வெள்ளி, 23 நவம்பர், 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே



                                    நெஞ்சு பொறுக்கு தில்லையே
                                     ----------------------------------------------
ஜவஹர்லால் நேரு 
  அவர் உம் என்று தும்மினால் செய்தி  கையை அசைத்தால்  செய்தி என்று  அரசில் இருப்போரின் புகழ்பாடும் நம் தேசிய்
ஊடகங்கள்மனிதரில் மாணிக்கம்மான  தலைவர்களில் முக்கிய மான நேருவின்  பிற்ந்தநாள் அன்று அவர்பற்றிய செய்திகளை  இருட்டடிப்பு செய்ததுஅறிந்து நெஞ்சுபொறுக்க வில்லை ஒரு வேளை அப்படி உத்தரவு வந்திருக்கலாம்  நவீன இந்தியாவின்  கோவில்களென்று புகழ்ந்துரைக்கப்படும்   தொழிற்கூடங்களுக்கு   வித்திட்டவர்  அவர் முயற்சி செய்து நிறுவிய தொழிற்சாலைகள் அவர் பெருமையை பறை சாற்றும்நவீன கோவில்கள்  இந்தியாவில் அணுபற்றி ஆராய்ச்சி செய்ய நிறுவிய கூடங்கள் இன்று சந்திரனுக்கே கோள் அனுப்பும் விதத்தில்  வளர்ந்திருக்கின்றன அப்படிப்பட்ட தலைவரின் பிறந்தநாளைப் புறக்கணிக்கும் திட்டமிட்ட சதியோ அவரை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாதது கோடிக்கணக்கில் பண்ம்செலவு செய்து  படேலுக்கு சிலை நிறுவி  அவரை நேருவின்  எதிரி என்று நாம் நினைக்க வைக்க எல்லாம்செய்கிறார்கள்  மதம் என்றும் இனம் என்றும் பேதம்காட்டி ஜனங்களை ஒருவருகொருவர் எதிரியாகநினைக்க வைக்கிறார்கள்  அரசுக்கு தலைஆட்டாவிட்டால்விளம்பரம்கிடைக்காது என்னும் அச்சமெ நம் ஊடகங்களுக்கு என்று தோன்றுகிறது ஊடகச் செய்திகளை  நம்பமுடியவில்லை ஆங்கிலத்தில் perceptionn  என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது நரி இடம்போனால் என்னவலம் போனாலென்னா நம்மைப் பிடுங்காது இருந்தால் சரி என்றே நாம் நினைக்கிறோம் ஆனால் ஊடகச் செய்திகளை நிஜம் என்றுநம்புவோம்   ஊடகங்கள் நமது அபிப்பிராயத்தைச் செதுக்குகின்றன என்பதைஅறியாமல் இருக்கிறோம் வரும்  செய்திகளில் எது உண்மை எதுஅல்லாதது என்பது பற்றி நமக்குத் தெரியாது  இவர் சொல்கிறார் அவர்சொல்கிறார்  என்போமே தவிர எதுசரிஎன்பது நமகுத்தெரியாது  our perceptions  guide us   நாமும்  கண் தெரியாதவர் யானையை விவரிக்கமுயல்வதுபோல் செயல் படுவோம் நெஞ்சு பொறுக்க வில்லையே நம்மை உடனே பாதிக்காத விஷயங்களில் நம் அக்கறை குறைகிறது 

25 கருத்துகள்:

  1. இப்படி ஒரு எதிர் அபிப்ராயம் இருப்பதாகக் கிளப்பி விடுவதும் ஒருவகை ஊடக தந்திரமே!! எனக்கென்னவோ அப்படி எல்லாம் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய ஊடகங்கள் நினைத்தால் எதையும் மறைக்கமுடியும், அதேநேரம் எதையும் புனைப்படுத்தி மிகைப்படுத்தி பொய்யை உண்மையாகவே பெரிதாக காண்பிக்கவும் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன இந்தியாவின் நிர்மாணியைகண்டுகொள்ளாமல் இருட்டடிப்பு செய்ததுவருத்தம் தந்தது

      நீக்கு
  3. கிடைக்கும் பணத்திற்கேற்ப செய்தி... அவ்வளவே...

    மற்றபடி மெய்ப்பொருள் காண்பது அறிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பெர்செப்ஷன் மெய்ப்பொருள் காண விடுவத்ல்லை சார்

      நீக்கு
  4. பதில்கள்
    1. தனிப்பட்ட முறையில் பலரது போற்றுதலுக்கும் உரித்தானவர்

      நீக்கு
  5. ஊடகங்கள் அவர்கள் கொள்கைக்கு ஏற்பதான் செய்தி வெளியிடுகிறது.

    இதுவரை வல்லபாய் படேல், நேதாஜி போன்ற தலைவர்களெல்லாம் இருட்டடிப்முச் செய்யப்பட்டனர். நேரு குடும்பம் மட்டும்தான் வெளிச்சத்தில். இப்போ காலச்சக்கரம் சுழல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பதுதான் கொள்கை போல் இருக்கிறது

      நீக்கு
  6. அரசியலைப் பொறுத்தவரை ஆளும் கட்சியினரின் சொல்தான் எப்பொழுதும் எடுபடும் என்பது நாம் அறிந்ததுதானே ஐயா?

    பதிலளிநீக்கு
  7. ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடந்தது குறித்துத் தொலைக்காட்சிகள் சொல்லிக் கொண்டு தான் இருந்தன. முகநூலிலும் அதிகம் காண முடிந்தது. மற்றபடி வழக்கம் போல் இது மோதி செய்த சதி! என்போருக்கு இப்படிச் சொன்னால் தான் திருப்தி வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிகளில் குழந்த்சைகள் தினாமாக சக்கலேட் கொடுத்திருப்பார்கள் மற்றபடி எந்த அஞ்சலியும் காணவில்லைஆளும் கட்சிஎன்றுதான் பொருள் கொள்ள வேண்டுகிறேன் ஒரு வேளை மோடிதான் ஆளுங்கட்சியின் பிரதிபலிப்போ

      நீக்கு
    2. இந்தியாவின் முதல் பிரதமர், நேரு மாமா(!) தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டார் என்பது இன்றைய "Deccan Herald" நாளிதழில் வெளியாகியுள்ளது. படித்து மகிழுங்கள்...!!

      "By education I'm an Englishman, by views an Internationalist, by culture a Muslim and a Hindu only by accident of birth.

      நீக்கு
    3. அவருக்கு தோனறிய வித்ததில் அடையாளம்

      நீக்கு
  8. ஊடக அரசியல் கூடிபோன காலம் இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சிகள்லும் மற்ற ஊடகங்களிலும் வரும் செய்திகள் நம்பிக்கை தருவதாயில்லை

      நீக்கு
  9. பண்டித நேரு மீதான திடீர் கரிசனத்திற்குக் காரணம் என்ன?

    நேரு என்றாலே உங்களுக்கு எம்.ஓ. மத்தாயும் அவர் நேரு பற்றி எழுதியவைகளும் தானே உங்கள் நினைவுக்கு வரும்?..

    பதிலளிநீக்கு
  10. திடீர்கரிசனம் எப்படி யூகித்தீர்கள் உண்மையில் எம் ஓ மத்தாயுமவர் நேருபற்றி எழுதியதுஎன்னவென்றே தெரியாது இதைத்தான் நாம் guided by perceftiouns என்கிறேன் இந்தைய வந்தாகி விட்டதாநீண்ட இடைவெள்க்குப்பின் பின்னூட்டம் நன்றி

    பதிலளிநீக்கு
  11. corrections----/ perceptions--/ இந்தியா-/-இடைவெளிக்குப்பின்/ ---எம் ஓ மத்தாயும்/ அவர்/..... நிறைய பிழைகள் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  12. இன்றைய உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத் தக்கதாயும் துணிச்சலாயும் நம் தேசத்திற்கு உலக அரங்கில் பெருமை தெடித் தருவதாகவும் இருக்கிறது.

    பதிவு எழுத அருமையான காலத்திற்கு தேவையான டாபிக்.
    முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் ஏற்காததை உண்மைக்கு புறம்பானது என்று நினைக்கும் பொருளில் எழுத இயலாது

      நீக்கு
  13. வேதனைதான்
    நாம் நினைவில் கொள்வோம்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேருவின் செயல்களை இருட்டடிப்பு செய்ய இயலாது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு