பயணங்கள் முடிவதில்லை
--------------------------------------------
ஏறத்தாழ எட்டு ஒன்பது பதிவுகள் தொடர் பயணம்
பற்றி எழுதி பதிவிட்டிருக்கும் வேளையில் இன்னும் ஒரு பதிவு பயணங்கள் முடிவதில்லை
என்னும் தலைப்பில் எழுதக் கோரி திரு தி தமிழ் இளங்கோ கேட்டிருந்தார் உண்மையிலேயே என் பயணங்கள் முடியவில்லை என்றே
தோன்றுகிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் இதில் நான் எழுதுவது கட்டுப்படுத்தப்
படுகிறது கேள்விகளுக்குப் பதில் என்னும்
முறையில் இருந்தாலும் என்னை அத்தனை
எளிதில் கட்டுப்படுத்த முடியுமா என் வழியில் தொடர் கட்டுரையைத் தொடர்கிறேன் பிறரால்
அழைக்கப் படாத முதியவன் என்னையும் அழைத்த திரு தி தமிழ் இளங்கோ சாருக்கு
நன்றி இனிகட்டுரைக்குப் போவோமா.?
1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இந்த 77 வயது
காலத்துக்குள் எத்தனையோ பயணங்கள் மேற்கொண்டாயிற்று. அவற்றில் முதல் ரயில் பயணம்
என்று கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என் மாமா ஒருவரின் திருமணம் கேரளா நம்மாரையில் நடந்தது நாங்கள் கோவையில் இருந்தோம் அப்போது என்
தந்தையின் சார்பாக என்னைத் திருமணத்துக்கு தனியே அனுப்பினார்கள் அது நான் தனியே
மேற்கொண்ட பயணம் என்பதால் நினைவுக்கு
வருகிறது எனக்கு சுமார் 11 வயதிருக்கும்
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
இதற்கு பதில் சொல்வது
சற்று தடுமாற்றம் ஏன் என்றால் அது பதிவின் நீளத்தைக் கூட்டிவிடும்
என் சின்ன அண்ணா காசி
ஹரித்வார் எல்லாம் செல்லலாமா என்று கேட்டார்
நானும் சரி என்று கூறி விட்டேன் நானும் என் மனைவியோடு அண்ணா அண்ணியையும் கூட்டிக் கொண்டு போகும்
வழியில் பெரிய அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்துக் கொண்டு பயணிக்கலாம் என்று
திட்டமிட்டோம் காசி ஹரித்வார் தவிர வட மாநிலப் பயணமாக்கலாமே என்றேன் சரி என்று அண்ணா
கூறினார். அது 2003-ம் ஆண்டுமுதலில் போகவேண்டிய இடங்கள் எத்தனை நாள் தங்குவது எந்த
ரயிலில் போவது என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொறுப்பை என்னிடமே விட்டார்கள் அகில இந்திய
ரயில்வே அட்டவணை ஒன்றை வாங்கினேன் அப்போது சர்க்குலர் பயணத்திட்டம் பற்றித்
தெரிந்தது அதன் படி நாம் போக வேண்டிய இடங்களையும்
தேதிகளையும் முதலிலேயே குறிப்பிட்டு
பயணச் சீட்டு வாங்கி ஒவ்வொரு ரயிலுக்கும் முன்
பதிவு செய்து கொண்டால் பயணம் சீராக அமையும் ஆனால் எல்லாவற்றையும் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும் இம்மாதிரி பயணச் சீட்டு வாங்கும் போது நாம் போனவழியில் மீண்டும் வரக் கூடாது என்
திட்டப்படி பயணம் சுமார் 22 நாட்கள். எல்லாவற்றையும் செய்து வந்தால் சின்ன அண்ணா அவரால்
பயணத்துக்கு வர இயலாது என்று கூறி விட்டார் வாங்கின டிக்கட்டுகளைக் கேன்சல்
செய்து எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் மீண்டும் டிக்கட்
வாங்கினேன் இந்த சர்க்குலர் பயணத்தில் ஒரு அனுகூலம் மொத்த தூரத்தையும் கணக்கிட்டு அதற்கான பணத்தை
மட்டுமே டெலெஸ்கோபிக் ரேட்டாக வசூலிக்கிறார்கள் மொத்த செலவில் கணிசமாகக் குறையும்
முதலில் பெங்களூரில்
இருந்து ஜெய்ப்பூர் அங்கிருந்து மதுரா
ஆக்ரா வாரணாசி அலஹாபாத் ஹரித்வார் டெல்லி
பெங்களூர் என்று திட்டமிட்டு ஒவ்வொரு ரயிலுக்கும்
முன் பதிவும் செய்து விட்டேன் எங்கள் பயண நிரலை என் பெரிய அண்ணாவுக்கும் தெரியப்படுத்த அவரும்
அதற்கேற்ப அவருக்கும் பெரிய அண்ணிக்கும் பயணச்
சீட்டை அந்தந்த நாட்களில் முன் பதிவு செய்துகொள்வதாகக் கூறினார் முன் பின் தெரியாத
இடங்களுக்கு மிகவும் கவனமாகத் திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் மறக்க முடியாதது
இதில் தங்குமிடங்களை போகும் போது ஆங்காங்கே பார்த்துக் கொண்டோம் இந்தப் பயணம் பற்றி என் பதிவுகளில் ஏற்கனவே எழுதி
இருக்கிறேன் இந்தப் பயணத்தின் போது
ஒட்டகவண்டி டோங்கா தொங்கு வண்டி (
WINCH) மெட்ரோ பயணம் என்று பலவிதப்
பயணங்களும் அடங்கும் ஆடம்பரமில்லாத எளிய பயணம்
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
பொதுவாகவே எனக்குப்
பயணிக்கப் பிடிக்கும் சாதாரணமாக சாமான்யமானவர்கள் பயணிக்கும் செகண்ட் க்லாஸ்
அல்லது பேரூந்துப் பயணம் பிடிக்கும் ஆனால்
இப்போதெல்லாம் அம்மாதிரிப்பயணம் செய்ய என் மனைவியும் மக்களும் விடுவதில்லை
குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப் பட்டு பிரயாணம் செய்வதே அமைந்துவிடுகிறது
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
பயணத்தில் இசை
கேட்கவேண்டும் என்றில்லை. என் மகனுடன்
காரில் பயணிக்கும்போது அவனுக்குப் பிடித்த
இசையைப்போடுவான் நானும் கேட்பேன்
5.விருப்பமான பயண நேரம்
ரயில்
ஆனால் இரவிலும் கார் ஆனால் பகலிலும் பயணிக்கப் பிடிக்கும்
6.விருப்பமான பயணத்துணை.
சந்தேகத்துக்கு
இடமில்லாமல் மனைவி மக்களுடன்தான்
7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
பயணத்தின் போது
இயற்கைக் காட்சிகளை ரசிக்கவே பிடிக்கும்
பயணிக்கும்போது படிக்கப் பிடிக்காது
8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
இப்போதெல்லாம்
மகனுடன் காரில் பயணிப்பது பிடிக்கும் நானாக
வண்டி ஓட்டி ஆயிற்று பல வருடங்கள்
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பாடல்களைப்
பிறர் பாடக் கேட்பதுதான் பிடிக்கும்
10.கனவுப் பயணம் ஏதாவது ?
ஒரு
முறையாவது அமெரிக்கா சென்று வர வேண்டும் என்பது ஆசை. என் நண்பன் அவனே டிக்கட்
எடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன்
என்றான் ஆனால் மனைவி தடா
போட்டுவிட்டாள்ஆனால் தடையை மீறி ஒரு முறை அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள ஆசை …கனவு…?
எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது ஒருவரிடம் இன்ன பொருளில் எழுது என்று கேட்பது
எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. இருந்தாலும் பதிவுலகில் நண்பர்களின் வேண்டுகோளைத்
தட்ட முடியவில்லை. நான் யாரிடமும் எழுதச்
சொல்ல மாட்டேன்
/