பேரனின் திருமணம்
----------------------------------
சும்மாவா சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர் வீட்டைக்
கட்டிப்பார் கல்யாணம்செய்துபார்
என்று இரண்டுமே மன உளைச்சல்
முத்லில் தருபவை என்மூத்தமகனின்
மகனுக்கு 19ம் தேதி திருமணம் இனிதே நடந்தது பதிவுலக நண்பர்களூக்கு தெரிந்ததே
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில்
,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர்
குறிப்பிடுகிறார்.
ஆனால்
எந்தப் பொருத்தமும் பார்க்காமல் மனப் பொருத்தமொன்றே போதும் என்று கருதி பெற்றோர்களுக்கும் யாருக்கு எந்த கவலையும் கொடுக்காமல் என்பேரன்
அவன் இஷ்டப்பட்ட பெண்ணை மணக்க அனுமதிகேட்டான் (அந்த அளவில்
அனுமதியாவதுகேட்டானே என்னும் திருப்தி
எங்களுக்கு பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தான் எங்களுக்குத்திருப்தி பெண் IIM BANGALORE ல் படித்த எம் பி ஏ ப்ட்டதாரி யு பி எஸ்
சி தேர்வில் பாசாகி இருக்கிறாள்
நேர் முகத்தேர்வு நடக்க வேண்டும்
பெண்ணைஎங்களுக்குப் பிடித்திருந்தது இப்போதெல்லாம் திருமணத்திற்கு பெண்கிடைப்பதே கஷ்டமாயிருக்கிறது என்று
வலையில் படித்த நினைவு பெற்றோருக்கு
எந்தகஷ்டமும் கொடுக்காமல் தனக்குப் ப்;டித்த
பெண்ணைபேரன் தேர்வு செய்தது மகிழ்ச்சியே
இந்தகல்யாணம்
இன்னும் சிறப்பாய் இருந்தது
நானும் என் மனைவியும் வேறுவேறு தாய் மொழியினர் பேரன் தேர்ந்தெடுத்டபெண்ணும் தமிழ்
மலையாளம்இல்லாமல் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவள் எங்கள் வீடு ஒரு மினி பாரதவிலாசாக மாறிவருகிறது
இந்தத் திருமணத்தால் பல உறவுகளையும்
நட்புகளையும்சந்திக்கமுடிந்தது திருமணமும்
இருவழி சம்பிரதாயத்துடன் நடந்தது
திருமணத்துக்கு மு ந்தினம் அதாவது 18ம் டேடி மாலை
சங்கீத் என்னும் நிகழ்ச்சி அது
என்னவோ சங்கீத் மாதிரி தெரியலை என்பேர
சொன்னது போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் பத்திரிகையில் அதுபற்றி குறிப்பிடவில்லை மிகவு
நெருங்கிய நட்புகளையும் இளைய
தலைமுறை உறவுக்சளுக்கு மட்டுமே
தெரிவிக்கப்பட்டது எல்லாப் பெண்மணிகளுக்கும்மெஹ்ந்தி போடப்பட்டது ஒரு வருக்கு இருகைகளிலும் இட ரூ350 என்றார் என்பேரனின் மனைவி யாகவர இருந்தவள் கைகளின் மெஹ்ந்தியில்
அவன் பெயர் இடப்பட்டிருந்ததுஎன்பேத்தி நடனமாடினாள் இன்னும்சிலருமாடினர்கள் பேரனி
நண்பர்கள் சரியான குத்தாட்ட மிட்டு
ஆடினார்கள் கடைசியாக அனைவரும்சேர்ந்து நடனம் என்னும் பெயரில் அவரவர் விருப்பப்படி ஆடினார்கள்
என்கால்கள் சரியாக இருந்திருந்தால் நானும் ஆடியிருக்கலாம்
மறுநாள் திருமண வைபவம்
ப்திவும் தொடரும்
காணொளியில் என்பேத்தியின்
நடனம் அதை மூன்றுபகுதிகளாகத்தான் பதிவிட முடிந்தது நீளம் காரணமாக
உண்மைதான் ஐயா கல்யாணத்துக்கு பெண் கிடைப்பது அரிதான விடயமாகி விட்டது.
பதிலளிநீக்குஉங்களது குடும்பத்தில் எல்லா மொழிகளும் பேசலாம்.
காணொளிகள் கண்டேன் தொடர்ந்து நிகழ்வுகள் வரட்டும்.
ஜாதகம் பெண் பற்றிய நம் எண்ணங்கள்இவை எல்லாமே காரணிகள் மேலு குடும்பதில் உறவுகளில் திருமணமும் இக்காலத்திலேற்கப்படுவது குறைந்து விட்டது மணம் பற்றீன்னுமொரு பதிவில் தொடர்வேன் வருகைக்கு நன்றி சார்
நீக்குஎங்கள் வீடு ஒரு மினி பாரதவிலாசாக மாறிவருகிறது//
பதிலளிநீக்குமகிழ்ச்சி. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
காணொளிகள் வரவில்லை பின்னர் வந்து பார்க்கிறேன்.
காணொளி பாருங்கள் வருகைக்கு நன்றி
நீக்குசந்தோஷமான நிகழ்வுகள். ஆம், பெண் கிடைப்பது ரொம்பக் கடினமாகத்தான் இருக்கிறது. காணொளிகள் கண்டேன். உற்சாக தருணங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பேரனுக்கும் அவர் மனைவிக்கும் வாழ்த்துகள்.
என் காலத்திலேயே அவனுக்கு மணம் நடந்தது மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குமகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துகள்
வாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குமிக மகிழ்ச்சி ஐயா..
பதிலளிநீக்குநன்றி மேடம்
நீக்குமிகுந்த மகிழ்ச்சி.... ஒரு தடவை தொலைக்காட்சியில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார், ஒரே குடும்பத்தில் திருமணம் செய்வதைவிட வெவ்வேறு இனங்களில் திருமணம் செய்யும்போது பல்வேறு கலாச்சாரத்தைப் பார்க்கும் அனுபவிக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்றார். கணவன் மனைவி இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள். (கிறிஸ்துதாஸ் காந்தி, டாக்கர் குத்ஸ்சியா காந்தி). அதுதான் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான திருமணவாழ்வைப் பெறட்டும்.
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சார் வருவீர்களென்று நினைத்தேன்
நீக்குபேரனுக்கும் அவர் மனைவிக்கும் எங்கள் வாழ்த்துகள். இனிய திருமண வாழ்க்கைக்கும் வாழ்த்துகள். திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் வாட்சப்பில் பகிர்ந்திருந்த படங்களைப் பார்க்கையிலேயே தெலுங்கு சம்பிரதாயம் போல் இருக்கேனு நினைச்சேன்! :) உங்கள் வீடு பாரத விலாஸாக மாறி இருப்பது குறித்தும் சந்தோஷம்.
பதிலளிநீக்குபடம்பார்த்து சம்பிரதாயம்தெரியுமா என்ன வருகைக்கு நன்றி மேம்
நீக்குஆமாம், ஐயா, பெண், மாப்பிள்ளைக்கு இடையில் போட்டிருந்த திரை காட்டிக் கொடுத்தது. :)
நீக்குநான் அந்தப் படம் பார்க்கவில்லை இருந்தாலும் நீங்கள் உஷார்தான்
நீக்குதெலுங்குக்காரர்கள் திருமணங்களைப் பார்த்ததால் தெரியும்! அவ்வளவு தான்! :))))
நீக்குதெலுங்கு காரர்கள் பொதுவாக இரவில்தான் திருமணம் நடத்துவார்கள் அம்மாதிரிஒரு திருமணத்துக்கு நான்விஜய வாடாவில் சென்றி ருக்கிறேன்
நீக்குசெய்தியறிந்து மகிழ்ச்சி...
பதிலளிநீக்குமணமக்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
வாழ்க நலம்!..
நன்றி சார்
நீக்குஅஹா படிக்கவே இனிமையாயிருக்கிறது. இன்றும் என்றும் மனமொத்து வாழ்க மணமக்கள்.
பதிலளிநீக்குஅதுவே என் வேண்டுதலும் நன்றி மேம்
நீக்குவாழ்க மணமக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றிம்மா
நீக்கு//எங்கள் வீடு ஒரு மினி பாரதவிலாசாக மாறிவருகிறது// இதை ஒப்புக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் மிகவும் பெரிய மனது வேண்டும்.
பதிலளிநீக்குஉண்மையை ஒப்புக் கொள்ள என்று தயங்கியதில்லை
நீக்குபுது மண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
பதிலளிநீக்குநன்றி ஏஞ்செல்
நீக்குபுதுமணத் தம்பதிகள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குபதினாறும் என்னவென்று சொல்லி இருக்கலாமே
நீக்கு***இந்தகல்யாணம் இன்னும் சிறப்பாய் இருந்தது நானும் என் மனைவியும் வேறுவேறு தாய் மொழியினர்***
பதிலளிநீக்குReally?!! Only now, I learned that!! From KL I guess! :)
Thanks for sharing your grand-son's wedding function and celebrations, Sir!
Wish them a Happy Married Life! :)
என்னைப் பற்றிய செய்திகள் பலவும் பகிரப்பட்டவை ஐ ஆம் அன் ஓப்பென் புக் வருகைக்கு நன்றிசார்
நீக்குமகிழ்ச்சி...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா...
வாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குமனிதம் போற்றுபவர்களுக்கு ஜாதி மதம் இனம் மொழி எல்லாம் ஒரு பொருட்டல்ல.
பதிலளிநீக்குமணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு நன்றி ஜாதி மதம் இனம் பாராட்டுபவர்களிலும் மனித்ம் போற்றுபவர் உண்டு என்று நினைக்கிறேன்சார்
நீக்குமகிழ்ச்சி. மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்! சங்கீத் இப்போது பரவலாக, திருமண வைபவத்தின் ஒரு பாகமாக இடம் பெற ஆரம்பித்து விட்டது.
பதிலளிநீக்குசங்கீத் என்று சொல்லாமல் என் பேரன் சொன்னபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சொல்லி இருக்கலாமே
நீக்குஉங்கள் மகிழ்வில் நாங்களும் கலந்துகொண்டோம் ஐயா, பதிவு மூலமாக. மணமக்கள் வாழ்க.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
நீக்குமணமக்களுக்கு ஆசிகள். பேரன் கல்யாணம் என்றால் மனநிறைவேஅலாதிதான். கல்யாணங்கள் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க மணமக்கள். அன்புடன்
பதிலளிநீக்குமணமக்களுக்கு ஆசிகள். பேரன் கல்யாணம் என்றால் மனநிறைவேஅலாதிதான்./ உண்மைதான் அம்மா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குபேத்தியின் நடனம் மிக அருமை.
பதிலளிநீக்குஇன்றுதான் பார்க்க முடிந்தது.
மிக அருமையாக ஆடினார்.
வாழ்த்துக்களை சொல்லுங்கள் பேத்திக்கு.
அவள் நன்றாக ஆடுவாள் என்பதாலேயே அன்றும் ஆடச் சொன்னோம் வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்
நீக்குமணமக்களுக்கு மென்மேலும் மண வாழ்கை என்றும் சிறந்து விளங்க இனிய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு