்த கணம் அவனை நினைப்பதற்குள்
இடையிலே ஈராயிறம் எண்ணங்கள்
உங்க்ள் அனுமதி பெறாது உள் வருதே !!
அதனாலே
ஓம் என்ற ஒரு சொல் சொல்லி
அடுத்த ஓம் சொலலும் முன்னால்
சரவண பவ என்று சொல்லு.
சிந்தையில் அந்த சரவணன்
பால் மணம் மாறா
பால சுப்பிரமணியன்
பளிங்கு போல் நெஞ்ச்த்தில்
பரவி நிற்கட்டும்.
ஓம் சரவண பவ !!
மந்திரம் என்றால் என்ன ?
கொஞ்சம் சீர்யஸான விஷயம் தான்
பகவான் கீதைலே சொல்றார்.
மந்திரங்களிலே நான் காயத்ரி
அந்த காயத்ரி மந்திரத்தோடு தான் நீங்க்
இந்த பதிவினை துவங்கியிருக்கிறீர்கள்.
மந்த்ரா என்ற வடமொழிச்சொல்லை
வகுத்துப்பார்த்தால், விகரஹ சமாஸம்
என்று சொல்வார்கள் அந்த ப்ராஸஸை.
மனதினால் அறிந்துகொள்ளக்கூடியது.
மனசினால் க்ரஹித்துக்கொள்ளக்கூடியது.
மனம் என்பது ஒரு திரை . அவ்வளவே.
ஐம்புலங்கள் மூலமாக என்ன நம்மால் க்ரஹித்துக்கொள்ளப்படுகிறதோ..
அது தான் மனத்திரையில் படிகிறது எனலாம்.
மனதினால் புரிந்துகொள்ளக்கூடியது என்றால்,
அது பார்க்கப்படுகிற வ்ஸ்துவோ, கேட்கப்படுகிற வஸ்துவோ,
உணரப்படுகிற வஸ்துவோ, நுகரப்படுகிற வஸ்துவோ,
ருசிக்கப்படுகிற வஸ்துவோ, அது எதுவோ
மந்திரமாவது நீறு ...( பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது, நுகரப்படுகிறது, ருசிக்கப்படுகிறது, ஏன் அதை உச்சரிக்கையில் கேட்கப்படுகிறது)
அஞ்சு குணாதீசங்க்ளையும் அடக்கியதால், நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியை, நீறை, மந்திரம் என்று சொல்கிறோம்.
அந்த பிரமன் என்று எதை சொல்கிறோமோ, அதை, அவனை
இந்த ஐம்புலங்களின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய
அளவுக்கு கன்வர்ட் பண்ணித் தருவது மந்திரம் .
இந்து மதத்தைப் பொறுத்தவரையில்
யூனிடி இன் டைவர்சிடி.
நீ என்னென்ன மாதிரி வேணுமானாலும்
மனசுக்குப் புடிச்ச மாதிரி புரிஞ்சுக்கற மாதிரி
என்னை நினைத்துக்கொண்டாலும்
நான் ஒண்ணு தான்.
ஆகாசாத் பதிதம் தோயம்
யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ
கேசவம் பிரதிகச்சதி.
மந்த்ரம் அப்படின்னு சொல்றது
ஒரு உபாயம். ஒரு கருவி
ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்
ரொம்ப பொடி எழுத்தா இருக்கு
வெள்ள எழுத்து வந்துடுத்து.
படிக்கணுமே ...அதுக்கு கண்ணாடி போட்டுக்கறோமே
அது போலத்தான்
மனசுக்குள்ளே இல்ல
இந்த ஆத்மாவுக்குள்ளே
அவனாக இருக்கறவனை
புரிஞ்ச்சுக்கறதுக்கு
மந்த்ரம் ஒரு சாதனம்.
ரமணர் ஞானி.
அவருக்கு மந்த்ரம் தேவையில்லை.
நம் எப்போ ரமணர் ஆகிறது !
அதுவரைக்கும் மந்த்ர ஜபம் தேவைதான் அப்படின்னு தோண்றது.
இதெல்லாம் ஒரு இண்ட் ரொடக்ஷன்.
போரடிச்சுதுன்னா,
டெலிட் பண்ணிடுங்க்..
மந்திரத்தை இல்ல,
என்னை.
நல்ல பதிவு.என்னுள் மாற்றமும் ஏற்படவில்லை என்று சொன்னது நல்ல விஷயம். நிறைய பேர் அடடா அது தெரியுது இது தெரியுது என்று புருடா விட்டு மேற்கொண்டு தொடரமுடியாமல் போவார்கள். அதற்கு கேள்விகளோடு இருப்பது நல்லது.
மந்திர ஜெபம் என்பது மிக மிக எளிமையான ஒன்று.ஆனால் இதற்கு தேவை விடாமுயற்சி.சரியான வார்த்தை சிரத்தைதான்.
தொடர்ந்து சொல்லும்போது கடைசியில் (பல வருடங்களுக்குப் பிறகு) அது ஒரு வகையான பித்து நிலையில்-மற்றவர் பார்வையில் பைத்தியம் என்றும் சொல்லலாம்-கொண்டு விடும்.
இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் பார்க்கும்,தொடும், கேட்கும் (ஆம்...கேட்பது கூட) எல்லாமே ஒளி வடிவத்தில் போய் கடைசியில் மந்திர ஜெபம் தானாகவே நின்றுவிடும். அப்போது ரமணர் மற்றும் ஞானிகளுக்கு நடந்தது நிகழும் என்பதே இதன் இயங்கும முறை.
இதற்கு பதிலாய் ஏதாவது கடவுளின் பெயரை சொன்னால் அந்த உருவமே எல்லாமாய் மாறி தெரியும,கேட்கும்.
ஆனால் தேவை விடாப்பிடியாய் நிதானமாய் சொல்லிக்
கொண்டே இருப்பது
சிலர் தெளிய வைக்க முயன்றிருக்கிறார்கள்என்று தெரிகிறது ஆனல் தெளிவு கிடைத்ததா சந்தேகமே மனதினாலும் அறிவினாலும் எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது ஏதவது சர்ச்சைக்கு உரிய பதிவு போட வேண்டியது அதை வைத்தே இரண்டுநாட்களோட்டி விடுவீர்கள் இப்படியும் என்னைப் பற்றிய புரிதலுண்டு