Wednesday, September 2, 2015

அப்துல் கலாம் திப்பு சுல்தானின் மறு பிறவியாமே.?


                            அப்துல் கலாம் திப்பு சுல்தானின் மறு பிறவியாமே.?
                             --------------------------------------------------------------------


சான்ஃப்ரான்சிஸ்கோவின் (WALTER SEMKEW) வால்டர் செம்கியூ என்னும் ஆராய்சியாளர் வெர்ஜீனியா யுனிவெர்சிடியில் மறுபிறவி பற்றி ஆராய்ச்சிகள் செய்து பார்ன் அகெயின் மற்றும் ஒரிஜின் ஆஃப் சொல்ஸ் என்னும் புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். ஜவஹர்லால் நேரு அப்துல் கலாம் ஆகியோரது கடந்த வாழ்க்கையைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறாராம்  அந்த ஆய்வின் அடிப்படையில் அப்துல் கலாம் திப்பு சுல்தானின் மறு பிறவி என்கிறாராம்
Parur. S Ganesan IES ( Retd) என்பவர் தான் கலாமுடன் கல்லூரியில் கழித்த நாட்களை நினைவு கூறுகையில் கலாம் இளவயதில் மிகவும் கஷ்டப்பட்டவர் என்றும்  இவரும் கலாமும் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இரண்டாண்டுகாலம்  ஒன்றாகப் படித்தவர்கள் என்றும் ( 1952-54)இவர் கல்லூரி விடுதியில் அறை எண் 27 லும் கலாம் அறை எண் 29 லும் தங்கி இருந்ததாகக் கூறுகிறார். கலாமின் ஏழ்மையை அறிந்த கல்லூரிப் பாதிரியார்கள் அவருக்கு இலவச தங்குமிடமும் உணவும் அளித்ததோடு மட்டுமல்லாமல்  இலவசக் கல்வியும் வழங்கினார்கள் என்றும் கூறுகிறார். அதற்கு பதிலாக கலாம் விடுதியில் உணவு பரிமாறும் வேலை செய்ததாகவும்  கூறுகிறார் கலாமை விடுதி மாணவர்கள் சிலர் தண்ணீர்ப் பையன் கலாம் என்று கூப்பிட்டதாகவும்  கூறுகிறார். அதை இவரும் மருதாசலம் என்பவரும் ஆட்சேபித்ததாகவும் கூறு கிறார்.
கலாமுக்கு பைலட் ஆகும் கனவிருந்தது என்று கூறும் இவர் பேராசிரியர் எம் ஜி கே மேனன்  கண்டெடுத்தபின்  கலாமின் முன்னேற்றம் வளர்ச்சியின் முகமாகவே இருந்தது  என்றும் கூறுகிறார்.
சிறுவயதில் பேப்பர் போடுபவராக இருந்த கலாமை ஒரு வடக்கத்தியவர்(mendicant) பார்த்து இவருக்கு அரச யோகம் இருக்கிறது என்றும் இவர் சக்கரவர்த்தி ஆவார் என்றும் கூறினாராம் அதற்கு கலாமின் தந்தை சக்கரவர்த்தியின் தந்தையாக வேண்டாம்  என் குடும்பத்துக்கு இரு வேளை உணவு கொடுக்க முடிந்தால் போதும் என்றாராம்
திப்பு சுல்தான் இஸ்லாமியர் ஆக இருந்தாலும் இந்துக்கள் பால் அன்பு செலுத்தியவர்.  சிருங்கேரி மடத்துக்கும் காஞ்சீபுரம் கோவிலுக்கும் மானியங்கள் கொடுத்தவர் என்றும்  அவருடைய ஆத்மா ராமேஸ்வரத்தில் இந்து நண்பர்களால் முக்தி அடைந்தது என்று கூறுகிறார் திப்பு சுல்தானின் மறு பிறவியே அப்துல் கலாம் என்ப்தற்கு நிறையவே சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் நினைக்கிறார்

(டிஸ்கி-- ஒரு முறை சென்னையின் விற்பனைப் பெண்மணி என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்  அது எனக்கு வந்த ஒரு மெயிலின் அடிப்படையில் அமைந்தது. ஆனால் பதிவில் கூறபட்டிருந்த பெண் பற்றிய எந்தத் தகவலும் நம்பப் படமுடியாதவை என்று ஒரு கருத்து எழுந்தது.  ஆகவேதான் என் மேற்கண்ட பதிவில் யாரோ சொன்னது போல் எழுதி இருக்கிறேன்  


 கூகிளில் ஆங்கிலத்தில் வால்டர் செம்கியு என்னும் பெயரில் தேடினால் இப்பதிவின் மூலம் கிடைக்கும்) 
சமகாலத்தவரின் நினைவுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவருக்கு நினைவுக்கு வருவது அடுத்தவருக்கு வருவதில்லை. கலாம் பற்றிப்பலரும் எழுதி விட்டார்கள். என் அண்ணா ஏரொனாடிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மெண்டில் 1960 களில் கலாம் வேலையில் இருந்தபோது அங்கே பணியாற்றியவர். கலாமை இஸ்லாமிய பிராம்மணன் என்பார்களாம் .


32 comments:

 1. இன்னும் அவரைப் பற்றிய தகவல்கள் வரக்கூடும் என்றே நினைக்கின்றேன்..

  ReplyDelete
 2. சுவாரஸ்யமான கற்பனை. நாம் முன்பிறவியில் யாராக இருந்திருப்போம்?

  ReplyDelete
 3. இதை எல்லாம் நான் நம்புவதில்லை. கலாம் ஒரு மாமனிதர் என்பதில் சந்தேகமும் இல்லை. அவர் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்!

  ReplyDelete
 4. சுவாரஸ்யமாக இருக்கின்றது. இவை எல்லாம் அவரவர் நம்பிக்கை, எண்ணங்கள் மூலம் எழுபவை. இப்படி எழுதப்படுபவை எல்லாம் வாசிப்பதற்கு சுவாரஸ்யம்தான். ஏதோ ஒரு தளத்தில் நீங்கள் இறுதியில் சொல்லி இருக்கும் கலாம் "இஸ்லாமிய பிராமணர்" என்று சொல்லப்பட்டார் என்பதை வைத்து ஒரு பெரிய விவாத மேடையே அதுவும் ஹாட்டாக நடந்திருக்கிறது. கலாமை விமர்சித்து. எழுத்தாளர் சாரு கூட கலாமை விமர்சித்துள்ளதாகக் கேள்விப்பட்டோம்.

  எது எப்படியோ, என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வரட்டும்... கலாம் நல்ல மாமனிதர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

  ReplyDelete
 5. திரு அப்துல் கலாம் அவர்கள் முற்பிறவியால் யாராக இருந்தார் அறிந்து நாம் என்ன செய்யப்போகிறோம்? அவர் உழைப்பால் உயர்ந்த மனிதர் என்பதில் யாருக்கும் இருக்கமுடியாது. எனவே அவரை ஒரு முன் மாதிரியாக ஏற்று நாமும் உயர பாடுபடுவோம்.

  ReplyDelete

 6. புது விடயமாக இருக்கிறதே ஐயா
  அப்துல் கலாம் ஒரு சிறந்த உழைப்பாளி 80 உலகறிந்த விசயமே நண்பர் அன்பின் ஜி திரு. துரை செல்வராஜு அவர்கள் சொல்வது போல இன்னும் இதுபோல தகவல்கள் வரக்கூடும்.

  ReplyDelete
 7. படித்தவர்களே இப்படி முட்டாள்தனமாய் கூறினால் ,எங்கே போய் முட்டிக் கொள்ள :)

  ReplyDelete
 8. அது எப்படி முடியும்? திப்பு சுல்தானின் அசல் மறுபிறவி பழனி. கந்தசாமிதான். எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயார்.

  ReplyDelete

 9. @ துரை செல்வராஜு
  எல்லாத் தகவல்களும் ஒவ்வொன்றாக வரும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 10. @ ஸ்ரீராம்
  நீங்கள் கற்பனை என்கிறீர்கள். அவர்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் என்கிறார்கள். நீங்கள் யாராக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  /அவர் யாராகவேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்/ கடவுளின் அவதாரம் என்று சொல்லாதவரை சரி. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 12. @ துளசிதரன் தில்லையகத்து
  தில்லையகத்து துளசிதரன் கூட கருத்து தெரிவிக்கிறார். அப்படி இருக்கும் போது அது என்ன” எழுத்தாளர் சாரு கூட” / யர்ர் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 13. @ வே.நடன சபாபதி
  /எனவே அவரை ஒரு முன் மாதிரியாக ஏற்று நாமும் உயர பாடுபடுவோம்/ நம்மையும் யாராவது முற்பிறவியில் இன்னார் என்று சொல்லக் கூடும் வருகைக்கு நன்றி ஐயா. .

  ReplyDelete

 14. @ கில்லர்ஜி
  நிறையவே புதிய விஷயங்கள் நம் கண்ணுக்கு எட்டாமலேயே போய் விடுகிறது. வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 15. @ பகவான் ஜி
  நமக்கு ஒப்பாத எல்லாமே முட்டாள்தனமாகாது. அப்படிப் பார்த்தால் அநேகமாக பல நம்பிக்கைகளும் முட்டாள்தனம் என்றே சொல்லவேண்டும் அவர்கள் ஏதோ ஆராய்ச்சியின் அடிப்படையில் என்கிறார்கள்.வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  ஏதாவது மசூதியில் சத்தியம் செய்யத் தயாரா. ?வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ கரந்தை ஜெயக்குமார்.
  எதை கற்பனை என்கிறீர்கள். பாரூர் கணேசனின் நினைவுகளையா.? வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 18. முற்பிறவி, மறுபிறவிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இதுபோன்ற தகவல்களைக் கேட்கும்போது சுவைக்கத்தான் செய்கிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 19. எழுத்துச் சுதந்திரத்திற்கும், கற்பனைக்கும் எல்லையில்லை என்ற நிலையில் இதனை பொறுமையோடு நாம் கேட்டுக்கொள்வோம். ஏற்போமா இல்லையா என்பது பிரச்சினையில்லை.

  ReplyDelete
 20. இத் தகவல் பொய்யான தகவலாக இருந்தாலும் கூட கலாம் மீண்டும் இந்த மண்ணில் பிறந்துள்ளார் என்று கேட்ட சந்தோசத்தை மட்டும் எமதாக்கிக் கொள்வோம்
  மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete

 21. @ கீதமஞ்சரி
  தகவல்கள் சுவையாக இருந்ததால்தானே இதைப் பகிர்ந்தேன். வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  இதில் கலாம் திப்புவின் மறு பிறவியா என்னும் கருத்துதான் இந்தப் பதிவுக்கு பார்வையாளர்களை வரவழைத்தது. அது தவிர கூறப்பட்டுள்ள நினைவுகள் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. தகவல்களைக் கேட்டுத்தெரிந்து கொள்கிறோம் ஏற்கவேண்டும் என்னும் கட்டாயம் இல்லைதான் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 23. @ அம்பாளடியாள்
  திப்பு சுல்தான்தான் மறு முறை கலாமாகப் பிறவி எடுத்திருக்கிறார் என்பதுதானே தகவல் கலாம் மறு பிறவி எடுக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 24. //@ டாக்டர் கந்தசாமி
  ஏதாவது மசூதியில் சத்தியம் செய்யத் தயாரா.//

  மசூதி என்ன? சர்ச், சீக்கியர், ஜைனர், புத்தர், இந்த மாதிரி எந்தக் கோவிலானாலும் "கூட்டிக்கொண்டு போனால்" சத்தியம் செய்யத் தயார்.

  ReplyDelete

 25. @ டாக்டர் கந்தசாமி
  உங்கள் நம்பிக்கையைக் குறைப்பது என் நோக்கமல்ல. மீண்டும்வந்து தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 26. இது உண்மையா பொய்யா என்பதை நான் நேரில் அறிந்து சொல்ல முடியும் - தயவு செய்து எனது அடுத்த பிறவியில் தொடர்பு கொள்ளவும்! - இராய செல்லப்பா

  ReplyDelete

 27. @ செல்லப்பா யக்ஞசாமி
  அவ்வப்போது தலை காட்டும் உங்களை அடுத்த பிறவியில் தொடர்பு கொள்வது எப்படி.? வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 28. முற்பிறவில யாரா இருந்தா என்ன . அடுத்த பிறவி எப்போ எடுப்பாருன்னு யாராவது சொன்ன நல்லா இருக்கும்!! .

  ReplyDelete
 29. @ சசிகலா
  முற்பிறவி அடுத்த இறவி என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான் நான் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 30. Sir,
  எனக்கும் முற்பிறவியில் எல்லாம் நம்பிக்கை இல்லை . கலாம் சார் பற்றி முப்பிறவி என்றெல்லாம் எழுதுவது அவரின்
  மரியாதையை , மேன்மையை குறைப்பது போல் நான் உணர்ந்தேன் . என் கமெண்ட் உங்களை நோக்கி அல்ல . sorry if I had hurt you .

  ReplyDelete

 31. @ சசிகலா
  இதில் hurt ஆவதற்கு என்ன இருக்கிறது பின்னூட்டங்களே அவரவர் கருத்தைத் தெரிவிக்கத்தானே. டோண்ட் வொரி.

  ReplyDelete