பிறந்த நாள் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2017

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்


                             பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
                            ---------------------------------------------


நேற்று_ (28-02 -2017) என் இரண்டம் பேரன் மற்றும்  இரண்டாம் மருமகள் இருவரது பிறந்தநாள் காணவும் அவர்களை வாழ்த்தவும்  அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்  .முன்னைப் போல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம்  கொண்டாடப்படவில்லை என்றே தோன்றியதுநாங்கள்சென்றது கொண்டாட்டத்துக்கு அல்லவே அவர்களை வாழ்த்தவே இந்நேரத்தில் 2011`ல் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி நான் எழுதி இருந்த ஒரு பதிவு நினைவுக்கு வந்தது நான்   எழுதி இருந்தபடி என்  வீட்டிலேயே கடைப்பிடிக்காதது சற்றே வருத்தம் தருகிறது இருந்தாலும்  என்  எண்ணங்களில் மாற்றம் ஏதும் இல்லை. ஆதங்க கூடுகிறது படித்துப் பாருங்களேன்

 ஹாப்பி பர்த்டே விதையாகிப் பின் விருட்சமாக

     பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளுக்கு
     புத்தாடை உடுத்தலாம்
     பள்ளிக்கு சீருடை வேண்டாம்
     இனிப்போடு பள்ளி சென்றால் ,
     ஆயா முதல் அனைவரும் செல்லம் கொஞ்சுவர்
     மாலையில் கேக் வெட்டலாம் ,பரிசுப் பொருட்கள் ,
     குவியலாம், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், , 
     கனவுகள் ,கற்பனைகள், எதிர்பார்ப்புகள்

            பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாடும் 
            பெற்றோருக்குப் பலப்பல கவலைகள்
            திட்டங்கள் செயல்கள், அதுவும் அடுக்குமாடி 
            குடியிருப்பானால் கேட்கவே வேண்டாம்
.
   எண்ணிக் கணக்கிட வேண்டும்
    எத்தனை பேர் அழைப்பதென்று
    பிள்ளையின் நண்பர்களுடன் 
    குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள்
   கூடவே துணைக்கு வரும் பெற்றோர்கள்
    புத்தாடை துவக்கம் ,இனிப்புப் பண்டங்கள்
    காரவகைகள், கூடவே குடிக்க ஜூஸ்
    வைத்துக் கொடுக்க காகித தட்டுகளுடன் ,
    கப்புகளும், கைத் துடைக்க  டிஷுஸ் என்று 
   பார்த்துப் பார்த்து திட்டமிட வேண்டும்
   அழகான வண்ணப் படங்களுடன் பெயரும் 
   எழுதிய பெரிய கேக் மிக மிக அவசியம்.
   பரிசுகள் பலப்பல தருவோருக்கு 
    மீள்பரிசுகளும்  மிகவும் முக்கியம்
    பரிசு கொடுக்கும் சிறுவர்கள் 
    மீள்பரிசு  எதிர் பார்ப்பர்
    அவர்களை  ஏமாற்றக்கூடாது.

            கண்மலர்ந்தெழும்  பிள்ளையை 
            கட்டியணைத்து முத்தமிட்டேழுப்பி ,
            வாழ்த்துக்கூறி, பள்ளிக்கு  இனிப்புடன் 
            வழியனுப்பி மாலைநேர  விழாவுக்கு 
            வெகுவாகக் காத்திருப்பர் பெற்றோர்

    மாலை நேரத்தில் சந்தியா காலத்தில் 
    வண்ணக் காகித தோரணங்கள் பலூன்கள் 
    அலங்கரிக்க அழகாக நடு மேடையில் 
    அன்று வெட்டப்பட இருக்கும் புத்தம் புது கேக்

              ஒருவர் இருவராய் அனைவரும் வர
              கொண்டாட்டம் ஆரம்பம், குழந்தைகள் உற்சாகம்.
              கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்து விட்டு
              அனைவரும் கூடியதும் வத்திச்சுடர் ஏற்றப்பட 
              ஊதி அணைக்கத் தயாராய்ப்  பிள்ளையும்
              பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
              கோரசுடன் முழங்க, கேக் வெட்டி, வாயில் ஊட்டி
              வந்தவர் அனைவரும் விருந்துண்டு வாழ்த்த
              பின் மீள்பரிசும்  கொடுக்கப்படும்.

     ஆரவாரமாய் ஆரம்பமான விழா, அடங்கியபின் 
     பார்த்தால் பெற்றோர் பையில் பெரிய ஓட்டைதான்  மிச்சம்

             என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது எனக்கு
             பிறந்த நாள் விழா பண்போடு கொண்டாடக் கூடாதா...
             அயலவன் கொண்டு வந்த கலாச்சாரம் 
             ஆழமாய்க் காலூன்றி வேரூன்றி விட்டது.
             பிறந்தநாள் விழாவில் ஒளிரும் தீபச்சுடர்
             அணைக்கப்பட வேண்டுமா.?
             அச்சானியமாகத்  தோன்ற வில்லையா..?
             சூழ்நிலைக் கைதிகளாக நாமிருக்க 
             இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால்
             தீபச்சுடரை அணைக்காமல்  ஒளியேற்றிக் 
             கொண்டாடலாமே...!

     பிறந்த நாட்கள் நல்ல நெறி 
     கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
     பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும்
     உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து 
     மகிழும் நாளாகப்  பழக்கப் படுத்தி
     பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின்  உதவும் எண்ணம் 
    விதையாகிப்   பின் விருட்சமாகாதா.?

எங்கள் வீட்டில் இந்தநாள் இருவரது பிறந்தநாளாகிறது எளிமையுடன்  கொண்டாடப்பட்டது தீபச்சுடர் ஊதித்தான் அணைக்கப்பட்டது என்மனது வேதனை உற்றது. இருந்தாலும்  காலத்தோடு ஒத்துப் போக மனம் கேட்டுக்கொண்டது நான்  எதையாவது சொல்லப் போக அது வருத்தம் தருவதாய் இருக்கக் கூடாது அல்லவா  ஓரிரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது
 
பேரன் மற்றும் மருமகளுக்குப் பிறந்த நாள் கேக்
 
மருமகளும்  பேரனும் 
 
மாமியாருக்குக் கேக்
 
என் மகன் குடும்பம்
 என்  பேரனிடம்  அவன்  டீன் ஏஜில் காலடி எடுத்து வைக்கிறான்  என்றேன் அவன் பிறந்த நாளும்  என் மனத்திரையில் ஓடியது அது இன்னோரு பதிவில்

==================================