வெள்ளி, 11 செப்டம்பர், 2015

இடியாப்ப சிக்கல் ( போட்டிக்கதை,)


                           இடியாப்ப சிக்கல் (போட்டிக்கதை)
                          -----------------------------------------------------


 போட்டி மகத்தான போட்டி.

 இதுவரை  ஓரளவு நிகழ்வுகளை ஒட்டியே எழுதிய  ஒரு கதையினைப் பதிவிடுகிறேன்  பதிவுலகின் வாசகப் பெருமக்களை அழைக்கிறேன். எழுதி உள்ள நிகழ்வுகளை  ஒட்டி இந்தக் கதையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எழுத்தாளப் பெருமக்களின் கற்பனைக்கும் திறமைக்கும் ஒரு சவால். உங்கள் தளங்களிலேயே எழுதி எனக்குத் தெரியப் படுத்துங்கள்

போட்டியில் பங்கு பெறுபவர்கள் அக்டோபர் 2015 முதல் வாரத்துக்குள்  எழுதி அவர்கள்  தளங்களிலேயே  பதிவிட்டு விட வேண்டும் வெற்றி பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும்  பணியை சிறுகதை மன்னன்  திரு அப்பாதுரை சார் ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தேன் அவரும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் ,குறைந்த பட்சம் எட்டு கதைகளாவது வந்தால் பரிசு உண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பட்டத்துடன் முதல் பரிசாக ரூபாய் ஆயிரமும். இரண்டாம் பரிசாக ரூபாய் ஐநூறும் வழங்கப் படும் பதிவின் நீளம் குறித்து அவரவர்களே முடிவு செய்து கொள்ளலாம் 

இடியாப்ப சிக்கல்( போட்டிக்கான கதை )

நிகழும் மன்மத  ஆண்டு உற்றாரும் உறவினரும் குறிக்கும் நாள் ஒன்றில்
திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி

ராஜேஸ்வரிக்கும், நடை பெற இருக்கும் திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்ட வேண்டிய மாங்கல்யம் கட்டப்படாமலேயே  வந்து நின்ற பேரனைப் பார்த்துத் திடுக்கிட்டு நின்றனர். சிவராமனின் தாத்தாவும் பாட்டியும் . இருந்தாலும் அவர்களுக்கு ராஜேஸ்வரியை மிகவும் பிடித்துப் போயிற்று.



இந்த ராஜேஸ்வரி யார், என்ன செய்கிறாள்  என்றெல்லாம் கேள்விகள் எழுந்தபோது, சிவராமன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டா காதல் வருகிறது. எனக்கு இவளைப் பிடித்து விட்டது. அவளுக்கு என்னையும் பிடித்து விட்டது. சேர்ந்தே வாழ்கிறோம் உங்கள் மேல் இருக்கும் பிரியத்தினால் இவளை இங்கு அழைத்து வந்தேன் என்றான். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்  காதல் வந்து விட்டால் எல்லாமே மாறும் என்று தெரிந்து கொண்டவர்கள் மேலே ஏதும் கேட்காமலேயே இருந்து விட்டனர்.
ராஜேஸ்வரிக்கும் எதையும் தெளிவு படுத்தப் பிரியமில்லை. தாயே இவளைத் தன் தங்கை என்று கூறும்போது. எதையாவது சொல்லப் போய் ரிஷி மூலம் நதிமூலம் கண்டு பிடிக்க முனைவது போல் ஆகிவிடும்
ராஜேஸ்வரியின்  தாயைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவள் பெயர் கல்யாணி. பெயர்தான் கல்யாணியே தவிர அவளது நடவடிக்கைகள் எல்லாமே இந்தியக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். ஆனால் கல்யாணியோ கனவிலேயே வாழ்ந்தவள் அவளது அதீதக் கனவுகளே அவளது வாழ்க்கையின் திசை திருப்பலுக்குக் காரண்மாக இருந்தது. ஒரு சிறு நகரப் பெண். வாழ்க்கையில் எல்லா வற்றையும் நுகர்ந்து பார்த்து விட வேண்டும் என்பதே அவள் குறிக்கோள். அந்த வயதுக்கே வரும் ஆசைகள் அபிலாக்ஷைகள் எல்லாம் கல்யாணிக்கும் இருந்தது.  எந்த உறவிலும் தன்னை கட்டிப் போட விரும்பவில்லை அவள். கல்யாணம் செய்யாமலேயே கல்யாணி கணவனுடன்  வாழ்க்கை நடத்தி இரு குழந்தைகளையும் பெற்று விட்டாள். வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அதைத் துரத்திச் செல்ல குழந்தைகள் தடையாய் இருந்தனர். அவர்களைத் தன் தாய் தந்தையருக்கே தத்து கொடுத்து விட்டு அவள் விலகி விட்டாள்  எப்போதாவது அவளைப் பார்க்கவரும் குழந்தைகளை தன் உடன் பிறப்புகள் என்றும் சொல்லிக் கொண்டாள். அவளது மனப் போக்கைத் தெரிந்து கொண்ட  அவளது மாற்றான் தகப்பனார் அவளைப் பலவந்தப் படுத்தியதின் விளைவே ராஜேஸ்வரி என்றும் அதனால்தான் தன் பிள்ளைகளை தன் தாய் , மாற்றான் தந்தையிடமே வளரவிட்டதாகவும் அரசல் புரசலாகப் பேச்சு இருந்தது. கல்யாணிக்குத் தகாத உறவின் விபத்து ராஜேஸ்வரி என்பது சரியாய் இருக்கும் பட்சத்தில் கல்யாணி ராஜேஸ்வரியைத் தன் தங்கை என்று சொல்லிக் கொள்வது புரிகிறது போல் இருக்கிறது 
கல்யாணிக்கு தன் சேர்ந்து வாழும் கணவனுடனான வாழ்க்கை  கசந்துவிட அவனை விட்டு வேறு ஒரு பசுமையான இடம் நோக்கி மேயத் துவங்கினாள்,கல்யாணிக்கு ஒரு கண்ணன் அகப்பட்டான் அவன் ஏற்கனவே மணமாகி ஒரு பெண்ணுக்குத் தந்தை.அந்தப் பெண்ணும் கல்யாணியுடனே வளர்ந்தாள். கண்ணன் கல்யாணி உறவு கல்யாணியின் மூன்றாம் திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்தது  கண்ணனால் கல்யாணியின் அதீத ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் கல்யாணியின் வாழ்க்கைப் பாதையை திருத்தவும் முயற்சிக்கவில்லை. கல்யாணி வாழ்க்கை ஏணியில் எப்படியாவது மேலேறி விடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள். அவளுக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. ஏற்கனவே இருவருடன் வாழ்க்கை நடத்தியவளுக்கு மூன்றாமவன் ஒருவன் அதுவும் புளியங்கொம்பாய் இருப்பவன் கிடைத்து விட்டதால் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் அவளது இலக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.
இந்த மாதிரி சேர்ந்து வாழுபவர்களுக்கு கூட வாழ்பவர் ஏற்கனவே அதன் சுவை அறிந்தவர் என்பது  பற்றியெல்லாம் கவலை இல்லை. மேலும்வாழ்க்கையில் அந்தஸ்து என்பது பணத்தால் நிர்ணயிக்கப் படும்போது அது ஒன்றே குறிக் கோளாகி விடுகிறது.
என்னதான் நாம் வாழ்க்கைத் தரங்களை நாமாகவே தீர்மானித்துக் கொள்ளமுயன்றாலும் நம் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நம்

 கலாச்சாரமும் பண்பும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது
கல்யாணியின் தற்போதையக் கணவனுக்கும் அவருடைய முன்னாள் மனைவிக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான் அவனே நாம் முன்பு சொன்ன ராஜேஸ்வரியுடன் வாழத்துணிந்த சிவராமன், இந்த சிவராமனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையிலான தொடர்பு கல்யாணிக்குப் பிடிக்கவில்லை. அவளும் இப்போதெல்லாம் ஒரு நவ நாகரிகமான பெரிய அந்தஸ்தில் உள்ளவள் ஆயிற்றே. மேலும் தன்


முன்னாள் கணவனின் மகளையும் தன்னுடனேயே தற்போதையக் கணவனின் பராமரிப்பில் வளர்த்து வருகிறாள்.
இந்த உறவு முறைகளையெல்லாம் வைத்தே விக்ரமாதித்தன் வேதாளம் இப்போது இருந்தால் கேள்வி கேட்டு மடக்கும். .கல்யாணிக்கு ஒரு ஆறுதல். யார் என்ன உறவுமுறையில் வாழ்ந்தாலும் மரபணு வேறாக இருக்கும் வரை அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. ஓரிரு தலைமுறைகளைப் பார்த்து அதில் வாழ்ந்து முன்னேறியவளுக்கு இந்த உறவு முறைச் சிக்கல்கள் ஆபத்தைக் கொண்டு சேர்க்குமோ என்னும் பயம் வந்தது. திட்டமிட்டுச் செயல் புரிபவளல்லவா. தன் தங்கையும் மக்ளுமான ராஜேஸ்வரியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தாள். ஏதோ ஒரு காரணம் சொல்லி  அவளைத் தன்னுடன் இருக்க வரவழைத்தாள். அவளைத் தேடிய சிவராமனிடம் அவள் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினாள். பாவம் அவனும் நம்பிக் கொண்டிருந்தான் எந்த சந்தேகமும் இல்லாத ராஜேஸ்வரியைத் தன் முன்னாள் கணவன் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள்.

( கதையின் சிக்கல்கள் புரிகிறதா வாசகர்களே. உங்கள் கற்பனைக் குதிரையை முடுக்கி விடுங்கள். பரிசுகள் வெல்வதற்கே.)


 


 

45 கருத்துகள்:

  1. அட, நம்ம இந்திராணி முகர்ஜி - ஷீனா போரா கதை. இதை முடிக்க வேண்டுமா? எப்படி? நாம் ஏதாவது முடித்து அது தீர்ப்பைப் பாதித்து விட்டால்....!

    :))))

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

  3. வணக்கம் ஐயா கதை இப்படியா ? நூடூல்ஸ் மா3யாவுல இருக்கு ஆத்தாடி இதில் தீர்வு காண்பதற்ககு எனக்கு மூளை இருக்கிறதா ? 80தே சந்தேகமாகி விட்டது இருப்பினும் முயற்சிக்கலாமா ? என்றுதான் நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. யாருக்கு ப்ரைஸ் கிடைச்சாலும் சுப்பு தாத்தாவின்
    வாழ்த்துக்கள்.

    பணத்தை செலவழிக்காம, புதுகை மாநாட்டு உண்டியலில்
    சேர்த்துவிடுமாறு வெற்றி பெரும் வின்னர்ஸ் க்கு
    விண்ணப்பிக்கின்றேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு போல! இப்போது நாம் இதற்கு முடிவோ, தீர்ப்போ சொல்வதூ சரியல்ல என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அதோடு உறவுமுறைச் சிக்கல் தலையைச் சுற்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் ஞாபகம் வருகிறது...

    விழா பற்றிய வேலைகள் அதிகம் என்பதால்... ஜூட்...!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அய்யா
    முயற்சிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அட இது இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்திராணியின் கதை...இதைச் செய்தித்தாளில் வாசிச்சப்பவே தலை சுத்தல்...என்ன உறவு ? யாரு யாருடன் என்பது நிஜமாகவே இடியாப்பச் சிக்கல்தான்....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது இது....ஒரு வேளை பாலச்சந்தர் இருந்திருந்தால் இதை வைத்த்ப் படமாக்கியிருப்பார் ஏற்கனவே இது போன்ற உறவு முறைகளைப் பேசியவர் அவர்....

    பதிலளிநீக்கு

  11. @ ஸ்ரீராம்
    சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதியது என்று சொல்லி இருக்கிறேனே. இதுவரை நடந்த நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கற்பனையோடு எழுதி இருக்கிறேன் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் எழுதி அது தீர்ப்பை பாதித்துவிட்டால்.....! நல்லதமாஷ். வருகைக்கு நன்றி எழுதுங்கள். உங்களால் முடியும்.

    பதிலளிநீக்கு

  12. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    /சிறந்த பகிர்வு.தொடருங்கள்/ உங்களை அல்லவா கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு

  13. @ கில்லர்ஜி
    /முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன் / முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ஐயா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  14. @ சூரி சிவா
    சுப்புத் தாத்தாவின் வாழ்த்துக்கள் யாருக்கோ.? வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  15. எனக்குப் பரிசு வேண்டாம். ஆளை விட்டால் போதும். பரிசு வாங்கவென்று சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வெல்ல வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

  16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அதைத்தான் நானே சொல்லி இருக்கிறேனே. ஆனால் ஒரு சிறு திருத்தம் நடைபெற்ற என்பதற்குப் பதில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற என்று இருக்கவேண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு

  17. @ கீதா சாம்பசிவம்
    நாம் எங்கே தீர்ப்பு சொல்லப் போகிறோம்/ கற்பனைதானே. நீங்கள் தப்பிக்கப் பார்க்கக் கூடாது அவசியம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு

  18. @ கீதா சாம்பசிவம்
    /அதோடு உறவு முறை சிக்கல் வேறு தலை சுற்றுகிறது/ அதனால்தானே இடியாப்பச்சிக்கல் என்றேன் சிக்கலைப்பிரித்து அருமையானக் கதை ஒன்றைக் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    நிகழ்வுகள் கற்பனையை விட சுவாரசியமானவை. அல்லது நிகழ்வுகளே கற்பனையின் பின்னணி. நண்பர்களிடம் சொல்லி எழுதச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

  20. @ மகேஸ்வரி பால சந்திரன்
    இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு

  21. @ துளசிதரன் தில்லையகத்து
    ஒரு சிலரால்தான் இவ்விதம் சிந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பங்கேற்கவேண்டும் உங்கள் குறும்படத்தில் வரும் ஒரு வசனம் போல் YES YES YOU CAN YOU CAN......... நன்றி.

    பதிலளிநீக்கு

  22. @ டாக்டர் கந்தசாமி
    உங்கள் வாழ்த்து யாருக்கோ, அவர்களிடம் நீங்கள் எழுதச் சொல்லலாமே நன்றி.

    பதிலளிநீக்கு

  23. @ துரை செல்வராஜு
    வலை வாசகர்களின் துரதிர்ஷ்டம் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  24. போட்டி என்றதும் முயன்று பார்க்கலாமே என நினைத்து படித்தால் தலையை சுற்றுகிறது அந்த ‘கல்யாணியின் கதை’. எனவே போட்டியில் வெற்றிபெறுவோரை வாழ்த்தலாமென என எண்ணியுள்ளேன்!

    பதிலளிநீக்கு

  25. @ வே.நடன சபாபதி
    எத்தனையோ சிக்கல்களை எளிதாகத் தெளிய வைக்கும் உங்களைப் போன்றவர் எழுதுவது அவசியம் மறு பரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஐயா... முன்பு "தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!" எனும் பதிவில் செய்தது போல் தான்...

    ஒவ்வொரு கேள்விக்கும் அடுத்துள்ள முயற்சி பயிற்சி வெற்றி என்பதை சொடுக்கிப் பார்த்து சொல்லுங்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  27. படித்த செய்தியே இன்னும் சரியாப் புரியாம குழம்பியிருக்கேன்!இதில,இந்த இடியாப்பச் சிக்கலைப் பிரிச்சு,நான் கதை விடவா?! எஸ்கேப்!

    பதிலளிநீக்கு
  28. இன்று காலையே படித்தேன்... கருத்திடவில்லை...

    இப்போ வேலை அதிகம் ஐயா...
    அதான் இரவு நேரத்தில் வாசித்துவிடுவேன்.. விடுமுறை தினத்தில்தான் கருத்து இடுவேன்...
    உங்கள் பக்கம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறேன்...

    இடியாப்பச் சிக்கல் எனக்கு தலை சுத்துது...
    முடிந்தால் எழுதுகிறேன்...

    பதிலளிநீக்கு

  29. @ சென்னை பித்தன்
    எல்லாம் புரிந்து தெளிந்து விட்டால் கற்பனைக்கு இடமேது. ? முயற்சி செய்யுங்கள். ஐயா

    பதிலளிநீக்கு

  30. @ கரந்தை ஜெயக்குமார்
    போட்டிக்குக் கதை எழுதுகிறீர்கள்தானே. உங்களால் முடியும் நன்றி.

    பதிலளிநீக்கு

  31. @ பரிவை சே.குமார்
    மூன்று வாரங்கள் சமயம் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

  32. @ திண்டுக்கல் தனபாலன்
    தமிழை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்னும் பதிவைத் தேடிக்கண்டுபிடித்து வாசித்தேன் நீங்கள் சொல்ல வந்தது புரிந்தது. இருந்தாலும் எழுத்தைப் பெரிதாக்கிப் படிக்கும் முறை தவிர வேறு ஏதும் செய்யத் துணிவில்லை. வருகை தந்து விளக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. உண்மை நிகழ்வே அடிப்படையா?! சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே! Art imitates life!
    பட்டத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. நிஜமாகவே இடியாப்ப சிக்கல் தான்.... இதை வைத்து இந்திய ஊடகங்கள் அடிக்கும் கூத்து... எந்த நியூஸ் சேனல் பக்கம் போனாலும் பயமுறுத்துகிறார்கள்!

    பதிலளிநீக்கு

  35. @ அப்பாதுரை
    சுவாரசியமாக இருக்கும் என்று நம்பித்தான் இந்தபோட்டி அறிவிப்பு பார்க்கலாம் எத்தனைபேர் இதை அவ்வாறு நினைக்கிறார்களென்று. நன்றி அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு

  36. @ வெங்கட நாகராஜ்
    அந்தச் சிக்கல்தான் கற்பனைகளுக்கு விரிகூடம் என்று நினைத்துப் போட்டியை அறிவித்திருக்கிறேன் நீங்களும் எழுதலாமே. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அடிக்கடி ப்ரயாணங்கள், மாநிலம் விட்டு மாநிலம் :)

    மேலும் வீட்டில் விசேஷங்கள் , மற்ற நிகழ்வுகள் நேரமே பத்தலை சார்

    என் வலைத்தளத்தில் வெளிவருவது எல்லாமே ஷெட்யூல்ட் போஸ்ட்தான் சார். ஒன்றிரண்டு தவிர.

    இது போன்ற கதையை எப்படித் தொடர்வது என்ற குழப்பம் வேறு.. :)

    மன்னிச்சுக்குங்க சார் & வலைத்தள மக்காஸ் உங்க வலைப்பதிவெல்லாம் படிக்க ஆசையிருந்தும் நேரம் கிடைப்பதில்லை. இந்த வாரம் முயற்சிக்கிறேன். ( கதை எழுத அல்ல பதிவுகளை வாசித்துப் பின்னூட்டம் இட. :)

    பதிலளிநீக்கு
  38. இடியப்பச்சிக்கலாக இருக்கு இதில் எப்படி தொடர்வது சிறுகதை என்று குலம்பியபடி))) போட்டியில் குதிக்கும் உறவுகளுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. @ தேனம்மை லக்ஷ்மணன்
    மிகவும் எதிர்நோக்கி இருந்தேன் வருகைக்கு விவரங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  40. @ தனிமரம்
    அதுதான் தலைப்பே சொல்கிறதே, குழப்பங்களை வெற்றி கண்டு தொடருவதுதான் போட்டி. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  41. கதையை இன்னும் ஒன்றிரண்டுமுறையாவது வாசித்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் போல் உள்ளது. போட்டியில் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு

  42. @ கீத மஞ்சரி
    உங்களைப்போல் உள்ளவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் . நன்றி.

    பதிலளிநீக்கு
  43. உடனே பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் பாலு சார். இடியாப்ப சிக்கல் என்று நீங்கள் சொல்லி விட்டீர்களே சார். எப்படி தேடினாலும் அதன் ஒரு முனை மட்டுமே கண்ணிற்குத் தருகிறது. அதுவும் நீங்கள் சொல்லியிருப்பதால் தான். எத்தனை முயன்றும் இடியாப்ப சிக்கலின் மறுமுனை எனக்கு அகப்படவில்லை சார். ஆதலால் இந்தப் போட்டியில் நான் இல்லை.
    புரியாத புதிராக இருக்கிறது இக்கதை.

    பதிலளிநீக்கு