கற்ற பாடம்
காந்திஜியின் வாழ்வில் இருந்து கற்ற போதனை
காந்திஜியிடமிருந்து நான் கற்றுக் கொண்டது பொய் கூறாமை கூடியவரைகடைபிடிக்கிறேன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு நான் எழிதிய பின்னூட்டத்தில் நான் எழுத்ய கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அதே இப்போது மீள் பதிவாக ------------------
என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்பும் கதை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்தபோது
என் தந்தையின் அலுவலகம் சுமார் எட்டு மைல் தூரத்தில் இருந்தது. அவர் தினமும் தன்
சைக்கிளில் போய் வருவார். ஒரு நாள் ”உடல் சோர்வாக இருக்கிறது .இனறு அலுவலகத்தில்
முக்கிய வேலை இருக்கிறது. விடுப்பு எடுக்க முடியாது. அதனால் ப்ளீஸ் இன்றைக்கு
மட்டும் ஒரு நாள் நீ என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விடு. மாலை ஐந்து
மணிக்கு சரியாக வந்து என்னை கூட்டிக் கொண்டுவா”என்று கேட்டுக் கொண்டார். வீட்டிலும் டௌனில்
சில வேலைகள் கொடுத்தார்கள் நான் தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவரது
அலுவலகத்தில் விட்டு விட்டு வந்தேன். எப்படியும் மாலை அவரைக் கூட்டிவர டௌனுக்குப்
போகவேண்டும்.எனக்கு ஒரு ஐடியா தோன்றியது,அவரைக்கூட்டிவர ப் போவதாக வீட்டில் சொல்லி
சீக்கிரமாகவே கிளம்பிப் போய் ஒரு தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்கப் போனேன் ஷோ
முடிந்து நான் தந்தையின் அலுவலகத்துக்குப்போகும் போது நேரம் ஆகி யிருந்தது.
என்னைப் பார்த்ததும் அவர் என்னிடம் “ஏன் லேட்” என்று கேட்டார். எனக்கு உண்மையைச் சொல்ல
முடியவில்லை. சைக்கிள் பங்க்சர், வழியில் நண்பனைப் பார்த்தேன், வீட்டுக்கு வேண்டிய
சில சாமான்களை வாங்குவதில் நேரம் ஆகி விட்டது என்று ஏதேதோ உளறினேன், அந்தநேரம்
பார்த்து தியேட்டரில் என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவன்”படம் நன்றாக இருந்தது இல்லையா.” என்று போகும் வழியில்
சொல்லிப் போனான். என் தந்தை மிகவும் வருந்தினார். “என்னிடமே உண்மையைச்சொல்ல
முடியாமல் பொய் கூறுகிறாய் என்றால் என் வளர்ப்பில்தான் எங்கோ தவறு. அதற்கு
எனக்குத் தண்டனையாக உடல் நலமில்லாவிட்டாலும் இந்த எட்டு மைலையும் நான் நடந்தே
வருகிறேன்”என்று சொல்லி என்ன
சொல்லியும் கேட்காமல் நடக்கத் தொடங்கி விட்டார். நானும் அவர் பின்னாலேயே
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனேன். நான் செய்த தவறுக்கு எனக்குத் தண்டனை தராமல்
அஹிம்சை முறையில் அவர் தன்னையே தண்டித்துக் கொண்டதை என்னால் இன்றும் மறக்க
முடியவில்லை. நான் சொன்ன பொய்க்கு என்னை அவர் அடித்து தண்டனை தராமல் அன்பினால்
தண்டித்தது இன்றும் என் மனதை கனக்கச் செய்கிறது. அன்று தெரிந்து கொண்டேன். பயத்தினால்
திருத்துவதைவிட அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று.நான் பொய் சொல்வதையும்
நிறுத்தி விட்டேன்.
எ
என் மகன் எனக்கு அனுப்பி இருந்த ஒரு காணொளி காந்தி ஜயந்தி முடிந்ததானாலும் பெட்டர் லேட் தான் நெவெர்
எ
என் மகன் எனக்கு அனுப்பி இருந்த ஒரு காணொளி காந்தி ஜயந்தி முடிந்ததானாலும் பெட்டர் லேட் தான் நெவெர்
அன்பினால் வென்ற தங்களின் தந்தை வணங்குதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குசொல்லப்பட்ட நிகழ்வுகள் கற்பனைக் கதை சார்
நீக்குநல்ல பதிவு. காணொளியைப் பின்னர் பார்க்கணும்.
பதிலளிநீக்குஅவசியம் பாருங்கள்
நீக்குஇந்த சம்பவம் எனது சமீபத்திய நிகழ்வை நினைவூட்டுகிறது ஐயா.
பதிலளிநீக்குஎனது மகன் செய்த தவறைச் சுட்டிக்காட்ட என்னை வறுத்திக்கொள்ள அன்று முழுவதும் நான் சாப்பிடாமல் இருந்தேன்.
அன்று தவறை உணர்ந்து நீங்கள் திருந்தினீர்கள்.
இன்று என்மகன் நீ பட்டினியாய் கிடந்தால் எனக்கென்ன ? என்பதுபோல் இருந்து விட்டான்.
நான் மீண்டும் பட்டினியாக கிடப்பதா ?
தவறு என்மீதுதான் தாயில்லாப்பிள்ளை என்று அன்பை அதிகம் கொடுத்து, இன்று அவதிப்படுகிறேன்.
அன்று உணர்ந்து பார்த்த பிள்ளைகள் இன்று உணர்வதில்லை காரணம் காலச்சுழற்சி அறிவு வேறுபடுகிறது.
கில்லர்ஜி... நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் செய்தது உங்கள் மகனின் மனதில் பதிந்திருக்கும். வயது காரணமாக வெளிப்படுத்த மாட்டார்... ஆனால் அது கல் மேல் எழுத்துப் போல் பதியும். அஹிம்சை முறை எப்போதும் பலனளிக்கக்கூடியது.
நீக்குகில்லர்ஜி ஒரு கதை மூலம்நான் கற்றடை கூறி இருக்கிறேன் அன்பு இருந்தால்தான் இதெல்லாம்சாத்தியமாகும் உங்கள் மகனுக்கு நீங்கள்பட்டினி கிடந்த்ததன் காரணம்தெரியுமா ஜி
நீக்குநெத நீங்கள் கூறியபடியுமிருக்கலாம் வாழ்வின் மதிப்பீடுகள் முன்போல் இப்போது இல்லை என்பதுமுண்மை நான் தன்னிலை படுத்தி எழுதியது என்வாழ்வின்சம்பவம் போல் அமைந்து விட்டது
நீக்குகாணொளி கண்டு பிரமிப்பாக இருக்கிறது எவ்வளவு திறமை.
பதிலளிநீக்குபலரும் ரசிக்கவே பகிரப்பட்டது
நீக்குதந்தையின் அன்புக் கண்டிப்பு சிறப்பு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
அன்பின் கண்டிப்பு சிறந்தது
நீக்குபதிவை ரசித்தேன். அஹிம்சை எப்படி உங்கள் மனதில் பதிந்துவிட்டது.
பதிலளிநீக்குஉண்மை காந்திக்கு ஒரு அரிச்சந்திரன் நாடகம் தேவைப்பட்டது நானும் இக்கதை மூலம்கற்றேன்
நீக்குகண்டிப்பின் மகத்துவத்தை நான் அறிவேன் ஐயா. இன்று உங்கள் மூலமாக ஒரு புதிய பாடம் கற்றுக்கொண்டோம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஉங்கள் தந்தை செய்தது.. அடித்து ஏசுவதைக் காட்டிலும் மிகப் பெரிய தண்டனைதான்...
பதிலளிநீக்குஇது ஒரு அஹிம்சா வழி
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு