ஒரு விளையாட்டும் சிலபுதிர்களும்
---------------------------------------------------------
சில பதிவுகளில் சில புதிர்கள் காண்கிறேன் பொழுது போக்க ஒரு விளையாட்டும் சில புதிர்களும் இப்பதிவில் பொழுதுபோக்க என்றுதான் சொல்லி இருக்கிறேன்
யாரையும் சோதித்துப்பார்க்க அல்ல
ஒருவருடைய வயதைக் கண்டு
பிடிக்க, அவரிடம் அவர் வயதை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள். அத்துடன் பத்தை
கூட்டச் சொல்லுங்கள். வந்த விடையை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள்வந்த விடையுடன்
அவருடைய மனைவியின் வயதை கூட்டச் சொல்லுங்கள்.. கிடைதத விடையில் இருந்து நூறைக்
கழிக்கச் சொல்லுங்கள். கடைசியாகக் கிடைத்த விடையை கேளுங்கள். அதில் முத்ல் இரண்டு
எண்கள் அவருடைய வயது. அடுத்த இரண்டு எண்கள் அவருடைய மனைவியின் வயது.
குழந்தைகள் சுவாரசியமாகக் கேட்பார்கள்
.
.
ஒரு விளையாட்டு ப்ளாக் மேஜிக்
குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு BLACK
MAJIC ஷோ..குறைந்தது
மூன்று பேர் வேண்டும். ஒருவர் ஒரு அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை நினைத்துக்
கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவரிடம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் கூற வேண்டும்.
இப்போது இரண்டாமவர் மூன்றாம் நபரை அந்தப் பொருளை அடையாளம் காண்பிக்க வைப்பார்.
அறையில் இருக்கும் பொருளின் பெயரைச் சொல்லி இதுவா இதா என்று கேட்டுக் கொண்டே
வருவார். முதலாமவர் சொன்ன பொருளின் பெயரை குறிப்பிட்டுக் கேட்கும் முன் ஒரு
கருப்பு நிறமுடைய பொருளைக் காட்டி இதுவா என்பார். இல்லை என்று பதில் வரும் அடுத்து
முதலாம் நபர் குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி இதுவா என்று கேட்பார். ஆம் என்று
பதில் வரும் பொருளை நினைத்துக் கொண்டவர் ஆச்சரியப் படுவார். இதில் முக்கியம்
என்னவென்றால் ஒரு கருப்பு நிறப் பொருளுக்குப் பிறகு சரியான பொருள் காட்டப்
படவேண்டும். இரண்டு குழந்தைகள் சேர்ந்து மற்றவரை வியப்பில் ஆழ்த்தலாம்
. சில எளிமையான கேள்விகள்.
1.) ஒரு பொருளை 16 அடி உயரத்தில் இருந்து போட்டால் அது
தரையைத் தொட ஒரு செகண்ட் ஆகும். அதே பொருளை 64 அடி உயரத்தில் இருந்து போட்டால்
தரையைத் தொட நான்கு செகண்டுகள் ஆகும். சரியா தவறா.,ஏன்.?
2) ஒரு பேக்கர்ஸ் டஜன் என்பது எவ்வளவு.?
3) ரெயில்வே தண்ட வாளங்களில் நேரோ கேஜ் தண்டவாளங்களின்
இடைவெளி 0.76 மீட்டர். ப்ராட் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 1.67 மீட்டர். மீட்டர் கேஜ்
தண்டவாளங்களின் இடைவெளி என்ன.?
4 ) எட்டு பேர் பதினாறு குழிகளை வெட்ட 32 தினங்கள்
எடுத்துக் கொள்கிறார்கள். நான்கு பேர் எட்டு குழிகளை வெட்ட எவ்வளவு
நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.?
5 ) இதில் எந்த எண்ணில் ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப்
பள்வும் சமமாக இருக்கிறது. ?
a) 25 b)16 c)64 d)121
6 ) ஒரு பெரிய மரத்தை 12 அடி நீளங்களாக அறுக்கிறார்கள். ஒரு
துண்டு அறுக்க ஒரு நிமிஷமாகிறது. 12 துண்டுகள் அறுக்க எவ்வளவு நேரமாகும்.?
7 ) எந்த எண்கள் தலை கீழாக நிறுத்தினாலும் ஒரு எண்ணாக
இருக்கும். ?
8 ) ஒரு மைல் தூரத்தை நான்கு வினாடிக்குள் ஓடிய முதல் வீரர்
யார்.?
9 ) முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் யார்.?
கேள்விகளுக்கான பதில்கள்
கே. 1. பதில் .. தவறு. ஒரு பொருள் பூமியை நெருங்கும்போது அதன் வேகம்
அதிகரிக்கும். ( A falling body naturally accelerates its velocity.)
கே. 2. பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..
கே.3 பதில். ஒரு மீட்டர்.
கே.4. பதில்.. 32 நாட்கள்.
கே.5 . பதில்.. 16.
கே.6 பதில் 11 நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.
கே.7 பதில். 0, 1, 6, 8, 9.
கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று
இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )
கே.9 பதில். டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க மருத்துவர்
கே. 2. பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..
கே.3 பதில். ஒரு மீட்டர்.
கே.4. பதில்.. 32 நாட்கள்.
கே.5 . பதில்.. 16.
கே.6 பதில் 11 நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.
கே.7 பதில். 0, 1, 6, 8, 9.
கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று
இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )
கே.9 பதில். டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க மருத்துவர்