புதன், 31 அக்டோபர், 2018

திருமணம் சார்ந்த சில எண்ணங்களின் தொகுப்பு


                             திருமணம்  சில எண்ணங்களின் தொகுப்பு
                             ------------------------------------------------------------------

திருமணம்   சார்ந்த சிந்தனைகளில்  இருந்துஇன்னும் விடுபடவில்லை  அதுபற்றிய ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார். அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார். குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது கணிப்பு. உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று
எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார், எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.


ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.?          
   .  .            .

32 கருத்துகள்:

  1. ஐயா உங்களது கணக்குப்படி பார்த்தாலும் நமது சமூகம் அவரவர் ஜாதி, மதத்திற்கும்தானே பெண்ணோ, ஆணோ தேடுகின்றார்கள்...

    விதி விலக்காக சிலரது காதல்கள் மதம் மறந்து இணைகின்றனர் இதையும் தேவன் எழுதி வைத்தான் என்று சொல்ல இயலுமா ?

    இத்தாலியும் (சோனியா) இந்தியாவும் (ராஜீவ்காந்தி) இங்கிலாந்தில் படிக்கும்போது இணைவதையும் தேவன் எழுதி வைத்தானா...

    எது எப்படியோ... நடக்கவேண்டியதே நடந்து முடிகிறது என்பதில் நானும் உடன் படுகிறேன் காரணம் எனது திருமணமே...

    எத்தனையோ முறைப்பெண்கள் எனக்காக போட்டி போட, எத்தனையோ குடும்பங்கள் இவனை (என்னை) தவற விட்டு விட்டோமே என்று இன்றளவும் வருந்த,

    இன்றளவும் சில பெண்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தாலும்... பழையதை நினைத்து பேசி கண் கலங்கி, என்னையும் சலனப்படுத்தி வேதனைப்பட வைக்கின்றனர்...

    ஆனால் என்னை கணவனாக பெற்றவளுக்கும், என்னை மருமகனாக பெற்றவர்களுக்கும் அவர்களது மரணகாலம்வரை நான் நல்லவன் இல்லை.

    ஆனால் நான் உலகையறிந்த காலம் தொட்டு இன்றுவரை நான் நானாகவே இன்று போலவே இருக்கிறேன்.

    காரணமென்ன ?
    எனது திருமணம் இரண்டே மணி நேரத்தில் இந்த திருமணம் நடக்கவேண்டுமென தீர்மானமாகி இரண்டே வாரங்களில் நிகழ்ந்து விட்டது.

    பெரியவர்களின் முடிவு சில நேரங்களில் முட்டாள்த்தனமாகவும் முடிகிறது.

    தங்கையின் நல் வாழ்க்கை நீடிப்பதற்காக எல்லாவற்றையும் மறந்து நடை பிணமானேன் முடிவு.

    இன்று என்னைப் போலவே எனது தங்கையும் விதவை.

    இப்பொழுது உங்களது கருத்துக்கு வருகிறேன்.

    //இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... நமக்கு வாய்த்ததுதான் 'நமக்கு ஏற்றது' என்று ஆண்டவன் தீர்மானித்திருக்கிறான் என்றுதான் நாம் நம் மனதில் நினைக்கவேண்டும். காரணம் இல்லாமல் காரியம் கிடையாது.

      'ஆயுள்' என்பதற்கு பெரும்பாலும் உத்திரவாதம் கிடையாது. அது அவரவர் வினைப் பயன் என்று எண்ணினால்தான் மனது சமாதானமாகும்.

      நீக்கு
    2. >>> இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று..<<<

      புரட்டிப் போட்டால் தான் தோசை..
      புரட்டிப் போட வேண்டிய அவசியமில்லாதது இட்லி ..

      அதேசமயம்
      தோசை வெந்து பக்குவம் அடைவதைக் கண்ணால் காணலாம்...

      இட்லி வெந்து பக்குவம் அடைவதைக் கண்ணால் காண முடியாது..

      அப்படிக் காணத் தான் வேண்டுமெனில்
      நமக்குக் கிடைப்பது இட்லியாக இருக்காது!...

      நீக்கு
    3. இப்போ என்ன சொல்ல வர்றீங்க துரை ஸார்... இட்லியா, தோசையா?

      நீக்கு
    4. கில்லர் ஜி யின் கருத்துகள் வெளிப்படையானவை அவர் வாழ்வையே பின்னோக்கி இருக்கிறார் இன்னார்க்கு இன்னார் என்பது அன்று தேவன் எழுதி வைத்தது என்றா கூறி இருக்கிறேன் அது ஒரு திரைப்படப் பாடல் வரி

      நீக்கு
    5. @நெத /காரணம் இல்லாமல் காரியம் கிடையாது.

      'ஆயுள்' என்பதற்கு பெரும்பாலும் உத்திரவாதம் கிடையாது. அது அவரவர் வினைப் பயன் என்று எண்ணினால்தான் மனது சமாதானமாகும். / எதையாவது சொல்லி தேற்ற வேண்டியதுதான்

      நீக்கு
    6. @துரை செல்வராஜு தோசை இட்லி என்று சொல்லி என்னையும்குழப்பி விட்டீர்கள் எளியவரு புரிந்து கொள்ளும் விதத்தில்பின்னூட்டமிருக்கக் கூடாதா

      நீக்கு
    7. @ ஸ்ரீராம் என்னைப்போலவே தானா நீங்களும்

      நீக்கு
    8. கில்லர்ஜியின் கொமெண்ட்ஸ் படிச்சேன்... உண்மைதான் என்னதான் தலைவிதி என்றாலும் தத்துவம் பேசினாலும் போன வாழ்க்கை போனதுதானே...

      நீக்கு
    9. //ஸ்ரீராம்.October 31, 2018 at 1:57 PM
      இப்போ என்ன சொல்ல வர்றீங்க துரை ஸார்... இட்லியா, தோசையா?//

      ஹா ஹா ஹா இல்ல இரண்டும் கலந்த கலவையோ ஹா ஹா ஹா..

      நீக்கு
    10. ஞானி /உண்மைதான் என்னதான் தலைவிதி என்றாலும் தத்துவம் பேசினாலும் போன வாழ்க்கை போனதுதானே../உங்களுக்குப் புரிய ஆரம்பித்து இருக்கிறது ஞானி அல்லவா.

      நீக்கு
  2. இடுகையை மிகவும் ரசித்தேன் ஜி.எம்.பி சார்.... நானும் எப்போதும் இதுபற்றி எண்ணிவந்திருக்கிறேன். நான் இதுவரை பார்த்த 90%க்கும் அதிகமான காதல் திருமண ஜோடி, கொஞ்சம்கூட அழகுப் பொருத்தம் இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர். அந்தக் காதல் கைகூடுவதற்காக மதச் சண்டை, ஜாதிச் சண்டை என்றெல்லாம் போட்டு பிறகு திருமணத்தை நடைபெறவைத்தவர்கள் அவர்களில் பெரும்பாலானோர். எனக்கு இது மிகவும் ஆச்சர்யமாகவே இருக்கும். (கண் என்று ஒன்று இருந்தால் எப்படி இந்தப் பெண்ணைப் போய், இவ்வளவு கஷ்டப்பட்டு காதல் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க என்று. ஆனால் நீங்கள் சொல்லிய்ருப்பதுபோல், அழகு அவரவர்களின் கண்/எண்ணத்தில்தான் இருக்கிறது)

    வெள்ளை நிறப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று கிடைத்த மாநிறப் பெண்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் கடைசியில் கட்டக் கறுப்பு நிறப் பெண்ணை மணந்துகொண்டதையும், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் உயரப் பொருத்தமோ நிறப் பொருத்தமோ இல்லாதிருந்ததையும் கண்டு வியப்பா இருக்கும்.

    ஆனால் என்னைப் பொறுத்தவரை, அழகு என்பது ஆரம்பத்தில் கவர்ச்சியா இருக்கும், விழாக்களுக்குச் செல்லும்போது பந்தாவாக அழகு மனைவியுடன் ஊர்வலம் வரலாம். அதற்குமேல் ஒன்றுமில்லை. பர்சனாலிட்டி, நல்ல குணம் இவைகள்தான் மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு மட்டுமே துணையாய் வருவதற்கு யாரும்விரும்புவதில்லை திரு மணத்தில் தேவை விட்டுக் கொடுக்கும் குணம் பதிவே சில எண்ணங்களின் வெளிப்பாடே

      நீக்கு
    2. ஜி.எம்.பி சார்.. அந்த வயசுல, நமக்கு 'குணம்' முக்கியம் என்று தோன்றுமா இல்லை அழகுதான் மனதில் நிற்குமா? (ஏனென்றால், அவங்களோட உண்மைக் குணத்தைக் கண்டறியும் வசதி நம்முடைய திருமணமுறையில் பெரும்பாலும் இல்லை)

      நீக்கு
    3. திருமணத்துக்குத் தேவைவிட்டுக்கொடுக்கும் குணமென்றுதான் கூறி இருக்கிறேன்இந்த குணம் எந்தவயதிலும் இருக்கலாம் ப்ரு முறை ஸ்ரீராம் அந்த வயதின் ஈர்ப்பு பற்றி எழுதி இருந்தார் அதெல்லாம் உடலில் உண்டாகும் சில கெமிகல்ஸ் களி வேலை என்று படித்த நினைவு

      நீக்கு
  3. வாச்சிக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான் என்றும் சொல்லலாம்! நிறைவேறியதாய் நினைத்தது கூட உண்மையா இல்லையா என்பது காலப்போக்கில்தான் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்த்தது அமைகிறது என்பது ஒரு எஸ்கேபிஸ்ம் என்ற எண்ணமே எனக்கு

      நீக்கு
  4. சிந்தனைக்கு விருந்து!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் சிந்தித்தாலும் திருப்தியான விடை கிடைக்குமா

      நீக்கு
  5. ஒரு பெண்ணாக நினைத்துக் கொண்டு இதே போல் ஒரு பதிவு எழுதுங்களேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நீங்கள் ஏன் செய்யக்கூடாது

      நீக்கு
    2. ஹா ஹா ஹா டிடி யூப்பர் மாட்ட்டீஈஈஈஈஈ:).. அதானே ? ஜி எம் பி ஐயா கேட்டதில் என்ன தப்பூஊஊஊஊ?:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  6. பதிவில் ஆண், அவர், etc., இவற்றை பெண், அவர்கள் என்று வாசித்து பார்த்தேன்...

    ஹா... ஹா... ஆணாதிக்க பகிர்வு...(?!)

    ஆனால் எனது கருத்துரை, பேரனை மட்டும் கொஞ்சும் தங்களுக்கு புரியாமல் இருப்பதே நல்லது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அது வெறும் தமாஷாகப்பட்டது ஆணாதிக்கப் பதிவு ....? எனக்கு மட்டுமல்ல யாருக்கும் புரியாது எனே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  7. எங்கள் ப்ளாகில் அலைந்து திரிந்ததில் ஏகப்பட்ட தோசை தின்றதுபோல் உணர்ந்தேன்! இங்கே வந்து பார்த்தால், இங்கேயும் இட்லி, தோசை! என்னவோ, நாளே அப்படிபோலும்..

    சரி, நீங்கள் எழுதியதற்கு வருகிறேன். நானும் சில பல தம்பதிகளை, நேரடி சந்திப்புகளிலும் (social interactions), பார்ட்டிகளிலும் கவனித்திருக்கிறேன். அதில் சில அழகான இளம் மனைவிகளைக் கவனித்தபின், அவர்களின் கணவர்களைக் காண /சந்திக்க நேர்ந்தபோது.. கடவுளே! இவனா இவளுக்கு புருஷன்? அப்படி என்ன பாவம் செய்திருப்பாள் இவள்? அப்படியே கொஞ்சம் தப்பு செய்திருந்தாலும் நீ கொஞ்சம் மன்னித்திருக்கக்கூடாதா என்று பதறியிருக்கிறேன். ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறை. சம்பந்தப்பட்ட கணவர்களின் அழகுத்தோற்றம், கண்ணியம், குண அதிசயங்கள் பற்றி மேற்கொண்டு விளக்காது விட்டுவிடுகிறேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் இம்மாதிரி எண்ணங்கள் வருவதை தவிர்க்க முடியாது

      நீக்கு
  8. திருமண பந்தத்துக்கு மட்டும் வரையறையே கொண்டு வர முடியாது.. எல்லா விதத்திலும் எல்லா மாதிரிச் சோடிகளும் உலகில் உண்டு... சிலருக்கு மனமொத்த வாழ்க்கை,
    சிலருக்கு இனி என்ன பண்ணுவது இழுத்து முடிப்போம் எனும்படியான வாழ்க்கை.. இப்படி அமைந்து விடுகிறது... தலை எழுத்து என்றுதான் நானும் கூறுவேன்.

    எது இருந்தாலும்.. எது இல்லாவிட்டாலும் .. இருவருக்குள்ளும் மனம் ஒத்துப் போகவில்லை எனில் அது நரகமே.. அப்படி ஊருக்காக உலகுக்காக வாழ்வதை விட தனிமையில் வாழ்வது மேலாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் ஒத்துப் போக மன முதிர்ச்சி வேண்டும்தலை எழுத்து என்று நினைத்துவிட்டால் என்றும் மாவாழ்க்கை நரகமாகும்

      நீக்கு