வியாழன், 25 அக்டோபர், 2018

பேரன் திருமணம்(தொடர்ச்சி)



                                 பேரன்  திருமணம்  (தொடர்ச்சி )
                                 -------------------------------------------------
மணமக்கள்
வீட்டின் முகப்பு

 இம்மாதிரி  திருமணங்களில் சம்பிரதயங்களை விட்டுக் கொடுக்கும்   மனப்பான்மை வேண்டும்  என் திருமணத்தில் எனக்கு எந்த சம்பிரதாய விருப்பும் இருக்கவில்லை ஓரளவு கேரள வழக்கம் கடை பிடிக்கப்பட்டது  எங்கள் மகன்கள் கல்யாணம்அக்னி சாட்சியுடன் தாலி கட்டல் நடந்தது என் பேரனின் திருமணத்தில்   இரு வீட்டாரும்பேசியபடி  இரு முறைகளும்  கடை பிடிக்கப்பட்டன  திருமணத்துக்குப் போகும் முன் பெரியவர்களிடம்  தட்சிணை  கொடுத்து ஆசிர்வாதம்வாங்க வேண்டும்

தாத்தா  பாட்டியிடம்  ஆசி பெறல் 

சித்தப்பாவின்  அணைப்பில் 



 பிள்ளையை வரவேற்க  பெண் வீட்டார் தாலபொலி வுடன் வரவேற்பு (காசியாத்திரை போல்) 
 காணொளி                 


காணொளி 



 காலையில்பெண்வீட்டார் கௌரி பூஜை  மற்றும்  தாலிகட்டும் முன்   திரை யிட்டுசில சடங்குகளுக்குப் பின்  தாலி கட்டல்  என்றுகடை பிடிக்கப்பட்டது  அவர்கள் சப்தபதி யுடன்  அருந்ததி பார்க்க வேண்டும்  என்று விரும்பினர்   கடைசியில் பெண்ணின் தந்தை பாணிக்கிரணமும் செய்ய இனிதாகத் திருமணம் நடந்தது

 இப்போதெல்லாம் பெண்கிடைப்பதுகஷ்டமாக இருப்பது ஒன்று ஜாதகப் பொருத்தம்மற்றும் சில விஷ்யங்களில் மிக கண்டிப்பாய் இருப்பது போன்றவை தான் என்று நினைக்கிறேன்  மேலும்   ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்னும் மனப் பான்மை இன்னும்  போகவில்லை  என்றும்நினக்கிறேன்
 திருமணங்களில்தான் பல உறவுகளை  சந்திக்க முடிகிறது நான் திருச்சியில் இருந்தபோது சிறுவர் சிறுமிகளாக இருந்தவர் என்னைப்பார்த்து அங்கிள் சுகமா என்று கேட்டது  மகிழ்ச்சி தந்தது 

தங்கையுடன்   ரிலாக்சாக 

என் பெரிய அண்ணாவுடன் 
          


அத்தைகளுடன் 


18ம் தேதி மாலையில் 


மாமா குடும்பத்துடன்  
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்  18 ம் தேதி மாலை 
நண்பர்கள் குழாம் 
எங்கள் குடும்பம் 
பாலும் பழமும்

திருமணத்துக்கு வருகை புரிந்தவர்களில் பதிவுலகில் இருந்து வந்திருந்த பானுமதி குறிப்பிடத்தக்கவர் அவரே எனக்கு அடுத்த பதிவு எழுத உத்தி தந்தவர்





27 கருத்துகள்:

  1. சிறப்பு. சம்பிரதாயங்களை ஒதுக்கி வைக்க ஒருவர் விரும்பினாலும் இன்னொருவர் விரும்புவதில்லை. எல்லோரும் ஒரே எண்ணத்தில் இருந்தால் அது கைகூடலாம்.

    ஒரே காணொளி இரண்டுமுறை வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை ட்ராஃப்ட் ஸ்டேஜில் பார்க்க முடிவதில்லை அதனால் மீண்டும்பதிவேறிய காணொளி கவனிக்க முடியவில்லை சம்பிரதாயங்கள் மன நிறைவு தறுமானால் ஏன் ஒதுக்க வேண்டும் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
    2. //சம்பிரதாயங்கள் மன நிறைவு தறுமானால் ஏன் ஒதுக்க வேண்டும்// - ஜி.எம்.பி சார்... உங்களின் இந்த வரியை நான் நினைவில் வைத்திருப்பேன். உங்கள் சில (பல) இடுகைகளுக்குப் பின்னூட்டம் இடும்போது உபயோகப்படும். ஹாஹாஹா

      நீக்கு
    3. வழக்கமாக என் கருத்துகளை சரியாகப்புரியாமலேயே இங்கும் அப்படியே எழுதி இருக்கிறீர்கள் என்னைப் பற்றிய உங்கள் புரிதல் மிகவும் குறைவு

      நீக்கு
  2. திருமணம் நலமுடன் நிகழ்ந்ததில் மகிழ்ச்சி ஐயா.

    மணமக்கள் எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ பிரார்த்தனைகள்.

    காணொளிகள் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காணொளிகளும் என்காமிராவில் சுட்டது வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  3. மணமக்கள் அனைத்துப்பேறுகளையும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மணமக்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.! வாழ்க வளமுடன்.
    காணொளிகள் நேரில் திருமணத்தை கட்ட நிறைவை தந்து விட்டது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண நிகழ்ழ்சிகள் சிலவற்றப்படமாகவும்காணொளியாகவும் பதிவிட்டிருக்கிறேன் வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்

      நீக்கு
  6. அழகிய திருமணம்.. மிக அருமை.. வீடியோவும் மேளக் கச்சேரியும் மனதைக் கொள்ளை கொள்ளுது... வாழ்க மணமக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் ஞானியாகவும்சில இடங்களில் அஞ்ஞானியாகவும்வருகிறீர்கள் நீங்கள்ஞானியா இல்லையா

      நீக்கு
    2. திருமணத்துக்கு வராதவர்களும்ரசிக்க வென்றே பதிவில் படங்களும் காணொளிகளும்

      நீக்கு
  7. பிரயாணத்தில் இருப்பதால் காணொளி காண முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. மகிழ்ச்சி. மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு