கணினி என்னைக் கவிழ்க்குமோ.?
---------------------------------------------
கடந்த ஒருவார காலம் என் கை ஒடிந்ததுபோல் இருந்தது. கணினியைத் திறக்க முடியவில்லை.எந்த வலைப் பூவையும் படிக்க முடியவில்லை. எதுவும் எழுதவும் முடியவில்லை. கடைசியாய் இட்ட பதிவு ஏற்கனவே DRAFT ஃபார்மில் இருந்ததால், என் பேரனிடம் அதை பிரசுரிக்கச் சொன்னேன். எந்த ஒரு வலைப் பூவையும் திறக்க முயன்றால் SERVER NOT FOUND என்று முகத்தில் அடித்தாற்போல் செய்தி வந்து கொண்டிருந்தது. BSNL-ல் புகார் கொடுத்தால் அவர்களது CALL செண்டரில் இருந்து என்னென்னவோ சரி பார்க்கச் சொல்ல அதை நான் தட்டுத்தடுமாறி செய்து முடிக்க பலன் பூஜ்யம். அவர்கள் டெக்னிஷியனை அனுப்புகிறோம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் மோதி ஒருவழியாய் அவரும் வந்தார். கால் செண்டரிலிருந்து என்னிடம் சொன்ன அதே விதமாக அவரும் முயன்று கனெக்ஷன் எல்லாம் சரியாக இருக்கிறது. உங்கள் கணினியில்தான் ஏதோ பிழை இருக்கலாம் என்று சொன்னார். என் கணினியை அருகில் இருந்த மணினி செர்வீஸ் செண்டருக்கு அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர்கள் கணினியில் பிழை ஏதும் இல்லை, BSNL இணைப்பில் தான் தவறு இருக்க வேண்டும் என்றார். மீண்டும் அவர்களை அணுகிய போது எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ப்ளாகர் செர்வரில் ஏதோ குறை என்றனர். நான் இதே வலைப்பூக்களை வேறு இடத்தில் இருந்து உபயோகிக்க முடிகிறது என்று கூறி அவர்களை எங்கு தவறு என்று கண்டு சரிசெய்ய வேண்டினேன். ஒரு வழியாய் ஒருவருக்கு இருவராய் வந்து என்னென்னவோ செய்து என் வலைப் பூவைத் திறக்கச் செய்தனர். எனக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. முதலில் இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. யாருடைய பதிவையும் படிக்க முடியவில்லை. பின்னூட்டமுன் எழுத முடியவில்லை. இதோ இனி வழக்கம் போல் பதிவிடலும் கருத்திடலும்நடக்கும். என்று நம்புகிறேன். வலையில் நான் எழுதாததால் எந்தக் குடியும் மூழ்காது என்று என் மனைவி ஆறுதல் (? ) கூறினாள்.!
------------------------------------------------------------------------------------