ஆட்டுக்கு வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்டுக்கு வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நான் நானாக


                நான் நானாக 
               --------------------------
 தொடர்ச்சி( சுய சரிதையில் இருந்து சில பக்கங்கள்)
திருச்சியில் நேர்காணலில் வெற்றிகரமாக தேர்வாகினேன்  பணி நியமன உத்தரவு சில தினங்களில் வரும் என்றார்கள் அங்கு பணியிலிருந்த ஓரிருபழையநண்பர்கள்   எனக்கு கை குலுக்கி வாழ்த்து கூறினார்கள் லூகாஸ் ட்விஎஸ்ஸில் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டென்  அங்கு நான் பணியில் சேர்ந்து  ஓராண்டு காலமானால் ஒரு காலண்டர் மாத   நோட்டிஸ் கொடுக்கவேண்டும் ஒராண்டுக்குமுன்னால் 15 நாட்கள் நோட்டீஸ் போதும் பீ எச் ஈ எல்லில்  உதவி எஞ்சி நீர் பதவி  அதாவது  நேரடியாக அதிகாரியாக நியமனம் மேலும்  லூகாசில் எப்பவும் பணி பற்றிய பயம் ஒரு கால்குலேடெட் ரிஸ்க் என்று தோன்றியது  துணிந்து பணி நியமனம்முன்பே ராஜினாமா கொடுத்து விட்டேன்ON HIND SIGHT  அது தவறோ என்று நினைத்தது உண்டு   என் எந்த செயலுக்கும் நான் தான்பொறுப்பு என்று நம்புபவன் நான்   
எனக்கு பணிநியமன உத்தரவு வந்தது ஏமாற்றமளித்ததுசம்பளத்தில் மாற்றம் இல்லை என்றாலும்   அதிகாரி யாக அல்ல ஒரு நிலை கீழே என்னும்போது வருத்தமடைந்தேன் அவர்களிடம் தொடர்பு கொண்டபோது என் படிப்புக்கு  ஏற்ற வேலைதான் என்றார்கள் முந்தைய கம்பனியில் ராஜி நாமா கொடுத்தாகி விட்டது வேலை இல்லாமல் இருக்க முடியாது இக்கட்டான நிலை
முதல் நாள் வேலைக்குப்போனபோது  உதவி எஞ்சி நீரின்  ஆஃபீசைப்பார்த்தேன்
பெரிய அறை  நடுநாயகமாக இருக்கை நல்ல பதவி போயிற்றோ என்று முதலில் தோன்றியது உண்மை
 அதே எஞ்சிநீர் பதவிக்கு வர எனக்கு  ஆறாண்டுகாலத்துக்கும் மேல் ஆயிற்று  என்னை நேர்காணலுக்கு அழைத்தபோதே என்  குவாலிஃபிகேஷன்  தெரிந்ததுதானே பின் ஏன் இப்படி  என்று புரியவில்லை என் குடும்பசூழ்நிலை என்னைக் வேறு எந்த முடிவையும்  எடுக்க வைக்கவில்லை  நான்முதன் முதலில் பணிக்குப் போயிருந்தபோது அந்த அறையில் வீற்றிருந்தவர் பொது மேலாளருக்கும் மேல்நிர்வாக  இயக்குனராக பதவி உதவி  பெற்றார்
எல்லாம் ஒரு பட்டப் படிப்பு இல்லை என்பதால் அல்லவா பட்டப் படிப்பு என்றாலேயே  ஒரு காழ்ப்பு உணர்ச்சி ஏற்பட்டது ஆனால் நான் பணியில்  இருந்தபோது மிகுந்தமதிப்பு பெற்றிருந்தேன்   என்கீழ் பட்டப்படிப்பு படித்தவர்கள்   பணி புரிந்தார்கள் பலபட்டப் படிப்பு  பெறும்  மாணவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன்   எந்த சூழ்நிலையிலும் என்னை யாரும் குறை கூறியதில்லை மொத்தத்தில்  என்னை யாரும்பட்டம்பெறாதவன் என்று எண்ணியதில்லை தொழிலில் திறமைபெற்றவன்  என்னும் பெயர் பெற்றேன்    இருந்தாலும்  தொழிலில் மதிப்பு பெற்றால் மட்டும்போதுமா  பட்டம் மட்டும்பெற்றிருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பேன்அடிக்கடி நான்நினைவு கூர்வது ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைதான்
என்சோகக் கதையை வாசிக்கும் வாசகர்களே நான்  நானாகவே இருந்திருக்கிறேன்  எந்த தலை குனிவும் இல்லை பட்டம் படித்தவர்களுக்கு நான்பட்டம் பெறாதவன் என்பதே  தெரியாதபடி சிறந்து  விளங்கினேன்  
ஆனால் மனதின் ஆழத்தில் நான் எங்கோ சென்றிருக்க வேண்டியவன் என்னும்குறை இருந்து கொண்டே இருக்கிறது