Wednesday, September 9, 2015

பல்சுவைப் பதிவு


                                               பல்சுவைப் பதிவு
                                              --------------------------


ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வரமஹாலக்ஷ்மி நோன்பு அல்லது விரதம் . தமிழ் நாட்டைவிட இங்கு கர்நாடகாவில் பரவலாகக் கொண்டாடப் படுகிறது.அன்றைக்கு என்று என் வீட்டு மாவிலைகளுக்கு ஏககிராக்கி யாகிவிடும் கலசத்தில் மாவிலையை வைத்து அதில் வரமஹாலக்ஷ்மியை ஆவாகனம் செய்துபூஜிப்பார்கள். இது முற்றிலும் பெண்களுக்கான பண்டிகை, என் மனைவிக்கு நிறையவே இன்விடேஷன்கள் இருக்கும். ஆனால் என் வீட்டில் என்றுமே மஹாலக்ஷ்மி பூஜைதான் , ஒரு குத்து விளக்கில் அம்மனின் முகம் வைத்து எளிய ஆராதனை தினமும் செய்வாள் என் மனைவி 
விளக்கில் வெள்ளி முகம்
 
வெள்ளிமுகம் பாலிஷ் செய்யப்படும்போது இந்த பித்தளை முகம்

ஆகஸ்ட் 28-ம் தேதி ஓணம் பண்டிகை. நல்ல ஒரு அரசனை வதைத்த நாள் என்று சொன்னால் இல்லை அவனுக்கு மோட்சம் கொடுத்த நாள் என்று வாதிடுவோரும் உண்டு, மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகை. அவர்கள்தான் மகாபலிச்சக்கரவர்த்தியால் ஆளப்பட்டவர்கள் என்றும் அவர்களைக் காண மஹாபலிச் சக்ரவர்த்தி விஜயம் செய்வதாகவும் ஐதீகம் அன்று மலையாளிகள் பெரும்பாலோர் உற்றமும் சுற்றமும் கூட இருப்பார்கள்மக்கள் சந்தோஷமாக இருப்பதாகப் பாவிக்கும் நாள். மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “உள்ளப் போள் ஓணம், இல்லெங்கில் ஏகாதசிஎது இருக்கிறதோ இல்லையோ ஓணம் பண்டிகையை விமரிசனமாகக் கொண்டாடுவார்கள். முன்பெல்லாம் கொண்டாடியதுபோல் இல்லை இப்போது. முன்பெல்லாம் வீட்டு வாசலில் மாதேறு என்று மண்ணால் பிடித்து வைத்து மலர்களால் அலங்கரித்துபத்து நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். அதைச் சுற்றி கைகொட்டுக்களி என்னும்நடனம் நடக்கும்.
 ஆனால் இப்போதெல்லாம் பூக்களம் என்று மலர் அலங்காரம் செய்து தங்கள் திறமையை நகரங்களில் வெளிப்படுத்துகிறார்கள்
மகன் வீட்டில் பூக்களம் 

பூக்களப் போட்டி...?
 
மகன் வீட்டில் சத்தியை.


 என்ன இருக்கிறதோ இல்லையோ ஓணம் சத்தியை இருக்கும் நகரங்களில் அதுவும் என்றாவது ஒரு நாள் ஓணம் சத்தியை கம்யூனிடி விருந்தாக சாப்பிடுகிறார்கள் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நமக்கு எப்போது சௌகரியமோ அப்போது இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. என் இரண்டாம் மகனும் மருமகளும் இன்று அதாவது செப்.ஆறாம் தேதி ஓணம் விருந்துக்குச்செல்கிறார்கள். என் மூத்தமகனும் மருமகளும் ஐந்தாம் தேதியே ஓணம் விருந்துக்குச் சென்று வந்தார்கள் என்று தகவல். ஆக பண்டிகைகள் அவற்றின் சாங்க்டிடியை இழந்து சௌகரியத்துக்கு கொண்டாடப் படுவதாகவே இருக்கிறது. ஓணம் முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நான் மலையாளநண்பர்கள் வீட்டுக்குச் செல்லவே பயப்படுவேன்  ஓணத்துக்குச்சமைத்து வைத்த ஐட்டங்கள் பழையதாகி இருக்கும் அவையே நமக்கும் பறிமாறப்படும். என்ன இருக்கிறதோ இல்லையோ அவியல் இருக்கும்.......!இந்த ஓணத்தன்று நான் என் இரண்டாம் மகன் வீட்டில் விருந்துண்டேன்
மறு நாள் 29-ம் தேதி ஒரு தெலுங்கு நண்பர் வீட்டில் ச்ராவண சனிவார என்று மஹாலக்ஷ்மி நோன்புக்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் பூஜையுடன் விருந்து.
நண்பர் வீட்டில் வரமஹாலக்ஷ்மி  அலங்காரம்
 
நண்பர் வீட்டில் விருந்து
5-9-2015 கிருஷ்ணஜயந்தி. அருகே இருக்கும் நாயர் செர்வீஸ் சொசைட்டியினர் சோபா யாத்திரா என்று ஊர்வலம் நடத்தினார்கள். மலையாளிகளுக்கே உரித்தான தால விளக்குகளைப் பெண்குழந்தைகளும் மகளிரும் ஏந்திவர சிறுவர்களும் சிறுமிகளும் கிருஷ்ண கோபிகைகள் வேஷம் அணிந்து ஊர்வலமாக வந்து ஐயப்பன் கோவிலில் உறியடியுடன் முடித்தனர்.  சென்ற ஆண்டு ஊர்வலத்தில் லோக்கல் அரசியல் வாதியும் கலந்து கொள்ள மிகப் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. இந்த வருடம் ஆர்பாட்டமில்லாத ஊர்வலம் 

கோகுலாஷ்டமி ஊர்வலத்தில் தால  விளக்குகள்.
வீட்டின் முன்பாக ஊர்வலம்
 
ஊர்வலத்தில் சிறார்கள் கிருஷ்ணன் கோபியராக

 
கிருஷ்ண விக்கிரகம் ஊர்வலமாக


பஞ்ச வாத்தியம்

 இதே கோகுலாஷ்டமி மும்பையில் கோவிந்தர்கள் என்னும் குழுவினர் மனிதப் பிரமிட் செய்து மிக உயரத்தில் இருக்கும் பானையை உடைப்பார்கள் தஹி ஹண்டி என்கிறார்கள். விழாக்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடப் பட்டாலும்  அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் போது இதமாக இருக்கிறது.
இதற்கே மத வேஷம் போடாமல் சமூக விழாக்களாகக் கொண்டாடப்பட்டால் சந்தோஷமே. தீபாவளி கிருஸ்துமஸ்  போன்ற பண்டிகைக்களும் மதவேறுபாடில்லாமல் ஐக்கியமாகக் கொண்டாடப்படுவது நன்றே.
என் பெரியஅண்ணியின் முதல் ஆண்டு நினைவு தினத்துக்கு பாலக்காடு போயிருந்தபோது அவரது தம்பி வீட்டில் இருந்து ஒரு வெற்றிலைக் கொடியின் கிளை ஒன்றை எடுத்து வந்து என் வீட்டில் வைத்தோம் அது சற்றும் எதிர்பாராவிதமாக பின்பக்கத் தோட்டம் எங்கும்  பரவி  அருகே இருந்த மாமரத்தையும் பற்றிக் கொண்டு கடவுளைப் போல் எங்கும் நிறைந்திருக்கிறது. அவ்வப்போது சிலர் அதன் கிளைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள். நாங்கள் வெற்றிலை போடுவதில்லை. வெற்றிலை போடுபவர்களுக்குக் கொடுக்கலாம் என்றால் யாரோ என் மனைவியிடம் வெற்றிலையைச் சும்மா கொடுக்கக் கூடாது என்றிருக்கிறார்கள் நாம் என்ன வியாபாரமா செய்ய முடியும் பூஜைகளுக்கு கொடுப்பதோடு சரி.

வெற்றிலைத் தோட்டம்
 .
மாமரத்தில் வெற்றிலைக் கொடி.
 


என் இரண்டாவது மகன் வீட்டுக்கு ஓணத்துக்குச் சென்றோம் என்றேன். அப்போது அவன் வளர்க்கும்  BUDDY என்னும் கோல்டென் ரெட்ரீவர் நாய் என் மனைவியிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டு விட்டது. ஐந்து மாதங்களே ஆன அந்த நாய்( குட்டி என்பதா ) நன்றாகவே வளர்ந்திருக்கிறது. ஆனாலும் அது அருகே வரும்போது ஒரு வித தயக்கமும் ஏற்படுகிறது. அதை ஒரு ராஜகுமாரன் போல் நடத்துகிறார்கள்.   .       .           
என் மனைவியின் மடியில் BUDDY
  அன்பு வாசகப் பெருமக்களேபுதுக்கோட்டை பதிவர் விழா ஏற்பாடுகள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. பதிவர் கையேட்டிற்கான விவரங்களைக் கொடுத்து விட்டீர்களா.? இல்லையென்றால் உடனே செய்யவும்.அவர்களுக்கும் நேரம் வேண்டுமல்லவா. விவரங்கள் திண்டுக்கல் தனபாலன் வலைப்பூவிலும் bloggersmeet2015.blogspot.com  லும் இருக்கிறது.நன்றி.     . 


    .          

     . 

38 comments:

 1. பல்சுவையான விஷயங்களுடன் பதிவு..
  ஓண சத்தியா போல அமர்க்களம்..


  பதிவர் கையேட்டிற்கான விவரங்களை இன்னும் கொடுக்கவில்லை ஐயா..
  ஏனென்று தெரியவில்லை!..

  ReplyDelete
 2. ஒரு அன்பான வேண்டுகோள். Buddy ஐ நாய் என்று சொல்லக்கூடாது. கோபித்துக்கொள்ளுவான். அவன் என்று சொல்லவேண்டும்.

  உங்கள் வீட்டு வெற்றிலைத் தோட்டத்தை நானும் பார்த்திருக்கிறேனே!

  ReplyDelete
 3. Buddy - செம விஷமம் என்று முன்பு குட்டியாக படம் போட்டிருந்தீர்கள் என்று நினைவு. அவனா இவன்!

  திருவிழாக்கள் பற்றிய விவரணங்கள் ஜோர்.

  ReplyDelete
 4. விழாக்கள் பற்றிய விபரங்கள் அருமை. கர்நாடகாவில் வர லக்ஷ்மியை வரமஹாலக்ஷ்மி என்பார்கள் போல! இங்கே தமிழ்நாட்டில் எட்டு லக்ஷ்மிகளில் இவள் சேரமாட்டாள். :)

  ReplyDelete
 5. பல்சுவை பதிவு அருமை, படங்கள் எல்லாம், அழகு.

  ReplyDelete
 6. மகிழ்ச்சி ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete

 7. உண்மையில் இந்த பதிவு பல்சுவைப் பதிவுதான். வரமஹாலக்ஷ்மி நோன்பில் தொடங்கி உங்கள் மகன் வீட்டு BUDDY யுடன் முடித்திருக்கிறீர்களே! அனைத்தையும் இரசித்தேன். ஓணம் பற்றி படித்தபோது எனது 7 ஆண்டு கேரள வாசம் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 8. வாழையிலைச் சாப்பாடு என்றாலே தனி ருசிதான். அதிலும் பண்டிகை விருந்து தலை வாழையிலையில் என்பது மகிழ்வான ஒன்றுதான். படங்கள் எல்லாம் பிரேமுக்குள் நன்றாகவே வந்துள்ளன. வெற்றிலை காரம் என்றாலும், வெற்றிலைக் கொடி இருக்கும் இடம் குளுகுளு என்று இருக்கும். BUDDY குட்டியாக இருந்தபோதே அதைப்பற்றி ஒரு பதிவு எழுதியதாக நினைவு. எல்லாவற்றிற்கும் இடையிலும் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாடு சம்பந்தமாகவும் நினைவூட்டலை நீங்கள் மறந்து விடவில்லை.

  ReplyDelete
 9. சுவையான பல விஷயங்களை தந்து அசத்தி விட்டீர்கள்! எங்கள் வீட்டிலும் வெற்றிலைக் கொடி உண்டு. கர்நாடக மக்கள் கொண்டாடும் வரமஹாலஷ்மி, ஓணம் பற்றி அறிந்து கொண்டேன்! நாய்க்குட்டி சூப்பர்!

  ReplyDelete
 10. பண்டிகைப் பதிவு அருமை
  மூன்று பண்டிகைகளையும் இணைத்துப் பதிந்ததும்
  புகைப்படங்களும் மிக மிக அருமை
  பதிவர் சந்திப்புக்கு வரும் உத்தேசமிருக்கிறது
  பதிவும் செய்துவிட்டேன்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 11. படங்களும் விவரங்களும் ரசித்தேன்.

  ஹிஹி.. பண்டிகைகளுக்கு சேங்க்டிடி என்பதே முரணில்லையோ?

  ReplyDelete
 12. #வெற்றிலையைச் சும்மா கொடுக்கக் கூடாது என்றிருக்கிறார்கள் #
  இதைச் சொன்னது ஓசிக்கு அலையுற ஆளாக இருக்கக்கூடும் :)

  ReplyDelete
 13. அருமையான பகிர்வு வெற்றிலை போடும் பழக்கம் இப்போது குறைந்துவிட்டது ஆனாலும் கொடியைப் பார்க்கும் போது ஆசை வருகின்றது)))

  ReplyDelete

 14. படங்கள் அனைத்தும் அருமை ஐயா

  ReplyDelete
 15. பதிவர் திருவிழாவிற்கு தாங்கள் வருகிறீர்கள்தானே?

  ReplyDelete
 16. பல்சுவைப்பதிவு எங்களுக்கு பல செய்திகளைத் தந்தது. புதுக்கோட்டைக்கு வர தாங்கள் நினைவூட்டிய விதமும் நன்று.

  ReplyDelete
 17. படங்களுடன் அருமையான பகிர்வு. சிறுவர் சிறுமியர் கிருஷ்ணராக கோபியராக அணிவகுத்து நிற்பது அழகு.

  ReplyDelete
 18. ராஜகுமாரனுக்கு ஈடு ஏதுமில்லை.....அதனுடன் சிறிதுகாலம் வசித்து வந்தால் நீங்கள் உங்கள் குழந்தை மற்றும் பேரக் குழந்தைகளை மறந்துவிடுவீர்க

  ReplyDelete

 19. @ துரை செல்வராஜு,
  வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா. பதிவர் கையேடு முழுமையாக இருக்க வேண்டாமா?

  ReplyDelete

 20. @ டாக்டர் கந்தசாமி,
  நாயை நாய் என்று சொல்லக் கூடாதுதான், அவன் நாயாக இல்லாமல் நம் வீட்டாளில் ஒருவனாக இருக்கும் போது. என் பிள்ளைகள் அவனை பெயர் சொல்லித்தான் குறிப்பிடுகிறார்கள். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 21. @ ஸ்ரீ ராம் ஆம் ஸ்ரீ. அவன் விஷமம் அதிகமாயிருக்கிறது. என்னமாக வளர்ந்து விட்டான். அவன் ஆட்டத்தை வீடியோவாக எடுத்திருந்தேன் . கணினியில் அப்லோட் செய்ய முடியவில்லை. நீளம் அதிகம். வந்து ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete

 22. @ கீதா சாம்பசிவம்
  என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் ஒன்று இதுதான் லக்ஷ்மி லக்ஷ்மிதானே என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 23. @ கோமதி அரசு
  வருகைதந்து ரசித்ததற்கு நன்றி மேம்

  ReplyDelete

 24. @ திண்டுக்கல் தனபாலன்
  வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 25. @ வே நடனசபாபதி
  சின்ன சின்ன விவரங்கள் பதிவாகின. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ தி தமிழ் இளங்கோ
  எனக்கு என்னவோ வாழையிலைச்சாப்பாடு அவ்வளவாக ரசிப்பில்லை. இப்போதெல்லாம் ஆர்டிஃபிஷியல் வாழையிலைகள் வந்து விட்டனவே. புதுக் கோட்டைக்கு வர இயலுமா தெரிய வில்லை. பார்ப்போம். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 27. @ தளிர் சுரேஷ்,
  பாராட்டுக்கு நன்றி சார். பட்டியை நாய்க்குட்டி என்று சொல்லலாமா. நன்றாக வளர்ந்து விட்டான்

  ReplyDelete

 28. @ ரமணி
  எனக்கு பதிவர் சந்திப்புக்கு வர முடியுமா தெரியவில்லை. வந்தால் உங்களைஎல்லாம் சந்திக்கலாம். பாராட்டுக்கு நன்றி சார்.

  ReplyDelete

 29. @ அப்பாதுரை
  பண்டிகைகளுக்கு சாங்டிடி என்பது முரண் சரிதான் ஆனால் பண்டிகைக் கொண்டாட்டங்களை பக்தியுடன் இணைத்தல்லவா கொண்டாட வேண்டும்? மெயில்பார்த்தீர்களா?

  ReplyDelete

 30. @ பகவான் ஜி
  ஓசிக்கு அலைபவர் என்றால் சும்மா கொடுக்கலாம் என்றல்லவா சொல்லி இருப்பார். வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 31. @ தனிமரம்
  என் வீட்டில் வெற்றிலை கொள்வாறின்றி படர்ந்திருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 32. @ கில்லர் ஜி
  சில படங்களை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்

  ReplyDelete

 33. @ கரந்தை ஜெயக்குமார்
  /பதிவர் விழாவுக்கு நீங்களும் வருகிறீர்கள்தானே/ என்ன சொல்ல மில்லியன் டாலர் கேள்வி. ஓவியத்துக்காகஒரு கவிதை அனுப்பி இருக்கிறேன் தேர்ந்தெடுப்பார்களோ மாட்டார்களோ.

  ReplyDelete

 34. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  விழாவுக்கு போக முடிகிறதோ இல்லையோ. கையேட்டுக்கானவிவரங்களைக் கொடுக்கலாமே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 35. @ ராமலக்ஷ்மி
  அத்தி பூத்தாற்போல உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது நன்றி மேம்

  ReplyDelete

 36. @ அவர்கள் உண்மைகள்
  எனக்கு அனுபவம் இருக்கிறது ஐயா. ஒரு ராஜகுமாரியை வளர்த்து இருக்கிறேன் ஏழாண்டுகாலம் இருந்தாள். மறக்க முடியாத பெண அவள். அவள் பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் வருகை தந்து சுவடு பதித்ததற்கு நன்றி சார்

  ReplyDelete
 37. mail எதுவும் வரவில்லையே? இரண்டு நிமிடங்களுக்கு முன் பார்த்தேன்.

  ReplyDelete

 38. @ அப்பாதுரை
  மெயில் பார்த்து பதில் அஞ்சல் எழுதியதற்கு நன்றி

  ReplyDelete