யயாதியாகவா
-------------------------
அது
என்னவோ தெரியவில்லை காரணம் தெரியாமல் சில கதைகள்
நினைவைச் சுற்றிச் சுற்றி வருகிறது அப்படி என்
நினைவைச் சுற்றும்கதைதான் யயாதியின் கதை
மொட்டையாக யயாதியின் கதை
என்றால் எல்லோருக்கும் விளங்குமா
விளங்காதவர்களுக்கு யயாதியின் கதைச் சுருக்கம்
யயாதி
அத்தினா புரததைத் தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டு வந்த அந்தக்காலத்து சந்திர குல அரசன் அவன் அசுர குல ஆச்சாரியரான
சுக்கிரச்சாரியாரின் மகள் தேவயானியை மணம்
செய்து கொண்டவன் அப்படிச் சொல்வதைவிட மணம்செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டான் இந்த தேவயானியின்
வேலைக்காரியாய் இருக்க நேர்ந்த விருசபர்வன் எனும் அசுரகுல அரசனின் மகள்
சர்மிஷ்டையை ( இவள் தேவயானியின்
தோழியுமாவாள்) இரண்டாம் திருமணம் செய்கிறான்
யயாதிக்கு
தேவயானியின் மூலம் யது துர்வசு என்று இரண்டு குழந்ததைகளும் சர்மிஷ்டை மூலம் துருயு
அனு மற்றும் புரு என்று மூன்று குழந்தைகளும் பிறக்கின்றன
தன் மகளுக்குத் துரோகம் செய்ததை, ( இரண்டாம் மனைவிக்கு மூன்று
குழந்தைகள் பிறந்தபின்…….? ) உணர்ந்த சுக்கிராச்சாரியார் யயாதியை அவரது இளமை நீங்கி ஒழிய சபிக்கிறார் இதில் யயாதிக்கு மன வருத்தம் அதிகமிருந்தாலும் சபித்த ஆச்சாரியாரிடம் சாப
விமோசனம் கேட்கிறார் அவரது மூப்பை யாராவது
வாங்கிக் கொண்டு தனது இளமையை யாராவது தர முன்வந்தால் யயாதிக்கு இளமை
திரும்பும் என்றார் தேவயானி மூலம்பிறந்த
மகன்களில் யாரும் முன்வரவில்லை இவரும்
இவரது பங்குக்கு அவர்களுக்கு அத்தினாபுர அரசும் கிடையாது என்கிறார்
சர்மிஷ்டையின் மகன்களில் மூத்த இருவரும்
யயாதியின் வேண்டுகோளுக்கு இணங்கவில்ல கடைசி மகன் புரு ஒப்புக்கொண்டு தனது இளமையைத்
தியாகம் செய்து மூப்பை ஏற்றுக் கொள்கிறான்
இளமையை மீண்டும் பெற்ற யயாதி தன் இரு மனைவிகளுடன் இன்பமாக இருக்கத் தொடங்கினான் பிறகு சில காலம் சென்றபின் இளமை நிலையில்லாதது என்று உணர்ந்து
தன் மகன் புருவுக்கு மீண்டும் இளமையைக்
கொடுத்து தனது மூப்பை ஏற்கிறான் (
யயாதியின் கதையைமிகவும் சுருக்கி
இருக்கிறேன் )
அது சரி யயாதிக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்னும் கேள்வி எழுகிறதல்லவா
சில
நேரங்களில் எனக்கும்யயாதிபோல் இளமை திரும்பாதா என்ற எண்ணம் வருவதுண்டு யயாதிக்கு
இன்பங்களைத் துய்க்க விடாமல் தடுத்த
மூப்பைக் களைய ஆசை. எனக்கு நான்விருப்பப் பட்டதைச் செய்ய விடாமல் தடுக்கும் என் மூப்பின் மேல் வருத்தம் யயாதி உலகியல் இன்பத்துக்காக மூப்பை வெறுத்தான்
எனக்கு அம்மாதிரி இல்லை ஏதாவது செய்து மீண்டும் உடல் வலிமை பெற்று நினைத்ததை செய்ய
முடியுமா என்னும் எண்ணம் நான் ஒரு வேளை
இதன் காரணமாகத்தானோ ஏனோசெய்யாத குற்றம் என்னும் பதிவில் என் இயலாமைகளை (அது எனது
மட்டுமல்ல என்பதையும் சொல்ல வேண்டும்
ஒரு சமயம்
இம்மாதிரி எண்ணங்கள் வயதானவர் எல்லோருக்கும் இருக்கிறதா தெரியவில்லை மூத்த
பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிரலாம் வயோதிகத்தால் செய்ய முடியாத வை செய்ய
நினைக்கும் போது இம்மாதிரி எண்ணங்கள் வருகிறதோ. ஆனால் நான் யயாதி மாதிரி என்
வயோதிகத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.வயதாவதும் அதனால் உடல் சோர்வதும் இயற்கையின் நியதி என்றும் அறிவேன் அதை உணர்ந்ததாலேயேமுதுமை ஒரு வரம் என்றும் எழுதி ஆறுதல்
அடைந்திருக்கிறேன் ஒரே தலைப்பிலிருபக்க வாதங்களையும் அறிய இவ்விரண்டு பதிவுகளும்
உதவுகின்றன (சுட்டிகளைப் பார்க்கவும் )
எப்பவுமே
என்னை ஒரு மாதிரியாக நினைக்கும் நண்பர்கள் கருத்துகளைப் பகிரலாமே
ஒரு சிலர் எத்தனை வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இப்போதைய என் வயதில் என் மாமியார் ஆடி ஓடினார்.என் மைத்துனனின் சின்னக் குழந்தையை முழு நேரமும் பார்த்துக் கொண்டார். என்னோட நிலையே வேறே! அன்றாட அலுவல்களில் பிரச்னை இல்லைனாலும் அதிகப்படி வேலைகள் பிரச்னையே தருகின்றன. எண்பது வயதுக்கு மேல் தான் என் மாமியாருக்கு உடல் நலத்தில் சின்னச் சின்னக் கோளாறுகள் ஏற்பட ஆரம்பித்தன. என்றாலும் கடைசி வரை சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ இல்லை! விரும்பியதைச் சாப்பிட முடியும்! இதெல்லாம் அவரவர் உடல்வாகு என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் நான் தன்னந்தனியே சென்னை முழுக்கச் சுற்றி வந்திருக்கேன். இன்று நினைத்தால் கூடப் போக முடியாது! வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்! வேறென்ன செய்ய முடியும்! :)
பதிலளிநீக்குமுழுவதும் உணர்ந்த நிலைதான் சுட்டியில் இருக்கும் முதுமையின் பரிசு தெரியாமல் இல்லை ஆனாலும் ஏன் முன்போல் ஓடியாடமுடிவதில்லை என்பதன் ஆதங்க வெளிப்பாடேசெய்யாத குற்றம் வருகைக்கு நன்றி
நீக்குபுரு மாதிரி எனது இளமையை தங்களுக்கு தர தயாராக இருக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குஇது சாத்தியப்படுமாயின் நான் தயார் இது நகைச்சுவைக்காக சொல்லவில்லை எனது வாழ்க்கைச்சூழலின் விரக்தியின் காரணமாய் தோன்றிய சுயநலத்தின் எண்ணமும்கூட...
തമിഴ് മണം - 1
நீக்குஸார்..உங்களுக்கே தெரியும் வயோதிகம் என்பது தவிர்க்க முடியாததுதானே! நீங்கள் தான் உங்களைப் பல கலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்களே! ஓவியம் வரைதல், கைவேலை செய்தல்....என்று ...இப்போது முடியவில்லையா ஸார்..வாசியுங்கள்...எழுதுங்கள் ஸார்...மனம் உத்வேகம் அடையும்...வேறு வழி? ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்....
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
வந்தவர் எல்லாம் முதுமை அடையாமல் தங்கிஇருந்தால் நாம் பிறந்து இருப்போமா என்பதே சந்தேகம்தான் :)
பதிலளிநீக்கு// சில நேரங்களில் எனக்கும் யயாதிபோல் இளமை திரும்பாதா என்ற எண்ணம் வருவதுண்டு யயாதிக்கு இன்பங்களைத் துய்க்க விடாமல் தடுத்த மூப்பைக் களைய ஆசை. எனக்கு நான்விருப்பப் பட்டதைச் செய்ய விடாமல் தடுக்கும் என் மூப்பின் மேல் வருத்தம் //
பதிலளிநீக்குஅய்யா உங்களுக்கு மட்டுமல்ல, ” இளமை திரும்பாதா என்ற எண்ணம்” - எல்லோருக்குமே, எனக்கும் உண்டு. ஆனால் கடந்து போன காலம், போனது போனதுதான். வருந்தி அழைத்தாலும் வாராது. .
// யயாதி உலகியல் இன்பத்துக்காக மூப்பை வெறுத்தான் எனக்கு அம்மாதிரி இல்லை ஏதாவது செய்து மீண்டும் உடல் வலிமை பெற்று நினைத்ததை செய்ய முடியுமா என்னும் எண்ணம் //
பழைய வண்டியை சர்விஸ் செய்து, பெயிண்ட் அடித்து ஓட்டுவது போல் இந்த கட்டையையும் முடிந்த வரை ஓட்டலாம். வண்டிக்கு உதிரி பாகங்கள் சுலபமாக கிடைப்பது போல் இந்த கட்டைக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். எதிர்காலத்தில் இதற்கும் காயலான் கடைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் எண்ணம் புரிகிறது. இன்று நானும் கூட வேறு சில காரணங்களுக்காக என் 25 வது வயதை திரும்பவும் அடைய முடிந்தால் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு பார்த்ததும் ஆச்சர்யம் வந்தது!
பதிலளிநீக்குஉ ண்மைதான் ஐயா...
பதிலளிநீக்குமீண்டும் பள்ளிக் குழந்தையாக மாறிவிட்டால் என்று தோன்றுவதுண்டு... ஆனால் சுவாராஸ்யம் போய்விடும் இல்லையா...
வயது நாளுக்கு நாள் ஏறிச் செல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியது உலக நியதிதானே...
விசையுறு பந்தினைப்போல் உளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்... இதை அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ? நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவருண்டோ?...
பதிலளிநீக்குஅனைவருக்குமே இதுபோன்ற ஆசைகள் இருக்கத்தான் செய்யும்,
பதிலளிநீக்குஆயினும் இருப்பதை ஏற்று சிறப்புடன் வாழ முயல்வதுதானே வாழ்க்கை
நன்றி ஐயா
வயதான காலத்தில் இதுபோன்ற எண்ணம் வருவது இயற்கையே ஐயா. நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் அறிந்தவர் நீங்கள். இப்பதிவினைப் படித்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரியவரிடம் (அப்போது அவருக்கு வயது 80ஐத் தாண்டியது) என் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஐயா நீங்கள் இனி எப்பொழுது வேண்டுமானாலும் இறந்துவிடுவீர்கள். இறப்பு பற்றி பயப்படுகின்றீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் இறப்பு என்பது அனைவருக்கும் இயற்கையே. இருந்தாலும் வயதானவர்களிடம் இதுபோன்ற கேள்வியைக் கேட்காதே. நான் இக்கேள்வியை மென்மையாக எடுத்துக்கொண்டேன். பலர் இதனை ஒரு பாரமாக நினைத்து மனம் புழுங்குவர் என்றார்.
பதிலளிநீக்குதள்ளாமையை அடைந்த யயாதி மிகவும் வருந்தியது -
பதிலளிநீக்குசர்மிஷ்டையுடன் கூடிக் களிக்க முடியவில்லையே என்பதற்காகத் தான்..
சாப விமோசனமாக புரு தன் இளமையைக் கொடுத்தும் கூட - யயாதி அரியாசனத்தில் அமர்ந்து நாட்டைப் பரிபாலிக்கவில்லை..
அந்த வேலையை புரு தான் செய்தான்..
இளமைச் சுகத்தைத் துறக்க விரும்பாத யயாதியிடம்
முனிவர்களும் சான்றோர்களும் நல்லறத்தை எடுத்துக் கூறியதன் பின்னரே மீண்டும் முதுமையை ஏற்று காட்டுக்குள் போனான் - மனைவியருடன்..
கடைசியில் யயாதி சொல்லிய நீதி பிரசித்தம்..
பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் புளியம் பூ தத்துவம்..
இன்னொன்று தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது..
அது எண்ணங்களாலே தான் முடியும்..
மனம் போல மங்கல்யம் என்பது அதன் பொருள்..
வாழ்க நலம்!..
சார்... இதெல்லாம் வாழ்வின் ஒரு அங்கங்கள், தவிர்க்கமுடியாதவை. ஆனால் மனத்தளவில் நாம் இதனைக் கடக்க முடியும். (எனக்கு அத்தகைய மனம் இல்லை, என் மாமனார் 87 வயது, ஆனாலும் தினமும் எல்லா ஆன்மீகக் கடமைகள், சமையல் முதற்கொண்டு தானே பார்த்துக்கொள்கிறார், எல்லா வீடு சம்பந்தமான, மற்றவர்களுடைய பிரச்சனைகள் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மிகவும் உதவியாக இருக்கிறார். அவரும் கஷ்டப்படுகிறார் ஆனால் அதனை வெளிப்படுத்துவதில்லை. அவர் என்னிடம் சொல்வது, எந்த நிமிடமும் நான் செல்லத் தயார். இருக்கும்வரை என் வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். எனக்கெல்லாம் அந்தமாதிரி மனநிலை கிடையாது).
பதிலளிநீக்குநம்ம மனதுதான் எல்லாவற்றிர்க்கும் காரணம். ஆனாலும் நல்லனவற்றையே சிந்தித்திருப்பது பாசிடிவ் எனெர்ஜியைக் கொடுக்கும். நீங்கள் சமீபத்தில் கேக் செய்து படத்தைப் பகிர்ந்துகொண்டபோது அதைத்தான் நினைத்தேன்.
நம்மால் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்வதுதானே வழி?
எல்லோரும் நான் மறு மொழி இடும் இடத்திலேயே பின்னூட்டம் எழுதுகிறார்கள் இப்போதுஒவ்வொருவருக்கு மறு மொழி கில்லர்ஜி எனக்கு யாருடைய இளமையும் வேண்டாம்
பதிலளிநீக்குகூடியவரை ஆரோக்கியமாக இருந்தால் போதும்
தம க்கு நன்றி
@ துளசி/ கீதா செய்ய விரும்புவதைச் செய்ய விடாமல் தடுக்கும் வயோதிகம் மேல் இருக்கும் கோபமே பதிவுஉங்களுக்கே தெரியும் நான் என்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொள்பவன் என்று
@பகவான் ஜி எனக்கு முதுமை வேண்டாம் என்றில்லை அதனால் வரும் இயலாமையே ஆதங்கம்
@தி தமிழிளங்கோ/ஆனால் கடந்து போன காலம், போனது போனதுதான். வருந்தி அழைத்தாலும் வாராது./ இருந்தாலும் முதுமையை அனுபவிப்பவன் நான் என்பது சுட்டியில் இருக்கும் முதுமையின் பரிசு படித்தால் தெரியும்
2ஸ்ரீ ராம் எனக்கு இளமை திரும்ப விருப்பமில்லை நினைத்ததைச் செய்ய முடிந்தால் போதும்
@பரிவை குமார் பதிவில் கொடுத்திருக்கும் சுட்டிகள் என் மனதைச்சொல்லும்
@ஸ்ரீநிவாச சுப்பிரமணியம்நாராயணன் முதல் வருகைக்கு நன்றி அதுதானே நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறியலாமோ
@கரந்த்சை ஜெயக்குமார் சில நேரங்களில் இயலாமை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது
@ டாக்டர் ஜம்புலிங்கம் இறப்பு பற்றி என்சக்கு பயம் ஏதுமில்லை அதுகுறித்துநிறையவே எழுதி இருக்கிறேன்
2துரை செல்வராஜு என்பதிவே இம்மாதிரி வயதானவருக்கு தோன்று கிறதா என்பதே
@நெல்லைத் தமிழன் நானும் என் வேளைகள் எல்லாவற்றையும் செய்ய விரும்புஇறேன் உடல் ஒத்துழைக்கத போதுஇம்மாதிரி எழுதத் தோன்றியது என்மன வெளிப்பாடுகள் கொடுத்திருக்கும் இரு சுட்டிகளிலும் தெரியும்
.
இளமை மீண்டும் கிடைத்தால் என்னென்னவோ செய்யலாம். எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா? விடுங்கள், என்னைப் பொறுத்தவரை, சுமார் ஐம்பது புத்தகங்கள் கடந்த புத்தகப் பொருட்காட்சியில் வாங்கினேன். படிக்க நேரம் கிடைக்கவில்லை. பத்து பக்கம் படித்தவுடன் மனது போதும் என்கிறது. எழுத்துக்களும் சுவாரஸ்யமாக இல்லை. தொலைக்காட்சி பார்க்கலாம் என்றால் எல்லாமே நியூஸ் சேனல்கள். சொன்னதையே சொல்லி உயிரை வாங்குகின்றன. துணிக்கடை அதிபர்கள் எல்லாரும் உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக ஹன்சிகாவுடன் நடனம் ஆடித் தொலைக்கிறார்கள். சினிமா பார்க்கலாம் என்றால் இப்போதெல்லாம் நடிகைகள் ரவிக்கை அணிவதேயில்லை. இதெல்லாம் தான் சற்றே முதுமை அடைந்துகொண்டிருக்கும் என் போன்றவர்களின் பிரச்சினைகள். மற்றப்படி, சோற்றுக்குப் பென்ஷனும், வடித்துக்கொட்ட மனைவியும் இருப்பதால் கவலைகள் இல்லை....பார்க்கலாம், எதிர்காலம் அவ்வளவு மோசமாகவா இருந்துவிடும்? அன்புடன் - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.
பதிலளிநீக்குஎதிலும் சுவாரசியமில்லாவிட்டால் பிரச்சனையே இல்லைஎன் ஆதங்கங்களை செய்யாத குற்றம் என்று எழுதி இருக்கிறேன் முதுமையை எப்படிக் கொண்டாடுகிறேன் என்றுமெழுதி இருக்கிறேன் இருந்தாலும் மனசு என்னவோ செய்ய முடியாதவற்றையே நினைக்கிறது அதன்விளைவே இப்பதிவு எதிர்காலம் நல்லபடியாய் இருக்கும் என்னும் எண்ணத்தில்தான் வாழ்க்கையே ஓடுகிறது வருகைக்கு நன்றி சார்
நீக்கு//ஆனால் நான் யயாதி மாதிரி என் வயோதிகத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.//
பதிலளிநீக்குஎன்னமோ உங்களுக்கு அப்படி ஒரு சாய்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுபோலவும், நீங்கள்தான் பெரியமனதுபண்ணி அப்படியெல்லாம் செய்ய விரும்பவில்லை என்பதுபோலல்லவா எழுதியிருக்கிறீர்கள்!
ஆசையிலு ம் அம்மாதிரியான ஆசை இல்லை என்பதைச் சொல்லவே அப்படிக் கூறினேன் புரிதலில் எங்கோ கோளாறு
நீக்குநான் இன்னும் முதுமை அடையாததால் உங்கள் ஆதங்கம் எனக்கு புரியவில்லை. ஆனால் சுவாமி தயானந்த சரஸ்வதி கூறும் ஒரு prayer நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குO God! Please give me the strength to change what I can change and
Give me the strength to
accept gracefully what I cannot change
And also bless me with the wisdom to understand the difference between these two
1970களில் என் நாட்குறிப்பு புத்தகத்தில் இவ்வரிகளை எழுதி வைத்திருந்தேன் தயானந்த சரஸ்வதிதான் இதைச் சொன்னாராஎப்படி யெல்லாமோ சொல்லி திருப்திப் பட்டுக் கொள்ள வேணாடியதுதான் வருகசிக்கு நன்றி மேம்
நீக்குO God! Give me the strength to change what I can
பதிலளிநீக்குAnd give me the courage to accept gracefully what I cannot change
Also bless me with the wisdom to understand the difference between these two.
எத்தனை முறை கூறினாலும் அர்த்தம் ஒன்றுதானே
நீக்குமஹாபாரத கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்த கதை யயாதியின் கதை. புலன் இன்பங்களை துய்ப்பதற்காக தன் மகனிடமிருந்து யௌவனத்தை பெற்றுக்கொண்ட யயாதி, ஆசைகளை அனுபவித்து அதை தீர்த்துக் கொள்ள நினைப்பது எரியும் நெருப்பில் விறகு கட்டைகளை போடுவதற்கு நிகர் என்று உணர்ந்து மகனிடமே இளமையை திருப்பி த் தருகிறான். மகனுக்கு அத்தனை வருட அனுபவமும் கிடைக்கிறது, இளமையும் திரும்ப கிடைக்கிறது.
பதிலளிநீக்குகதைகள் பல பாடங்கள் சொல்லலாம் நான் எனக்குத் தோன்றியதை எழுதி இருக்கிறேன்
நீக்குயயாதி கதை ஒரு உபதேசக் கதை. யயாதி மாதிரி ஆசைப்பட்டு விடாதீர்கள் என்று உலகோர்க்குச் சொல்ல வந்த உபதேசக் கதை.
பதிலளிநீக்குஎண்ணங்களில் இளமை கொண்டு அதை உடல் இயக்கத்திலும் கொள்ளலாம் என்பது தெரியாத அந்த பைத்தியக்காரன் உடலில் இளமை வேண்டினான். புராணக்கதைகளுக்கு நிறைய உள்ளர்த்தங்கள் உண்டு. வெளிப்படையாக நமக்குத் தெரிவது ஒன்று தெரியாது வேறொன்று என்று.
உடல் உறுப்பு தானம் சாத்தியமான இக்காலத்தில் யயாதியின் கதையை வெவ்வேறு கோணங்களிலும் பார்க்கலாம்.
/எண்ணங்களில் இளமை கொண்டு அதை உடல் இயக்கத்திலும் கொள்ளலாம் என்பது தெரியாத அந்த பைத்தியக்காரன் உடலில் இளமை வேண்டினான்/எண்ணங்கள் இளமையாய் இருந்தால் உடலும் இளமையாய் இருக்குமா .GREAT REVELATION.....!
நீக்குஉடலில் மட்டுமில்லை; உடல் இயக்கங்களிலும் இளமை கூத்தாடும்.. எண்ணங்களில் இளமை கொண்டிருப்பது என்பது மேலே செண்ட் அடித்துக் கொள்கிற சமாச்சாரமில்லை. மனோலயப்பட்ட விஷயம் இது.
பதிலளிநீக்குஎண்ணங்களில் இளமை கொண்டிருப்பது மேலே செண்ட் அடித்துக் கொள்கிறசமாச்சாரம் என்று நினைப்பவ்ர்களும் இருக்கிறர்களா மனோலயப்பட்ட விஷயம் என்பது தெரியாதவன் நான் என்பது இப்போதுபுரிகிறது
நீக்குநிதர்சனம் என்ன என்பது புரிந்தாலும் அனைவருக்கும் அவ்வப்போது இது போன்ற எண்ணங்கள் தலை தூக்குவது இயல்புதான். நானும் நினைத்ததுண்டு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னதாக dslr கேமராவை உபயோகிக்க ஆரம்பித்திருந்தால்.. நினைத்தபடி பயணங்கள் மேற்கொண்டு நிறைய படங்கள் எடுக்க முடிந்திருக்கும் என. கேமரா மற்றும் அதன் லென்சுகளைத் தூக்கிச் செல்வது உட்பட, தற்போதைய உடல்நலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
பதிலளிநீக்குமுடிந்ததை உற்சாகமாகச் செய்து நாட்களை எதிர் கொள்ளுவோம்.
உற்சாகமில்லை என்று பொருள் அல்ல செய்ய நினைப்பதைச் செய்ய இயலாத நிலையை விளக்கவே பதிவு வருகைக்கு நன்றி மேம்
நீக்கு‘யயாதிபோல் இளமை திரும்பாதா என்ற எண்ணம் வயதானவர் எல்லோருக்கும் இருக்கிறதா தெரியவில்லை என சொல்லியிருக்கிறீர்கள். சிலருக்கு இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு எதிராக வாழ இயலாது என்பது தெரியும் என்பதால், இருக்கும் நாட்களில் நாம் நினைப்பதை முடிந்தவரை செய்து முடிக்க முயற்சி செய்யலாம்.
பதிலளிநீக்குஅப்ப்[அடியா எழுதி இருக்கிறேன் ?முதுமை தரும் பலவீனங்கள் வரும்போது இளமையாய் இருக்க முடியாமல் போவது யார் குற்றம் என்றும் எழுதி இருக்கிறேனே
நீக்கு