Monday, September 21, 2015

முன்னேற்றமும் பண்பாடும்


                  முன்னேற்றமும்  பண்பாடும்
                  -----------------------------------------------
முன்னேற்றம் என்பதுதான் என்ன அதன் பொருள்
பலருக்கும் பலவிதம்-, சிலருக்கு
நடை உடை பாவனையில் தெரிவது
முன்னேற்றம்-.  சிலருக்கோ வாழ்க்கைத்
தரமே முன்னேற்றத்துக்கு கட்டியம்--
நல்ல பண்பாட்டுடனானதே முன்னேற்றம்.
பண்பாடென்பது சிறு வயதில் பயிற்றுவிப்பது
நல்லது எது அல்லது எது  என்பதெல்லாம்
உணர வைத்தல் பெற்றொரின் கடமை
ஐந்தில் வளைத்தல் பலன் பல தரும்  
என்றுஅடித்துக் கூறுவேன் நான்
   
அன்பே சிவம் என்றுணர்த்தல்--
அவனுக்கும் இவனுக்கும் எவனுக்கும்  
இதழ் விரிந்த சிரிப்பு, மூத்தோரிடம் மதிப்பு,
எளியோரைப் பேணுதல், இல்லார்க்கு ஈதல்,
இருப்பதில் இன்பம் காணல், ஔவையின்
ஆத்தி சூடி அறிதல், அதன் வழி நடத்தல்
கடின உழைப்புடன்  மனம் தளராமை,
இவையன்றோ நற்பண்பாட்டின்  குறியீடுகள்
நற்பண்புகள் மேலோங்க முன்னேற்றம் தானே வரும்

அதுவின்றி நெற்றியில் பட்டை நாமம்
கூடவே சதா நாவில் ஈசன் நாமம்
முன்வாய்ச் சிரிப்புகடைவாய்க் கடிப்பு
கபடதாரி வேஷம்உயர்வு தாழ்வு சிந்தனை
ஆலயங்கள் ஏனையாஅபிஷேகங்கள் ஏனையா
கோலங்கொடிகள் ஏனையாகொட்டு முழக்கம் ஏனையா
பாலும் பழமும் வைத்து நிதம்பணிந்து நடிப்பது ஏனையா
சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம்  தேடி வாராதோ
முன்னேற்றமும் கூடவே ஓடி வாராதோ


 முன்னேற்றமும்  பண்பாடும்
எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
முன்னேறிய  உலகில் பண்பாட்டின் தேவை  என்னும் பிரிவுக்கு (வகை -4 ) இதனை அனுப்புகிறேன்  .

36 comments:


 1. வணக்கம் ஐயா நல்லதொரு கருத்துகள் அடங்கிய கவிதை நடை அருமை வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா போட்டிக்கு அனுப்பிய எனது கவிதையை காண வாருங்கள்.

  ReplyDelete
 2. முன்னேற்றம் என ஆரம்பித்து, இடையில் அன்பே சிவம் என்றாகி ... முடிவில் பட்டை நாமம் வேண்டாமே என்று கூறியிருப்பதும், அதோடு இடையில் உயிர் எழுத்துச் சொர்க்களைப் பயன்படுத்தி "அ" முதல் "ஒள" வரை ஆரம்பிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி.. (குழந்தைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட "இளமைக்கு" உயிர் கொடுத்திருப்பது) என,.... எளிமையாக எழுதியிருக்கிறீர்கள் ... அதோடு, ஐந்தை புத்தகமாய் மடித்து, அறுபதில் நித்தம் அவன் என்று சொல்லியிருக்கும் விதம் அருமை .... நன்றிகளுடன் கோகி.

  ReplyDelete
 3. ஓ.. போட்டிக்காகவா? வெற்றி பெற வாழ்த்துகள்.

  எனக்கெல்லாம் எம் ஜி ஆர் பாடல்கள் கூட பாடம் சொல்பவைதான்.

  திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.. போன்ற பாடல்கள்!

  :)))))))

  ReplyDelete
 4. அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 5. அருமையாக ஆரம்பித்து, சிறப்பாக நகர்த்திச் சென்றுள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கருத்துள்ள பாடல், வெற்றிபெறவாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வணக்கம்
  ஐயா

  ஆரம்பித்த விதமும் முடித்த விதமும் சிறப்பு ஐயா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. நிறைந்த கருத்துகளுடன் கவிதையின் போக்கு மனம் கவர்கின்றது..

  வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 9. அருமையான பாவண்ணம்

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete
 10. ஐயாவும்கவிதை போட்டியில் இப்படி அறிவுரை கூறிய பின் பட்டை நாமம் சிந்திக்க வேண்டும்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 11. வெற்றி பெற வாழ்த்துகின்றோம்!

  ReplyDelete

 12. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டுவோரை சாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. அருமை.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. கருத்துள்ள வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 16. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 17. @ கில்லர் ஜி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி.

  ReplyDelete

 18. @ கோபால கிருஷ்ணன்
  ரசித்துப் படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி கோகி சார்.( முதல் வருகையா )

  ReplyDelete

 19. @ ஸ்ரீராம்
  வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 20. @ கரந்தை ஜெயக்குமார்
  வாழ்த்துக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 21. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 22. @ கோமதி அரசு
  வாழ்த்துக்கு நன்றி மேம்

  ReplyDelete

 23. @ ரூபன்
  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 24. @ துரை செல்வராஜு
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 25. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ தனிமரம்
  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை ஐயா. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 27. @ துளசி கோபால்
  வாழ்த்துக்கு நன்றி மேம்

  ReplyDelete

 28. @ நடன சபாபதி
  அது பண்பல்ல என்று கூறவே எழுதினேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 29. @ வெங்கட் நாகராஜ்
  வாழ்த்துக்கு நன்றி சார்

  ReplyDelete

 30. @ கீதா சாம்பசிவம்
  வாழ்த்துக்கு நன்றி மேம்

  ReplyDelete

 31. @ சசிகலா
  ஒரு கவிதாயினியிடமிருந்து வாழ்த்துக்கு நன்றி மேம்

  ReplyDelete

 32. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 33. கருத்தோட்டமமைந்த கவிதை .வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. நற்பண்பாட்டின் குறியீடுகள் என இங்கு காட்டியவை அனைத்தும் கோடிபெறும். அது புரியாமல்தானே நாட்டில் அராஜகங்கள் மலிந்துபோய் கிடக்கின்றன. நல்லதொரு கருத்தாழமிக்கக் கவிவரிகளுக்குப் பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete

 35. @ கீத மஞ்சரி
  பாராட்டுக்கு நன்றி மேம் வெற்றி பெருகிறோமோ இல்லையோ. நம் கருத்தினை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு என்றே கருதுகிறேன்

  ReplyDelete

 36. @ பாவலர் பொன் கருப்பையா பொன்னையா
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா/

  ReplyDelete