வெள்ளி, 9 நவம்பர், 2018

ஒரு விளையாட்டும் சில புதிர்களும்


                                            ஒரு விளையாட்டும்  சிலபுதிர்களும்
                                             ---------------------------------------------------------
  சில பதிவுகளில் சில புதிர்கள்  காண்கிறேன் பொழுது போக்க ஒரு விளையாட்டும்  சில புதிர்களும் இப்பதிவில்  பொழுதுபோக்க என்றுதான்  சொல்லி இருக்கிறேன்
யாரையும் சோதித்துப்பார்க்க அல்ல
  ஒருவருடைய வயதைக் கண்டு பிடிக்க, அவரிடம் அவர் வயதை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள். அத்துடன் பத்தை கூட்டச் சொல்லுங்கள். வந்த விடையை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள்வந்த விடையுடன் அவருடைய மனைவியின் வயதை கூட்டச் சொல்லுங்கள்.. கிடைதத விடையில் இருந்து நூறைக் கழிக்கச் சொல்லுங்கள். கடைசியாகக் கிடைத்த விடையை கேளுங்கள். அதில் முத்ல் இரண்டு எண்கள் அவருடைய வயது. அடுத்த இரண்டு எண்கள் அவருடைய மனைவியின் வயது.
குழந்தைகள் சுவாரசியமாகக் கேட்பார்கள்
.
ஒரு விளையாட்டு ப்ளாக் மேஜிக்

 குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு BLACK MAJIC ஷோ..குறைந்தது மூன்று பேர் வேண்டும். ஒருவர் ஒரு அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை நினைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவரிடம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் கூற வேண்டும். இப்போது இரண்டாமவர் மூன்றாம் நபரை அந்தப் பொருளை அடையாளம் காண்பிக்க வைப்பார். அறையில் இருக்கும் பொருளின் பெயரைச் சொல்லி இதுவா இதா என்று கேட்டுக் கொண்டே வருவார். முதலாமவர் சொன்ன பொருளின் பெயரை குறிப்பிட்டுக் கேட்கும் முன் ஒரு கருப்பு நிறமுடைய பொருளைக் காட்டி இதுவா என்பார். இல்லை என்று பதில் வரும் அடுத்து முதலாம் நபர் குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி இதுவா என்று கேட்பார். ஆம் என்று பதில் வரும் பொருளை நினைத்துக் கொண்டவர் ஆச்சரியப் படுவார். இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு கருப்பு நிறப் பொருளுக்குப் பிறகு சரியான பொருள் காட்டப் படவேண்டும். இரண்டு குழந்தைகள் சேர்ந்து மற்றவரை வியப்பில் ஆழ்த்தலாம்
. சில எளிமையான கேள்விகள்.

1.) ஒரு பொருளை 16 அடி உயரத்தில் இருந்து போட்டால் அது தரையைத் தொட ஒரு செகண்ட் ஆகும். அதே பொருளை 64 அடி உயரத்தில் இருந்து போட்டால் தரையைத் தொட நான்கு செகண்டுகள் ஆகும். சரியா தவறா.,ஏன்.?

2) ஒரு பேக்கர்ஸ் டஜன் என்பது எவ்வளவு.?

3) ரெயில்வே தண்ட வாளங்களில் நேரோ கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 0.76 மீட்டர். ப்ராட் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 1.67 மீட்டர்.  மீட்டர் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி என்ன.?

4 ) எட்டு பேர் பதினாறு குழிகளை வெட்ட 32 தினங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.  நான்கு பேர் எட்டு குழிகளை வெட்ட எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.?

5 ) இதில் எந்த எண்ணில் ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப் பள்வும் சமமாக இருக்கிறது. ?
   a) 25   b)16    c)64    d)121

6 ) ஒரு பெரிய மரத்தை 12 அடி நீளங்களாக அறுக்கிறார்கள். ஒரு துண்டு அறுக்க ஒரு நிமிஷமாகிறது. 12 துண்டுகள் அறுக்க எவ்வளவு நேரமாகும்.?

7 ) எந்த எண்கள் தலை கீழாக நிறுத்தினாலும் ஒரு எண்ணாக இருக்கும். ?

8 ) ஒரு மைல் தூரத்தை நான்கு வினாடிக்குள் ஓடிய முதல் வீரர் யார்.?

9 ) முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் யார்.?

கேள்விகளுக்கான பதில்கள்
கே. 1.  பதில் .. தவறு. ஒரு பொருள் பூமியை நெருங்கும்போது அதன் வேகம் அதிகரிக்கும். ( A falling body naturally accelerates its velocity.)

கே. 2.  பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..

கே.3  பதில்.   ஒரு மீட்டர். 

கே.4.  பதில்.. 32 நாட்கள்.

கே.5 . பதில்..   16.

கே.6  பதில்    11  நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.

கே.7  பதில்.   0, 1, 6, 8, 9.

கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
             என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று 
             இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )

கே.9 பதில்.  டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க  மருத்துவர்



                           --------------      

24 கருத்துகள்:

  1. புதிர்களுக்கான பதிலைச் சொல்ல அவகாசம் கொடுத்துட்டுக் கமென்ட் மாடரேஷன் செய்து விட்டுப் பின்னர் பதில்களை வெளியிட்டிருக்கலாமோ? அப்போத் தான் வருகிறவங்களுக்கும் ஓர் ஆர்வம் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிர்களுக்கு சரியான பதில் சொன்னவர்களுக்கு, ஐயாவின் மறுமொழியை எப்படி இருக்கும்...?

      யோசித்து பாருங்கள் அம்மா...

      இதுவே சரி... யப்பா.....!

      நீக்கு
    2. @கீதா சாம்பசிவம் புதிர்கள் யாரையும் சோதிக்க அல்ல ரிஃப்ரெஷ்செய்த்துகொள்ளவே

      நீக்கு
    3. @ டிடி சரியான மறுமொழி கூறியவர்கள் தங்கள் முதுகில் ஒரு ஷோட்டுகொடுத்துக்கொள்ளவும் ஓக்கேயா சார்

      நீக்கு
  2. பதில்கள்
    1. பல பிஷயங்களைத்தெரிந்து கொள்கிறோம் எல்லாம் நினைவில் நிற்கிறதாரிஃப்ரெஷ் செய்துகொள்ளவே இப்புதிர்கள்

      நீக்கு
  3. பள்ளிக்காலத்தில் இவ்வாறு கேள்விகள் கேட்கப்படும்போது எங்களுக்கெல்லாம் தொடை நடுங்கும். எப்போது வகுப்பு முடியும் என்று நினைப்பு வரும். அந்த நினைவுகள் இப்போது உங்களின் புதிர்களைப் படித்தபோது மனதிற்கு வந்தன. Black Majic என்று உள்ளது, Black Magic என்றிருக்கவேண்டும் ஐயா. தகவலுக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்பவை மார்க் வாங்கமட்டுமல்ல நினைவிலிருத்தவும்தான் ஸ்பெல்லிங் பிழையை சுட்டியதற்கு நன்றி சார்

      நீக்கு
  4. நல்ல புதிர்கள் ஜி எம் பி சார்.. விடையை வெளியிட்டதும் நன்றுதான். ஒரு தினம் கொடுத்து வெளியிட்டாலும் நன்றுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையும் சோதிக்க புதிர் போடவில்லையே சரியாகச் சொன்னாலும் விடை தெரிந்துசோதிக்கும் ஆர்வமிருக்குமல்லவா

      நீக்கு

  5. //கே.6 பதில் 11 நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.///
    இந்த பதில் தவறு என்று நினைக்கிறேன். அந்த பன்னிரெண்டாவது துண்டு பன்னிரண்டு அடி நீளம் தான் இருக்கும் என்பது என்ன உறுதி. கேள்வி ஒரு மரத்தை தான் அறுக்கிறார்கள். 144 அடி உயரம் என்று குறிப்பிடப் படவில்லை.


    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12 வது துண்டு 12 அடி இருக்க வேண்டுமென்று சொல்ல வில் லையே இருந்தாலும் கேள்வி இன்னும் க்லியராக இருந்திருக்கலாம்

      நீக்கு
  6. விளையாட்டு ரசிக்க வைத்தது.
    புதிர் விடைகளை சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லி விட்டதால் விட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல நினைத்த விடைகள் சரியா என்றுபார்க்க ஆவல் இருந்திருக்குமே

      நீக்கு
  7. புதிர்கள் நன்றாக இருக்கிறது.
    உங்களுக்கு இதில் ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.
    பேர குழந்தைகளுடன் விளையாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிர்கள் எல்லாம் பொது வெளியில் உள்ளவைதனே ப்ளாக் மாஜிக் விளையாட சுவாரசியமாய் இருக்கும் அதுவும் சிறார்கள் மிகவும் விரும்புவார்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. புதிர்க்ள் நன்றாக இருக்கின்றன சார். குறித்துக் கொண்டுவிட்டோம்.

    துளசிதரன், கீதா

    கீதா: இங்கு எங்கள் தெருவில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்து விளையாட வைக்க எனக்கு உதவும்.

    துளசிதரன் : சார் நீங்க எஎங்கள் ப்ளாக் என்று நினைக்கிறேன் நான் எங்கு இருக்கிறேன் என்று கேடிடிருந்தீர்கள். நான் எங்கள் ஊரில் நிலம்பூரில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. black magic விளையாட சுவாரசியமாய் இருக்கும் நிலாம்புர் பாலக் காட்டில்தானே எங்கள் ப்லாகில் படித்ததும் சந்தேகம் வந்தது வேலை மாறி விட்டீர்களா

      நீக்கு
  9. அனைத்தும் சிறப்பு.

    சில புதிர்கள் ஏற்கனவே படித்தது என்றாலும் மீண்டும் படிக்க ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிர்கள் அநேகமாக பொது வெள்யில் இருப்பவையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. பதில்களை அடுத்த நாள் கொடுதிருக்கலாமோ? சிலர் மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழ்வார்கள், நீங்கள் சிந்திக்க வைத்து மகிழ்கிறீர்கள். நல்ல விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையும் சோதிக்கும் எண்ணம் இருக்கவில்லைஅவரவர்களே தெரிந்து கொள்ள பதிவிலேயே பதில்கள் ஜஸ்ட்தே கான் க்ராஸ் செக்

      நீக்கு