திங்கள், 14 செப்டம்பர், 2015

சில பிரச்சனைகள் சில தீர்வுகள்


                                சில பிரச்சனைகள் சில தீர்வுகள்
                                 ----------------------------------------------


அண்மையில் தமிழ்மணமா புதிர் மணமா என்று எழுதி இருந்தேன்  அதில் நான் எழுப்பி இருந்த கேள்விகளுக்குத் தீர்வு கிடைக்காமல்தான் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் சில பதிவர்களின் பதிவுகளைப் படிக்கப் போனால் அவற்றின் அகலம் கணினியின் அகலத்தை விட அதிகமாக இருக்கிறது கர்சரை அங்கும் இங்கும் நகர்த்தி வாசிப்பது பெரும் பாடாக இருக்கிறது. குறிப்பிட்ட பதிவர்களுக்கும் தெரியப் படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்க வில்லை. நான் சற்றும் எதிர்பாராவிதமாக இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது
பொதுவாக பதிவுகளுக்குள் நுழைய நான் மோஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலவியை உபயோகிப்பேன் . அதை உபயோகிக்கும் போது என்னால் காணொளிகளைக் காண முடியாமல் இருந்தது. காணொளியைக் காண இருக்கும் பதிவுகளுக்கு நான் கூகிள் க்ரோம் உலவியை உபயோகிப்பது வழக்கம்  அதே உலவியில் இந்த கணினியை விட்டுப் போகும் பதிவுகளைப் பார்வையிடும் போது பிரச்சனை இருக்கவில்லை. ஏன் என்று தெரியாவிட்டாலும் ஒரு பிரச்சனைக்கு முடிவு கிடைத்தது.

இன்னொரு பிரச்சனை என்னவென்றால்  நான் பி எஸ் என் எல் ப்ராட் பாண்டை உபயோகிக்கிறேன்  அண்மையில் என் மாத பில் ரூ 3000/-வரை ஆகி வந்தது. எனக்கு இது கட்டுப்படி யாகவில்லை. ஆகவே அவர்கள் பில் கணக்கிடும் முறையைக் கண்டு வர ஒருவரை அனுப்பி இருந்தேன்  நான் கணினியைத் திறந்ததும் மோடம் மும் ஆன் ஆகிவிடும்  மோடம் ஆன் ஆன நேரமெல்லாம் கணக்கில் வரும் என்று தெரிய வந்தது. நான் பதிவுகளை வாசிக்காமல் இருக்கும் போதோ  கணினியில் கார்ட் விளையாடும் போதோ மோடம் ஆனில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் என் பதிவுகளை நான் எம் எஸ் வேர்டில்  ட்ராஃப்டாக எழுதும்போதும் மோடம் ஆனில் இருக்கத் தேவை இல்லை.  இவற்றிலும்  நான் கணினியில் கணிசமான நேரம் செலவிடுகிறேன் அப்போதெல்லாம் மோடம் கனெக்க்ஷனை எடுத்து விட்டால் கணினியில் கணக்காகும் நேரம் குறையும்  ஓரிரண்டு நாட்களாகக் கவனமாக இருக்கிறேன் பில் எப்படி எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் ஆகும் பில் எவ்வளவு என்று கணினியிலேயே பார்க்கவும் தெரிந்து கொண்டேன்
இந்தத் தீர்வுகள் பிறருக்கும் உதவலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன் 
இன்னொரு புரிந்து கொள்ள முடியாத பிரச்சனை. சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதினால்  அந்தப் பதிவில் பின்னூட்டம் வந்தாலும் மறு நிமிஷமே என் மெயில் பாக்சில்  டெலிவெரி ஃபெயில்ட் என்றும் வருகிறது.காரணம் தெரிந்தவர்கள் விளக்கலாமே 
திடீரென்று என் கணினியில் பிரச்சனை. டெஸ்க் டாப்பின் பின்னணி நிறம் மாறி சிவப்பாகமாறி விடுகிறது. மானிடருக்கும் வயசாகி விட்டது. ஆனால் வலைப் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை. எழுத்துக்களைப் படிக்கவே மிகவும் சிரமம் கண் கெட்டு விடும் போலிருக்கிறது. ஒரு முறை கோபம் வந்து மானிட்டரை ஓங்கி அடித்து விட்டேன் . என்ன ஆச்சரியம் பழைய நிலைக்கு வந்து விட்டது. ஆனால் சிறி து நேரத்திலேயே மீண்டும் நிறம் மாறித் தொல்லை கொடுக்கிறது. அவ்வப்போது அதனுடன்மல்லுக் கட்டி வருகிறேன் பாவம் அதுவும் எத்தனை அடிதான் தாங்கும் . பேசாமல் ஒரு புதிய கணினி வாங்க ஐடியா. விசாரிக்கிறேன் பார்ப்போம். அது வரை மானிடர் அடி வாங்கும்  இல்லை ஒரேயடியாய் உயிர் துறக்கும்..    .  

  

31 கருத்துகள்:

  1. தொழில்நுட்பம் அறிந்த வலைச்சித்தர் டிடியிடம் பதிலை எதிப்பார்ப்போம் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. மானிட்டர் மாற்றினாலே போதும் அய்யா !

    பதிலளிநீக்கு
  3. க்ரோம் உலவியை உபயோகிப்பது தான் blogger தளத்திற்கு நல்லது...

    மற்ற தளங்களுக்கு கருத்துரை இடும் போது, உங்கள் மெயில் பாக்சில் டெலிவெரி ஃபெயில்ட் என்று வருவதற்கு வாய்ப்பே இல்லை... ஒருவேளை உங்கள் கருத்துரைக்கு மறுமொழி என்ன இடுகிறார்கள் என்பதை அறிவதற்கு, கருத்துரை இடும் தளத்திற்கு வலது புறமுள்ள Notify me எனும் கட்டத்தில் டிக் செய்து விட்டு, கருத்துரை இட்டால் உங்கள் மின்னஞ்சலுக்கு கருத்துரை வரும்...

    மானிட்டரை கண்டிப்பாக மாற்ற வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு

  4. பாவம் ஐயா மானிடரைப்போல மானிட்டரை அடிக்கலாமா ?

    பதிலளிநீக்கு
  5. நானும் சில நுட்பங்களை தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  6. ஏதாவது அன்லிமிடெட் பிளானில் சேரலாம்.
    மானிட்டர் மாற்றலாம்.
    கணினிக்கு தனி கண்ணாடி போடவேண்டும். இது பற்றி ஒரு தனி பதிவு போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. BSNL இல் உள்ள Combo Offer Plan ஐ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மாதம் ரூபாய் 1600 க்கு மேல் ஆகாது.

    பதிலளிநீக்கு
  8. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சொல்வதுதான் சரி ஐயா
    கணினிக்கு என்று தனி கண்ணாடி போட வேண்டும்
    பல வருடங்களாக எப்பொழுதும் அணியும் கண்ணாடியையே அணிந்து
    கணினியில் தட்டச்சு செய்து வந்தேன், கணினிக்கு மிக நெருங்கி பார்க்க வேண்டும்,
    அல்லது கழுத்தை உயர்த்தி பார்க்க வேண்டும். கழுத்து வலி கண்டதுதான் மிச்சம்.
    ஒரு நாள் நண்பரின் கண்ணாடி கடைக்குச்சென்று விசாரித்தேன்.அவர் கூறிய தீர்வு என்னவென்றால், படிக்கப் பயன்படுத்தும் கண்ணாடியை கணினிக்குப் பயன் படுத்தாதீர்கள் என்பதுதான். பொதுவாக மருத்துவர்கள்எழுதித் தரும் அளவானது ஒன்றரை அடி தூரத்தில், அதாவது கையில் உள்ள புத்தகத்தை மட்டுமே படிக்க உதவும். கணினிக்கு, ஏற்கனவே உள்ளஅளவை விட குறைந்த அளவில், தனியாக ரீடிங் கிளாறு பரிந்துரைத்தார்.
    அன்றுதான் எனது கண்ணாடி பிரச்சினை தீர்ந்தது.கண்ணாடிக் கடைக்குச் சென்று கணினியில் படிக்க கண்ணாடி வேண்டும் என்று கேட்டுப் பாருங்கள்
    தீர்வு கிடைக்கும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  9. பிஎஸ்என்எல் திட்டத்தில் வேறு திட்டத்திற்கு மாறிப் பார்க்கலாமே?

    பதிலளிநீக்கு
  10. Mozzillaa Fire Fox - ஐ விட்டு விலகி வெகு நாட்களாகின்றன.. குரோம் நன்றாக இருக்கின்றது.. என்றாலும் - இணைய இணைப்பு மாலை 6 மணிக்குப் பிறகு ஜவ்வுதான்..

    கரந்தை Jk அவர்கள் கூறுவது புதிது.. முயற்சிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. மானிட்டர் மாற்றி விடுங்கள் - சில சமயங்களில் இணைப்பு Loose ஆக இருந்தாலும் வண்ணங்களில் குழப்பங்கள் ஏற்படுவதுண்டு.

    ஃபைர்ஃபாக்ஸ் பயன்படுத்துவதில் சில குழப்பங்கள் உண்டு.

    Unlimited Plan இருந்தால் அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  12. //நான் கணினியைத் திறந்ததும் மோடம் மும் ஆன் ஆகிவிடும்.. //

    அது எப்படி?..

    கணினிக்கு தனி கனெக்ஷ்ன், மோடத்திற்கு தனி கனெக்ஷன் இல்லையா? (தனித்தனி ஸ்விட்ச்சுகள்) இல்லையென்றால், உடனே இரண்டையும் தனித்தனியாகப் பிரியுங்கள்.

    வயர்லெஸ் மோடம் தானே?.. நெட் வேண்டுமானால், நாமே நெட் கனெக்ஷனைத் திறந்தால் தானே அது கிடைக்கும்?.. நெட் கனெக்ஷனுக்கு பாஸ்வேர்ட் வைத்திருக்கிறீர்களா?..

    இன்னொன்று. நெட் பார்த்து முடித்ததும் மோடம் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறக்காதீர்கள்.

    முன் இரவு நேரங்களில் இது அதி முக்கியம். (இணையம் பார்த்து விட்டு தூங்கப் போகிறவர்களுக்கு)

    பதிலளிநீக்கு
  13. @ தனிமரம்
    தமிழ் மணமா புதிர்மணமா என்னும் பதிவுக்கு டிடி தீர்வாக தன் வலையில் எழுதுவதாகக் கூறி இருந்தார். எல்லா நேரங்களிலும் அவரை அணுகுவது சரியாகப் படவில்லை. யாருக்குத் தீர்வு தெரிகிறதோ அவர்கள் கூறலாம் என்றுதான் பதிவாக்குகிறேன் என் கணினியையே மாற்றி விடுவது என்று தீர்மானித்ட்க்ஹு விட்டேன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  14. @ பகவான் ஜி
    மானிடர் மட்டுமல்ல கணினியையும் மாற்றுகிறேன் அதுவும் மிகப் பழையதாகி விட்டது. வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    க்ரோம் உலவியை உபயோகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. டெலிவெரி ஃபெயில்ட் என்று மின் அஞ்சல் வந்ததால்தானே பதிவாக எழுதினேன் அவர்கள் உண்மைகள் தளத்தில் நான் எப்போது பின்னூட்டம் எழுதினலும் இப்படித்தான் பின்னூட்டம் எழுதி சொடுக்குகிறேன் அவ்வளவுதான் பிரச்சனை நீடிக்கிறது. வருகைக்கு நன்றி. நான் நோட்டிஃபை என்று குறிப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு

  16. @ கில்லர் ஜி
    அடித்தபோது ஓரிருமுறை சரியாய்ப் பணி புரிந்தது. இப்போது அதை கடாசத்தீர்மானித்ட்க்ஹு விட்டேன் வருகைக்கு நன்றாஇ.

    பதிலளிநீக்கு

  17. @ செந்தில் குமார்
    இந்தப் பதிவில் இருந்தா.? வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் கந்தசாமி.
    ப்ளான் பற்றி பிஎஸ்என்எல்லிடம் கலந்து பேசவேண்டும் கணினியையே மாற்றுகிறேன் ஐயா உங்கள் பதிவை எதிர் நோக்கி . நன்றியுடன்

    பதிலளிநீக்கு

  19. @ வே நடன சபாபதி
    இப்போது கோம்போ 500 ப்ளானில் இருக்கிறேன் வருகைக்கு நன்றி.ஐயா.

    பதிலளிநீக்கு

  20. @ வலைப்பதிவர் சந்திப்பு
    நன்கொடை விவரங்கள் அறிந்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு

  21. @ கரந்தை ஜெயக்குமார்
    டாக்டர் கந்தசாமி இது குறித்து ஒரு பதிவு எழுதுவதாகக் கூறுகிறார். அதன் பின் பார்ப்போம் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    யோசித்துக் கொண்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  23. @ துரை செல்வராஜு
    எல்லோரது கருத்துரைகளும் பரிசீலிப்பில் ஐயா வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  24. @ வெங்கட் நாகராஜ்
    கணினி முழுவதையும் மாற்றுகிறேன் ஐயா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  25. @ ஜீவி
    எல்லா கனெக்‌ஷன்களும் ஒரு ஜங்ஷன் பாக்சிலிருந்து எடுக்கிறேன் / கணினியை மாற்றுகிறேன் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  26. பி எஸ் என் எல்லில் மத்திய அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 20% கழிவில் வைஃபை இணைய இணைப்புக் கொடுத்து வந்தார்கள். எங்களுடையது அது தான். ஆனால் 2013 ஆம் ஆண்டில் 20% கழிவைப் பத்து சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இது குறித்த அறிவிப்பு எதையும் பிஎஸ் என் எல் கொடுக்கவில்லை. மேலும் அன்லிமிடெட் வைஃபை இணைய இணைப்பு வைத்திருக்கிறவர்களுக்கு 400 தொலைபேசி அழைப்பு இலவசம் என்றும் இணைப்பு வாங்கும் சமயம் சொல்லப்பட்டிருந்தது. அதையும் இப்போது மாற்றி பிஎஸ் என் எல்லில் இருந்து பிஎஸ் என் எல்லுக்குத் தொலைபேசினால் மட்டுமே 400 அழைப்புகள் இலவசம் என மாற்றி விட்டார்கள்.

    எங்களுடைய அன்லிமிடெட் ப்ளான் 750 ரூக்கு இருக்கிறது. நாங்கள் பேசும் தொலைபேசி அழைப்புக்களையும் சேர்த்து, எங்களுக்கு மாதம் 1010 ரூபாய்க்குள் பில் வரும். சென்ற மாதம் மகள், மாப்பிள்ளை வந்திருந்தபோது அவர்கள் எல்லோருமே வைஃபை இணைப்பைப் பயன்படுத்தியது காரணமாக பான்ட்விட்த் எக்சீட் ஆகி ஆன்லைனிலேயே ரூ 500/- கட்டி 20 ஜிபியோ என்னவோ அதிகம் வாங்கினோம். அந்த 500 ரூபாயும் எங்கள் தொலைபேசிக் கட்டண பில்லோடு சேர்ந்து கொடுக்கலாம் என்று பதில் உடனே இணையம் மூலமே வந்துவிட்டது. ஆக சேவை என்னமோ சரியாகத் தான் இருக்கிறது.

    நீங்கள் எந்த ப்ளான் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அதோடு நான் விசாரித்தவரை மோடம் ஆன் ஆனாலும் பில் கணக்கில் தொகை ஏறாது என்றே சொல்கின்றனர். கணினியைத் திறந்து நாம் உள்ளே சென்றால் தான் பில் கணக்கில் தொகை ஏறும் என்கின்றனர். எங்கள் மகன், மருமகள் இருவரும் மோடத்தை மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டாம் என்றே சொல்வார்கள். நான் தான் இங்கே திடீர் திடீர் என இடி, மின்னல் இருப்பதால் இரவுகளில் கட்டாயமாக மோடத்தை இணைய இணைப்பிலிருந்து துண்டித்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  27. மற்றபடி ஜீவி ஐயா சொல்லி இருப்பதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். ஆரம்ப காலங்களில்ல் நான் டாட்டா இன்டிகாம் இணைய இணைப்புத் தான் வைத்திருந்தேன். படாத பாடு பட்டேன். 200--2010 ஆம் ஆண்டில் பிஎஸ் என் எல்லுக்கு மாறினப்புறமா எனக்கு இணையம் பிரச்னை இல்லை. மின்சாரம் தான் பிரச்னை! வேகமும் சொல்லிக் கொள்ளும்படியாகவே இருக்கிறது. அதிலும் இப்போது அதிவேக இணைய இணைப்புக் கொடுக்கிறதால் கணினியைத் திறக்கும்போதே இணைய இணைப்பும் வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  28. // 200--2010 ஆம் ஆண்டில் பிஎஸ் என் எல்லுக்கு மாறினப்புறமா எனக்கு இணையம் பிரச்னை இல்லை..//

    2009--2010 ஆம் ஆண்டில் என்று வாசிக்கவும். 9 கீயைப் பல முறை அழுத்தினால் 99999999999 என நிறைய வருகிறது. அதை டெலீட் செய்யும்போது எல்லாத்தையும் நீக்கி இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  29. கணினியே புதிதாக வாங்குங்கள். அசெம்பிள் செய்தால் விலை குறைவாக இருக்கிறது. மதர் போர்ட் மட்டும் ஐபிஎம் தான் வேணும்னு சொல்லுங்க. மானிட்டர் எல்சிடி வாங்கினால் கண்களுக்குப் பாதுகாப்பு.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் அய்யா,
    மற்றவை எனக்கு எதுவும் தெரியாது ஆனாலும் மானிட்டர் அடி மட்டும் தெரியும் நானும் அடித்தது உண்டு.
    நல்ல பகிர்வு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அய்யா மறந்து போனேன்.
    கண்ணாடி, மானிட்டர் இவை மாற்றுவது சரியே,
    ஆனால் நாம் கணிணி முன் அமர்ந்து வேலைபார்க்கும் முறை ஒன்று உண்டு, அதனை நாம் அவசியம் கடைப்படிக்கனும். அப்ப தான் எது மாற்றினாலும் தொடரும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு