செவ்வாய், 2 அக்டோபர், 2018

சில பகிர்வுகள்


                                       சிலபகிர்வுகள்
                                      -----------------------

  கடந்த சில நாட்களாக  சில நல்ல செய்திகள் கிடைக்கின்றது என் பேரனைப்பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் தங்கமான தருணங்கள்என்று அவை கிடார்வாசிக்கிறான் பள்ளியில் பாஸ்கெட்பால் டீமில்  அவனிருக்கிறான்   பலபோட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறான் நானவனைப் பற்றி எழுதினால் வெட்கப்படுகிறன்
அவனைப் பற்றிஎழுதநிறையவே இருக்கிறது  அவை பிறிதொருசமயம்
என்பேத்தியைப்பற்றிஅதிகம் எழுதியதில்லை அவள் பி ஈ முடித்து வேலைக்குப்போகிறாள் அவள் ஏதோ வேலையில் ப்;ரெசென்ட் செய்ய அது அதிகமாக சிலாகிக்கப்பட்டு  அதையே கத்தாரில் ப்ரெசெண்ட் செய்ய அனுப்பபட்டு இருக்கிறார் ஒரு பெண் தனியே அயல் நாட்டுக்குப்போய்  வருவது எங்களுக்குக்கலக்கமாய் இருந்தது வளை குடா நாடான கத்தாரில் என் மகனுக்குபல நண்பர்கள் உண்டுஅது சிறிது தைரியம்  கொடுத்தது  அடுத்து என் மூத்த பேரனின்  திருமணம்முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்  அக்டோபர்  19 ம் தேதி பெங்களூர் இஸ்கானில்  திருமணம்நடக்க இருக்கிறது பதிவுலக நண்பர்கள்இதையே அழைப்பாகக் கருதி மணமக்களை வந்து வாழ்த்த வேண்டுகிறேன்பத்திரிகையும்  இத்துடன் இணைக்கிறேன்
வெற்றிப் பதக்கம் 
     
பேத்தி கத்தாரி செல்ஃபியில் எடுத்தது 

கத்தாரில் ஹோட்டல் அறை 
அறையில்  அலங்காரம் 
 
திருமணப் பத்திரிகை
எங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில்சதுர்த்தி பூசைகள் அந்தக் கோவிலுக்கு நான்வரைந்து கொடுத்த காயத்ரி ஓவியம் கீழெ
விநாயக சதுர்த்தி 
       
காயத்ரி கண்ணாடி ஓவியம்  
எத்தனை பேர் இந்த frdi  bill ( financial  resolution  and deposit insurance bill)  பாராளுமன்றத்தில்  இருந்து வாபஸ் பெறப்பட்டது என்று அறிவீர்களோதெரியவில்லை  முன்பே ஒரு [பதிவு எழுதிய நினைவு  அதில் இந்த மசோதாவால் நம் சேவிங்ஸுக்கு அபாயமிருக்கலாமெறு கூறி இருந்தேன்  மேலும் நினைவூட்ட அதுபற்றிய  ஒருகாணொளி  இதில் இந்த மசோதாவால் ஏற்படகூடிய இம்ப்லிகேஷன்ஸ் பற்றி விரிவாக அலச பட்டிருக்கிறது நல்ல வேளை எதிர்ப்புக் குரலால் இம்மசோதா திரும்பப்பெற்றிருக்கிறது வங்கிகளில் சேமிப்பவர்களவர்கள்சேமிப்பு  எப்போது வேண்டுமானாலும்  திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்று நம்புபவரே  ஆனால் வங்கிகளில் திரும்பவாராக் கடன்களையும்  நான்  பெர்ஃபார்மிங்  அசெட்களையும் பார்க்கும்போதும் இந்த மசோதாவில் இருந்த bail in clause ம்  சிறிது பயம் தந்தது இந்த மசோதா திரும்பப் பெறப்படுகிறது என்பது ஆறுதல் தரும் விஷயம்
 காணொளியைஅவசியம்பாருங்கள் அரசின் மேல் சிறிது நம்பிக்கை வருகிறது  எதிர்ப்புதெரிவித்தால்  அவர்கள் மாற்றி யோசிக்கிறார்கள்  என்று தெரிகிறது   நல்லவிஷயம்தானே





   

33 கருத்துகள்:

  1. குட்டி பையனுக்கும் ,உங்க பேத்திக்கும் வாழ்த்துக்கள் ஐயா..

    மணமக்கள் இல்லறம் நல்லறமாய் சிறக்கவும் எனது அன்பு வாழ்த்துக்கள் ..

    பிள்ளையார் மற்றும் ஓவிய படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி குட்டிப்பையன் இப்போது பதின்ம வயதுகளுக்குள் நுழைகிறான்

      நீக்கு
  2. தங்களின் பெயரன் பெயர்த்திகளுக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. ஆல் போலத் தழைத்து
    அருகு போல வேரோங்குக!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    காயத்ரி படம் அழகு.
    பேரன் பேத்திகள் சாதனைகள் மன நிறைவும் மகிழ்ச்சியும் நிறைந்தவை .
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சியான செய்திகள்...

    எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.

    பதிலளிநீக்கு
  6. திருமணம் இனிதே நடைபெற்று மணமக்கள் சீறும், சிறப்புமாய் வாழ எமது பிரார்த்தனைகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. பேத்திக்கும் பேரனுக்கும் வாழ்த்துக்கள்.

    கல்யாணப்பத்திரிக்கை அழகாக இருக்கிறது. அந்தப் பேரனுக்கும் இனிய ‘அட்வான்ஸ்’ திருமண வாழ்த்துக்கள்.

    காயத்ரி கண்ணாடி ஓவியம் - சரியாகப் பார்க்க முடியவில்லை. Zoom செய்துபோட்டிருந்தால் முகலக்ஷணம் எப்படி வந்திருக்கிறது எனப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் இருந்தால் மணநாளில் வாழ்த்த வரலாமே

      நீக்கு
  8. உங்கள் பேரன்கள், பேத்தி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். ஆசிகள். பேத்தியின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் சின்னப் பேரனுக்கு விரும்பிய படிப்பில் பிரகாசிக்கவும் வாழ்த்துகள். திருமணம் செய்யப் போகும் பேரனுக்கும் அவருடைய வருங்கால மனைவிக்கும் இனிய இல்வாழ்க்கைக்கு வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி மேடம்

      நீக்கு
  9. பேரன் பேத்திக்கு வாழ்த்துக்கள்... பிள்ளைகள் நல்ல விசயங்கள் செய்யும்போது மனம் சந்தோஷிக்கும்.

    நடக்கப்போகும் திருமணத்தம்பதிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. சார் பேரன் பேத்திக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பேத்தி இன்னும் சாதனைகள் புரிந்து நல்ல வாழ்க்கை அமைந்திடவும் வாழ்த்துகள். சிறிய பேரனுக்கும் அதே வாழ்த்துகள்.

    பெரிய பேரனுக்கு இனிய மணவாழ்க்கை அமைந்திடவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எட்டடி பாய்ந்தால் இவர்கள் படினாறாஅடி பாய்கிறார்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறது

      நீக்கு
  11. பேரனுக்கும் போதிக்கும் வாழ்த்துகள்.

    மணமக்களுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பேரன் பேத்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  13. பேரன்கள், பேத்தியைப் பற்றிய நல்ல செய்திகள் சந்தோஷம் அளிக்கிறது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். திருமணத்தில் சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. சந்திக்கலாமே இன்னும் பல உறவுகளையும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. முதலில் உங்கள் பெயரன் திருமண வாழ்த்துகள். சிறப்பாக நடந்து இனிய இல்லறத்தில் நுழையட்டும். அதற்கு அந்த ஆண்டவன் துணையிருக்கட்டும்.

    பேரன் பேத்தியைப் பற்றிய செய்திகள் மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. பேரன், பேத்திக்கு வாழ்த்துக்கள்.
    அவர்கள் திறமைகள் மகிழ்ச்சி அளிக்கிறது.
    மணமக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    இறைவன் ஆசிகள் மணமக்களுக்கு துணையாக இருகட்டும் என்றும்.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. கோவில் அர்ச்சகர் கேட்டுக் கொந்தால் வரைந்தது பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
  18. சின்னப் பேரம் மற்றும் பேத்திக்கு நல்வாழ்த்துகள்.

    திருமண அழைப்பிதழ் கிடைத்தது. மகிழ்ச்சி. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு