Wednesday, November 7, 2018

மந்திரங்கள் கேள்விகளும் பின்னூட்டங்களும்

           

                          மந்திரங்கள்  கேள்வியும்பின்னூட்டங்களும்
                          ----------------------------------------------------------------------

நான் வலைத்தளத்தில் எழுதத் தொடங்கி ஆகிறது பத்தாண்டுகள்  இடுகைகளை  என் எண்ணங்களைப் பகிர்வே நான் உப்யோகப் படுத்தினேன்   ஆரம்ப காலத்தில் என்  இடுகைகளைப் படித்தவர்கள் எனக்கு உற்சாக மூட்டினார்கள்  எந்த எழுத்தையும் பொதுவாக அவர்களது கோட்பாடுகளுக்குப் புறம்பாக இருந்தாலும்  அதை அவர்களுக்கு எதிரானது என்று கருத வில்லை ஆனால் இப்போதெல்லாம்  என் எழுத்துகளை கருத்துப் பகிர்தல் என்று எண்ணாமல்  ஏதோ குற்றம் புரிந்தவனைப்போல்  பார்க்கிறார்கள் என் எழுத்துகள் வெகுஜன புரிதலுக்கு மாறு பட்டிருக்கும்  அவை என்  எண்ணங்களின் வெளிப்பாடே யாரையும் குறைகூறுவதற்கல்ல எல்லோரும் ஒரே[போல் நினைக்க முடியாது  என்சந்தேகங்கள் சரிவரப் புரிந்து கொள்ள வில்லையோ என்றும் தோன்றுகிறது  யாராவது  என் சந்தேகங்களை சரியாக அணுகி  எனக்குப்பின்னூட்டம் தர மாட்டார்களா என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு. பல பின்னூட்டங்கள் என் மனதைப் புண்படுத்தும்  நோக்கத்துடனேயே எழுதப்படுகிறதோ என்னும் சந்தேகமும் உண்டு பழைய பதிவுகளைப் படிப்பதில் எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடே இந்த எழுத்துகள் எந்தக் கோட்பாட்டையும்  அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை எனக்கில்லைகேள்விகள் கேட்பேன்  அவை எனக்கு யாராவதுஏற்றுக் கொள்ளும்   விதத்தில் பதில் தருகிறார்களா  என்று நோக்க வைக்கும்யாரையும் யாருடைய  கொள்கையையும் குறை சொல்ல அல்ல  சில நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு புறம்பாக இருக்கும்போது கடுமையாகச் சாடி இருக்கிறேன் பலருக்கும்  அது சரியாகப் பட்டாலும்   ஏனோ அவற்றை சரி என வாதிடுகிறார்கள்  என்றும்தோன்றும் எனக்கு நமது சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்ற தாழ்வுகள் மனசை காயப்படுத்தும்  அதை சீர்செய்ய என் எண்ணங்களையும்  பதிவு செய்து இருக்கிறேன்  அவற்றின்  தாக்கம்வெளிப்பட என் எழுத்துகள் மீண்டும் மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் நாம் யூனிடி இன் டைவர்சிடி  என்று சொல்வதை நான் என்வாழ்விலேயே உண்ர்கிறேன்  எல்லோரும்  நன்றாகவே  ஏற்றுக் கொள்கிறார்கள்  நானும் ஏற்றுக் கொள்கிறேன் எனக்குஎழும் சந்தேகங்களுக்கு  பதில் கூற பலரும்  முயன்றிருக்கிறார்கள் நானும் புதிதாகக் கற்றிருக்கிறேன்  சான்றுக்கு ஒன்றாக  மந்திரம் என்றால் என்ன  என்றுகேள்வி கேட்டிருந்தேன் மந்திர வழிபாடுகள்மந்திர வழிபாடுகள்பற்றி தெளிவு பெற முயன்றிருக்கிறேன் அதற்கு  வந்த பின்னூட்டங்கள் ஒன்றிரண்டை இங்கே பதிவிடுகிறேன் பார்க்க மந்திர வழிபாடுகள்

 அகத்திலே ஆண்டவனை இருத்தியவர்க்கு
ஆயிரம் நாமாக்கள் தேவையில்லை தான்

ஆயினும் ஒரு கணம் அவனை நினைந்து 
அடுத்த கணம் அவனை நினைப்பதற்குள்
இடையிலே ஈராயிறம் எண்ணங்கள் 
உங்க்ள் அனுமதி பெறாது உள் வருதே !!

அதனாலே 
ஓம் என்ற ஒரு சொல் சொல்லி 
அடுத்த ஓம் சொலலும் முன்னால்
சரவண பவ என்று சொல்லு.
சிந்தையில் அந்த சரவணன்
பால் மணம் மாறா
பால சுப்பிரமணியன் 
பளிங்கு போல் நெஞ்ச்த்தில் 
பரவி நிற்கட்டும்

ஓம் சரவண பவ !!

 மந்திரம் என்றால் என்ன ?
கொஞ்சம் சீர்யஸான விஷயம் தான்

பகவான் கீதைலே சொல்றார்.
மந்திரங்களிலே நான் காயத்ரி

அந்த காயத்ரி மந்திரத்தோடு தான் நீங்க்
இந்த பதிவினை துவங்கியிருக்கிறீர்கள்

மந்த்ரா என்ற வடமொழிச்சொல்லை
வகுத்துப்பார்த்தால், விகரஹ சமாஸம் 
என்று சொல்வார்கள் அந்த ப்ராஸஸை.

மனதினால் அறிந்துகொள்ளக்கூடியது
மனசினால் க்ரஹித்துக்கொள்ளக்கூடியது
மனம் என்பது ஒரு திரை . அவ்வளவே.
ஐம்புலங்கள் மூலமாக என்ன நம்மால் க்ரஹித்துக்கொள்ளப்படுகிறதோ..
அது தான் மனத்திரையில் படிகிறது எனலாம்

மனதினால் புரிந்துகொள்ளக்கூடியது என்றால்,
அது பார்க்கப்படுகிற வ்ஸ்துவோ, கேட்கப்படுகிற வஸ்துவோ,
உணரப்படுகிற வஸ்துவோ, நுகரப்படுகிற வஸ்துவோ,
ருசிக்கப்படுகிற வஸ்துவோ, அது எதுவோ 

மந்திரமாவது நீறு ...( பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது, நுகரப்படுகிறது, ருசிக்கப்படுகிறது, ஏன் அதை உச்சரிக்கையில் கேட்கப்படுகிறது)
அஞ்சு குணாதீசங்க்ளையும் அடக்கியதால், நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியை, நீறை, மந்திரம் என்று சொல்கிறோம்


அந்த பிரமன் என்று எதை சொல்கிறோமோ, அதை, அவனை
இந்த ஐம்புலங்களின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய
அளவுக்கு கன்வர்ட் பண்ணித் தருவது மந்திரம்

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் 
யூனிடி இன் டைவர்சிடி
நீ என்னென்ன மாதிரி வேணுமானாலும் 
மனசுக்குப் புடிச்ச மாதிரி புரிஞ்சுக்கற மாதிரி 
என்னை நினைத்துக்கொண்டாலும் 
நான் ஒண்ணு தான்

ஆகாசாத் பதிதம் தோயம் 
யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ
கேசவம் பிரதிகச்சதி

மந்த்ரம் அப்படின்னு சொல்றது 
ஒரு உபாயம். ஒரு கருவி
ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்

ரொம்ப பொடி எழுத்தா இருக்கு
வெள்ள எழுத்து வந்துடுத்து.
படிக்கணுமே ...அதுக்கு கண்ணாடி போட்டுக்கறோமே
அது போலத்தான்
மனசுக்குள்ளே இல்ல
இந்த ஆத்மாவுக்குள்ளே
அவனாக இருக்கறவனை
புரிஞ்ச்சுக்கறதுக்கு 
மந்த்ரம் ஒரு சாதனம்

ரமணர் ஞானி.
அவருக்கு மந்த்ரம் தேவையில்லை.

நம் எப்போ ரமணர் ஆகிறது !
அதுவரைக்கும் மந்த்ர ஜபம் தேவைதான் அப்படின்னு தோண்றது.
இதெல்லாம் ஒரு இண்ட் ரொடக்ஷன்

போரடிச்சுதுன்னா
டெலிட் பண்ணிடுங்க்..

மந்திரத்தை இல்ல,
என்னை.

நல்ல பதிவு.என்னுள் மாற்றமும் ஏற்படவில்லை என்று சொன்னது நல்ல விஷயம். நிறைய பேர் அடடா அது தெரியுது இது தெரியுது என்று புருடா விட்டு மேற்கொண்டு தொடரமுடியாமல் போவார்கள். அதற்கு கேள்விகளோடு இருப்பது நல்லது.

மந்திர ஜெபம் என்பது மிக மிக எளிமையான ஒன்று.ஆனால் இதற்கு தேவை விடாமுயற்சி.சரியான வார்த்தை சிரத்தைதான்.

தொடர்ந்து சொல்லும்போது கடைசியில் (பல வருடங்களுக்குப் பிறகு) அது ஒரு வகையான பித்து நிலையில்-மற்றவர் பார்வையில் பைத்தியம் என்றும் சொல்லலாம்-கொண்டு விடும்.

இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் பார்க்கும்,தொடும், கேட்கும் (ஆம்...கேட்பது கூட) எல்லாமே ஒளி வடிவத்தில் போய் கடைசியில் மந்திர ஜெபம் தானாகவே நின்றுவிடும். அப்போது ரமணர் மற்றும் ஞானிகளுக்கு நடந்தது நிகழும் என்பதே இதன் இயங்கும முறை.

இதற்கு பதிலாய் ஏதாவது கடவுளின் பெயரை சொன்னால் அந்த உருவமே எல்லாமாய் மாறி தெரியும,கேட்கும்.

ஆனால் தேவை விடாப்பிடியாய் நிதானமாய் சொல்லிக் 
கொண்டே இருப்பது

சிலர்  தெளிய வைக்க முயன்றிருக்கிறார்கள்என்று தெரிகிறது ஆனல் தெளிவு கிடைத்ததா  சந்தேகமே மனதினாலும் அறிவினாலும் எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை  என் பதிவு ஒன்றுக்கு  வந்த பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது  ஏதவது சர்ச்சைக்கு உரிய பதிவு போட வேண்டியது  அதை வைத்தே  இரண்டுநாட்களோட்டி விடுவீர்கள் இப்படியும் என்னைப் பற்றிய புரிதலுண்டு  


  

34 comments:

 1. நல்ல பதிவு. மந்திரங்கள் பற்றிய பின்னூட்டங்கள் நன்று.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டங்கள் நன்று அனால் மந்திரம் என்பது என்ன என்றுதான் யாரும் சொல்ல வில்லை சுற்றி வளைத்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்

   Delete
 2. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மந்திரஜபம் என்பது இன்னும் விளங்க வில்லை கடவுளி திருநாமங்களா

   Delete
 3. கண் தெரியாத...

  காது கேளாத...

  படிக்கவே தெரியாத...

  இன்னும் பல மந்திரக்காரர்களுக்கு மந்திரம் உண்டா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்...!

  ReplyDelete
  Replies
  1. யொசித்து முடிவு க்சண்டபின் எனக்கும் தெளிவாக்குங்கள்

   Delete
 4. பின்னூட்டங்கள் நன்றாக இருக்கின்றன. நாம் அடைய நினைக்கும் இலக்கை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்படி நினைத்தால் நமக்கு அதை அடையும் சக்தி மனதிற்குக் கிடைத்து அடைய வைக்கும் என்று சொல்லப்படுவதுண்டு இல்லையா குறிப்பா குழந்தைகளுக்கு...அது போலத்தான் என்று என் சிற்றறிவுக்கு எட்டியது..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அடைய நினைக்கும் இலக்கை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்அப்போது மந்திரம் என்பதுதான் எது

   Delete
 5. இப்பதிவோடு மனதில் இருந்தவைகளையும் வெளிப்படையாக கொட்டி விட்டீர்கள் ஐயா.

  நமது எண்ணங்கள் அனைத்தும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சற்று கடினமான விடயமே...

  என்னைப் பொருத்தவரை நான் எனது கொள்கையில் நிற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. /நமது எண்ணங்கள் அனைத்தும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சற்று கடினமான விடயமே.. ஆனால் பதிவில் கேட்ட கேள்விக்கு விடைதான் என்ன

   Delete
 6. நல்ல பகிர்வு....

  கில்லர்ஜி சொன்னது தான் எனக்கும் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. கேள்வி சிம்பிள் பதில் தான் தெரிய வில்லை தெரிந்ததுபோல் அனுமானிக்கவும் முடியவில்லை நேராக கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறலாம் இல்லை யென்றால் தெரியவில்லை என்று நேர்மையாகக் கூறலாம் சுற்றி வளைக்க வேண்டுமா

   Delete
 7. பரதத்தை நான் தவம் என்பேன்.முத்திரை ஜதி பாவம் என ஒவ்வொன்றிலும் முழுக்க கவனமாய் இருக்க நேருகையில் வேறு சிந்தனைகள் இடையில் வர வாய்ப் பில்லை மனம் ஒன்றில் நிலைப்பட்டுப் போகிறது.அதே போல்தான் மந்திரத்தை மிகச் சரியாக ஜபிக்க வேண்டும் எனில் தொனி உச்சரிப்பு எண்ணிக்கை பாவம் இவற்றில்அதீத கவனமாய் இருக்க வேண்டியிருப்பதால் மனம் வேறு சிந்தனைக்கு தடம் மாறாது ஒருமித்து இருக்க ஏதுவாகிறது.மனம் ஏன் ஒருமித்து இருக்கவேண்டும் என கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. /மந்திரத்தை மிகச் சரியாக ஜபிக்க வேண்டும் எனில் தொனி உச்சரிப்பு எண்ணிக்கை பாவம் இவற்றில்அதீத கவனமாய் இருக்க வேண்டி இருப்பதால் ...../அந்த மந்திரம் என்பது என்ன என்பதுதானே கேள்வியே

   Delete
 8. பரதத்தை நான் தவம் என்பேன்.முத்திரை ஜதி பாவம் என ஒவ்வொன்றிலும் முழுக்க கவனமாய் இருக்க நேருகையில் வேறு சிந்தனைகள் இடையில் வர வாய்ப் பில்லை மனம் ஒன்றில் நிலைப்பட்டுப் போகிறது.அதே போல்தான் மந்திரத்தை மிகச் சரியாக ஜபிக்க வேண்டும் எனில் தொனி உச்சரிப்பு எண்ணிக்கை பாவம் இவற்றில்அதீத கவனமாய் இருக்க வேண்டியிருப்பதால் மனம் வேறு சிந்தனைக்கு தடம் மாறாது ஒருமித்து இருக்க ஏதுவாகிறது.மனம் ஏன் ஒருமித்து இருக்கவேண்டும் என கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்க வேண்டும் ஐயா இன்னும் க்லாரிடி இல்லை

   Delete
 9. ஒரு கவிதையில் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை எனச் சொல்லியிருந்தேன்.அதைப்போலவே மந்திரம் என்பது ஐம்புலன்களையும் ஒரு புள்ளியில் நிலைக்கச் செய்வதற்கான ஒரு சூத்திரம்.நீங்கள் மந்திரத்தை ஒப்பிப்பவர்களுக்கும் ஜெபிப்பவர்களுக்கு இடையே ஆன வித்தியாசத்தை உணர்கையில் மந்திரத்தையும் உணர முடியும் (அறிய அல்ல)

  ReplyDelete
  Replies
  1. ஐம்புலன்களையும் ஒருபுள்ளியில் நிலைக்கச் செய்வதுதியானம் என்றுபுரிந்துகொண்டிருக்கிறேன் எனது 15 -16 வயதுகளில் நீலகிரியில் விடியற்காலை தண்ணீரில் குளிது ஓரிடத்தில் அமர்ந்து முடிந்தவரை மனதை கட்டுப்படுத்ட்க்ஹி ஓம் ஓம் என்றுகூறிக் கொள்வேன் அதை ஜபித்தேனா ஒப்பித்தேனா தெரியாது ஆனால் அந்தப் பரிட்சை என்னுள் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை நீங்கள் சொல்வது போல் ஓம் என்பதை மந்திரம் எனக் கொள்ளலாமாஒரு வேளை நான் மந்திரத்தழி ஒப்பித்துக் கொண்டிருந்தேன் போல இருந்தாலும் லும் மந்திரமென்பது யாது என்னும் என் கேள்வியின் பதிலுக்கு அருகிலாவது வந்து விட்டேனா மற்றபடி பல இடங்களில் மந்திரமாகக் கருதப் படுவது இறைவனின் நாமங்கள் தானே சுட்டியில் இருந்த பதிவைப் படித்தீர்களா

   Delete
 10. ஒரு கவிதையில் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை எனச் சொல்லியிருந்தேன்.அதைப்போலவே மந்திரம் என்பது ஐம்புலன்களையும் ஒரு புள்ளியில் நிலைக்கச் செய்வதற்கான ஒரு சூத்திரம்.நீங்கள் மந்திரத்தை ஒப்பிப்பவர்களுக்கும் ஜெபிப்பவர்களுக்கு இடையே ஆன வித்தியாசத்தை உணர்கையில் மந்திரத்தையும் உணர முடியும் (அறிய அல்ல)

  ReplyDelete
 11. //நான் வலைத்தளத்தில் எழுதத் தொடங்கி ஆகிறது பத்தாண்டுகள் //

  கணக்கு தப்பா வருதே...!

  பின்னூட்டங்கள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள்சரி கணக்கு தப்பாகத்தானிருக்கிறது எட்டாஅண்டுகள் என்று இருந்திருக்க வேண்டும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஸ்ரீ

   Delete
 12. // இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் //

  இவ்வளவு நாள் ஒலியைப் பற்றியது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்...

  ஒளியில் ஏதாவது புதிய மந்திரம் தென்படுகிறதா என்று பார்க்கிறேன்... நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மந்திரமென்பது ஒலி பற்றியது என்ற எண்ணம் ஒளிபற்றியது என்றால் ஆதிமுதல் தொடங்கவேண்டும்

   Delete
 13. // ரமணர் மற்றும் ஞானிகளுக்கு நடந்தது நிகழும் என்பதே இதன் இயங்கும் முறை... //

  இந்த இயங்கும் முறையை அறிய முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் சொல்லுங்கள் ப்ளீஸ்

   Delete
 14. மந்திரம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக உள்ளதே ஐயா?

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்டம் பாருங்கள்பயம் கூடலாம் தெளியலாம்

   Delete
 15. 1. Copy from post :

  // இந்த மந்திரம் ஒளியைப் பற்றியதால் பார்க்கும்,தொடும், கேட்கும் (ஆம்...கேட்பது கூட) எல்லாமே ஒளி வடிவத்தில் //

  2. Copy from your reply comment (mysekf)
  // எனக்கு மந்திரமென்பது ஒலி பற்றியது என்ற எண்ணம் ஒளிபற்றியது என்றால் ஆதிமுதல் தொடங்கவேண்டும் //

  3. Copy from your reply comment (Ramani S)

  // மன்னிக்க வேண்டும் ஐயா இன்னும் க்லாரிடி இல்லை //

  ReplyDelete
  Replies
  1. தொழில் நுட்பத்தில் நான் மிகவும் பின் தங்கியவன் எளிதாக்கக் கூடாதா நன்றி

   Delete
 16. * “16, I am kratu, I am yajna, I am svadha, Iam aushadha, I AM MANTRA, Myself the butter, Iam fire, I the act of offering.
  *
  * ”
  *
  * Excerpt From: “Bhagavad-Gita with the Commentary of Sri Shankaracharya, translated to English by Alladi Mahadeva Sastri.” iBooks. 
 இவ் விளக்கம் தொளிவடைய உதவுமா ஐயா?

  ReplyDelete
  Replies
  1. தெளிவடைய என வாசிக்கவும் ஐயா.

   Delete
  2. தர்மலிங்கம் ராஜ கோபாலன் முதல் வருகை(?)க்கு நன்றி ஐயா பகவத் கீதையை தமிழ்ல் எழுதி இருக்கிறேன்நீங்கள் குறிப்பிட்ட அத்தியாயம் இதுவா பாருங்கள்https://gmbat1649.blogspot.com/2014/10/10.html நானே மந்திரம் என்று கிருஷ்ணன் சொன்னதால் மந்திரம் எனும்சொல்லை எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ள முடியுமா பூஜைகளில் சொல்லப்படுபவை மண்டிரங்கள் அல்லவா ஒருவர் மந்திரமாவது நீறு என்கிறார் காயத்த்ரி மந்திரம்மே பிரதானம் என்று கேட்டு வளர்ந்தவன் நான் கடவுளின் நாமங்களே மந்திரம் என்றும்சொல்லப்பட்டு இருக்கிறது ஆக மந்திரம் என்னும்சொல்லுக்கு அவரவர் விருப்பப்படிபொருள் கொள்ளலாமா

   Delete
 17. தங்களுடைய கீதைப் பதிவு உபதேசம் 9 பிரிவு 16இல் உள்ள மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டவையே ஐயா. மந்திரங்களைப் பற்றிய அரிச்சுவடைக்கூட‌ நான் அறிந்தவனில்லை . படித்ததில் உள்ள கருத்தையே பின்னூட்டமிட்டேன். மந்திரங்களை தொல்காப்பியனார் "மறைமொழி" எனக் கூறியாதாகவும் கற்ற நினைவு உள்ளது ஐயா.

  ReplyDelete
 18. ஐயா வணக்கம் நான் அனுப்பி இருந்த சுட்டி கீதையின் 18 அத்தியாயங்களுள் 10 வது அத்தியாயம் விபூதி யோகம் சந்தங்களில் நன் காயத்த்ரி எறுதான் சொல்லி இருக்கிறதே தவிர மந்திரம் என்றுசொல்லப்பட வில்லை நிங்கள் சொல்லி இருக்கும் கீதைப்பதிவு உபதேசம் 9 பிரிவு பத்து நான் படிக்காதது மந்திரங்க்ள் என்று சொல்கிறோம் அப்படியானதுஎன்ன என்னும் கேள்வியே பதிவு நேரம்கிடைகும்போது என்பழைய பதிவுகளையும் பாருங்கள் நன்றி

  ReplyDelete