மாயை
--------------
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வரார் நாம் செல்லும்
நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகும் இதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்...
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வரார் நாம் செல்லும்
நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகும் இதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்...
மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது. என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில். மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.
இது மாயை என்றால் மாயை against what ? ஏதோ ஒன்று பின்புலத்தில் இருக்க வேண்டும். நிஜம்
மட்டுமே கனவு காண முடியும். கனவு இன்னொரு கனவைக் காண முடியாது. எனவே மாயையின்
பின்புலத்தில் உள்ள நிஜம் என்ன என்று அறியும் முயற்சியே ஞானத்தின் தேடல் என்று நினைக்கிறேன்.மாயையை வெறுக்க வேண்டியது இல்லை.வெறுமனே விழித்துக் கொண்டால் கனவு கலைந்து விடும்.கண்ணாடியை மறைக்கும் தூசை வெறுமனே துடைத்தால் போதும். கண்ணாடியையே உடைக்க வேண்டியது இல்லை அல்லவா?

சில எண்ணங்களின் விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம் என்று நம்புகிறோம் பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக
இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது
![]() |
| மாயக் கண்ணன் வாய் |
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே
மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன்
விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே
மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.
மாயை
தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும்
காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே
இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும்
நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.
முன்னவன்
தன்
மாயையை
விலக்க,
மறைத்த
தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ
செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.
இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
மனத்தின் மயக்கமே மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு வாழ்தல் பெருமை தரும்
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்
ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்

உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்
சில எண்ணங்களின் விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம் என்று நம்புகிறோம் பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக
இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது
(சில எண்ணங்கள் வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில் ).
(சில எண்ணங்கள் வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில் ).