வாழ்த்த வேண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்த வேண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 அக்டோபர், 2018

சில பகிர்வுகள்


                                       சிலபகிர்வுகள்
                                      -----------------------

  கடந்த சில நாட்களாக  சில நல்ல செய்திகள் கிடைக்கின்றது என் பேரனைப்பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் தங்கமான தருணங்கள்என்று அவை கிடார்வாசிக்கிறான் பள்ளியில் பாஸ்கெட்பால் டீமில்  அவனிருக்கிறான்   பலபோட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறான் நானவனைப் பற்றி எழுதினால் வெட்கப்படுகிறன்
அவனைப் பற்றிஎழுதநிறையவே இருக்கிறது  அவை பிறிதொருசமயம்
என்பேத்தியைப்பற்றிஅதிகம் எழுதியதில்லை அவள் பி ஈ முடித்து வேலைக்குப்போகிறாள் அவள் ஏதோ வேலையில் ப்;ரெசென்ட் செய்ய அது அதிகமாக சிலாகிக்கப்பட்டு  அதையே கத்தாரில் ப்ரெசெண்ட் செய்ய அனுப்பபட்டு இருக்கிறார் ஒரு பெண் தனியே அயல் நாட்டுக்குப்போய்  வருவது எங்களுக்குக்கலக்கமாய் இருந்தது வளை குடா நாடான கத்தாரில் என் மகனுக்குபல நண்பர்கள் உண்டுஅது சிறிது தைரியம்  கொடுத்தது  அடுத்து என் மூத்த பேரனின்  திருமணம்முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்  அக்டோபர்  19 ம் தேதி பெங்களூர் இஸ்கானில்  திருமணம்நடக்க இருக்கிறது பதிவுலக நண்பர்கள்இதையே அழைப்பாகக் கருதி மணமக்களை வந்து வாழ்த்த வேண்டுகிறேன்பத்திரிகையும்  இத்துடன் இணைக்கிறேன்
வெற்றிப் பதக்கம் 
     
பேத்தி கத்தாரி செல்ஃபியில் எடுத்தது 

கத்தாரில் ஹோட்டல் அறை 
அறையில்  அலங்காரம் 
 
திருமணப் பத்திரிகை
எங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில்சதுர்த்தி பூசைகள் அந்தக் கோவிலுக்கு நான்வரைந்து கொடுத்த காயத்ரி ஓவியம் கீழெ
விநாயக சதுர்த்தி 
       
காயத்ரி கண்ணாடி ஓவியம்  
எத்தனை பேர் இந்த frdi  bill ( financial  resolution  and deposit insurance bill)  பாராளுமன்றத்தில்  இருந்து வாபஸ் பெறப்பட்டது என்று அறிவீர்களோதெரியவில்லை  முன்பே ஒரு [பதிவு எழுதிய நினைவு  அதில் இந்த மசோதாவால் நம் சேவிங்ஸுக்கு அபாயமிருக்கலாமெறு கூறி இருந்தேன்  மேலும் நினைவூட்ட அதுபற்றிய  ஒருகாணொளி  இதில் இந்த மசோதாவால் ஏற்படகூடிய இம்ப்லிகேஷன்ஸ் பற்றி விரிவாக அலச பட்டிருக்கிறது நல்ல வேளை எதிர்ப்புக் குரலால் இம்மசோதா திரும்பப்பெற்றிருக்கிறது வங்கிகளில் சேமிப்பவர்களவர்கள்சேமிப்பு  எப்போது வேண்டுமானாலும்  திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்று நம்புபவரே  ஆனால் வங்கிகளில் திரும்பவாராக் கடன்களையும்  நான்  பெர்ஃபார்மிங்  அசெட்களையும் பார்க்கும்போதும் இந்த மசோதாவில் இருந்த bail in clause ம்  சிறிது பயம் தந்தது இந்த மசோதா திரும்பப் பெறப்படுகிறது என்பது ஆறுதல் தரும் விஷயம்
 காணொளியைஅவசியம்பாருங்கள் அரசின் மேல் சிறிது நம்பிக்கை வருகிறது  எதிர்ப்புதெரிவித்தால்  அவர்கள் மாற்றி யோசிக்கிறார்கள்  என்று தெரிகிறது   நல்லவிஷயம்தானே