சனி, 21 அக்டோபர், 2017

எண்ணக் கலவைகள்


                                        எண்ணக் கலவைகள்
                                       ------------------------------------

  எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்க இயலுமாதெரியவில்லை  முதலில் வலையில் பதிவிடும்  எழுத்தாளர்கள் அனைவரையும்  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்  ஆனால் பலரும் அப்படித் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை  காரணம்  தெரியவோ கேட்கவோ நான் யார் ? சில மாதங்களுக்குமுன்  ஒரு மின் அஞ்சல் வந்தது  இங்கி லாந்திலிருந்து ஒரு வாசகி முதலில் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை  என் பதிவுகளை கூகிள் பிளசில் வாசிப்பவராம்  விவரம் தெரிய புகைப்படம் கேட்டு எழுதி இருந்தேன்  அவர்கள் கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்  என்னை புகழ்ந்திருந்தது /  You are broad minded open to discussion without prejudice that's what I feel about you basically I m a micer to appreciate anyone so u can take my complement as it is எதுவும் கூட்டிச் சொல்லல :)thanks for your reply and blessings I m pleased to read your mail./ முகஸ்துதிக்கு மயங்காதார் உண்டோ  அவர்கள் ஜூலை மாதம் இந்தியா வருவதாகவும்  முடிந்தால் என்னை சந்திப்பதாகவும்   எழுதி இருந்தார்கள் தீபா கபிஷ் என்பது அவர் பெயர்  அவர்களது குழந்தையின் புகைப்படம்  மட்டும் சேமித்து வைத்திருக்கிறேன்  நாகர் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது அவர்களுக்கு எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின்  பெயர்களைத் தெரிவித்து  அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா  என்று கேட்டிருந்தேன்   வாசித்ததுண்டு என்று பதில் வந்தது  இதற்கு மேல் அவர்களைப் பற்றி எழுதினால் ரசிப்பார்களோ தெரியவில்லை


இங்கிலாந்து வாசகி  தீபாகபிஷின்   குழந்தை  ---அதிரா 
                                ==================================
பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை  சில பதிவுகளைக் காண்ட்ரா வர்ஷியலாக எழுதும்  நானே என்னைப் பற்றிய எல்லாத்தகவல்களையும் தெரிவிக்கிறேன் ஆனால் நான் பிரபலமாகவில்லை போல் இருக்கிறது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் பலரையும் போட்டுத்தள்ளும் கலாச்சாரம்  மிகுந்திருக்கிறதே  அண்ணல் காந்தியையே  ஒரு அப்பழுக்கற்ற அகிம்சாவாதியையே கொன்றுவிட்டார்கள்  அண்மையில் பெங்களூரில் கௌரி லங்கேஷ் எனும் ஒரு முற்போக்கு சிந்தனை வாதியைக் கொன்று விட்டார்கள் பேசுவோம்  கருத்துகளைப் பரிமாறுவோம்  என்பதெல்லாம் இல்லை  ஒழித்துக் கட்டிவிடுகிறார்கள்  இப்போது காந்தியை சுட்டது ஏதோ நான்காவது குண்டாயிருக்கலாம்  என்று சந்தேகமெழுப்பி  அந்த வழக்கை மீண்டும்  நடத்த ஒரு குரல் எழும்பி இருக்கிறது சரித்திர நிகழ்வுகளையே மாற்ற ஒரு கூட்டம் குறியாயிருக்கிறது தாஜ்மகால் இந்தியாவின்  பெருமைக்கு இழுக்கு தேடித்தருகிறது என்று ஒரு பி ஜே பி  எம் பி குரல் கொடுத்திருக்கிறார்  அதற்கு டூரிஸ்ட் விளம்பரம்  இல்லை என்று யாரோ எழுதி இருந்ததற்கு வரிந்து கட்டிக் கொண்டு சிலர் அது  தவறான புரிதல் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் நாம் எப்போதும்  பழங்கதைகளையும்     இதிகாசங்களையும்   உண்மை என்று நம்பிஅவற்றை சரித்திர நிகழ்வுகள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம் சரித்திர நிகழ்வுகளுக்கும் வரலாறுகளுக்கும் சான்றுகள் அவசியம்வெறும் கதைகளும்  நம்பிக்கைகளும் போதாது 
                                =======================
 திருபெருமாள்முருகன்  சில வழக்கங்ளை வைத்துப்புனைந்திருந்த கதைக்கு  எதிர்ப்பு வந்திருந்தது  நானும் ஒருசிறு கதை எழுதி இருந்தேன்  அக்காலக் கேரள வழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கதை  அது பதிவில் வந்தபோது எனக்கு நானும்  சில feathers களை சீண்டி விட்டேனோ என்னும் எண்ணம் வந்தது நான்தான் பிரபலமடைய வில்லையே யாரும் கண்டு கொள்ளாமல் போய்விட்டது அந்தக் கதை
                              =============================

நிரூபிக்கபடவில்லை என்னும் காரணத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் தல்வார் தம்பதிகள்  அவர்களதுமகள்  பதினாலு வயது ஆருஷியும்  வீட்டு வேலையாளும்  2008 ல் கொலை செய்யப்பட்டிருந்தனர்  அந்தக் காலத்தில் செய்தி ஊடகங்களே வழக்கினை திசை திருப்பினவோ என்று சந்தேகம்  எழுகிறது ஒரு வேளை செய்யாத குற்றத்துக்கு நான்காண்டுகள் சிறையில்  வாடிய தல்வார்  தம்பதிகளின்  மன உளைச்சல்களுக்கு  இன்னல்களுக்கும் யார் காம்பென்சேட் செய்வது அதேபோல் சுநந்தாவின்  கொலையையும் இன்னும்  தெளிவு இல்லாத நிலையில்  சில ஊடகங்கள் முன்னாள் மந்திரியும்  சுநந்தாவின்  கணவனுமான காங்கிரஸ்  தலைவருமான சஷி   தரூருக்கு எதிராக  வரிந்து கட்டிக் கொண்டிருப்பது  தெரிகிறதுஇன்றைக்கு  சுநந்தா தங்கி இருந்த அறையை  di seal  வைக்க உத்தரவுவந்திருக்கிறது  நீதித் துறையின் மெத்தனமா காவல் துறையின்   மெத்தனமா இல்லை அரசுக்கு அடங்கிப் போகும் இவர்கள் குறையா என்ன வென்றுதெரியவிலை 
                             =================================
இன்னொன்றும்  எண்ணத்துக்கு வருகிறது சுற்றுச் சூழல் பாதிப்படைவதால் தலை நகரிலும்  இன்னும்  சில மாநிலங்களிலும்  தீபாவளிக்கு  பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்னும் அரசாணையை  அப்படியே ஏற்று கொண்டிருக்கும்  நீதித்துறையும்  கவனத்தை  ஈர்க்கிறது சுற்று ச்சுழல் பாதிப்புக்கு வருடத்தில் ஒரு நாள் வரும்  தீபாவளி அன்று வெடிக்கப்படும்  வெடிகளும் வாண வேடிக்கையும்  தான்  காரணமா ஒரு நாள் தடையால் மாசுமருவற்ற சூழல் வருமா எதையோ நினைத்து  உரலை இடிப்பது போல் இருக்கிறதேஇது எத்தனை பேரின் வருவாய்க்கு முட்டுக்கட்டை என்பது தெரியவில்லையா கங்கையும்  யமுனையும்  மாசால் மங்கிக் கொண்டுஇருப்பதற்கு ஏதும் செய்யமுடியாதவர்கள்  தங்களதிகார பலத்தைக் காட்டும்   சந்தர்ப்பமா இது
                                ==========================
பெங்களூருவில் விதான சௌதா கட்டி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன / அதற்காக ஒரு விழா எடுக்கிறார்களாம்  எப்படி தெரியுமா அங்கிருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு தங்க பிஸ்கட் கொடுக்கப் போகிறார்கள் அங்கு பணியில் இருக்கும்  சுமர் 5000 பேருக்கு வெள்ளிதட்டுகளும் வழங்க ஏற்பாடாம்(அந்த செய்தி பரிசீலிக்கப்பட வேண்டியதேபொதுமக்களின்  எதிர்ப்புக் குரலால்   அரசின்  எண்ணங்களில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது) நானும் தான்  விதான சௌதா கட்டுமானப்பணியில் சம்பளம்கிடைக்காமல் ஒரு மாதம் உழைத்திருக்கிறேன் பார்க்க பூர்வஜென்ம கடன்http://gmbat1649.blogspot.com/2011/02/blog-post_09.html 
                                ============================
 சட்டசபைகளுக்கும்  பாராளு மன்றத்துக்கும் ஒரே சமயம்  தேர்தல் நடத்த வேண்டும்  என்பது மோடி அரசின் விருப்பம்.ஆனால் இப்போது ஹிமாச்சல் பிரதேசத்துக்கும்   குஜராத்துக்கும்  ஒரே  நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சந்தர்ப்பம்வந்தும் முதலில் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு   மட்டும்  தேர்தலாம்  குஜராத் தேர்தல் நாள இன்னும் அறிவிக்கப்படவில்லை மோடி அரசுக்கு அதில் விருப்பமில்லாதது போல் தெரிகிறது தற்போது மோடி குஜராத்துக்கு பலசலுகைகளை அறிவிக்கும்  நிலையில் இருக்கிறார்  தேர்தல் அறிவித்தால் சலுகைகளை அறிவிப்பது முடியாது கோட் ஆஃப் காண்டக்ட் அமலுக்கு வரும் தேர்தல் கமிஷனும்  அரசுக்கு அடிபணிவதுபோல் இருக்கிறது எனக்கு ஒன்று புரிவதில்லை அரசுக்கு நீதித்துறை தேர்தல் ஆணையம்  வருவாய்த்துறை இவைஎல்லாம்  கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்  அதிகாரம் உள்ளதா. இல்லை இதில் இருப்போர் தங்களதிகாரத்தை நிலை நாட்டுவதில் விருப்பமில்லாதவர்களா
                            ==============================
  இப்போது சில ஊடகங்களில் வரும்  விளம்பரங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஐயாயிரம்  ஆண்டு பழமையான என்று சகட்டு மேனிக்குக் கதை விடுகிறார்கள்சில நூறாண்டுகளுக்கு முன்  நிகழ்ந்தவைகளையே சரியாக இணைக்க முடியாமல் இருக்கிறோம்  ஆயுர் வேத மருந்துகள் நல்லனவாகவே இருக்கலாம்  அதற்காக  இப்படியா பணம்  பண்ணவும்  ஒரு நியதி வேண்டும் அல்லவா
                            ==================================  
  எண்ணங்களைப் பகிரவே எழுதுகிறோம் வலையில் இது  ஓரளவுக்குத்தான் செல்கிறது பத்திரிக்கைக்கு  எழுதினால் ரீச் அதிகமாக இருக்கும் தான்  ஆனால் சூடு கண்டபூனை போல் இருக்கிறேன் 2011ல் ஹிந்து பத்திரிக்கைக்கு ஒருகடிதம்  எழுதி இருந்தேன்  பார்க்க  http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_08.html எழுதிய கடிதம் தணிக்கை செய்யப்பட்டு இருந்தது  அப்போது எனக்குத் தோன்றியதையும் எழுதி இருந்தேன்  நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
மீண்டும்  கூறுகிறேன்   என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்கக் காத்திருக்கிறது பார்ப்போம் 
                           ===========================

-
      
                          

.    

67 கருத்துகள்:

  1. உங்கள் எண்ணப்பகிர்வுக்கு நன்றி.நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. எண்ணக் கலவைகள்!...

    வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை ஐயா!..

    பதிலளிநீக்கு
  3. உங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது உங்கள் வயது வரும் போது நான் இந்த அளவுக்கு தெளிவான சிந்தனையுடன் ஆரோக்கியத்துடன் எழுதுவேனா? என்று நினைத்துக் கொள்வதுண்டு. தெளிவான அனுபவங்கள் அருமையான கோர்வை. விதான் சௌதா நிகழ்வுகளையும் படித்தேன். தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பரஸ்பர ரசிகர்கள் இந்தப் பின்னூட்டம் என்னைஇன்னும் எழுத வைக்கும் என் சிலபதிவுகளை பலரும் படிக்க வேண்டும் என்று நினைப்பேன் அதுவே என் குறையோ தெரியவில்லை விருப்பம் தெரிவித்தால் சில சுட்டிகளைஅனுப்புகிறேன் நன்றி சார்

      நீக்கு
    2. தாராளமாக அனுப்பி வைங்க. படித்து என் கருத்தை எழுதுகிறேன். நன்றி. நன்றிங்க என்றாலே போதும். சார் எல்லாம் வேண்டாங்க.

      நீக்கு
    3. முதலில் ஓரிரு சுட்டிகள் அனுப்புகிறேன் விரும்பிக் கேட்டால் மேலும் சில நன்றிங்க

      நீக்கு
  4. இத்தனை நாட்கள் நீங்கள் எழுதியதின் பிழிவோ என எண்ணத் தோன்றுகிறது. மோடி என்ற முகமூடியை பி.ஜே.பியினரே மாற்றி விடுவார்கள் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படித் தெரியவில்லை மோடி யை பற்றி நான் எழுதுவதை விட அவரது செயல்களே அதிகம் தெரிவிக்கும் இவன் இப்படித்தான் எழுதுகிறான் என்னும் எண்ணம் உங்களுக்கு வந்து விட்டது என்று தோன்று கிறதுஇத்தனை நாட்களில் எத்தனையோ தலைப்புகளில் எத்தனையோவிதங்களில் எழுதியவற்றின் சாரமிதுதான் என்று நீங்கள் எண்ணுவது ஏற்க முடியவில்லை தவறாக எண்ண வேண்டாம் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  5. எல்லாரும் எல்லாவற்றையும் வாசிக்க விரும்பும் காலம். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தவறு என்று எண்ணுவதுபொல் இருக்கிறதே

      நீக்கு
    2. வாசிக்க விரும்புவதை தவறு என்று நீங்கள் ஏன் அர்த்தப் படுத்திக் கொள்கிறீர்கள்?..

      அதைத் தாண்டி உங்கள் எதிர்பார்ப்பு ஏதாவது இருந்தால் நீங்கள் தான் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.

      நீக்கு
    3. எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே என் அவா

      நீக்கு
  6. மிக அருமையான தொகுப்பு பாலா சார். நச் கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  7. எண்ணக்கலவையைப் படித்தேன். பல்வேறு சிந்தனைகள் உங்களை வாட்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை எதுவும் வாட்டாது பல சிந்தனைகள் மனதில் ஓடுகிறதுஎன்பது உண்மையே

      நீக்கு
  8. //எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின் பெயர்களைத் தெரிவித்து அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா என்று கேட்டிருந்தேன் வாசித்ததுண்டு என்று பதில் வந்தது//
    வாவ் "! நமக்கே தெரியாம நமக்கும் வாசகர்கள் இருக்காங்களே :) நன்றி சார் .
    மற்ற பின்னூட்டங்களுக்கு பிறகு வரேன் ..இன்னும் முழுதும் படிக்கணும்

    பதிலளிநீக்கு
  9. ஜி எம் பி ஐயா.... இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதுக்கு ஆசைப்படக்கூடாது...
    இந்த வயதிலும் நீங்கள் இப்படிப் பதிவு போடுறீங்கள்... சிறியவர்கள் போல ஓடி ஓடி அனைவருக்கும் கொமெண்ட்ஸ் போடுறீங்கள்.... இதுவே மிகப் பெரிய சாதனைதானே...

    காலுக்குப் போட விலை உயர்ந்த செருப்பு வாங்க முடியவில்லையே என எண்ணக்கூடாது... பின்னாலே திரும்பிப் பார்த்தால் கால்களே இல்லாதோரும் இவ்வுலகில் உண்டு அப்போ நம்மை நினைத்துக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்...
    நீங்கள் இப்போ பிரபல பதிவர்தானே? இன்னும் எதுக்கு அழவேண்டும்?

    உண்மையைச் சொன்னால் முகம் பெயர் தெரியா வாசகி ஒருவர் உங்கள் ரசிகையாகி மெயில் அனுப்பியிருப்பதே மிகப்பெரிய வெற்றிதானே...
    இதுவரை எனக்கு யாரும் அப்படித் தெரியாதோர் மெயில் அனுப்பவில்லையே ஹா ஹா ஹா .. என் மெயில் ஐடி யாருக்கும் தெரியாது வெளியில்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி அதிரா எனக்கு இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க ஆசையில்லை நட்புகள் என்று சொல்வோர் யார் என்று தெரிய வேண்டாமா ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல அது அவரவர் விருப்பம் தெரிந்தவரிடம் உரையாடுவது வேறு முகம் தெரியாதவரோடு பழகுவது வேறு ஒரு அன்னியோன்யம் கிடைக்கும் உங்களிடம் யாரும் வெளியில் பழக முடியாதே நீங்கள் முகவரி இல்லாதவர்தானே
      காலுக்குப் போட விலை உயர்ந்த செருப்பு வாங்க முடியவில்லையே என எண்ணக்கூடாது... பின்னாலே திரும்பிப் பார்த்தால் கால்களே இல்லாதோரும் இவ்வுலகில் உண்டு அப்போ நம்மை நினைத்துக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.../ இது குறித்து நான் எழுதிய பதிவின் சுட்டிதருகிறேன் வாசித்துப்பாருங்கள்http://gmbat1649.blogspot.com/2011/05/blog-post_28.html

      நீக்கு
  10. ஹா ஹா ஹா அதென்ன பேபிக்குப் பக்கத்தில் அதிரா எனப் போட்டிருக்கிறீங்க?.. :).

    தீபா இதைப்பார்த்திட்டு திட்டி மெயில் போடப்போறா உங்களுக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரையும் உங்களை மாதிரி நினைக்கலாமா

      நீக்கு
    2. தன்னப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே... அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே.... எனப் பெரியவங்க சொல்லியிருக்கினமே ஐயா.... ஹா ஹா ஹா :).

      நீக்கு
    3. கருணை உள்ளத்துக்கு நன்றி மேம்

      நீக்கு
  11. இன்னொன்று ஐயா... பதிவுகள் போடுவோரின் முழு விபரம் நமக்கு எதுக்கு?... நான் ரசிப்பது பதிவுகளைத்தானே தவிர, பதிவிடுவோரை அல்லவே... அதனால அவர்கள் வயதானாலும், இழமையானாலும், கறுப்போ வெள்ளையோ.. ஆணோ பெண்ணோ... அவர்களாக விரும்பிச் சொன்னால் ஓகே இல்லை எனில் எதுக்கு கவலைப்பட வேண்டும் நாம்?..

    நான் என்னைப்பற்றி எல்லாம் சொல்லி விட்டேன், என் படமும் போட்டுக்காட்டி விட்டேன் என்பதற்காக அடுத்தவரும் அப்படியே செய்யோணும் என எதிர் பார்ப்பது தப்பு... அது அவரவர் விருப்பம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகில் பல்வேறு நியாயங்களை கூறுபவர் பற்றி நான் ஏன் குறை கூற வேண்டும் அதது அவரவர் நியாயம் அதையும் கூறி இருக்கிறேனே என் விருப்பமும் கூறி உள்ளேன்

      நீக்கு
  12. த.ம.4
    அப்புறமாட்டிக்கு வருகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம க்கு நன்றி அப்புறமாட்டிக்கு இது எந்தப்பக்கத்து சொல்வழக்கு?

      நீக்கு
  13. எண்ணக் கலவைகளைப் படித்தேன் ஐயா
    எல்லோரும் தங்களைப் போல் இருக்க மாட்டார்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்கிறீர்களா நன்றி சார்

      நீக்கு
  14. எண்ணங்களை எல்லாம் ஒரே பதிவில் கொட்டி விட்டீர்கள் ஐயா.

    நான் பதிவுலகைப் பொருத்தவரை எதையும் மறைக்காமல் உண்மையாக இருக்கிறேன்.

    விதான் சௌதா தொழிலாளிக்கு வெள்ளித்தட்டு. திருடர்களுக்கு தங்க பிஸ்கெட்டு. இது எவ்வகையில் நியாயம் ?

    பாப்பா ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடக அரசு அந்த எண்ணத்தைக் கை விட்டு விட்டார்கள் எழுது பொருள் என்னவெல்லாமோ இருக்கிறதே

      நீக்கு
  15. ஆருஷி கொலை வழக்கில் என்ன நடந்துச்சுன்னு எனக்கெதும் புரில. இதுமாதிரி வெளிவராத மர்மம் எத்தனையோ இருக்கு. ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் புரியவில்லை ஆனால் ஊடகங்களின் பங்களிப்பு திசை மாற்றி விட்டது என்றே தோன்று கிறது

      நீக்கு
  16. எண்ணக்கலவைகள் அசத்துகின்றன ஐயா. நான் அடிக்கடி கூறுவதுபோல உங்களது நினைவாற்றலும், எழுத்து நடையும் எங்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன. அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  17. எண்ணங்களையெல்லாம் வண்ணக் கலவையாகி அழகிய சித்திரமாகட்டும் .எப்பவும் நேர்பட பேசுபவர் நீங்க .தொடர்ந்து எழுதுங்க

    தங்கபிஸ்கட் !!! நியாயப்படி தன்னலம் இன்றி ஊதியமில்லாமல் உழைத்த உங்களைபோன்றவர்களுக்கே கொடுத்திருக்கணும் ..
    எதற்கு இப்போ இருக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கு கொடுக்கணும் ?
    நல்லது மக்கள் விழிப்புடன் இருந்தாதான் இப்படிப்பட்ட atrocities தடுக்கப்படும் .
    ஒரு நாள் தீபாவளி பட்டாசால் மாசு :) சிரிப்புதான் வருது அரசு நமக்கு கொடுப்பதெல்லாம் மாசு தானே பூச்சிக்கொல்லி போட்ட உணவு பிளாஸ்டிக் பொருட்கள் தரம் குறைந்த பொருட்கள் எவ்வளவோ அடுக்கிட்டெ போலாம்
    சுனந்தா தரூர் பாவம் ..எதனால் மரணம்னு இதுவரை கண்டறியமுடியலையா ?
    நீங்க feather சீண்டி விட்ட கதையின் லின்க்கையும் கொடுங்க .நான் பெ .மு வை படித்தேன் ..அந்த நேரம் எதோ ஒரு கான்ட்ரவர்ஸி என்றதும் ஆவலில் படித்தேன் :)


    மருந்துகள் விஷயத்தில் வியாபாரம்தான் அம்மா சுகமில்லாம இருந்தப்போ 750 பவுண்ட்ஸ் கொடுத்து கனடா விலிருந்து ஒரு மருந்து வரவழைத்தோம் எதை சாப்பிடாவது குணமாகாதா எனும் நமது ஆதங்கத்தை சில மருந்து கம்பெனிங்க மிஸ்யூஸ் பண்ராங்க :(



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்டுக் கொண்டபடி அந்தை கதையின் லிங் இதொ / http://gmbat1649.blogspot.com/2012/10/blog-post_17.html

      ஏதோ ஆயுர்வேதம் என்றால் எல்லாம் நம் முன்னோர்களின் மருத்துவம் என்னும் நம்பிக்கை அதை உபயோக்கிக்கிறார்கள் மனடின் சில ஆதங்கங்கள் எழுத்தாகின

      நீக்கு
  18. ஹ்ம்ம் அதேபோல் ஆருஷி :( மனம் கனக்கிறது யார் தவறு யார் செய்தாங்க என்பதற்கப்பால் ஒரு வாழவேண்டிய இளம் குருத்து முறிக்கப்பட்டது வேதனை :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிலேய்ட் ஜஸ்டிஸ் இஸ் டினயிட் ஜஸ்டிஸ் என்றே தோன்று கிறது

      நீக்கு
  19. +வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)

    பதிலளிநீக்கு
  20. உங்க எண்ணக் கலவை பல தகவல்களை சுவராஸ்யமாக சொல்லி செல்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் தவறாகச் சொல்ல வில்லையே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  21. எண்ணத் தொகுப்புகள் அருமை.கேரள வழக்கம் பற்றிய ஒரு சிறுகதையை உங்கள் சிறுகதை தொகுப்பு நூலில் படித்த நினைவு இருக்கிறது. மனதில் பட்டதை சொல்லும் துணிவு உங்களைப் போல ஒரு சிலருக்கே உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி எழுதினால் என்ன மனதில் பட்டதைச்சொல்பவன் நான் ஆனால் கூடியவரை யார் மனதையும் நோகடிக்க விருப்பமில்லை பாராட்டுக்கு நன்றி சார்

      நீக்கு
  22. "பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை" - ஆமாம் சார்... வேலை பார்ப்பவர்கள் தங்கள் முகம் காட்டுவதை விரும்புவதில்லை. இரண்டு, அநாவசிய மெயில்களைத் தவிர்க்கவும் பலர் தங்கள் முகத்தைக் காட்டவிரும்புவதில்லை. இணையம் என்பது பொழுதுபோக்கத்தானே ஒழிய, அதனால் எதற்கு புதுப் பிரச்சனைகள்?

    பழைய வழக்கங்களை இப்போது எழுதும்போது பலர் அது அவமானகரமாக இருக்கிறது என்று சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால்தான் பெருமாள் முருகனுக்கு அவ்வளவு எதிர்ப்பு. கேரளா, நாகர்கோவில் / கன்யாகுமரி ஆகிய இடங்களில் நடந்த பழைய பழக்கங்கள் மிகுந்த சர்ச்சைகளுக்கு உரியது.

    தல்வார் வழக்கு - உண்மை எது என்று தெரியவில்லை. ஏன் தடயங்கள் அவர்கள் வீட்டில், உடனே அழிக்கப்படவேண்டும்?

    பட்டாசுகளைப் பற்றி என் எண்ணம் வித்தியாசமானது. வெடிச் சத்தம், ரோடில் வெடி வெடிப்பது போன்றவை தவிர்க்கப்படவேண்டும். அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாதவகையில் நம் மகிழ்ச்சி/கொண்டாட்டம் இருக்கவேண்டும்.

    எண்ணப்பகிர்வுகள் நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் நான் பதிவுலகில் அறிமுகங்கள் மட்டுமே கிடைக்கின்றன நட்புகள் எளிதில்லை என்று சொல்லி வருகிறேன் இம்முறை குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினீர்களா அவமானகரமாக இருக்கிறது என்றால் புரிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் ஆனால் பெருமாள் முருகன் தங்களது நம்பிக்கைகளைச் சாடி எழுதினார் என்பதாலேயே போராட்டம் பட்டாசு வெடிப்பதில் இருக்கும் தொந்தரவுகள் எனக்கும் தெரியும் ஆனால்வருடம் ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவாளி மாசு விளவிக்கிறது என்பதே ஜீரணிக்க முடியவில்லை தல்வார் வழக்கு சுநந்தா வழக்கு போன்றவை சிலரது மெத்தனத்தால் முற்றுப்பெறாமலேயே இருக்கிறது/ belated dipaavaLi wishes to you and family

      நீக்கு
  23. பல வேறுபட்ட தகவல்களை/செய்திகளை சுவைபட தந்திருக்கிறீர்கள். இரசித்தேன்!

    சுருங்கச் சொன்னால் தங்களின் எண்ணக் கலவைகள் வண்ணக் கோலங்கள்!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. எண்ணக்கலவை வண்ணக் கலவையாகபல சுவாரஸ்ய தகவல்களுடன்...நல்லாருக்கு சார்.

    ஆருஷி கொலை என்ன என்றே புரியவில்லை. பல மர்மங்கள் புதைந்து இருக்கின்றன என்றே தோன்றுது.

    ஸார் பலரும் தங்கள் சுயவிவரங்களைத் தருவதற்குத் தயங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட்டு அவர்கள் எழுதுவதை மட்டும் பார்ப்போமே ஸார். என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    நீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் ஸார். தொடர்ந்து எழுதுங்கள். அது உங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இது /நீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் ஸார். தொடர்ந்து எழுதுங்கள். அது உங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கும்!!!இதில் என்ன பெரிய விஷயம் என்னை விட மூத்தவர்களும் என்னை ஒத்தவர்களும் வலை உலகில் ஜமாய்க்கிறார்களே பலரது சுய உருவம் தெரிந்ததால்தானே கணிக்க முடிகிறது எழுத்தில் இளமை முதுமை உண்டா என்ன

      நீக்கு
  25. //எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது..//

    என்ன சார் இப்படிச் சொல்லி விட்டீர்கள்?..

    நாம் இருவரும் எவ்வளவு முரண்பாடான விஷயங்களையும் விவாதித்திருக்கிறோம்?.. நம் இருவரிடையேயான நட்பும் புரிதலும் சிறப்பாகத்தானே இருக்கிறது?.. விவாதங்களினால் அதற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு உங்கள் முகவரியும் உங்களுக்கு என் முகவரியும் தெரியும் முன்பே சில விஷயங்களைக் கடித்தமெழுதியே தீர்த்துக் கொண்டதும் உண்டு மேலும் சென்னையில் இரு முறை சந்திக்க விரும்பி மூன்றாம் முறையும் சந்திக்கவும் முடிந்தது எனக்கு உங்கள் எழுத்து பற்றியும் உங்களுக்கு என் எழுத்து பற்றியும்
      நன்கு பரிச்சயம் உண்டுபதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் அதுவுமில்லாமல் எக்செப்ஷன்ஸ் கென் நாட் பி அ ரூல்

      நீக்கு
    2. //பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் //

      மற்றவர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. 56 பின்னூட்டத்திற்குப் பிறகு இப்பொழுது தான் உங்கள் எண்ண ஓட்டம் பற்றி பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு உணர்வு.

      நீக்கு
    3. நான் ஒரு திறந்த புத்தகம் என்னைச் சார்ந்த பல விஷயங்களைப்பகிர்ந்துவந்திருக்கிறேன் எனது எண்ண ஓட்டங்கள் பலதும் என் பதிவுகளில் காணலாம் எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது

      நீக்கு
    4. ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள். இணையத்தில் இப்படிப்பட்ட சிலரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவா கருத்து மோதல்ல, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தாக்குதல் நுழைந்துவிட்டால் பிரச்சனைதான். இரண்டு பேர் நட்பு பூணுவதற்கு common ground, ஒத்த interest போன்றவை இருக்கவேண்டுமல்லவா?

      நீக்கு
    5. ஆட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி

      நீக்கு
    6. ஒத்த கருத்துள்ளவர்கள்தான் நட்பாய் இருக்க முடியுமா நெத சார்

      நீக்கு
    7. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ஜி.எம்.பி சார்.. அப்படி இல்லைனா, கருத்து வேறுபாடுள்ள விஷயங்களை இருவரும் சந்திக்கும்போது பேசுவதில்லை என்று நிச்சயத்துக்கொண்டால் ஒருவேளை நட்பு பாராட்ட முடியும். நான் இப்படிச் சொல்வது, பெரும்பான்மையினரின் சார்பா. சிலர், கருத்து வேறு நட்பு வேறு என்று நினைப்பவர்கள், அவர்கள் உயர்வானவர்கள்.

      நீக்கு
    8. ஒத்த கருத்துள்ளவர்கள் மட்டுமே நட்பு பாராட்ட முடியும் என்றால் சில நேரங்களில் மனைவியிடமும் கூட அன்னியோன்யம் வராது மாற்று கருத்டுள்ளவர்களையு ம் ஏற்க வேண்டும் ஏற்கிறோம் என்பதாலேயே உடன்படுகிறோம் என்பதில்லை நான் என் கருத்துகளை சபையில் வைக்கிறேன் பலரும் அதுபற்றி சிந்திக்கத் துவங்கினாலேயே எனக்கு வெற்றி என்று எண்ணுபவன் நான் கருத்து வேறு பாடுகளை சந்திக்கும் போது பேசாமல் இருப்பதுமொரு வகை அவரவர் குணம் தெரிந்து பேச வேண்டும் நான் கொஞ்சம்கோபக்காரன் பேசும்போது வார்த்தைகள் என்னை அறியாமலேயெ வரலாம் ஆனால் எழுதும் போதுமிகவும் கவனமாக இருக்கிறேன் என்றே எண்ணு கிறேன் ஒருவர் பற்றி இன்னொருவருக்குத் தெரிந்து இருந்தால் அதாவது முகம் காட்டும்படி இருந்தால் எல்லாமே சரியாகி விடும்

      நீக்கு
  26. //எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது,,//

    சரியாப் போச்சு! உங்களைச் சொல்லவில்லை. இந்தப் பதிவில் 56 பின்னூட்டங்களுக்குப் பிறகு தான்
    'பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன்' என்ற உங்கள் எண்ண ஓட்டம் பற்றிப் பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு உணர்வு-- என்று நான் போட்ட பின்னூட்டத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் நீங்கள் சொல்ல வந்தது புரியாமலேயே போய் விடுகிறது இதை உங்கள் கதைகள் சிலவற்றிலும் சந்திக்கிறேன் பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றும் வலை உலகில் ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள் என்று முன்பே எழுதி இருக்கிறேன்

      நீக்கு
  27. //ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். //

    //சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள்.//

    நெல்லை! நெருங்கி வாருங்கள்.. நான் இரண்டாவது ரக ஆசாமி.. மாறுப்பட்டக் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் தான் நான் பதிவுகளே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    அதனால் உங்கள் மனத்தில் படுகிற கருத்துக்களை தாராளமாய் என் பதிவுகளில் பதியுங்கள்.

    அதனால் எல்லாம் நம் நட்புக்கு பங்கம் நேரிட்டு விடாது.

    //இரண்டு பேர் நட்பு பூணுவதற்கு common ground, ஒத்த interest போன்றவை இருக்கவேண்டுமல்லவா?//

    வாழ்க்கை பூராவுக்குமான common ground ஒத்த interest
    ஏதானும் உண்டா, நெல்லை?..

    அப்படியிருப்பின் தெரிந்து கொள்ள ஆசை.

    மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களும் (c.g. and interest) நம் வளர்ச்சிக்கேற்ப மாறிக் கொண்டே அல்லவா இருக்கின்றன?.

    common ground and ஒத்த interest-- இவை இரண்டும் ஒத்து வரவில்லை என்றால் நட்பு கொள்ள வழியே இல்லை
    என்றா நினைக்கிறீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலேயே அம்மாதிரி இருக்க வாய்ப்பு இல்லையே ஜீவி சார்

      நீக்கு