Tuesday, October 9, 2018

ஒரு வித்தியாச அனுபவப்பகிர்வு
                                  ஒரு வித்தியாச அனுபவப் பகிர்வு
                                  -----------------------------------------------------
 ரெகார்ட் டான்ஸ் பர்த்திருக்கிறீர்களா  நான்பார்த்ததில்லை  திருச்சியில்  இருந்தபோது அருகில் இருந்த  டூரிங் டாக்கீசில் ரெகார்ட் டான்ஸ் போடுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்  பெரியமனிதர்கள் என்றுசொல்லப்படுபவர்கள் தலையில் முக்காடிட்டு முகத்தை மூடிக் கொண்டு போவார்கள்  என்றுசொல்லக் கேள்வி எந்த நிகழ்ச்சி காண்பதற்கும்  மனதில் பயம்  கூடாது என்று நினைப்பவன்  நான்
விஜயவாடாவில் இருக்கும்போதுஎனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைப் பகிர்கிறேன் அங்கு ஜெர்மனியிலிருந்து வந்திருந்த  தொழில் நிபுணர்  விஜயவாடாவில் இருக்கும்  இரவு விடுதிகளைப் பற்றி விசாரித்தார் எனக்குத்தெரியவில்லை  என்னை இளக்காரமாய்ப்பார்த்த அவர்  அது குறித்த செய்திகளை இன்னும் சில தினங்களில்  எனக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்  அவர் செய்யக் கூடியவர்தான்  ஓய்வு நாட்களில் விஜய வாடாவுக்கே உரித்தான சைக்கிள்  ரிக்‌ஷாவில் ஊரெல்லாம் பயணிப்பார் எந்த இடத்துக்குப் போனாலும்   அந்த இடத்தின் சிறப்பை அறிய வேண்டுமென்பார் விஜயவாடாவில் கிருஷ்ணா  நதிக் கரைகளில்  துணீகளை சலவைசெய்து காயப்போட்டிருப்பார்கள் உலகத்திலேயே மிகப் பெரிய வாஷிங்மெஷின்  அங்கு பார்ப்பதாகக் கூறுவார்
 அவர் ஒரு நாள் விஜயவாடாவில் இருக்கும் ஒருஇரவு நடன இடத்தைப்பற்றி கூறி விலாசமும் கொடுத்தார் விஜய வாடாப் பெண்களை மிகவும் சிலாகித்துப்பேசினார் எனக்குள் இந்த இரவு விடுதிகளைப் பற்றி  அறிய ஆவல் எழுந்தது ஆனால் தனியே செல்ல சிறிது  பயமாகவும் இருந்தது  என் சீனியர் இவற்றில் கரை கண்டவர்  அவரோடு செல்லக் கேட்டேன்   அவரும் ஓக்கே சொன்னார்  ரெகார்ட் டான்சுகளே பார்க்காத நான் இரவு விடுதிகளில்  நடைபெற்ற STIP TEASE  என்னும்  நடனம் கண்டேன்  முதலில் ஆர்வமாக இருந்தாலும் சிலர் குடித்துசெய்யும் செயல்கள் அச்சுறித்தன அறுவருக்க வைத்தன ஆனால் எந்த விவகாரமும் ஏற்படாமல்  பார்த்துக் கொள்ள  சண்டியர்கள் எனப்படும் பௌன்சர்கள் இருந்தனர் நிலைமை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவினர்  நாங்கள் இரவு பத்துமணிக்குள்  திரும்பிவிட்டோம்
 ஆக நானும்  இரவு விடுதிக்குள் நடப்பதைப் பார்த்து விட்டேன் அப்போதெல்லாம் பட்டதாரி இளைஞர்கள் பயிற்சிக்காக வருவார்கள்அனல் மின் நிலைய கட்டுமானங்களைப் பற்றி அறிந்தால் போதுமா  விஜய வாடாவின்  ஸ்பெஷாலிடி யாக  திருச்சியில் இருக்கும்  உச்சி பிள்ளையார் கோவில் போல மலை முகட்டில் இருக்கும்   கனக துர்க்கா கோவிலையும்  திருச்சியை ஒத்திருக்கும்  காவிரிபோல் அருகே ஓடும்கிருஷ்ணா நதியையும் கண்பித்ததோடு திருச்சியை ஒத்திருக்கும்  விஜயவாடாவின் விவசாய மார்க்கெட்டையும் பற்றிச் சொல்லி வந்தவன்  பேச்சு வாக்கில் அங்கிருக்கும் இரவு விடுதிகள்பற்றியும் கூறிவிட்டேன்  என்ன இருந்தாலும் இளைஞர்கள் தானே கூட்டிப்போகமுடியுமா என்றுகேட்டார்கள்   யான்  பெற்ற இன்பம் பெறத்தானே  கேட்கிறார்கள் சரி என்று கூறி ஒரு வாரக் கடைசி நாளில்  கூட்டிப்போனேன்  நானும் அனுபவப்பட்டவன்தானே  ஆனால் உடன்வந்தவர்களுக்கு குற்ற உண்ர்ச்சி  கண்களில் மிரட்சியுடன் நடனத்தைக்காணத்துவங்கினார்கள் தலைக் கவிழ்த்து மேலோரக் கண்ணால்  பார்த்துக் கொண்டிருந்தனர் பத்துமணி சுமாருக்கு நாங்கள்திரும்பி விட்டோம்  அவர்கள் அந்தநடனக் காட்சிக்கு வந்தது பற்றியாரிடமும் சொல்லக் கூடாது  என்று வேண்டுகோள் வைத்தனர் நானும்சரியென்று சொல்லி  நான் தான் அவர்களைக்கூட்டிச்சென்றேன் என்று அவர்களும் சொல்லக் கூடாது  என்றும்சொன்னேன்   நாமிருக்கும் ஒரு கன்செர்வேடிவ் நினைப்புக்குள்  இது பற்றி நானும் இது வரை சொல்ல வில்லை இப்போதும்  யார்பெயரையும்சொல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் இப்போது அவர்களும் பேரன் பேத்திகள் எடுத்திருப்பார்கள் எத்தனை பேருக்குள் எத்தனை ரகசியங்கள்  இருக்கிறதோ  அதுவும் இப்படி எழுதினாலேயே நம்மைப்பற்றிஅபிப்பிராயம்வருமோ என்னும்  எண்ணமிருந்தாலும் அனுபவப் பகிர்வுகளில்  இதுவும் ஒன்று  ரெகார்ட் டான்ஸ்பற்றி எழுதியவன் ஒரு காணொளி இணைக்காவிட்டால் எப்படி ஸ்ர்ட்ரிப் டீஸ் நடன காணொளியை பார்க்கவிரும்பமாட்டார்கள்  என்று உள்மனது சொல்கிறது ஆகவே லெஸ் ஈவிள்  என்று கருதப்படும் பெல்லி டான்ஸ் காணொளி இடுகிறேன் (உபயம்  இணைய வலை)  அதையும்பார்க்கவிரும்பாதவர்கள் ( இருக்கிறர்களா  என்ன) பட்டதாரி இளைஞர்கள்  பார்த்ததுபோல் தலையை கவிழ்த்து மேலோரக் கண்ணால் கண்டு மகிழலாமே 

  நவ ராத்திரி துவக்க நாள் 
கழுதை தேய்ந்து கட்டெறும்ப்பான கொலு 
     திருச்சியிலிருந்தபோது  நவராத்திரி கொலுவும் அதற்கான வேலைகளும்   அல்லோல கல்லோலப்படும்   கடைசியாக பெங்களூரில் வைத்த கொலு இப்படி ஆகிப்போனது  இருந்தாலும் நினைவுக்காக         
        

34 comments:

 1. Replies
  1. உங்களுக்கு இம்மாதிரிஅனுபவமுண்டா வருகைக்கு நன்றி

   Delete
 2. இதனைப் படித்தபோது காந்தியின் சத்திய சோதனை நினைவிற்கு வந்தது. இதனை ஒத்துக்கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் ஒரு துணிவு வேண்டும் ஐயா. Stiptease என்பது Striptease என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் என்ன செய்யக் கூடாத தவறா செய்து விட்டேன் மேலுமுண்மைகளைச் சொல்ல நாந்தயங்கியது இல்லை ஸ்பெல்லிங் தவறு சுட்டியதற்கு நன்றி

   Delete
 3. வணக்கம் ஐயா திரு.முனைவர் அவர்கள் சொல்லும்படி இதை வெளியில் சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இல்லாத தைரியமா ஜி

   Delete
 4. அனுபவம் புதுமை
  அதை பகிர்ந்து கொண்டது அருமை ஐயா .

  ReplyDelete
  Replies
  1. யாரும் அவர்களது அனுபவம் எடாவது உண்டா கூறவில்லையே

   Delete
 5. களவும் கற்று மற என்று சொல்வார்கள், நீங்கள் அதைச் சரியாகப் பின்பற்றியுள்ளீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. இதைக் களவோடு ஒப்பிடுவதுசரியா உமேஷ்

   Delete
 6. இதைப் பற்றி என்ன அபிப்ராயம் வந்துவிடப் போகிறது ஜி.எம்.பி சார்... இத்தகைய அனுபவங்கள், அதைக் காண எண்ணிய ஆசை எல்லாம் சாதாரணம்தான் என்பது என் அபிப்ராயம். ஹிப்போக்ரேட்ஸா இருப்பதில் என்ன லாபம்?

  பெல்லி டான்ஸ், டெஸர்ட் சஃபாரியின்போது துபாயில் சிலமுறை கண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹிப்போக்ராட்ஸ் சரியான வார்த்தை நான்பார்த்தது ஸ்ட்ரிப் டீஸ் பெல்லி டான்ஸ் அல்ல

   Delete
 7. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு... அவற்றை நேரம் வரும்போது பகிர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. துபாய் அராபியர்கள் பெல்லி டான்சுக்கு பெயர் பெற்ற இடமாமே

   Delete
  2. அங்கு பெல்லி டான்ஸ் உண்டு. நிறைய கிளப்புகளில் இன்டிமேட் டான்ஸ் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். போகும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. எமராத்திகள் (லோகல்ஸ்) அவர்கள் பண்ணை வீட்டில் வார இறுதியில் பெல்லி மற்றும் ஸ்டிரிப் டான்ஸ் ப்ரோக்ராம் நடத்துவார்கள், அப்போ தெரிந்த இந்திய வியாபாரிகளையும் அழைப்பார்கள், ஆனால் கலந்துகொண்டால், மறுநாள் 5000 திர்ஹாம்ஸ் என்று ஒரு தொகையை எழுதிக்கொடுத்து கலந்துகொண்டவரின் கடையில் இலவச ஷாப்பிங் செய்ய அனுப்பிவிடுவார்கள், மறுக்க முடியாது என்று எனக்குத் தெரிந்த ரீடெயல் ஷாப் (வாட்ச், பெர்ஃ்ப்யூம் போன்ற) ஓனர் 94ல் என்னிடம் சொல்லியுள்ளார்....

   Delete
  3. அரபு நாட்ட்டு சில செய்திகள் இதுவரை தெரியாதது நன்றி சார்

   Delete
 8. Hip Dance உடன் நவராத்திரி கொலு? அபத்தமாக இல்லை?

  ReplyDelete
  Replies
  1. பதிவிடும் நாள் கொலு தொடக்க நாளில் வந்தது அபத்தமானால் இதுவும் அபத்தமே

   Delete
 9. சொல்லக்கூடாது எனச் சொன்னதை எல்லாம் இன்று சொல்லி விட்டீங்களே:).. அதுசரி நவராத்திரிக்கும் போஸ்ட்டுக்கும் சம்பந்தம் உண்டோ....

  ReplyDelete
  Replies
  1. நிகழ்வுகள் மட்டும்தான் சொல்லி இருக்கிறேன் மற்ற பாத்திரங்கள் யாரையும் அடையாளம் காட்ட வில்லையே
   போஸ்ட் இடும்நாள் கொலு துவக்கநாளில் வந்ததுதான் சம்பந்தம்

   Delete
 10. ரெக்கார்ட் டான்ஸ்?!
  இப்பதான் இணையத்துலயே கிடைக்குதே!

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா பொதுவாக பெண்கள் ரெகார்ட் டான்ஸ் பார்க்க எல்லாம் வரமாட்டார்கள்

   Delete
 11. நான் 47 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.TV இல்லாத காலம். எல்லா திரைப்படங்களிலும் ஒரு காபரே/கிளப் டான்ஸ் இடம் பெற்ற காலம்.இந்த டான்ஸுகளை நேரில் பார்க்க ஒரு சந்தர்ப்பம.

  அந்தக்காலங்களில் பொருட்காட்சி பிரபலம். இந்தப் பொருட்காட்சியின் ஒரு மூலையில் இந்த ரிக்கார்ட் டான்ஸ் நடைபெறும். 3 பாட்டு 10 நிமிடம் ஆட்டம் என்று நடைபெறும். டிக்கட் 5 ரூபாய் என்று நினைக்கிறேன்.

  TV வந்தபின் சர்க்கஸ் மேடை நாடகங்கள் ரிக்கார்ட் டான்ஸ் போன்ற பொழுது போக்கு நிகழ்வுகள் காணாமல் போய்விட்டன.

  ReplyDelete
  Replies
  1. 47 வருடங்களுக்கு முன்பா ....அடேய்ங்கப்பா எனக்கு 31 வருடங்களுக்கு முன்தான் வாய்த்தது

   Delete
 12. நான் இருந்த ஊரில் எல்லாம் இது இல்லை போலும். நான் படங்களில் கதைகளில் கேள்விப்பட்டதோடு சரி!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கொடுத்து வைக்க வில்லை வருகக்கு நன்றி ஸ்ரீ

   Delete
  2. ஞானிக்கு சிரிப்புத்தான் வருது

   Delete
  3. ஸ்ரீக்கு ஏன் என்று புரியவில்லை

   Delete
 13. கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் inquisitiveness சரியான சந்தர்ப்பம் தான் சார் கொடுத்து வைக்கக் காரணம்

   Delete
 14. ரெகார்ட் டான்ஸ் பெண்கள் ஆடலாம், ஆனால் பார்க்க முடியாது.

  ReplyDelete
 15. ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும் பெண்களே

  ReplyDelete