அம்பர்நாத் அலும்னி சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பர்நாத் அலும்னி சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மார்ச், 2016

ATS AMBERNATH ALUMNI MEET



                        ATS AMBERNATH ALUMNI MEET
                        ---------------------------------------


இரண்டு மூன்று மாதங்களாக எதிர் பார்த்திருந்த அம்பர்நாத் அலும்னி சந்திப்பு ஃபெப்ருவரி 27 மற்றும் 28 தேதிகளில்  இனிதே நடந்து முடிந்தது. அம்பர்நாத் அலும்னி சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்  ஏறத்தாழ அனைவரும் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அம்பர்நாத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் ஏன் சிலர் வெளிநாடுகளிலும் கிதறிக் கிடக்கிறார்கள் கிட்டத்தட்ட 15 பேட்சுக்கும் மேல் இருக்கிறார்கள் அவரவர் பாட்ச் நண்பர்கள் தவிர ஏனையோரை நினைவில் வைத்திருப்பதே அசாத்தியம் சந்திப்புக்கு வந்திருந்தோர் எண்ணிக்கை  350 பேருக்கும் மேல் இருக்கும்  பலரும் தங்களதுமனைவியருடன் வந்திருந்தனர் அயல் நாடான அமெரிக்கா கனடா ஜெர்மனி போன்ற இடங்களிலிருந்தும் வந்திருந்தனர்   


எனக்கு அடிப்படையில் ஒரு சந்தேகம் இருந்தது அறிமுகம் கூட இல்லாத இத்தனை முதியவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்திதான் என்ன.? இந்தக் கேள்வியைப் பலரிடமும் கேட்டேன் பெரும்பாலும் பதில் கூறியவர்கள் இந்த சந்திப்பை அந்த பயிற்சிப்பள்ளிக்கே சமர்ப்பித்தனர்  ஒவ்வொருவரும் அவரது இப்போது இருக்கும் நிலைக்கு அந்தப் பள்ளியில் பயின்றதே காரணம்  என்கின்றனர். அதுதான் உண்மையுங்கூட. உலகம் தெரியாத வயதில் அந்தப் பயிற்சிப்பள்ளி அனைவரிடமும் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறது எதையும் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை. அது அவரவர் வாழ்வில் நிதர்சன உண்மையாய் இருக்கிறது பயிற்சிக்காலத்துக்குப் பிறகு நான் ஒரு மினி இந்தியாவை அந்த சந்திப்பில் கண்டேன்


வலைப்பதிவர் சந்திப்புகளிலாவது அவரவர் வலைத் தளங்கள் மூலம் ஒருவர் பற்றிய சில கணிப்புகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கலாம்

 ஆனால் இங்கோ இந்தியாவின் பல கோடிகளிலிருந்து  நிறையவே பணம் செலவு செய்து கலந்து கொள்ளப் பதிவுக்கட்டணமும் செலுத்தி இரண்டு நாள் பொழுதைக் கூடிக் கழிக்கும் ஆர்வமே இருந்தது. வயதானோர் பலருக்கும் பயணம் செய்யவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் இந்த சந்திப்பு வழிவகுத்தது எனலாம் மூன்று மாதம் முன்பே திட்டமிட்டுக் கலந்து கொள்ளப் பெயரும் பதிவுக் கட்டணமும் கொடுத்து டிக்கட்களையும் எடுத்தவர்களில் சிலர் திரும்பவராத இடத்துக்கு இந்த சந்திப்புக்கு முன்பே பயணப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மை.
இந்த சந்திப்புக்காகவே பெங்களூரு சாப்டர் துவங்கப் பட்டதுஇந்த சாப்டரின் பொறுப்பை ஏற்று இந்த சந்திப்புக்கு வழிவகுத்த நண்பர்கள் இந்த வயதிலும் அயராது உழைத்து சந்திப்பு வெற்றிகரமாக நடக்கப் பேருதவியாய் இருந்தனர்



சந்திப்பு பெங்களூரில் பீன்யா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெகு அருகே இருக்கும் PLATINUM CITY APARTMENT- ல் நடந்தது. வருகையை ஜனவரி 7-ம் தேதிக்கு முன்பே உறுதி செய்யும் விதமாக  பதிவுக் கட்டணம்  வசூலிக்கப் பட்டது தனி நபருக்கு ரூ 1500-ம் மனைவியோடு வருபவருக்கு ரூ 2500-ம் வசூலிக்கப்பட்டதுபெரும்பாலோருக்கு அவர்கள் சௌகரியப்படி தங்கும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது தங்குமிடமும்  அதே அபார்ட்மெண்ட் வளாகத்திலேயே இருந்தது சிங்கிள் ரூம் டபிள் ரூம் சாதாரணம்  குளிரூட்டப்பட்டது என்று தேவைக்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது இரண்டு நாட்களுக்கும் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது


ஆர்டிசான் ட்ரெயினிங் ஸ்கூல்  என்று அழைக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி அம்பர்நாத் என்னும் இடத்தில் 1950 களில்  மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முயற்சியால்  பாதுகாப்பு துறையின் கீழ் சுவிட்சர்லாந்து  ஓர்லிகன் கம்பனியினருடன்  கூட்டு முயற்சியாகத் துவங்கப் பட்டு சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக பயிற்சி அளித்திருக்கிறது பொறி இயல் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டது அந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றோருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது அதில் பயிற்சி பெற்றோர் முதலில் ordinance factory  களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் எச் ஏ எல் –ல் போதிய பயிற்சி வசதிகள் இல்லாததாலும்  அம்பர்நாதில் இருக்கும் வசதிகளைப் பயன் படுத்தும்  முறையிலும் சிலரைப் பயிற்சிக்கு  அனுப்பினர் அம்மாதிரி அனுப்பப்பட்டவர்களின் முதல் பாட்சில் நானும் இருந்தேன்1957-1959 வரை இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்
 2010 –ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற ஆலும்னி சந்திப்புக்கு நான் சென்றிருக்கிறேன்  அது பற்றி ஒரு பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்
 இந்த மாதிரி சந்திப்புகள் புனே ஜபல்பூர் கொல்கத்தா கான்பூர் கோவை மும்பை போன்ற இடங்களில் இதற்கு  முன்  நடந்திருக்கிறது. முதன்  முதலாக இப்போது பெங்களூருவிலும்  நடந்தது சந்திப்பு பற்றிய பிற தகவல்கள் பின் வரும் பதிவில் தொடரும்


பெங்களூரு சாப்டர் கமிட்டி உறுப்பினர்கள்