அப்துல் கலாம் திப்பு சுல்தானின் மறு பிறவியாமே.?
--------------------------------------------------------------------
சான்ஃப்ரான்சிஸ்கோவின் (WALTER SEMKEW) வால்டர்
செம்கியூ என்னும் ஆராய்சியாளர் வெர்ஜீனியா யுனிவெர்சிடியில் மறுபிறவி பற்றி
ஆராய்ச்சிகள் செய்து பார்ன் அகெயின் மற்றும் ஒரிஜின் ஆஃப் சொல்ஸ் என்னும்
புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். ஜவஹர்லால் நேரு அப்துல் கலாம் ஆகியோரது கடந்த
வாழ்க்கையைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறாராம்
அந்த ஆய்வின் அடிப்படையில் அப்துல் கலாம் திப்பு சுல்தானின் மறு பிறவி
என்கிறாராம்
Parur. S Ganesan IES ( Retd) என்பவர்
தான் கலாமுடன் கல்லூரியில் கழித்த நாட்களை நினைவு கூறுகையில் கலாம் இளவயதில் மிகவும்
கஷ்டப்பட்டவர் என்றும் இவரும் கலாமும்
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இரண்டாண்டுகாலம் ஒன்றாகப் படித்தவர்கள் என்றும் ( 1952-54)இவர்
கல்லூரி விடுதியில் அறை எண் 27 லும் கலாம் அறை எண் 29 லும் தங்கி இருந்ததாகக்
கூறுகிறார். கலாமின் ஏழ்மையை அறிந்த கல்லூரிப் பாதிரியார்கள் அவருக்கு இலவச
தங்குமிடமும் உணவும் அளித்ததோடு மட்டுமல்லாமல்
இலவசக் கல்வியும் வழங்கினார்கள் என்றும் கூறுகிறார். அதற்கு பதிலாக கலாம்
விடுதியில் உணவு பரிமாறும் வேலை செய்ததாகவும்
கூறுகிறார் கலாமை விடுதி மாணவர்கள் சிலர் தண்ணீர்ப் பையன் கலாம் என்று
கூப்பிட்டதாகவும் கூறுகிறார். அதை இவரும்
மருதாசலம் என்பவரும் ஆட்சேபித்ததாகவும் கூறு கிறார்.
கலாமுக்கு பைலட் ஆகும்
கனவிருந்தது என்று கூறும் இவர் பேராசிரியர் எம் ஜி கே மேனன் கண்டெடுத்தபின் கலாமின் முன்னேற்றம் வளர்ச்சியின் முகமாகவே
இருந்தது என்றும் கூறுகிறார்.
சிறுவயதில் பேப்பர் போடுபவராக
இருந்த கலாமை ஒரு வடக்கத்தியவர்(mendicant) பார்த்து இவருக்கு அரச யோகம் இருக்கிறது என்றும்
இவர் சக்கரவர்த்தி ஆவார் என்றும் கூறினாராம் அதற்கு கலாமின் தந்தை
சக்கரவர்த்தியின் தந்தையாக வேண்டாம் என்
குடும்பத்துக்கு இரு வேளை உணவு கொடுக்க முடிந்தால் போதும் என்றாராம்
திப்பு சுல்தான் இஸ்லாமியர் ஆக
இருந்தாலும் இந்துக்கள் பால் அன்பு செலுத்தியவர்.
சிருங்கேரி மடத்துக்கும் காஞ்சீபுரம் கோவிலுக்கும் மானியங்கள் கொடுத்தவர்
என்றும் அவருடைய ஆத்மா ராமேஸ்வரத்தில்
இந்து நண்பர்களால் முக்தி அடைந்தது என்று கூறுகிறார் திப்பு சுல்தானின் மறு
பிறவியே அப்துல் கலாம் என்ப்தற்கு நிறையவே சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும்
நினைக்கிறார்
கூகிளில் ஆங்கிலத்தில் வால்டர் செம்கியு என்னும் பெயரில்
தேடினால் இப்பதிவின் மூலம் கிடைக்கும்)
சமகாலத்தவரின்
நினைவுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவருக்கு நினைவுக்கு வருவது
அடுத்தவருக்கு வருவதில்லை. கலாம் பற்றிப்பலரும் எழுதி விட்டார்கள். என் அண்ணா
ஏரொனாடிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மெண்டில் 1960 களில் கலாம் வேலையில் இருந்தபோது
அங்கே பணியாற்றியவர். கலாமை இஸ்லாமிய பிராம்மணன் என்பார்களாம் .