ஒரு பதிவும் அதன் தாக்கங்களும்
----------------------------------------------------
ஒரு
பதிவும் அதன் தாக்கங்களும்
---------------------------------------------------------------
என்ன
எழுதுவது என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோதுபல பழைய இடுகைகளையும் வாசிக்க நேர்ந்தது எழுதுவது உரியபடி வாசகர்களுக்குப்போய் சேருகிறதா
என்னும் என் கேள்விக்கு அர்த்தமில்லை என்று புரிந்தது எத்தனை வித தாக்கங்கள் பின்னூட்டங்கள் . மேலும் என் எழுத்துகளைப் படிப்போரின் எண்ணிக்கை
நாள் தோறும் கூடிக்கொண்டே போகிறது இது ஒரு
உந்துகோல்தான் முன்பு எழுதிய இடுகைக்கு வந்தபின்னூட்டங்களும்
இதிலிருந்து புறப்பட்ட எண்ணங்கள் எப்படி இன்னும் எழுதுவதற்கு துணை நின்றதுஎன்றும் கூறவே
இந்த இடுகை 2015 ல் நீதிகேட்கிறேன் என்னுமொரு பதிவு எழுதி (சொடுக்க)இருந்தேன்பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன் அவசியம் பின்னூட்டங்களை பார்க்கவும்
ஒரு பின்னூட்டமிவ்வாறு கூறுகிறது/
ஆனால் இக்குரல், உங்களின் குரல் இன்றொலிக்கப்பட்டதன்று.
பலநூற்றாண்டுப் பாரம்பரியம் இக்குரலினுக்கு உண்டு.
பதிவின் டிராஃபிடில் இடுவதா வேண்டாமா என இருமனநிலையின இடையில் தூங்கும் நான்கைந்து பதிவுகளில் இதன் கதையும் இருக்கிறது.
பலநூற்றாண்டுப் பாரம்பரியம் இக்குரலினுக்கு உண்டு.
பதிவின் டிராஃபிடில் இடுவதா வேண்டாமா என இருமனநிலையின இடையில் தூங்கும் நான்கைந்து பதிவுகளில் இதன் கதையும் இருக்கிறது.
பின் ஒரு இடுகையும் வந்தது
அதன் சுட்டி இங்கே
கடவுள் இருக்கிறான்
என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது
எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன்
அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும்
பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.
ஒருபுறம், ‘இது என் தெய்வம், அதன் வல்லமையைக் காண்!’ என்றெல்லாம் பக்தியின் பரவசத்தில் ஒரு தரப்பு, மக்களை வசீகரித்த போது,
இன்னொரு புறம் எதையும் கேள்வி கேட்டு, ‘நீ சொல்வதை அப்படியே நான் ஏன் ஏற்கவேண்டும்?’ என்ற அறிவிற்கே உரிய
ஆண்மையோடு மிகச்சிலர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து அவர்கள் கொள்கைகளைக்
கேள்விக்குள்ளாக்கினர்.
அதுவே உலகாயதம்.
உலகாயதத்தின் குரல் – கடவுளைக் கொன்றவனின் குரல்
. என் பதிவு நீதி கேட்கிறேன் -ல் நான் எங்கும் கடவுள் மறுப்பு பற்றி கூறவில்லை. உண்டு இல்லை என்னும் இருமையை மீறி தெரியாது என்னும் நிலைப்பாட்டுடையவன். ஆனால் கடவுளின் பெயராலும் மதங்களின் பெயராலும் அநீதிகள் இழைக்கப் படுவதை நான் சாடி எழுதி இருக்கிறேன் இறைஇயல் நமக்கு நல்ல இலக்கியங்களைத் தந்திருக்கிறது மறுக்க முடியாது.இராமாயண காலம் முதற்கொண்டேநாத்திக வாதம்( ஜாபாலி) இருந்து வந்திருக்கிறது திரு இளங்கோ சொல்வது போல் உலகாயுதம் என்பது
MATERIALISM என்று பொருள் கொள்வதாயிருந்தால் அது எனக்கு உடன்பாடே. ஆனால் அதுவே கடவுள் மறுப்பு என்று சொல்வதானால் நிறைய சிந்திக்க வேண்டியதே
உங்களின் பதிவு காண எனக்கு உலகாயுதம் குறித்து நானறிந்த கருத்துகள் தோன்றின. அது என் பார்வைக் கோளாறினாலோ அல்லது என் கருத்தின் பிழையாலோ நேர்ந்திருக்கும்.
உலகாயுதம் என்பதைச் சமயிகள் எடுத்து மறுப்பதை நோக்க நான் முதன்மையாகக் கண்டது அவர்கள் இறைமறுப்பாளர்கள் என்பதனையே...!
அதை வலியுறுத்த அவர்கள் பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொள்கின்றனர். உலகாயதம் என்னும்பதிவில் கண்டதை யெல்லாம் கூறுவதை விட அந்த இடுகையைப் படித்து அறிந்து கொண்டால் நலமாயிருக்கும்
உலகாயுதம் என்பதைச் சமயிகள் எடுத்து மறுப்பதை நோக்க நான் முதன்மையாகக் கண்டது அவர்கள் இறைமறுப்பாளர்கள் என்பதனையே...!
அதை வலியுறுத்த அவர்கள் பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொள்கின்றனர். உலகாயதம் என்னும்பதிவில் கண்டதை யெல்லாம் கூறுவதை விட அந்த இடுகையைப் படித்து அறிந்து கொண்டால் நலமாயிருக்கும்