கற்ற பாடம் கதையாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்ற பாடம் கதையாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 அக்டோபர், 2018

கற்ற பாடம்



                                                  கற்ற பாடம்
    காந்திஜியின் வாழ்வில் இருந்து கற்ற போதனை
காந்திஜியிடமிருந்து நான் கற்றுக் கொண்டது பொய்  கூறாமை கூடியவரைகடைபிடிக்கிறேன்  நண்பரின்  பதிவு ஒன்றுக்கு நான்  எழிதிய பின்னூட்டத்தில் நான்  எழுத்ய கதை  ஒன்று பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அதே இப்போது மீள் பதிவாக                                               ------------------

  என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்பும் கதை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்தபோது என் தந்தையின் அலுவலகம் சுமார் எட்டு மைல் தூரத்தில் இருந்தது. அவர் தினமும் தன் சைக்கிளில் போய் வருவார். ஒரு நாள் ”உடல் சோர்வாக இருக்கிறது .இனறு அலுவலகத்தில் முக்கிய வேலை இருக்கிறது. விடுப்பு எடுக்க முடியாது. அதனால் ப்ளீஸ் இன்றைக்கு மட்டும் ஒரு நாள் நீ என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விடு. மாலை ஐந்து மணிக்கு சரியாக வந்து என்னை கூட்டிக் கொண்டுவா”என்று கேட்டுக் கொண்டார். வீட்டிலும் டௌனில் சில வேலைகள் கொடுத்தார்கள் நான் தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு வந்தேன். எப்படியும் மாலை அவரைக் கூட்டிவர டௌனுக்குப் போகவேண்டும்.எனக்கு ஒரு ஐடியா தோன்றியது,அவரைக்கூட்டிவர ப் போவதாக வீட்டில் சொல்லி சீக்கிரமாகவே கிளம்பிப் போய் ஒரு தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்கப் போனேன் ஷோ முடிந்து நான் தந்தையின் அலுவலகத்துக்குப்போகும் போது நேரம் ஆகி யிருந்தது. என்னைப் பார்த்ததும் அவர் என்னிடம் “ஏன் லேட்” என்று கேட்டார். எனக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. சைக்கிள் பங்க்சர், வழியில் நண்பனைப் பார்த்தேன், வீட்டுக்கு வேண்டிய சில சாமான்களை வாங்குவதில் நேரம் ஆகி விட்டது என்று ஏதேதோ உளறினேன், அந்தநேரம் பார்த்து தியேட்டரில் என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவன்”படம் நன்றாக இருந்தது இல்லையா.” என்று போகும் வழியில் சொல்லிப் போனான். என் தந்தை மிகவும் வருந்தினார். “என்னிடமே உண்மையைச்சொல்ல முடியாமல் பொய் கூறுகிறாய் என்றால் என் வளர்ப்பில்தான் எங்கோ தவறு. அதற்கு எனக்குத் தண்டனையாக உடல் நலமில்லாவிட்டாலும் இந்த எட்டு மைலையும் நான் நடந்தே வருகிறேன்”என்று சொல்லி என்ன சொல்லியும் கேட்காமல் நடக்கத் தொடங்கி விட்டார். நானும் அவர் பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனேன். நான் செய்த தவறுக்கு எனக்குத் தண்டனை தராமல் அஹிம்சை முறையில் அவர் தன்னையே தண்டித்துக் கொண்டதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. நான் சொன்ன பொய்க்கு என்னை அவர் அடித்து தண்டனை தராமல் அன்பினால் தண்டித்தது இன்றும் என் மனதை கனக்கச் செய்கிறது. அன்று தெரிந்து கொண்டேன். பயத்தினால் திருத்துவதைவிட அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று.நான் பொய் சொல்வதையும் நிறுத்தி விட்டேன். 
எ
 என் மகன் எனக்கு அனுப்பி இருந்த ஒரு காணொளி காந்தி ஜயந்தி முடிந்ததானாலும்  பெட்டர் லேட் தான் நெவெர்