மீண்டும் சபரிமலை
-------------------------------
ஏதாவது சர்ச்சையைக்
கிளப்பி விட வேண்டியது பதிவு எழுதி அதில்குளிர் காய வேண்டியதுஎன்று என்னைப் பற்றிய
எண்ணங்கள் இருந்தாலும் சிலபுதிய செய்திகள் சர்ச்சையைக் கிளப்பலாமென்றுதெரிந்தாலும்
அது பற்றி பதிவிடாமல் இருக்க முடியவில்லை ஐயப்பனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கிறொம் பந்தள ராஜாவின் குமாரன் என்றுதான் அதிகமாக அறியப்படுகிறார் ஆனால் முற்றிலும்வேறான கதையைக் கேள்விப்பட்டேன்/
படித்தேன் சபரிமலை மலையராயன் என்னு ம்பழங்குடி
மக்களுக்குச் சொந்தமானதாம் சபரி மலையும் கரிமலையும்
20ம் நூற்றாண்டின் முன்பாதிவரை மலயராயன் குடிகளின் பொறுப்பிலிருந்ததாம் சபரிமலையின் முதல் பூசாரி
கரிமல அரயன் என்பவராம் அவரது பெயர்
படினெட்டுபடிகளில் முதல் படியில் செதுக்கப்பட்டுஇருக்கிறதாம்
ஐயப்பனின் பெற்றோர் கந்தன் கருத்தம்மா என்பதாம்
அவர்களது வாழ்வில் நடந்த ஏதோ காரணங்களே 41 நாள் விரதத்தின்மூல காரணமாம் 18 படிகள்சபரிமலையில் இருக்கும் 18 குன்றுகளை குறிப்பனவாம்
தற்போது ஹெரிடிடரி
பூசாரிகளாக இருக்கும் தாழமொன் மடத்தைச் சார்ந்தவர்கள் பழங்குடி மலயராயனைச் சேர்ந்தவரை
விரட்டி அவர்களிடமிருந்து சபரி மலையும் கோவிலும் பிராமணர்களால் பறிக்கப்பட்டு அவர்கள்சம்பிராதயங்களையே மாற்றப்பட்டதாம் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு ஏறறும்
உரிமையும் பறிக்கப்பட்டதாம்
ஐயப்பன் என்னும்பெயரே
ஹிந்துகளின் வழக்கத்துக்கு மாறானதாம் பழங்குடியினரின் தலைவன் பெயரே ஐயப்பன் ஐயனார் என்று குறிக்கப்பட்டு பூஜிக்கபட்டதாம் முந்தைய மலயராயன்குடியினர் வர்ண ஜாதிகளுக்கு உட்படாதவராம் அவர்ண குடிகளுக்கு பூஜா முறைகளென்று எதுவும்கிடையாதாம் பூஜைகளில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமிலையாம் அந்தக்கால கேரளத்தில் கோவில்களென்று அறியப்படவில்லையாம் காவுகள் என்றே பூஜா இடங்கள்கூறப்பட்டதாம் 18 19
நூற்றாண்டுகள் வாக்கிலேயே கோவில்கள் தோன்றி
இருக்க்சக் கூடுமாம் இப்போது வழக்கத்திலிருக்கு
கட்டுப்பாடுகள் எதுவுமில்லையாம்
இதைஎல்லாம் படிக்கும் போது பிராமணர்களால் மற்ற குடிகள் மீதுதிணிக்கப்பட்ட
மதமே ஹிந்து மதமென்னும் பெயரில் இயங்குவதாகப் படித்ததுநினைவுக்கு வருகிறது பிராம்மணீயமே
ஹிந்து மதமாக மாறி விட்டது என்றும் சொல்கிறார்கள்
மலய ராயன்
குடியினர் உச்ச நீதி மன்றத்தை அவர்களுரிமையை
மீட்கக் கோரி அணுகப்போகின்றனராம்
இந்தப் பதிவு
எத்தனை பேரின் சிற்குகளை சிலுப்பப்
போகிறதோ இவைஎல்லாம்நான் அண்மையில் படித்து
அறிந்தது இத வெராசிடிக்கு இணையத்தில் தேடி பார்க்கலாம் கிடைக்கும்
( நான் அக்னி ஹோத்ரம் தத்தாசாரியரின் சில எழுத்துகளையும் த ஹிண்டு பத்திரிகையில் கண்ட ஒரு ஆர்டிகிளிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறேன்)
( நான் அக்னி ஹோத்ரம் தத்தாசாரியரின் சில எழுத்துகளையும் த ஹிண்டு பத்திரிகையில் கண்ட ஒரு ஆர்டிகிளிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறேன்)
தமிழ்நாட்டில் முருகனைக் குறித்தும் இவ்வாறு புதிய கதைகள் இப்போது உலா வருகின்றன.
பதிலளிநீக்குஇயற்கைக்கு மாறாக ஒரு ஆணும் ஆணும் இணைந்து உருவான ஐயப்பன் கதையை நம்புவோம் ஏனென்றால் நாம்மனதளவ்ல் ஃபண்டசியை நம்பும் குழந்தைகள் போன்றவர்கள் பதிவில் சொல்லி இருப்பது நடந்திருக்கக் கூடியதன் சாத்தியக் கூறுகள் அதிகம் அவற்றைக் கதைகள் என்று ஒதுக்கி விடுவோம் முருகன் கதைகளை இதுவரைபடித்ததில்லை
பதிலளிநீக்குஓஹோ...! சரிங்க ஐயா...
பதிலளிநீக்குஓக்கே நன்றி சார்
நீக்குஇப்படி முரண்பட்ட கதைகள் பலரால் தினிக்கப்படும்போதுதான் மதங்கள் சிதைக்கப்படுகிறதோ என்று எனக்கு தோன்றுகிறது ஐயா.
பதிலளிநீக்குமுரண்பட்ட கதைகளில் இருந்து நாமெடுத்துக் கொள்வதைப் பொறுத்தது இதையெல்லாம் எதிர்பார்த்தேன்ஒப்புக் கொள்வது சிரமமாக இருக்கலாம் ஆனால் இப்படியும் இருக்கிறது என்பதை தெரிவிக்கவே பதிவாக எழுதினேன்
நீக்கு//இயற்கைக்கு மாறாக ஒரு ஆணும் ஆணும் இணைந்து உருவான ஐயப்பன் கதையை நம்புவோம்./// மறுபடி போய் ஐயப்பன் உருவான வரலாறைப் படிங்க ஐயா! மஹாவிஷ்ணு "மோகினி"
பதிலளிநீக்குஎன்னும் பெண்ணாக அவதாரம் எடுத்தப்போத் தான் ஐயப்பன் உருவானான் என்று சொல்லப்படுகிறது. மஹாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் என எங்கும் சொல்லப்படவில்லை. அதோடு இல்லாமல் நாமே ஒரு பிறவியில் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்தால் இன்னொரு பிறவியில் வேறொரு ஜன்மமாகத் தான் பிறக்கிறோம். அந்த மாதிரிப்பாருங்களேன்! ஏன் கொச்சையான பொருளைத் தூக்கிக் கொண்டு இருக்கணும்? தெளிவான சிந்தனையுடன் இதைப் பார்த்தால் தவறாகவே தோன்றாது!
அம்பிகையும் விஷ்ணுவும் ஒரே அம்சமே என்பது எத்தனை பேருக்குப் புரியும்? தன் உடலில் பாதியை அம்பிகைக்குக் கொடுத்த ஈசன் அதே போல் பாதியை மஹாவிஷ்ணுவுக்கும் கொடுத்திருக்கிறான். அப்போ சங்கரநாராயணன்! எல்லாம் ஒன்று எனவும் சக்திகள் தனித்தனியாகச் சொல்லப்படும்போது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதையும் புரிந்து கொண்டால் குழப்பமே வராது! மஹாவிஷ்ணு சக்திமயம்! ஆகவே நாராயணனாகக் காட்சி அளித்தாலும் நாராயணியாகக் காட்சி அளித்தாலும் அனைத்தும் ஒருவரையே சுட்டும். நம் வசதிக்காகவும் பாமர ஜனங்களின் புரிதலுக்காகவும் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு அவதாரங்கள் என சொல்லப்படுகிறது.
பதிலளிநீக்குஇவையே ஃபண்டசி கதைகள் என்கிறேன்
நீக்குநெகடிவ் சக்தியும் பாசிடிவ் சக்தியும் இணைவதைக்கூட ஃபான்டசி என்பீர்களோ? சற்று அந்தக் கோணத்திலும் சிந்தியுங்கள். இவை எல்லாம் தத்துவரீதியாகப்பார்க்கப்பட வேண்டியவை! மனித வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடாதவை!
நீக்குபாவம் நான் ஒரு மனிதப் பிறவிதானே
நீக்குஅதனால் தான் நம்மோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு பார்க்கக் கூடாது என்றேன்! :)))))) மனித வாழ்க்கையில் இருப்பது போன்ற நிகழ்வுகளை இங்கேயும் பொருத்திப் பார்க்கக் கூடாது!
நீக்குநான் துறை போகியவனில்லையே ஆனால் எனக்கு இந்த மாதிரி ஃபண்டசிகள் பிடிக்கும் வெரி இண்டெரெஸ்டிங்
நீக்குபுதிய தகவல். முதல் முறையாக கேள்விப்படுகிறேன். இதைப் போலவே வாவர் சாமி என்பது இஸ்லாமியர் என்பது நடுவில் கிளப்பிடப்பட்ட சங்கதி என்றும் கூட முகநூலில் ஒரு தகவல் கொஞ்ச நாட்களக்கு முன் ஒரு தகவல் வந்தது.
பதிலளிநீக்குசில நேரங்களில் கணினியில் மேயும்போது கிடைத்த தகவல்கள் இன்னும் திடுக்கிடும்பகுதிகஎல்லாம் இருக்கிறதுஅவற்றை நான் தெய்விகமாக அணுகுவதில்லை என்சிந்தனைக்கு உட்படுத்துகிறேன்
நீக்குபுராணங்களை மிகவும் ஆராயக் கூடாது என்று என் அம்மா சொல்வார்கள்.
பதிலளிநீக்குஎதையும்கேள்வி கேட்டு தெரிந்துகொள் என்பதுதான் என்கொள்கை
பதிலளிநீக்குஒவ்வொன்றும் விவாதமாகிக் கொண்டிருக்கிறது
பதிலளிநீக்குவிவாதமெல்லாமில்லை சார் சிலபடித்தவை பகரப் படும்போது விவாதமாகப் பார்க்கப்படுகிறது
பதிலளிநீக்குஇணைய வெளியில் படிக்கும் அத்தனை விஷயங்களும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பதிலளிநீக்குநிறைய விஷயங்கள் இப்படி பரப்புவதற்கென்றே இருக்கிறார்கள் சிலர். என்ன சொல்ல.
எல்லா செய்திகளும் இணைய வெளியில் வந்ததல்ல சில நாட்களுக்கு முன் த ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கையில் வந்தச்செய்தியே ஆதாரம் சிங்கிள் ஃபைல் என்னும் கட்டத்தில் வந்தது உண்மையாயிருக்கும் வாய்ப்பு அதிகம்போல் இருந்தது பதிவாக்கி விட்டேன் மலை வாழ்மக்களும் உச்ச நீதி மன்றத்தை அணுகுவார்கள்போல் இருந்தது
பதிலளிநீக்குஅனைத்தும் நம்பிக்கை அடிப்படையில் அமைவது ஐயா. நம்மவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையைக் கட்டிவிட்டு, அப்போதுதான் நம்புவோம் என்பதற்காக, பல்வேறான செயல்களில் ஈடுபடுகின்றனர் ஐயா.
பதிலளிநீக்குஎது கதை எது உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்துகொள்ளலாமே
பதிலளிநீக்கு