Tuesday, October 16, 2018

உங்கள் வயதென்ன                                          உங்கள் வயதென்ன
                                          -------------------------------

வயதாவது பற்றி  யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும் நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும் தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்

(வீட்டில் விசேஷம்   சில நாட்கள் பதிவுலகுக்கு ஓய்வு கொடுக்க எண்ணம் ) 
விடுப்புக்கு முன் 
boy friend ---- I love you 
girl friend ----- me too
boy friend -----ஐயோ...!

18 comments:

 1. எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று ஒரு பாடல் வரும். அது போல.

  வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்க்கையை எட்டெட்டாகப் பிரித்தும் எழுதி இருந்தேனே வெவ்வேறு காலகட்டங்களின் முக்கிய நிகழ்வுகளைக் கூறி இருந்தேன்

   Delete
 2. உண்மைதான் ஐயா
  வாழ்க்கை அனுபவிப்பதில்தான் இருக்கிறது
  வாழ்ந்து பார்ப்பதில்தான் இருக்கிறது

  வீட்டு விசேசத்திற்கு வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. வழ்க்கையைஅனுபவித்தவனின் எண்ணங்களையா

   Delete
 3. அருமை ஐயா நமது எண்ணங்களே நம்மை வழி நடத்தும் ஆகவே நல்லதையே எண்ணுவோம்.

  2014-ல் படித்த பதிவை (முதுமை என்பது வரம்) இன்றும் படித்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. முதுமையை அனுபவிப்பதையும் கூற வேண்டாமா

   Delete
 4. நான் வயசை கூட்டி சொல்லவும் மாட்டேன், குறைச்சு சொல்லவும் மாட்டேன். ஆனா வீட்டுக்காரருக்கு இப்பதான் 35 நடக்குதாம். ஆனா, என் பெரிய பொண்ணுக்கு வயசு 23 ஆகுது

  ReplyDelete
  Replies
  1. அத்தனையும் நம்பிவிட்டென் அம்மா

   Delete
 5. பெண்கள் மட்டுமல்ல ஆண்கள்கூட வயதை குறைத்து சொல்லவே விரும்புகிறார்கள். பலர் சொல்வார்கள் நீங்க எப்பவும் இளமையாவே இருக்கீங்க என்பார்கள் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் அவர்கள் சொல்வதன் பொருள் வயதாகி விட்டது என்பதே

  ReplyDelete
  Replies
  1. நான் எப்போதும் இருக்கும் புரிதலைத்தான் காண்பேன் இளமை என்றால் இளமை முதுமை என்றால் முதுமை

   Delete
 6. நல்ல உத்திகளைத் தந்துள்ளீர்கள் ஐயா. இதில சிலவற்றை நான் கடைபிடிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மனித இயல்புகள் சிலவற்றைக் கூறி இருக்கிறேன்

   Delete
 7. முதுமை என்பது வரமே. ஏனெனில் இளமையில் செய்யமுடியாததை கடைசி முறையாகச் செய்து பார்க்க முடியுமே! ஒரே ஒரு சங்கடம் #MeToo வில் மாட்டிக்கொள்ள நேரலாம்.

  ReplyDelete
  Replies
  1. அது அப்படி இல்லை என்று நினைக்கிறேன் முதுமையில் பல விஷயங்காஇச் செய்ய முடியாது உடல் ஒத்துழைக்காது பார்க்க என்பதிவு செய்யாத குற்றம்

   Delete
 8. இன்று புதிதாய்ப் பிறந்தோம்! அனுபவிக்கணும். அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை!

  விடுமுறையை அனுபவிச்சுட்டுத் திரும்பி வாங்க :-)

  ReplyDelete
  Replies
  1. விடுமுறை எல்லமில்ல என்பேரனின் திருமண கொண்டாட்டங்களில் தான் இருந்தேன்

   Delete