பொருள் தெரிந்து ஓத
----------------------------------
என் புதிய கணினி |
இந்தப் பதிவு என் புதிய கணினியில் இருந்து பதிவிடுகிறேன் 4 gb ram . 500 gb hdo, intel dual core. 19' led, Dell monitor போன்ற வசதிகள் கொண்ட விண்டோஸ் 7 கணினி.விநாயகச் சதுர்த்தி ஒட்டி இப்பதிவு வருவதாலும் என் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் முதலில் விநாயக தோத்திரம் இந்த ஸ்துதிகளை எனக்குத் தூக்கம் வராதபோது சொன்னால் தூக்கம் வரும் என்று என் மனைவி கூறியதால் எனக்கு இவை மனனம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா
அவிக்னம் குருவே தேவ
சர்வகார்யேஷு சர்வதா
கஜானனம் பூதகணாதி
சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச
காரணம்
நமாமி விக்நேஸ்வர பாத
பங்கஜம்
அகஜானன பத்மார்க்கம்
கஜானன மஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண
விளம்பித ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத
நமஸ்தே.
இந்தப் பதிவு அது
பற்றியதும் அல்ல. ஔவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல் பலராலும் மனனம் செய்து வேண்டப்படுவது. ஆனால் அதில்
சொல்லப் பட்டிருக்கும் விஷயங்கள் சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாதது. இந்தப்
பதிவில் ஔவையாரின் அகவலின் பொருளைக் கூற முயற்சிக்கிறேன் இருந்தாலும் அதை வரும் சில வார்த்தைகள்
அர்த்தம் தெரியாதவையே முதலில் அகவல்
சீதக்களப செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது எனை ஆட்கொள வேண்டி
தாயாயெனக்கு தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே எந்தன் உளன்ந்தற்புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைத்தான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே
உவட்டா............
முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.
“........................................................................................................................
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....
படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது. இனி அவர் கேட்பது தெரிந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.
”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி
சாலோகம் சாயுஜ்யம் சாமீபம் சாரூபம் என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன,அதன் நலங்கள் என்ன
என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )
“மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.
ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து
” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே.
உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி
அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )
”இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்த்றிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடகலை பிங்கலைஎனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)
சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
என் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்படஎனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி,
சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே.
இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி,கபால வாயிலை எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி
அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்
அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .
தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அனுபவித்து அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.
ஆனால் இதைச் சொல்லும் நமக்கு இதில் ஏதாவது கை கூடி வருகிறதாஎன்று சிந்திக்க முனைபவன் என்னைப் போல் ஒரு பைத்தியக் காரன் என்றே தோன்றுகிறது ஒன்றுமட்டும் புரிகிறது. ஔவையாருக்கும் இவை கை கூடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ வேண்டுதல்கள்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் விமரிசையாகக் கொண்டாடப் படும் பண்டிகை விநாயகச் சதுர்த்தி/ இந்நாளில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்
புதுகை பதிவர் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் களை கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பதிவர் கையேட்டுக்கான விவரங்களை அளித்து விட்டீர்களா. இல்லையென்றால் உடனே செய்ய வேண்டுகிறேன் இன்னுமொரு வேண்டுகோள் இடியாப்பச் சிக்கல் கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் பங்கேற்க எழுதத் துவங்கி விட்டீர்களா விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்
ஒரு பதிவில் இதை எழுதி விடவும் முடியாது ஐயா... நன்றி...
பதிலளிநீக்குவிநாயக சதுர்த்தி வாழ்த்துகள். கணினி புதியது வாங்கியமைக்கும் வாழ்த்துகள். இனி தொடர்ந்து தடையின்றி இதில் செயல்படலாம்.
பதிலளிநீக்குபுதிய கணினி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
நன்றி
படிக்கும் போதே எனக்கு தூக்கம் வந்து விட்டது :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
ஒரு பதிவில் மட்டுமல்ல ஒரு வாழ்நாளிலும் புரிந்து கொள்ள முடியுமா தெரியவில்லை. வருகைக்கு நன்றி டிடி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துகளுக்கு நன்றி மேம். பதிவு பற்றி ஏதும் கூறவில்லையே
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
பதிவு பற்றிக் கருத்து ஏதும் இல்லையா ஐயா வாழ்த்துகளுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
தூக்கம் வராதபோது சொல்லிப் பாருங்கள். தூக்கமின்மைக்கு நல்ல மருந்து.வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதிய கணினி வாங்கியமைக்கு, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
பதிவு பிரமாண்டம் ஐயா மலைத்து விட்டேன் விடயங்கள் பல அறிந்தேன் நன்றி
New broom sweeps well என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுபோல் புது கணினி நன்றாக வேலை செய்கிறது போல் தெரிகிறது. எம்மாம் பெரிய பதிவு, அதுவும் விநாயகரைப் பற்றி, விநாயக சதுர்த்தி அன்று போட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டு வந்து முழுவதையும் படித்து பின்னூட்டம் போடுகிறேன்.
பதிலளிநீக்குநெடும் பகிர்வு. பொறுமையாக படிக்க வேண்டியது... படிக்கிறேன்.
பதிலளிநீக்குபுதிய கணினிக்கு வாழ்த்துகள்.
இதில் மட்டுமல்ல அவ்வை பாட்டி ‘நல்வழி’ நூலில் கூட விநாயகரிடம் நான் நான்கு தருகிறேன் நீ மூன்று கொடு என சொல்கிறார். இது கூட ஒரு வேறொரு வேண்டுகோள் தான்.
பதிலளிநீக்குபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
என்பதே அது..
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
புதிய கணனி வேண்டியமைக்கு வாழ்த்துக்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
மலைக்க வைப்பது நோக்கமல்ல, புரிந்து கொள்ளவே எழுதினேன் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
ஐயா வருகைக்கு நன்றி கொழுக்கட்டை சாப்பிட்டாய்விட்டதா. >
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி ஐயா. பதிவின் நீளத்தைக் குறைக்க முடியவில்லை.
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி
என் சந்தேகமே ஔவையாருக்கு தான் வேண்டுவது என்ன என்று புரிந்திருக்கிறதா என்பதுதான் பல வேண்டுதல்களைப் புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா. கடவுளிடமே பார்ட்டர் டீல்?
பதிலளிநீக்கு@ ரூபன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
புதிய கணினி வரவால் இனி அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுதுக் கணினி வாங்கியமைக்கு முதலில் இனிய பாராட்டுகள். ஏன் இன்னும் டெஸ்க் டாப்? Lap top இன்னும் கொஞ்சம் வசதியாகவும், இடம் அடைக்காமலும் இருக்குமே!
பதிலளிநீக்குபுள்ளையார் சதுர்த்தி வாழ்த்து(க்)கள்.
ஸ்லோகங்கள் எழுதியது நன்று.
சீர்காழி கோவிந்தராஜன் குரல் உள்ளத்தில் ஒலிக்கிறது.
பதிலளிநீக்குபுதுக்கணினி - வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
சட்டியில் இருக்கும் வரை அகப்பையில் வரும் கணினி சம்பந்தப் பட்டது அல்ல வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
எனக்கு என்னவோ லாப் டாப்பைவிட டெஸ்க் டாப்பே வசதியாகத் தெரிகிறது. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு.
@ ஸ்ரீராம்
/சீர்காழி கோவிந்தராஜன் குரல் உள்ளத்தில் ஒலிக்கிறது/பதிவின் பாதிப்பா? சீர்காழி எங்கே வந்தார்? வருகைக்கு நன்றி ஸ்ரீ. .
விநாயகர் அகவலை அப்படி விழுந்து விழுந்து மனப்பாடம் செய்திருக்கிறேன். இருபது வருடங்களுக்குப் பிறகும் கூட இப்போதும் அட்சர சுத்தமாக நினைவில் உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள மண்டலம், மும்மலம், ஆறாதாரம், குண்டலி போன்ற வரிகளின் பொருள் புரியாதபோதும் அவற்றுக்கான விளக்கம் தேடத்தலைப்படவில்லை. நம் புத்திக்கு எட்டாத விஷயங்கள் எவ்வளவோ அவற்றுள் இதுவும் ஒன்று என்று அதற்குமேல் யோசிக்கவும் இல்லை. இப்போது தங்கள் வாயிலாய் பாடலின் பொருள் முழுவதுமாக அறிய முடிந்தது. மிகவும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு\\@ ஸ்ரீராம்
பதிலளிநீக்கு/சீர்காழி கோவிந்தராஜன் குரல் உள்ளத்தில் ஒலிக்கிறது/பதிவின் பாதிப்பா? சீர்காழி எங்கே வந்தார்? வருகைக்கு நன்றி ஸ்ரீ. .\\
விநாயகர் அகவலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார். அதையே இங்கு ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.
@ கீத மஞ்சரி
பதிலளிநீக்குஸ்ரீராமுக்கான மறு மொழியில் சீர்காழி யின் வரவு பற்றி அப்படித்தான் நினைத்தேன் சரியா என்று தெரிந்து கொள்ளவே அப்படி எழுதினேன் நீங்களே சொன்ன பின் அப்படியாகத்தான் இருக்க வேண்டும் நன்றி மேடம்
@ கீத மஞ்சரி
பதிலளிநீக்குசில வார்த்தைகளின் பொருள் தெரிந்தாலும் அது இதுதான் என்று பலராலூம் ஏன், யாராலும் உணரப்படாதது. வருக்சைக்கு நன்றி. கதைப் போட்டி பற்றி நினைவூட்டுகிறேன்
பதிலளிநீக்கு//ஸ்ரீராமுக்கான மறு மொழியில் சீர்காழி யின் வரவு பற்றி அப்படித்தான் நினைத்தேன் சரியா என்று தெரிந்து கொள்ளவே அப்படி எழுதினேன்//
சரிதான்!
:)))))))
பொருள் தெரியாமல் பாடலை மனப்பாடம் செய்வதில் தவறில்லை. ஏனெனில் முன்பின் தெரியாத ஒருத்தியுடன் நாம் மணவாழ்வை ஆரம்பிக்கவில்லையா? ஒரு சங்கடம், மனைவியும் சரி, அவ்வையாரின் அகவலும் சரி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நமக்குப் புரிபடுவதில்லை.
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
பதிலளிநீக்குபுரியாததெல்லாம் சரி என்பது வாதமா? வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு"சாலோகம் சாயுஜ்யம் சாமீபம் சாரூபம் என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன,அதன் நலங்கள் என்ன என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )"- -இந்த நான்கும் நான்கு 'லோகங்கள்' அல்ல -நம் consciousness -ல் நாம் அடையும் நிலைகள் -ஸா -லோகம் அவர் இருக்கும் உலகத்தையே அடைவது ;ஸா -மீப்யம் அவரின் சமீபத்தை அடைவது ;ஸா -ரூப்யம் அவரின் உருவத்தையே அடைவது ; ஸா -யுஜ்யம் அவருடனேயே ஒன்றிவிடுவது ..இவ்வாறே நான் புரிந்து கொண்டது ...மாலி
பதிலளிநீக்கு@ வி.மாலி
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. கடவுள் என்பவர் ஒருவர் இருந்தால் அவர் என்னுள்ளேயே இருக்கிறார் என்று நம்புபவன் நான். இவ்வாறு இருக்கும்போதுஅவர் உலகம் அவர் சமீபம், அவர் ரூபம் , அவருடனே ஒன்றுதல் எல்லாம் எனக்குப் புரிவது கஷ்டமாக இருக்கிறது எல்லாமே அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்கள் என்றே நினைக்கிறேன். மாறுபட்ட கருத்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன் மீண்டும் நன்றி.
ஒரு செய்யுளில் குறிப்பீட்டிருக்கும் குறியீடுகளை புரிந்து கொள்ளுதல் வேறு ; நம்முடைய தனிப்பட்ட புரிதலும் ,நம்பிக்கைகளும்வேறு --இந்தப பிறழ்தலை நான் தங்களிடம் நிறையவே காண்கிறேன் ...முயற்சி எடுத்துக் கொண்டு சுட்டிக்காட்டுவதில் எனக்கு ஆர்வம் இல்லை ..மாலி
பதிலளிநீக்கு@ வி மாலி
பதிலளிநீக்குபுரியச் செய்ய முயன்றதற்கு மிக்க நன்றி. சில குறியீடுகளைப் புரிந்து கொள்வது என் நம்பிக்கைக்கு மாறாக இருப்பதைச் சொன்னேன்
//பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அனுபவித்து அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.
பதிலளிநீக்குஆனால் இதைச் சொல்லும் நமக்கு இதில் ஏதாவது கை கூடி வருகிறதாஎன்று சிந்திக்க முனைபவன் என்னைப் போல் ஒரு பைத்தியக் காரன் என்றே தோன்றுகிறது ஒன்றுமட்டும் புரிகிறது. ஔவையாருக்கும் இவை கை கூடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ வேண்டுதல்கள். //
ஔவையார் யோக சாஸ்திரம் குறித்து எழுதி இருக்கிறார். யோகம் என்பது இப்போது அனைவரும் செய்யும் ஆசனப்பயிற்சிகள் அல்ல. அதற்கும் மேம்பட்டது. அதைப் புரிந்து கொள்வது கடினமே. எனினும் எங்கள் குருவானவர் இது குறித்து ஓரளவு எங்களுக்கு விளக்கி இருக்கிறார். ஔவையார் புரிந்து கொள்ளாமலா இத்தனை விபரங்கள் எழுதி இருக்கிறார்? சில நூற்றாண்டுகள் முன்னர் என்றால் அனுபவம் இருப்பதற்கும் இப்போது இருப்பவர்க்கு அனுபவம் இல்லை என்பதற்கும் நம் புரிதல் தான் காரணம். நமக்குப் புரியவில்லை எனில் ஔவைக்குப் புரியவில்லை என்று அர்த்தம் இல்லை.
இப்போதும் யோகக் கலையில் சித்தி அடைந்தவர்கள் இருக்கின்றனர்.
பதிலளிநீக்குபொருள் தெரியாமல் சொல்லப்பட்டது என்பது மனதை உறுத்திய வண்ணமே இருந்தது. எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் டாக்டர் திரு சங்கர்குமார் அவர்கள், அமெரிக்காவில் வடகரோலினா மாநிலத்தில் ராலே என்னும் ஊரில் வாழ்கிறார் அவர் விநாயகர் அகவல் குறித்ததொரு எளிமையான விளக்கம் எழுதியது நினைவில் வந்தது. சுட்டியைத் தேடி எடுத்தேன். இதோ சுட்டி கீழே'
பதிலளிநீக்குhttp://aaththigam.blogspot.in/2008/09/1.html
இவர் வாழ்க்கையில் சந்தித்திராத பிரச்னைகளே இல்லை. கணவன், மனைவி இருவரும் மருத்துவர்களெ ஏன்றாலும் பல கடுமையான சோதனைகளைத் தாங்கியவர்கள், இன்னமும் தாங்குபவர்கள். அனைத்தும் அவன் அருளே என அன்றும், இன்றும், என்றும் நம்புபவர்கள். பதினைந்து பதிவுகளாக விநாயகர் அகவல் குறித்த விளக்கம் தரப்பட்டிருக்கும். இயன்றால் படித்துப் பார்க்கவும். கட்டாயம் ஏதும் இல்லை. :)
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்,
பதிவுகளில் எழுதும் போது நான் என்ன நினைக்கிறேனோ அதுவே பதிவாகிறது சில விஷயங்கள் தீரடிகலாக இருப்பவை.ஔவையாருக்குப் ப்ராக்டிகலாக வந்திருக்காது அதனால்தான் வேண்டுகிறாரோ என்பது என் கருத்துஇந்த மாதிரி வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு ஹேசி வெளிப்பாடாகத் தெரிகிறது. இதையும் கூடத் தெரிந்து கொள்ளாமல் மனனம் செய்யப்படுவதையே குறிப்பிட்டேன் . நான் படித்தவரை அதன் பொருளை எடுத்துக் கூறி எழுதி இருக்கிறேன்.யோகா பற்றிக் கூறும் அருகதை எனக்குக் கிடையாது. ஏதோ சில உடற்பயிற்சிகள் மட்டுமே அறிந்தவன் மைசூரில் ஒரு ஐயங்கார் பெயர் நினைவுக்கு வரவில்லை, அநேக யோகா மையங்களைத் துவக்கி உலகெங்கும் யோகா பயிற்றுவித்தவர். அவர் இம்மாதிரி குண்டலினி யோகா பற்றியெல்லாம் கூறி இருக்கிறாரா தெரியாது.
@ கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்கு/இப்போதும் யோகக் கலையில் சித்தி அடைந்தவர்கள் இருக்கின்றனர்/ சுவாமி நித்தியானந்தா போன்றவர்கள் குண்டலினி யோகப் பயிற்சி கொடுத்ததை தொலைக் காட்சியில் பார்த்தேனே
/
@ கீதா சம்பசிவம்
பதிலளிநீக்குஎனக்கும் அகவலின் பொருள் தெரிந்திருக்கவில்லை. கணினியில் தேடிப்பிடித்துத் தெரிந்து கொண்டேன் எனக்கும் ஒரு டாக்டர் சங்கர் குமாரைத் தெரியும். அவர் சொல்லிக் கொடுத்த முறையில்தான் திருவெழுக்கூற்றிருக்கை எழுதினேன் என் பாணியில் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிலும் போய் பார்க்கிறேன் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
/பொருள் தெரியாமல் சொல்லப்பட்டது என்பது மனதை உறுத்திய வண்ணமே இருந்தது/ மன்னிக்கவும் சொல்லப் பட்டது என்று சொல்லவில்லை. சொல்லப் படுகிறது என்றுதான் எழுதி இருக்கிறேன் பாருங்கள் உங்களுக்கும் டாக்டர் சங்கர் குமாரின் பதிவு தேவைப் பட்டதுநானும் பார்த்தேன். அவர் என்னைவிட அழகாக நீட்டி முழக்கிச் சொல்லி இருக்கிறார். நான் நினைக்கும் சங்கர் குமார்தான் இவர் என்று தோன்றுகிறது. என் திருவெழுக்கூற்றிருக்கையைப் பாராட்டி எழுதி இருந்தார்
பொருள் தெரியாமலா ஔவை இத்தனை அழகாக விளக்கி இருக்கிறார். யாருக்கும் தெரியவில்லை, தெரியாமலேயே சொல்கிறார்கள் என்று நீங்கள் எழுதியதாலேயே பொருள் தெரிந்தவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட சங்கர்குமாரின் பதிவைக் காட்டினேன் அவர் எழுதும்போதே அதை நான் படித்திருக்கிறேன். புதியது அல்ல. அவரும் எனக்குப் புதியவர் அல்ல.
பதிலளிநீக்குஸ்வாமி நித்தியானந்தா தொலைக்காட்சியில் பயிற்சி கொடுக்கிறார் என்பதே இப்போது நீங்கள் சொல்லித் தான் தெரியும். அம்மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் பார்ப்பது இல்லை பொதிகை தவிர மற்றத் தொலைக்காட்சிகளில் பக்தி, ஆன்மிகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வீணே!
@ கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஔவையாருக்குப் பொருள் தெரிந்து எழுதவில்லை என்று நான் சொல்லவில்லையே. மனனம் செய்வோர் பலரும் பொறுள் தெரியாமல் செய்கிறார்கள் என்றுதானே கூறு கிறேன் எனக்கும் பொருள் தெரியாமல்தான் இருந்தது. படித்துத் தெரிந்து கொண்டேன் தெரிந்தவர் குறைவு. தெரியாதோர் அதிகம் . சுவாமி நித்தியானந்தா கைதாகி அவர் மேல் குற்றம் பதிவாகி இருக்கிறது. அவர் கொடுத்து கொண்டிருந்தார் என்றுதானே எழுதி இருக்கிறேன்சில விஷயங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்கிறீர்களோ என்று தோன்று கிறது. வருகைக்கு நன்றி.
//என் சந்தேகமே ஔவையாருக்கு தான் வேண்டுவது என்ன என்று புரிந்திருக்கிறதா என்பதுதான் பல வேண்டுதல்களைப் புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கிறது//
பதிலளிநீக்குஎன் சந்தேகம் இது தான். ஔவை தெரியாமலா எழுதி இருப்பார் என்று நான் சொல்ல இந்த உங்கள் கருத்துத் தான் காரணம். தான் கேட்பது என்னவெனத் தெரியாமலா இவ்வளவு விலாவரியாக விளக்கி இருக்கிறார்? நமக்குத் தான் புரியவில்லை. :)
இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்வோம். :)