புதன், 26 பிப்ரவரி, 2014

கண்டது கேட்டது பகிர்வு


                                கண்டது கேட்டது பகிர்வு
                                -------------------------------------

இந்தப் பதிவு கண்டு கேட்டவற்றை கல்ந்து கட்டிய பகிர்வுப் பதிவு. முதலில் வரவேற்பு.






என்ன நண்பர்களே ர்சித்தீர்களா.


ஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை. காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை என்று கேட்டது.


மண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர்  LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.?

 An apple a day keeps the doctor away. ஆனால் An apple a day costs Rs1000-/  a month டாக்டருக்கு  அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க வேண்டும்.

நான் கரைந்தால் விருந்தினர் வருவர் என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்து  மகிழ்வார்கள்என்று கோழி சொல்லி வருந்தியது.


 நீங்கள் ATM –ல் பணம் எடுக்கப் போகிறீர்கள் எதிர்பாராவிதமாக ஒருவன் உங்களை மிரட்டிப் பணம் அடுக்கச் செய்கிறான் உங்களுக்கும் வேறு வழியில்லை. போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு சிறந்த வழி என்று சொல்கிறார்கள். மிரட்டப் பட்டவுடன் பணம் எடுத்துக் கொடுத்தாக வேண்டிய நிலையில்  உங்கள் ATM  Card-ஐ மெஷினில் நுழைத்து உங்கள் பின் நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று அடியுங்கள். உங்களுக்குப் பணம் வரும். அதை மிரட்டுபவனிடம் கொடுத்துத் தப்பிக்கலாம் ஆனால் இந்த மாதிரி பின் நம்பர் மாற்றி உபயோகப்படும் செய்தி உடனே பொலீசுக்குத் தெரிவிக்கப் பட்டு அலர்ட் செய்யப் படுவார்கள். பின் நம்பர் மாற்றி உபயோகப் படுத்துவது போலீசுக்குத் தெரிவிக்க ஒரு முறை என்று சொல்லப் படுகிறது. தவறாக உபயோகித்து போலீசில் சிக்கினால் நான் ஜவாப்தாரி அல்ல. எனக்கு கிடைத்த தகவல் பரி மாற்றமே இது.

Two pieces of advice for married men 
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
  YOU ARE ONE OF THEM 
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
  YOUR WIFE IS ONE OF THEM 


 இனி ஒரு காணொளி

 



 



 



திங்கள், 24 பிப்ரவரி, 2014

மீண்டும் பதிவுகளில் தொடர......


              மீண்டும் பதிசுகளில் தொடர.......
             ------------------------------------------


அன்பு பதிவுலக நண்பர்களே
 வணக்கம். நான் சென்னைக்குப் போவதற்கு முன் காதலர் தினப் பதிவாக ஒரு சிறு கதையினை எழுதி முடிக்காமல்விட்டு பதிவுலக நண்பர்களை முடிக்கக் கேட்டு எழுதி இருந்தேன். நான் சென்னையில் இருந்தபோது என்னை அன்புடன் வந்து சந்தித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் சிறு கதையின் முடிவை திரு பாலகணேஷிடம் கொடுத்து அவரையே சரியான கதையைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதம் பத்தாம் தேதி வரை கதைகளின் முடிவை எழுதி அவரவர் வலைப் பூக்களில் பதிவிட்டு எனக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என் மின் அஞ்சல் முகவரி gmbat1649@ gmail.com
 சென்னையில் நான்  பதிவர்களைச் சந்திக்க வருகிறேன் என்று தெரிந்ததும் இடி இடிக்கவில்லை. மின்னல் வெட்ட வில்லை ஆனால் மழை பெய்தது.திரு கணேஷ் அவர்கள் நான் கடந்தமுறை வந்தபோதும் மழை பெய்து சந்திப்பு நடக்கவிடாமல் செய்ததை நினைவு கூர்ந்தார், திரு கணேஷுடன் திரு சீனு( திடங்கொண்டு போராடு)  திரு சரவணன் (ஸ்கூல் பையன் ) வந்திருந்தனர். வயதில் இளையவர்கள் வலையுலகில் கொடிகட்டிப் பறக்கின்றனர். நான் கேமரா எடுத்துச் செல்லாததால் படங்கள் எடுக்க முடியவில்லை சற்று நேரம் கழித்து மூங்கில் காற்று முரளிதரனும் சேர்ந்து கொண்டார். துடிப்பான இளைஞர். அவர் உருவத்துக்கும் பதிவுகளுக்கும் சம்பந்தமில்லை. மிகவும் சீரியசான சங்கதிகளை எழுது கிறார். மறு நாள் திரு கணேஷுன் சீனுவும் மீண்டும் என் இருப்பிடத்துக்கு வந்தனர் திரு செல்லப்பா யக்ஞசாமி எங்கள் ப்லாக் ஸ்ரீராம் மற்றும் கவியாழி கண்ண தாசன் போன்றோரின் வரவும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது
முகம் காணா பதிவுலக நட்புகளுடன் நேருக்கு நேர் உரையாடல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது

திரு செல்லப்பா வந்தபோது சுப்புத்தாத்தா என்று வலையுலகில் அறியப் படும் சூரி சிவா அவர்களின் விலாசம் கொடுத்தார். 20-ம் தேதி நாங்கள் செல்லவிருந்த திருமண மண்டபத்துக்கு அருகில் அவரது வீடு இருந்ததால்முஹூர்த்தம் முடிந்து மதிய உணவுக்கு இடைப் பட்ட வேளையில் நானும் என் மனைவியும் திரு சூரி சிவா வீட்டுக்குச் சென்று அவரையும் துணைவியாரையும் சந்தித்தோம். அவர் ஒரு சுவாரசியமான மனிதர். பழகவும் பேசவும் எளிமையான ,ஆனால் பல விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்.என்னைவிட வயதில் இளையவர்ர். ஆனால் அறிவில் முதிர்ந்தவர் எங்கள் ஐமபதாவது மண நாள் விழாவுக்கு அவசியம் வருவதாகக் கூறி இருக்கிறார்.சொல்ல விரும்புவதை சொன்னால்மனம் நோகக் கூடாதே என்று தெளிந்து சொல்கிறார்.அதே வளாகத்தில் என் பழைய நண்பர் திரு. பலராமன் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார். திரு பலராமனைப் பற்றி ஒரு செய்தி. அவர் என் வயதுக்காரரோ இல்லை எனக்கும் மூத்தவராகவோ இருக்கலாம்,அவரது வயது முதிர்ந்த தாயாரை அவர் மனம் கோணாமல் வைத்துக் காப்பாற்றுகிறார். ( மனைவியை இழந்தவர், தனி ஆளாக ) திரு பலராமனின் தாயாரை திருச்சி குடியிருப்பில் இருந்த போது கண்டு பழக்கப் பட்ட என் மனைவியை பார்த்தவுடன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது மனதை நெகிழ வைத்தது
அன்று மாலை எரிதழல் வாசன் வந்தார்.அவரது எழுத்துக்களில் ஒரு கனல் இருக்கும் மனிதர் பேசும்போதும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுகிறார் இந்த முறை சென்னைப் பயணத்தில் பல பதிவுலக நண்பர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். யாராவது பெங்களூர்  வருவதாயிருந்தால் எப்போதும் என் வீட்டுக்கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்கதைப் போட்டிக்கு நான் எதிர்பார்த்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை. ஏற்கனவே பாதிக்கதை எழுதி கற்பனைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி ஒரு போட்டி. சிரமத்தை உணர்கிறேன் . இருந்தாலும் கடினமான போட்டி அல்ல. மனம்வைத்தால் “உம்என்பதற்குள் எதையும் எழுத வல்லவர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள். செய்தி எல்லோருக்கும் போய்ச்சேரவில்லை என்றே தோன்றுகிறது இந்த போட்டி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்
மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய சென்ற பதிவில் பாதிக்கதை இருக்கிறது. மீதிக்கதைஎழுதி முடிக்க வேண்டும். முடிவு நான் எழுதி உள்ளதுபோல் இருந்தால் பரிசு. இல்லையென்றாலும்  இதைவிட நல்ல முடிவு என்று நடுவர் கணேஷ் தீர்மானித்தால்  அந்தக் கதைக்கும் பரிசு. மார்ச் பத்தாம் நாள் வரை பங்கு கொள்ளலாம் அவரவர் பதிவுகளில் எழுதி எனக்குத் தெரியப் படுத்துங்கள், எல்லா விவரங்களும் கொடுதிருக்கிறேன் என்று நம்புகிறேன்
சரிதானே அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன் ஜீஎம்பி. 
 இன்று மெயிலைத் திறந்தபோது திரு.பாலகணேஷ் அனுப்பி இருந்த சில பிகைப் படங்கள். படங்கள் இல்லாமல் பதிவர்கள் சந்திப்பு முழுமை பெறுவதில்லை அல்லவா.?

திரு.செல்லப்பாவும்  சீனுவும்





நண்பர் ஸ்ரீராம்  அவர் படம் வெளியாவது விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். நான் மறந்து போய் வெளியிட்டு விட்டேன் சாரி ஸ்ரீராம் நீக்கிவிட்டேன்.



வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதல் காதல் காதல்.. காதல் போயின்......


 காதல் காதல் காதல் ... காதல் போயின்.( திடங்கொண்டு போராடு.)   
 ------------------------------------------------------
காதலர் தினத்துக்காக எழுதியது. கூர்ந்து படியுங்கள்  பதிவின் முடிவில் இந்தக் கதை சம்பந்தமாக ஒரு போட்டி.




 பாபு காதல் வயப் பட்டிருந்தான். கண்டதும் காதல் கேஸ்தான் இருந்தாலும் என்ன. ? யாரைக் கண்டாலும் காதல் வந்து விடுமா என்ன.?ஏதோ ஒரு ஈர்ப்பு.நிச்சயம் உடல் சார்ந்தது அல்ல.  பாபு நிச்சயம் எந்தக் கோவிலிலும் வேண்டுமானாலும் சூடம் ஏற்றி சத்தியம் செய்வான் இத்தனைக்கும் அந்தப் பெண்பற்றிய எந்த விவரமும் பாபுவுக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அமர காதல் என்று நிச்சயம் நம்பினான்.கூடவே இது அமர காதலாயிருக்கக் கூடாது என்றும் வேண்டினான். ஏனென்றால் அமர காதல் என்று சொல்லப் படுபவை எல்லாம் தோல்வியில் முடிந்தவையே என்பதால் அச்சம் கொண்டான். சரி காதல் வந்தாய் விட்டது. ஆனால் இது ஒருதலை ராகமாக இருக்கக் கூடாதுஎன்றும் நினைத்துக் கொண்டான். அவளுக்கும் இவன் மீது “இது இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.?

அவளை சந்தித்துத் தன் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் எப்படி எங்கு சந்திப்பது. அடுத்து இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லலாமா? சரி எப்படிச் சொல்வது. ? திடீரென்று அவள்முன் தோன்றி..... தோன்ற என்ன இவன் மந்திரவாதியா...யோசித்து யோசித்து தலையில் இருக்கும் முடிகளைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதையாவது செய்யப் போய் சும்மா சொதப்பி விடக் கூடாது. யாரை கொண்டாவது அவளை அறிமுகப் படுத்தச் சொல்லலாமா. ? தன்னை ஒரு gang  அலைக் கழித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி செய்ய இவன் ஒன்றும் தாதா இல்லையே. பார்க்க வாட்ட சாட்டமாயிருந்தாலும் இவன் மனதில் கோழை. கோழைகள் காதலிக்கக் கூடாதா....கோழையான இவனிடம் சிலர் அவனது எதிர் வீட்டுப் பெண்ணின் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொடுக்கச்சொன்னதும் இவன் “ஐயோ அண்ணே , எனக்கு முடியாது என்னை விட்டுடுங்கோ என்று கதறி அழுததும் நினைவுக்கு வந்தது.

காதல் வயப் பட்டால் பயப் படக் கூடாது. எதையாவது செய்து அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் முதலில் பேசவேண்டும் ஒரு நாள் திடீரென வந்த ஒரு வேகத்தில் பேப்பர் பேனாவை எடுத்தான் சில வரிகளைக் கிறுக்கினானவள் வரும் வழியில் திடீரென அவள் முன் தோன்றி” ”எனக்கு உன்னிடம் பேச வேண்டும் நாளை மாலை .  5 மணி எல்லா விவரங்களும் இந்தக் கடிதத்தில் “ என்று மூச்சு விடாமல் கூறி சிட்டாய்ப் பறந்து விட்டான். அவன் அப்படிப் பறக்க்க இரண்டு காரணங்கள் இருந்தன. இந்த திடீர் தாக்குதலில் அவள் என்ன செய்வதென்றோ என்ன நடக்கிறதென்றோ அறியும் முன்னர் இடத்தைக் காலிசெய்து விட வேண்டும். ஒரு வேளை அவள் சுதாரித்துக் கொண்டு கூக்குரல் இட்டால் தர்ம அடிதான் மிஞ்ச்லாம். ஆனால் ‘ அவள் வருவாளா. நாளை மாலை என்னைச் சந்திக்க வருவாளாஎன்று ஏதோ ராகத்தில் முணுமிணுத்துக் கொண்டான்

 சந்தியாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை போகும் போதும் வரும் போதும் சும்மா முறைத்துப் பார்க்கிற பிள்ளைப் பூச்சிதான் என்று நினைத்திருந்தாள் ஆனால் இப்போது...... கடிதம் கொடுக்கிற வரை வந்து விட்டது இதன் தைரியம்.... இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறது என்று பார்க்க மனம் துடித்தது. வழியில் நின்று படித்துப் பார்க்கத் தயாராயில்லை. வீட்டுக்குப் போனதும் பாத் ரூமுக்குச் சென்று ஒருவித பட படப்புடன் அந்தத் துண்டுச்சீட்டை எடுத்துப் படித்தாள். படித்தவளுக்குச் ச்சேஎன்றாகி விட்டது. ஏதோ காதல் கடிதமென்று எண்ணியவள் ஏமாற்ற மடைந்தாள்.கன்னா பின்னாவென்று ஏதோ எழுதி இருப்பான் என்று எதிர் நோக்கியவள் அப்படி இல்லையே என்று ஏமாற்ற மடைந்தாள்.  அது சரி காதல் கடிதமாயிருந்தால் என்ன செய்திருப்பாய்.? என்று அவளது உள்மனம் கேட்டாலும் ‘என்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்றால் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ யார் இவன் ? இவன் பேரென்ன.?என்ன எழுதி இருக்கிறான்? நாளை மாலை 5/-மணி......பூங்காவில் சந்திக்க வா. நிறையப் பேச வேண்டும்  என்ற அந்தத் துண்டுக்காகிதம் இவளைப் பார்த்து கேலி செய்வ்து போல் இருந்தது.இவன் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் தான் என்ன இவனது காதலியா என்ன..? ஒருவேளை சென்று பார்த்தால் காதலிக்கத் துவங்கி விடுவேனோ.. அவனைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா.... ஏன் பார்க்க வேண்டும்..? பார்த்தால் என்ன ... என்னதான் செய்து விடுவான் ... கடித்துக் குதறுவானோ... சே அது மாதிரி செய்யத் தைரியம் வேண்டும் ச்சீ என்ன நினைப்பு இது .?காதல் வார்த்தைகள் பேசுவானா என்பது,தவிர என்ன மாதிரி கடிப்பானா குதறுவானா என்றெல்லாம் எண்ண வைக்கிறது வெகு நேரம் பாத்த்ரூமில் இருந்தால் சந்தேகம் வந்து விடும். ஆகவே இன்னொரு தரம் அந்தத் துண்டுக் காகிதத்தை படித்துப் பார்த்தாள் நேரம் இடம் எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அந்தக்காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து டாய்லெட்டில் சிஸ்டெர்னைத் திறந்து அதில் போட்டாள்.காகிதத் துண்டுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெகு நேர சிந்தனைக்குப் பின் அவனைப் போய் பார்ப்பது என்று தீர்மானித்தாள். அவளை அந்த முடிவுக்கு வர வைத்தது எது. அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்போ? அப்போது எங்கோ ஒரு பாடல் ஒலித்தது “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று.சந்தியாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இன்னும் அவனைப் போய்ப் பார்க்க இல்லைபேசவில்லை. அதற்குள் இன்னார்க்கு இன்னார் என்ற நினைப்பு வருவது ஏன்

சந்தியா படித்தவள் பலதும் கற்றவள். இந்தக் காலத்துப் பிரதிநிதி. எதையும் சிந்தித்தே செயல் படுவாள். ஆனால் இந்த மாதிரித் தருணங்களில் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியது காதலும் அதன் விளைவுகளும்.

சரி.. சந்தியா பாபு சந்திப்பைப் பார்க்கலாம்.

பாபு பூங்காவில் சந்தியாவுக்காகக் காத்திருக்கிறான் ஆட்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியில் காத்திருந்தான் அவள் வருவாளா மாட்டாளா என்றே குழம்பிக் கொண்டிருந்தவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் நான்கு மணிகூட ஆகவில்லை. கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைத்தால் காலம் வேகமாக ஓடிவிடுமா....அவசரமாகப் போக வேண்டியவன் ரயிலில் சீக்கிரம் போய்ச் சேர கடைசிப் பெட்டியிலிருந்து முதல்பெட்டிக்கு வந்தானாம்  என்னும் நினைப்பு ஏனோ வந்தது. நேரம் காலம் எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன..?அந்தப் பெண் வந்தால்....வருவாளா ... அட வந்தால் என்ன பேசுவது. முதலில் அவள் பெயரைக் கேட்கவேண்டும். காதலிக்கும் பெண்ணின் பெயர் கூடத் தெரியாமல்...இருந்தால் என்ன. முதலில் எல்லாமே தெரிந்துதான் காதலிக்கிறோமா. பெயர் தெரியாவிட்டாலும் அவளை என்ன சொல்லி அழைப்பது..?அன்பே எனலாமா.... காதலியே எனலாமா.. என்ன சொல்லி அழைப்பது எப்படி அழைப்பது. நேருக்கு நேர் பேசும்போது நாச்சுரலாக இருக்க வேண்டாமா.....முதலில் ஹாய் என்றோ ஹல்லோ என்றும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். பிறகு இருக்கவே இருக்கிறது பேப்பரில் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் அவள்முகம் கோணாமல் படித்தால் நிறையவே பேச வேண்டும் தூரத்தே யாராவது சேலை கட்டி வந்தால் அது சந்தியாவா என்று எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனவன் சந்தியா அருகில் வந்ததை எப்படி காணாமல் போனேன் என்று குழம்பினான் அருகில் வந்த சந்தியா அவனிடம் ஹாய் என்றாள். இந்த ஆங்கில மொழியால் எவ்வளவு சௌகரியம். இவனும் ஹாய் என்று விஷ் செய்தான். “என்ன தைரியம் இருந்தால் துண்டுக்காகிதத்தில் எழுதி வரச் சொல்வீர்கள்..?என்று பிடி பிடிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தவன் அவள் புன்னகையுடன் ஹாய் சொன்னதும் அவனையே நம்பாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.உங்களைப் பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என்னும் ஒரு உந்துதலே அந்தத் துண்டுக்காகிதம். இந்த முறை துண்டுக்காகிதமல்ல . நேர்த்தியாக எழுதப் பட்ட கடிதம். Please take yor time and read it என்றான். தமிழில் சொல்லத்தயங்குவது அன்னிய மொழியில் அனாயாசமாக வந்து விடுகிறது ஆங்கிலத்துக்கு ஜேசந்தியா கடித்ததை வாங்கி தன் ஜாக்கெட் உள்ளே பத்திரப் படுத்திக் கொண்டாள். “ ஐயோ என்ன அங்க வச்சுட்டீங்க படிக்கலையாஎன்று பாபு பதறினான் “ நீங்கள்தானே டேக் யுவர் டைம் என்றீர்கள்என்று சொல்லிக் கல கலவெனச் சிரித்தாள். ஏனோ அவளுக்கு பாபுவிடம் பலகாலம் பழகியதைப் போன்ற ஒரு  (B)பாவம் தோன்றியது.மீண்டும் ஜாக்கெட்டுக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்  அவள் படிக்கும்போது அவளது முக பாவத்தையே பாபு பார்த்துக் கொண்டிருந்தான்.

“ உன்னை எப்படி அழைப்பதென்றே தெரியாமல் இக்கடிதம் எழுதினேன். அன்பே என்றழைக்கவா பேரழகே என்றழைக்கவா கண்ணே என்றழைக்கவா எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் “ இந்த இடம் வந்ததும் சந்தியா தலதூக்கி பாபுவைப் பார்த்துப் புன்னகைத்தாள் அதைப் பார்த்ததும் பாபுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது “ இதையே  சௌந்திரராஜன் குரலில் பாடிப் பார்த்தீர்களா.? என்று சந்தியா கேட்டதும் இவ்வளவு எளிதில் காதல் கைகூடும் என்று எண்ணிப்பார்க்காத பாபு நிறையே அசடு வழிந்தான்
பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு பிடி சாக்கலேட்டுகளை சந்தியாவுக்குக் கொடுத்தான் “ உன் இந்தப் பார்வைக்கு எது கொடுத்தாலும் தகும். ஆனால் தற்சமயம் இந்த இனிப்பே உள்ளது “ என்றவன் மேலே படிக்கச் சைகை காட்டினான்எப்படி அழைத்தாலும் உன் பெயர் சொல்லி அழைப்பதே சுகம் அல்லவா. உன் பெயரென்ன “ இதைப் படித்ததும் “ சந்தியாஎன்று கூறி முறுவலித்தாள்.என் பெயர் என்ன வென்று கேட்க வில்லையே என்ற பாபுவைப் பார்த்து சந்தியா “ பாபுஎன்றாள் “ அதெப்படி உனக்குத் தெரியும்?கடிதத்தின் கடைசியில் உங்கள் பெயரை முதலிலேயே பார்த்து விட்டேனே
“ ஓ.. பலே ஆள்தான் மேலே படி “
நிதானமாகப் படித்துக் கொள்கிறேன் இப்போதான் நேருக்கு நேர் பார்க்கிறோமே பேசிக் கொள்ளலாம் “ என்றாள் சந்தியா. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டுத்தெரிந்து கொண்டனர்
இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும் 
 ( பதிவர்கள் தொடர்ந்து முடிக்க )
Lஎன்ன நண்பர்களே இதுவரை கூர்ந்து படித்து விட்டீர்களா?கதையை நான் ஒருவிதமாக முடித்திருக்கிறேன் அந்த முடிவின் பதிவை நான் சென்னை செல்லும் போது என்னை சந்திக்க வரும் பதிவுலக நண்பர்களிடம் காட்டுவேன்/ கொடுப்பேன் இப்போது நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கதையை நீங்கள் முடித்து எழுதுங்கள் . எழுதியதை உங்கள் வலைப் பூவில் பதிவிடுங்கள் எனக்கும் மின் அஞ்சலில் தெரியப் படுதவும் ( யார் யார் போட்டியில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிய) யாருடைய கதையின் சாராம்சம் நான் எழுதிய முடிவோடு ஒத்துப் போகிறதோ அந்தப் பதிவுக்குப் பரிசு உண்டு. நான் சென்னை விட்டு வரும் வரை அதாவது இந்த மாத இறுதிவரை பதிவர்களின் மீதிக்கதை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப் படும் நடுவர்கள் குழு சென்னையில் தீர்மானிக்கப் படும் நடுவர்களின் முடிவே இறுதி முடிவு பரிசு என்ன என்று சொல்ல வில்லையே அதுவும் சென்னையில் பதிவர் சந்திப்பில் முடிவு செய்யப் படும் இது என்னுடைய 450-வது பதிவு சற்று வித்தியாசமாக. கதையின் என் முடிவினை மார்ச் மாதம் முதல் வாரத்தில் பதிவிடுவேன். வித்தியாசமான இந்தப் போட்டியில் பங்கெடுத்து பரிசு பெறுங்கள்)



செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பதிவில் கடிதம்


                                    சந்திக்க ( மீண்டும் ) வேண்டுகிறேன்
                                   ---------------------------------------------------

-

அன்பு பதிவுலக நண்பர்களுக்கு
 இதை நான் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதுவதாகப் பாவிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு நவம்பர் வாக்கில் சென்னை வந்திருந்தேன். பதிவுலக நண்பர்களை நேரில் கண்டு பேசி மகிழலாம் என்று எண்ணி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இரண்டு மூன்று பேரை மட்டுமே சந்திக்க முடிந்தது. நான் சென்னை வருகிறேன், நான் பதிவர்களை அவர்கள் இருப்பிடத்தில் சென்று சந்திப்பதே முறையாக இருக்கும். ஆனால் அதில் ஒரு சிக்கல். என் முதிய பிராயத்தில் பல பயணங்களை மேற்கொண்டு நானாக அவர்களைத்தேடிச் சென்று சந்திப்பதில் இருக்கும் பிரச்சனைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் இருப்பிடத்துக்கு நண்பர்கள் வந்து சந்திப்பதானால் அது அவர்களுக்கு ஒரே பயணமாக இருக்கும். ஆகவே logistics  மனதில் கொண்டு சென்னை வாழ் பதிவர்கள் என்னை என் இருப்பிடம் வந்து சந்திக்க முன் வந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு ஏது.?
நான் 15-ம் நாள் இரவு சென்னை வருகிறேன். சென்னையில் உறவினர்கள் வீட்டு இரு திருமணங்கள் ஒன்று  16-ம் தேதி மாலை ரிசப்ஷன் 17-ம் தேதி காலையில் முஹூர்த்தம். இன்னொரு திருமணம் 20-ம் தேதி. ஆக நான் சென்னையில் நான்கைந்து நாட்கள் இருப்பேன். இந்த இரு தினங்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் நான் “ரெடிநீங்க ரெடியா.

வேளச்சேரியில் என் மகன் வீட்டில் தங்குவேன்விஜயநகர் பஸ் நிலையத்தை ஒட்டி இருக்கும் 80 அடி பைபாஸ் ரோடில் SAI SAROVAR  எனும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் என் மகன் வீடு. சென்னையில் என்னை
096865 95097 என்னும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக்குத் தெரிந்த சென்னைவாழ் பதிவர்கள் சிலருக்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு எழுதி இருக்கிறேன். நான் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளாதவர்களும் இதை தனிப்பட்ட அழைப்பாகக் கருதி சந்திக்க வேண்டுகிறேன். இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி

திங்கள், 10 பிப்ரவரி, 2014

நானும் நகைச்சுவையும்


                               நானும் நகைச்சுவையும்
                              ----------------------------------


ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யப் போன அனுபவம் இருக்கிறதா.?அங்கு மூன்றோ நான்கோ கவுண்டர்கள் இருக்கும். நிறைய நாற்காலிகள் போட்டிருப்பார்கள். வரிசைப்படி வந்தவர்கள் நாற்காலிகளில் முறைப்படி அமர்ந்து கொள்ளவேண்டும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு செய்து கொள்பவர் முடித்ததும்காலியாகும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு செய்யலாம். இந்த முறைப்படி ஒரு ஆர்டராக தள்ளு முள்ளு இல்லாமல் முன் பதிவு செய்யலாம். நான் என் மனைவி மற்றும் என் மகனுடன் ஒரு நாள் முன் பதிவு செய்யும் இடத்துக்குப் போய் வரிசைப்படி நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். வரிசையில் நாங்கள்தான் கடைசி. எங்கள் முறை வந்தபோது கவுண்டரில் இருந்தவர் சற்றே ரிலாக்ஸாக இருந்தார். நானும் என் மனைவியும் ( எங்கும் எப்போதும் என் கூட வருபவள்;) இம்முறை கூடவே என் மகனும் .கவுண்டரில் இருப்பவர் இன்னும் யாரும் இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்டு எங்களை சிரித்த முகத்துடன் அன்பாகப் பார்த்தார். பிறகு கேட்டாரே ஒரு கேள்வி. உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?என்னைப் பார்த்தும் இந்தக் கேள்வி. நான் “ஆம் ஆகிவிட்டது. இதோ இவர்தான் என் மனைவிஎன்றேன்.. அவர் உடனே வாய்சிட்டுச் சிரிக்கத் தொடங்கினார் நீங்களே சொல்லுங்கள் இதில் சிரிக்க என்ன இருக்கிறது. சற்று நேரம் சிரித்தவர் என் மனைவியைப் பார்த்து உங்கள் திருமணம் லவ் மேரேஜா என்று கேட்டார். நாங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுஆம் லவ் மேரேஜ்தான்என்றோம். ஏதோ உலக அதிசயம்  பார்ப்பது போல் எங்களைப் பார்த்து விட்டு முன்னைவிட அதிகமாகக் குலுங்கிக் குலுங்கி நகைக்கத் தொடங்கினார். எனக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. முன் பதிவு செய்யும் படிவங்களைப் பார்த்தோமா டிக்கெட் கொடுத்தோமா என்றில்லாமல் வேண்டாத கேள்விகள் கேட்டு அதற்குப் பதில் சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கிறார். நான் கோபமாக எங்களுக்குத் திருமணமாகி இதோ நிற்கிறானே இவனையும் பெற்றாயிற்று “என்றேன்  அவர் ஓரளவுக்குச் சிரிப்பை குறைத்துக் கொண்டு “இவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?என்று கேட்டார். “ ஐயா, இவருக்கும் திருமணமாகி ஒரு பெண் பிறந்து காலேஜுக்கும் போகிறாள்என்றேன் . இதைக்கேட்டவுடன் அந்த குமாஸ்தா ஏதோ கேட்டே இருக்காத நகைச்சுவையை கேட்டது போல் மீண்டும் ஹோ ஹோ ஹோ என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதற்குள் அந்தப் பதிவறையில் இருந்த வேறு சிலர் வந்து அவரை சமாதானப் படுத்தி அப்புறப் படுத்தினர். பிறகு தெரிந்து கொண்டோம். அவருக்குத் திருமண முடற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு டிப்ப்ரெஷன் மூடுக்கு அவ்வப்போது போய் விடுவாராம்


( எனக்கு நகைச் சுவை எழுத வராது என்னும் குறை போக்க என் கனவு சம்பவம் இதோ எழுத்தில். இந்தக் கனவை நினைவில் கொண்டு எழுதுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.) 







வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ரசிக்க சில காணொளிகள்


சில ரசிக்க வைக்கும் காணொளிகள்
----------------------------------------------------
யாம் பெற்ற இன்பம் யாவரும் பெருகவே
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கலாமே.

                                            







வியாழன், 6 பிப்ரவரி, 2014

காரண காரியங்கள் பதில்கள்


                               காரண காரியங்கள் பதில்கள்.
                                ----------------------------------------

சென்ற பதிவில் சில கேள்விகள் கேட்டிருந்தேன் நண்பர் திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்ட பதில்களை பார்க்காதவர்களுக்காகவும் கேள்விகள் கேட்ட நானும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருப்பதாலும் இந்தப் பதிவு. ஏனோ பதிவுகளில் விவாதங்கள்மிகவும் குறைந்தே வருகிறது



கேள்வி 1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக் கூடாது .சரியா?
சரி எது  தவறு எது என்று அவரவரே நிர்ணயிக்க வேண்டும்.நிலைப் படிகள் எதிர்மறைச் சக்திகளை (negative energy) உண்டு பண்ணுவதாக நம்பிக்கைக்கு வலு சேர்க்கச் சொல்லப் படுகிறது  தற்காலத்தில் dowsing rod  உபயோகித்து சரியா தவறா என்று கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் இந்த டௌசிங் ராடின் உபயோகமே கேள்விக்குறியாக உள்ளது. நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்று காண வாட்டர் டிவைனர்கள் உபயோகிக்கும் ஒரு கருவிதான் டௌசிங் ராடுகள்.

கேள்வி 2) கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாக இருக்கும் .சரியா?
இதற்கு மருத்துவ ரீதியாக எந்த உறுதிப்பாடும் கிடையாது. பெண்குழந்தைகளின் இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மேலும் பெண்குழந்தைன் கரு தாயின் வயிற்றில் அதிக திரவத்துக்குள் மிதப்பதாகச்சொல்லப் படுகிறது அதனால்தானோ என்னவொ கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பெரிதாயிருந்தால் பிறக்கப் போவது பெண்சிசுவே என்று பெரிசுகள் சொல்லக் கேட்கிறோம்.

கேள்வி 3) கிருகப் பிரவேசம் நடத்தும் போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள் ஏன்.?
கிருகப் பிரவேசத்தின் போது மட்டுமல்ல எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் பலர் வந்து போவர். அதனால் சுற்றுவட்டாரக் காற்று அசுத்தப் படலாம். மாவிலைகளுக்கு காற்றை சுத்திகரிக்கும் குணமிருப்பதாக நம்பப் படுகிறது (என் வீட்டிலொரு மாமரமே இருக்கிறது )

கேள்வி4) படுத்து எழும்போதுவலது புறமாகவே திரும்பி எழ வேண்டும்.ஏன்.?
நம் உடலில் இரு விதமான ஈர்ப்பு சக்திகள் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது. தலைமுதல் காலும் கால் முதல் தலை வரை ஒன்றும், பின்னாலிருந்து இடது வலமாகவும் வலது இடமாகவும் ஒன்று என்றும் சொல்லப் அடுகிறது உடலின் அசைவுகள் இந்த மின் ஈர்ப்பு சக்திக்கு பலமூட்டுவதாக இருக்க வேண்டும் என்றால் அதன் திசையிலேயே இயங்க வேண்டுமாம். எனக்கு இதய சிகிச்சைசெய்த மருத்துவரும் வலது பக்கம் திரும்பி எழப் பழகுமாறு கூறினார். முன்பெல்லாம் சிறார்கள் மந்தமாக இருந்தால் இடப்பக்கமாகத்திரும்பிஎழுந்தாயா என்று கேட்பார்களாம்.

கேள்வி 5) முங்கிக் குளித்தபின் உடலில் எண்ணை தேய்க்கலாமா.?
மனுஸ்மிருதியில் இது தடை செய்யப் பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. எண்ணை தோலின் துவாரங்களை அடைத்துவிடும் சாத்தியமிருக்கிறது. எண்ணை தேய்ப்பது ஒருவித மசாஜ் என்று கூறலாம் இதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது . அதிக இரத்த ஓட்டத்தினால் வெளியேற வேண்டிய வியர்வை எண்ணை தேய்ப்பதால் வெளியேறாமல் போகலாம்

கேள்வி 6) காலணி இல்லாமல் நடப்பது உகந்ததா.?
காலணி என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்றாகி விட்டது. கரடு முரடான பாதையில் ஒருவர் காலணி இல்லாமல் நடக்கும் போது காலில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரு வித அழுத்தத்துக் உட்படுகின்றன. இவை உடலின் எல்லா பாகங்களுக்கும்  தொடர்புடையவை. காலணி இல்லாமல் நடந்தால் உடலின் எல்லா பாகமும் ஒருவித ஸ்டிமுலேஷனுக்கு உள்ளாகும். இயற்கையாகவே இது ஒரு அக்குபன்க்சர் போல் செயலாற்றும்

கேள்வி 7) எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும்.?
தினமும் தலை முதல் கால்வரை எண்ணை தேய்த்துக் குளிப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறது.மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணை உடலுக்குள் செல்லும். இரண்டாவதாக தோலை.க் கெடுக்கும் நுண்கிருமிகள் எண்ணையில் மாட்டிக் கொண்டு காற்றில்லாமல் அழிந்து போகும் என்றும் சொல்லப் படுகிறது ( என் மருத்துவ நண்பர் தோலில் இருக்கும் துவாரங்கள் வழியே வியர்வை வெளியேறலாமே தவிர வெளியிலிருந்து எண்ணை எதுவும் உள்ளே போக முடியாது என்றும் கூறுவார்...!)

கேள்வி 8.) பெற்றோரின் காலில் விழுந்து வணங்குவது தேவையா.?
பெற்றொர் கால்களில் விழுந்து வணங்குவது சாலச் சிறந்தது மரியாதையை வெளிப்படுத்த கரங்கூப்பி வணங்குவதும் , எழுந்து ந்ன்று மரியாதை செலுத்துவதும் , கால் தொட்டு வண்ங்குவதும் உடல் தரையைத்தொட விழுந்து வணங்குவதும் நடை முறையில் இருந்து வருகிறது. பெற்றோரைக் கடவுளாக பாவித்து வணங்கும் முறை அந்த உறவின் மேம்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.

கேள்வி 9)  விபூதி தரிப்பது ஏன்.?
நல்ல சுத்தமான விபூதிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் புல்லையே தின்னும்  பசுவின் சாணத்தை உமியுடன் கலந்து சிவ ராத்திரி தினத்தன்று எரித்தால் கிடைக்கும் சாம்பலை நீரில்கரைத்து பின் அதைக் காடவைத்து சிவனுக்கு அர்ப்பணித்து பின் சேமித்து வைத்து  உபயோகப் படுத்த வேண்டுமாம். காய்ச்சல் இருக்கும் ஒருவருக்கு நெற்றியில் விபூதி வைத்தால் காய்ச்சல் குறையும் என்று நம்பப் படுகிறது.( எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் விபூதி சுத்தமாக சரியாகத் தயாரிக்கப் படவில்லை என்று கூறித் தப்பிக்கலாம்...!)

கேள்வி 10) ஹிந்துக் கோவில்களில் அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப்பிடிப்பது அனுமதி இல்லை. ஏன்?.
இது எந்த தீண்டாமையினால் வந்த பழக்கமல்ல. ஒரு அர்ச்சகரோ பூசாரியோ, இடை விடாது மந்திர உச்சாடனங்களைச் செய்வதால் அவரிடம் ஒரு ஆன்மீக சக்தி இருப்பதாக நம்பப் படுகிறது யாராவது அவரைத் தொட நேர்ந்தால் அந்த சக்தி குறையும் என்று நம்பப் படுகிறது. ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு பிரபை (halo)  இருப்பதாக் கூறப்படுகிறது ஒருவரை தீண்டினால் அந்த சக்தி விரய மாகலாம் என்றும் நம்பப் படுகிறது.தேவை யில்லாமல் ஒருவரைத் தீண்டுவதே தவிர்க்கப் படவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

காரண காரியங்கள் தெரியுமா.?


                                    காரண காரியங்கள் தெரியுமா.?
                                    -------------------------------------------



ஒரு மாற்றத்துக்கு இப்பதிவில் நான் சில பழக்க வழக்கங்களை முன் வைக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு என்று பதில்கள் நிச்சயம் இருக்கும். அறிந்தவர் பகிர்ந்து கொள்வதால் அதைப் பற்றிய சில விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் இதில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகள் நடைமுறையில் இருக்கும் பழக்கங்களிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் உருவானது. இப்போது கேள்விகளுக்கு வருவோம்

கே. 1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக்கூடாது. சரியா .?

கே.2) கர்ப்பிணிப் பெண் வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாய் இருக்கும். சரியா.?

கே.3)கிருகப் பிரவேசம் நடத்தும்போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள். ஏன்.?

கே. 4) படுத்து எழும்போது வலது புறமாகவே திரும்பி எழ வேண்டும். சரியா. ஏன்.?

கே. 5) முங்கிக் குளித்த பின் உடலில் எண்ணை  தேய்க்கலாமா.?

கே. 6) காலணி இல்லாமல் நடப்பது உகந்ததா.?

கே. 7) எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும். ?

கே. 8)பெற்றோரின் காலில் விழுந்து வணங்குதல் தேவையா.?

கே. 9) விபூதி தரிப்பது ஏன்?

கே. 10) ஹிந்துக் கோவில்களில் அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப் பிடிப்பது  அனுமதி இல்லை.ஏன்.?





சனி, 1 பிப்ரவரி, 2014

பதிலறியாக் கேள்விகள் நடுவே.......


                      பதிலறியாக் கேள்விகள் நடுவே.....
                      ---------------------------------------------


சில நிகழ்வுகள் பார்த்தது படித்தது அனுபவித்தது மனசில் என்னவெல்லாமோ சலன்ங்களை ஏற்படுத்துகிறது. இம்மாதிரி சலனங்களின் அழுத்தம் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்னும் கையாலாகத்தனத்தால் இன்னும் கூடுகிறது.

பாலு, என் மச்சினன் மணம் செய்து கொள்ள விரும்புகிறான். உனக்கு ஏதாவது நல்ல இடம் தெரிந்தால் சொல்லு.

இந்த மச்சினனுக்கு வயது நாற்பதுக்கும் மேலிருக்கும். மிகவும் சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து பெண் எடுத்திருந்த நண்பனின் வேண்டுகோள். அப்போது இவன் குடும்பம் முழுவதும் அமெரிக்கா போய் செட்டில் ஆகி இருந்தது. நண்பனின் மாமியாரும் இந்தமூத்தமச்சினனும்மட்டும்தான் இந்தியாவில்தொடர்ந்துஇருந்தார்கள்இவர்களையும்எப்படியாவதுஅமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது நண்பனின் எண்ணம். ஆனால் இவர்களுக்கு அங்கே போய் செட்டில் ஆவதில் விருப்பம் இருக்கவில்லை பல.விதமான தூண்டுதல்களுக்குப் பிறகு அமெரிக்கா போய் வர சம்மதம் தெரிவித்தார்கள். ஒரு முறை அங்கு வந்தால் தொடர்ந்து அங்கு இருக்க சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு உண்டு என்று நினைத்து அவர்களை அமெரிக்காவுக்குக்கூட்டிச் சென்றார்கள்.ஆனால் இவர்களுக்கு அமெரிக்கா பிடிக்கவில்லை. நான்கைந்து மாதங்களில் திரும்பிவிட்டனர், இந்த சமயத்தில்தான் மேற்கண்ட நண்பனின் வேண்டுகோள். மச்சினன் ரயில்வேயில் வேலையிலிருந்தான். சகோதரிகள் திருமணம் சகோதரர் படிப்பு என்பதிலேயே கவனமாயிருந்த மச்சினன் மணம் செய்து கொள்ளவில்லை. மாமியாரும் அதிகம் படித்திராத கட்டுப் பெட்டிப் பெண்மணி. அமெரிக்கா போய் வந்த பிறகு மச்சினன் திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்திருந்தான். நாற்பது வயது தாண்டியவனுக்கு வரன் கிடைப்பது எளிதாயிருக்கவில்லை. இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் வேலையாகி திருமணம் முடிந்து அயல் நாட்டில் குடிபுகுந்த பிறகு மச்சினனுக்கு திருமணம் பற்றியப் பேச்சு வந்தது. இவர்கள்குடியிருந்தவீடுபெரிதாக்கப்பட்டது;புதுப்பிக்கப்பட்டது.ஒருநாள்,வேலையில் இருந்த மச்சினன் திடீரென்று பக்கவாதம் தாக்கிக் கீழே விழுந்திருக்கிறான். ரெயில்வே மருத்துவமனையில் சேர்ப்பிக்கப் பட்டான். அவனது தாயாருக்குச்செய்தி தெரிவிக்கப்பட்டது. ஒருவாறு எப்படியோ மகள்களுக்கும் மகன்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

உடனே ஓடிவரும் நிலையில் யாரும் இருக்கவில்லை. அவனது சகோதரியின் கணவன்   ( என் நண்பன் )இரண்டு நாள் கழித்து வந்தான். ஆனால் வந்தவன் முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.ரெயில்வே மருத்துவர்கள் அங்கு நாள்பட வைத்து சிகிச்சை அளிக்கத் தயங்கினார்கள். ஆனால் நண்பனுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை.ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்கள். மனைவியின் தம்பி. மூத்த மச்சினன். செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லும் அவனது உறவுகள். சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் சேர்த்தான். வயதான மாமியார் ஒத்தாசைக்கு என்று முன் வர யாரும் இல்லை. என்ன செய்வது என்று மனமொடிந்து போனான் நண்பன். விஷயம் கேள்விப்பட்டு நானும் அவன் மச்சினனைப் போய்ப் பார்த்தேன். அவர்களது குடும்பத்தார் அனைவரையும் அறிவேன். நான் அங்கு சென்று பார்த்தபோது மனம் ஒடிந்து போயிற்று. நண்பனின் மச்சினனுக்கு உடல் முழுவதும் செயல் இழந்திருந்தது. எந்த ஒரு உறுப்பும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. கோமா நிலைக்குப் போயிருந்தாலாவது அவனது நிலைமை குறித்து அவனுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் கொடுமை என்ன வென்றால் அவனது மூளை நன்கு செயல் பட்டு சுற்றி நடப்பது எல்லாம் அறிந்து கொண்டு இருந்தது. கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலை பாயும். வந்தவர் யாரென்று நன்கு தெரியும் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வரும் ட்யூப் வழியே உணவு செலுத்தப் பட்டது. நாம் அவனைப் பார்த்து ஆற்றாமையால் கலங்கினால் மேலும் அவனது மனம் சங்கடப்படக்கூடும். என் நண்பன் தினமும் காலையில் மருத்துவ மனைக்குச் செல்வான். அவனருகில் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடிக் கூறி கையைத் தடவிக் கொடுப்பான். மருத்துவர்கள் ஏதும் சொல்ல முடியாது என்றனர். தேறிவரலாம் , தேறாமலேயே போகலாம்  என்றார்கள். அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால் ‘நல்ல வேளை .இவனுக்குத் திருமணம் ஆகவில்லை ஆயிருந்தால் இவனைக் கல்யாணம் செய்த பாவத்துக்கோ புண்ணியத்துக்கோ அந்தப் பெண் கஷ்டப் பட வேண்டி இருந்திருக்கும்

என்னதான் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும் ஒரு நாளா இரண்டு நாளா வாரமா மாதமா தெரியாது. செலவு ஏறிக்கொண்டே போய் ஒரு நிலையில் ச்சே என்று ஆகிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்த வந்த நண்பன் ஒரு மாதம் முடிந்தவுடன் அவன் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா. அவன் சென்று விட்டான். படிப்பறியாத் தாய் தினமும் தூரத்திலிருந்து மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருக்க முடியுமா. சில நாட்கள் கழித்து நண்பனின் இன்னொரு மச்சினன் வந்தான் அவனும் ஓரிரு வாரங்களில்  திரும்ப வேண்டியதாயிற்று,

இதற்கு நடுவில் வீட்டில் இருந்த முக்கிய தாஸ்தாவேஜுகள் பற்றின சேதி யாருக்கும் தெரியவில்லைதெரிந்தநண்பனின் மச்சினனும் ஏதும் செய்ய இயலாத நிலையில். முக்கிய பேப்பர்கள் வைத்துள்ள இடம்தெரிய மருத்துவ மனையில் இருந்தோர் அவனிடம் communicate  செய்ய ஒரு வழியைக் கண்டனர். பேசுவது புரிந்து கொள்ளும் அவனிடம் ஒரு அட்டையில் எழுத்துக்களையும் எண்களையும் காட்டி இவர்கள் கேட்க விரும்புவதை வாய்மொழியில் கேட்டு பதிலை சொல்ல விரும்பும் வார்த்தையின் spelling ஆக கூற ஒவ்வொரு எழுத்தையும் ஆம் என்றால் கண்களை மூடித்திறக்கக் கூற பயிற்சி அளித்தனர். இவ்வாறு கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்ட பதில் மூலம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இது எழுதியது போல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா.?வயாதான தாயை என்னென்னவோ சொல்லி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இவனை மருத்துவ மனையின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு ஆகும் செலவுகளை அமெரிக்காவிலிருந்து கொண்டே செய்தனர். இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தது ஏறத்தாழ ஐந்து வருடங்கள் இருக்கும். கடைசியில் ஒரு நாள் அவன் இவ்வுலகை விட்டு நீத்தான் எல்லோரும் இருந்தும் யாருமற்றவனாக இறந்தான்

உறவினருக்கு தங்களால் ஆனதைச் செய்த திருப்தி. அவ்வளவு செலவும் வைத்தியமும் பலனளிக்கவில்லை. இந்தக் கேஸ் இப்படி என்றால் நான் முன்பொரு முறை  ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும் என்று பதிவு செய்திருந்த கேஸ் (அவசியம் பார்க்க ) அண்மையில் அப்பாதுரை எழுதி இருந்த ‘கோமதி என்றொரு அழகி ( அதுவும்  கற்பனையாய் இருந்தாலும்) மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. பணம் இருப்பவர் வைத்தியம் பார்த்தோம் முடியவில்லை என்ன செய்வது என்று இருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் எதுவும் எதிர்பார்க்கும் பலனளிக்காது என்று தெரிந்தும் ஏதோ ஒரு உந்துதலால் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தொடரும் வாழ்க்கை ....
சில நேரங்களில் இதனால் ஏற்படும் விரக்தி வெறுப்பையே வளர்க்கும் வாய்ப்புண்டு. காரண காரியங்களை ஆராயப் போனால் பதிலேதும் கிடைப்பதில்லை. ஆனால் நம்மை நாமே சமாதானப் படுத்த ஒரு காரணமும் தேவைப் படுகிறது. பதில் சொல்லத் தெரியாக் கேள்விகள். தெரிகின்றமாதிரி ஏற்றுக்கொண்டு காலத்தைத் தள்ள வைக்கும் சில பதில்கள்.



இதை சற்றே ஊன்றி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஐந்து வருடம் மருத்துவ மனையில் இருந்து உயிர் விட்ட நண்பனின் மச்சினன் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால்,..... மருத்துவச் செலவு அவர்கள் கைகளையும் மீறிப் போயிருந்தால்.....இவன் இப்படி ஒரு vegetative state-ல் இருந்து கஷ்டப் பட வேண்டிய காரணம்......என்ன நினைப்பில் தொடர்ந்து வைத்தியம் பார்க்க வைக்கிறது. . இதனால் யாருக்கு என்ன லாபம். .... மருத்துவமனையில் இருந்தவனின் மனநிலை.... சிந்தித்துப் பாருங்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல் பதில் சொல்லவோ செயல்படவோ முடிகிறதா?.


இதிலாவது நண்பனின் மச்சினன் ஐந்து வருட மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இறந்து விட்டான் இருக்கும் வரை முடிந்த அளவு செலவு செய்து மருத்துவம் பார்த்துவிட்டோம் என்று மனதை தேற்றிகொள்ளலாம். மருத்துவம் பார்க்க முடியாமல் போயிருந்தால் குற்ற உணர்ச்சி அவர்களை வாட்டி எடுக்குமா?. நான் குறிப்பிட்டு இருக்கும் பதிவில் வரும் ஜாக்கி மணியின் இரு மகன்களும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் படுக்க வைத்த மரம் போல் இன்னும் இருக்கிறார்களே. மணிக்கும் வயதாகிறது இயலாமை தெரிகிறது. அவரது காலத்துக்குப் பின் அவரது மகன்கள் என்னாவார்கள்......?பக்கவாதத்தால் ஏதும் செய்ய இயலாத கணவன். எதையும் தானாகச் செய்ய முடியாத இரு மகன்களுடன் அல்லல்படும் பெண்மணியை இயக்குவது எது.?அவளுக்கு வாழ்வில் ருசிக்க என்ன இருக்கிறது. ?அவளது உந்து சக்தி எது..? 



தெய்வக் குழந்தைகள் என்று மனம் தேற்றி எதையும் தானாகச் செய்ய முடியாத குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் மனநிலை என்ன.?அந்தக் குழந்தைகள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்காவது தேறினால் போதும் என்று நினைக்கும் பலரைப் பற்றிப் படித்தும் கேட்டும் இருக்கிறேன். இந்த மாதிரி இருக்கும் உயிர் பிணங்களுக்கு ( வார்தை கடுமையாய் இருந்தாலும் அதுதானே நிஜம் ) அவர்களைப் போஷிக்கும் தாய் தந்தையரின் காலத்துக்குப் பின் ( எல்லோரும் சாசுவதமா என்ன ?)என்னாகும். மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டு எப்படியோ உயிர் பிழைத்து வந்து எதையும் செய்ய இயலாத நிலையில் மீண்டுமொரு கைக்குழந்தையாய் மனைவியால் பராமரிக்கப் படும் அவல நிலையும் தெரிந்து இருக்கிறேன். அந்த மனைவியின் காலத்துக்குப் பின் அவர் கதி என்ன?. அன்பும் ஆசையும் மட்டும் போதுமா.? கூடவே இருந்த பராமரிக்கும் எண்ணமும் தேவை அல்லவா.?நாம் பெற்றவற்றிடமிருந்து அதை எதிர் நோக்குவோம். அவர்களுக்கும் இந்தப் பராமரிப்பால் என்ன லாபம்.? மனம் வெறுத்துப் போய் விடாதா.? கேள்விகள்....கேள்விகள்....கேள்விகள்.....பதில் அறியாக் கேள்விகள் இருந்துவிட்டுப் போனால் பரவாயில்லையே. நாளை நமக்கும் இந்த மாதிரியான நிலை வராது என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா. ஊழ் என்றும் விதி என்றும் சமாதானப் படுத்திக்கொள்ள முடியுமா. ? விலங்குகள் இந்த மாதிரி சூழ்நிலையை எவ்வாறு அணுகுகின்றன. ? விலங்கு நிலையே தேவலாமா.?இல்லாத ஒன்றையோ அறியாத ஒன்றையோ துணை நாடி தேற்றிக் கொள்ள வேண்டுமா.?அறியத் துடிக்குது மனசு. அறியாமையே எங்கும் விரவிக் கிடக்கிறது. பதிலறியாக் கேள்விகள் நடுவே.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது பராமரிக்க இயலாமல் கைவிடப் பட்டவர்களுக்கு உறுதுணையாய் ஒரு காப்பகம் நடத்தி காத்துவரும் என் நண்பன் மதுசூதனனின் செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதோடு வணஙக வைக்கவும் செய்கிறது.இந்த எண்ணங்களே என்னை “அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள் “ எனும் பதிவை எழுத வைத்தது.உதவ எண்ணம் தெரிவித்தவர்கள் “நன்றே செயினும் இன்றே செய்கஎன்றபடி உடனே உதவ வேண்டுகிறேன். என் கடந்த பதிவில் முகவரி தொலைபேசி எண் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறேன். 
Please follow up your donations with a e.mail so that they can know who has sent them and accordingly acknowledge Thanks. 


-------------------------------------------------------------------
 

 













.

.
      .  









.

.