வலைச்சரம் சில எண்ண்ங்கள்
----------------------------------------------
வலைச்சர ஆசிரியப்பணியின் அனுபவம் பற்றிப் பதிவிடலாமே என்று
திரு. தி.தமிழ் இளங்கோ அவர்கள் கேட்டிருந்தார்கள். பதிவிடுவதில் பிரச்சனை
எனக்கில்லை. ஆனால் நான் சொல்லப் போகும் கருத்துக்கள் சிலருக்கு வேண்டி இருக்க
வில்லையோ என்றிருக்கும் . இருந்தாலும் நான் மனசில் பட்டதைச் சொல்லாமல் இருந்தால்
என்னை நானே ஏமாற்றிக் கொள்வது போல் இருக்கும் முதலில் இந்த ஆசிரியரைத் தேடும் பணி.
இதை யார் செய்கிறார்கள் விதி முறைகள் ஏதாவது உண்டா என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி
முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க
தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான்.”என்னும் பதில் இருந்தது அதாவது நிர்வாக ஆசிரியர்
குழுவில் இருப்பவர்கள் எல்லோருடைய இடுகைகளையும் படிக்கிறார்கள் என்று அர்த்தம்
கொள்ள வேண்டும் ஆனால் அப்படி நடக்கிறதா. அவர்கள் படித்துச் செல்வதற்கான எந்தச்
சுவடும் தெரியவில்லை. என்னை அழைத்திருந்த யாதவன் நம்பி( அவர் ஆசிரியக குழுவில்
இருப்பதே பின்னர்தான் தெரிந்தது.) மட்டும் பின்னூட்டங்கள் எழுதி வந்தார். வலைச்சர
இடுகைகளையே படிக்காதவர்கள் பின் எப்படி எல்லோருடைய இடுகைகளையும் படித்திருக்க
முடியும் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த இரண்டாம் நாள் திரு தமிழ்வாசி தொலை
பேசியில் அழைத்து வாழ்த்தினார். ஆக நான் புரிந்து கொண்டவரை யாராவது சிபாரிசு
செய்து அது அந்தப் பதிவருக்கும் தோதாக இருந்தால் ஆசிரியப் பணிக்கு அழைக்கப்
படுகிறார் குறை சொல்வது நோக்கமல்ல. திருத்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமே.
இரண்டாவதாக வலைச்சர ஆசிரியர்கள் பிற பதிவர்களை அறிமுகப்
படுத்தவேண்டும் என்பது பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே வலையில் ஓரளவு பிரபல
மானவர்களே. எங்காவது ஓரிருவர் என்னை மாதிரி ஐந்தாண்டு காலமாக எழுதி வந்தாலும்
கண்ணில் தட்டுப்படாமல் இருக்கலாம் .நான் ஓரளவுக்கு இந்த அறிமுகம் என்னும்
வார்த்தையைத் தவிர்த்து அடையாளம் காட்டப்படுபவர் என்று எழுதி வந்தேன் ஒருசில
அடையாளப்படுத்தப்பட்ட பதிவர்கள் ஏற்கனவே பலமுறை அறிமுகப் படுத்தப்பட்டு இருப்பதாகக்
கூறினர். ஒரு வேளை இப்படி பலமுறை அடையாளம் காட்டப் பட்டால் சிலரது பிராபல்யம்
கூடுகிறதோ என்னவோ.
பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதப் படும் பதிவுகளுக்கு
ஆயுசு ஒரு நாள் மட்டுமே/ முதல் நாள் படிக்கப் பட்டிராவிட்டால் பிறகு
படிக்கப்படுவது அபூர்வமே. ஆகவே வலைச்சரத்திலாவது இந்த அறிமுகமோ, அடையாளம் காட்டப்
படுவதோ இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று பதிவின் ஆயுசை நீட்டிக்கலாம் என்று
தோன்றுகிறது.
பெரும்பாலும் அறிமுகம் அல்லது அடையாளம் காட்டப்படும்
பதிவர்களுக்கு அது பற்றிய சேதி இல்லாவிட்டால் தெரிவதே இல்லை. ஏனென்றால் தினமும்
வலைச்சரம் படிப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் இன்னும் ஒரு விஷயம்
. பின்னூட்டங்களுக்கு மறுமொழி தருவது. அப்படித் தந்தால்தான் பின்னூட்டம்
இடுபவருக்கு தான் படித்த சுவடு தெரிந்திருக்கிறது என்னும் எண்ணம் ஒரு திருப்தி
தரும் விஷயம் ஆனால் பெரும்பாலான பின்னூட்டங்கள் வாழ்த்துச் செய்திகளாகவும் பாராட்டும்
வரிகளாகவுமே இருப்பதால் மறு மொழி இடுவது சலிப்பு தரும் சமாச்சாரம் இருந்தாலும் பின்னூட்டம் இடுபவருக்கு நாம் செய்யும் மரியாதை அதற்கு மறு மொழி இடுவதுதான் இது வலைச்சரத்துக்கு மட்டுமல்ல பிற பதிவுகளுக்கும் பொருந்தும் ஒரு பதிவரை
அடையாளம் காட்ட அவரது ஏதாவது ஒரு இடுகை காட்டினால் அதற்குச்சென்று படிப்பவ்ர்கள்
இன்னும் குறைவு. நான் கூறிய பல செய்திகள் வலைசரத்துக்கு மட்டுமல்ல பிற இடுகைகளுக்கும்
பொருந்தும் வாசகர்கள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு படிப்பதுதான் நிகழ்கிறது. இதற்கு
யாரையும் குறை சொல்ல முடியாது இது அவரவர் விருப்பம் வலைச்சரம் அந்த வட்டத்தைப் பெரிதாக்க
முடிந்தால் மகிழ்ச்சியே
கடைசியாக புதிய ஆசிரியரை வரவேற்கும் போது செல்லும்
ஆசிரியரின் காலத்தில் இத்தனை பின்னூட்டங்கள் வந்தன, இத்தனை பார்வையாளர்கள்
பார்த்திருக்கிறார்கள் என்று கூறுவது ஆசிரியரின் பிரபலத்தை வெளிச்சம் போட்டுக்
காட்டவா. புரிய வில்லையே
இப்பதிவில் கூறப்பட்ட செய்திகளை ஆலோசனைகளாக ஏற்க
வேண்டுகிறேன் விமரிசனம் அல்ல என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்