நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2017

யயாதியாகவா


                                         யயாதியாகவா
                                        -------------------------

அது என்னவோ தெரியவில்லை காரணம் தெரியாமல் சில  கதைகள் நினைவைச் சுற்றிச் சுற்றி வருகிறது அப்படி என்  நினைவைச் சுற்றும்கதைதான் யயாதியின்  கதை  மொட்டையாக யயாதியின்  கதை என்றால்  எல்லோருக்கும் விளங்குமா விளங்காதவர்களுக்கு யயாதியின் கதைச் சுருக்கம்
யயாதி அத்தினா புரததைத் தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டு  வந்த அந்தக்காலத்து சந்திர குல அரசன்  அவன் அசுர குல ஆச்சாரியரான சுக்கிரச்சாரியாரின்  மகள் தேவயானியை மணம் செய்து கொண்டவன் அப்படிச் சொல்வதைவிட மணம்செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்  இந்த தேவயானியின் வேலைக்காரியாய் இருக்க நேர்ந்த    விருசபர்வன் எனும் அசுரகுல அரசனின் மகள் சர்மிஷ்டையை ( இவள் தேவயானியின்  தோழியுமாவாள்) இரண்டாம் திருமணம் செய்கிறான் 
யயாதிக்கு தேவயானியின் மூலம் யது துர்வசு என்று இரண்டு குழந்ததைகளும்   சர்மிஷ்டை மூலம்  துருயு  அனு மற்றும் புரு என்று மூன்று குழந்தைகளும்  பிறக்கின்றன
தன்  மகளுக்குத் துரோகம்  செய்ததை, ( இரண்டாம் மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தபின்…….? )  உணர்ந்த  சுக்கிராச்சாரியார்  யயாதியை அவரது இளமை நீங்கி ஒழிய சபிக்கிறார்  இதில் யயாதிக்கு மன வருத்தம்  அதிகமிருந்தாலும் சபித்த ஆச்சாரியாரிடம் சாப விமோசனம் கேட்கிறார்  அவரது மூப்பை யாராவது வாங்கிக் கொண்டு தனது இளமையை யாராவது தர முன்வந்தால் யயாதிக்கு இளமை திரும்பும்  என்றார் தேவயானி மூலம்பிறந்த மகன்களில் யாரும்  முன்வரவில்லை  இவரும்  இவரது பங்குக்கு அவர்களுக்கு அத்தினாபுர அரசும் கிடையாது என்கிறார் சர்மிஷ்டையின்  மகன்களில் மூத்த இருவரும் யயாதியின் வேண்டுகோளுக்கு இணங்கவில்ல கடைசி மகன் புரு ஒப்புக்கொண்டு தனது இளமையைத் தியாகம் செய்து மூப்பை ஏற்றுக் கொள்கிறான்  இளமையை மீண்டும் பெற்ற யயாதி தன் இரு மனைவிகளுடன்  இன்பமாக இருக்கத்  தொடங்கினான் பிறகு சில காலம்  சென்றபின் இளமை நிலையில்லாதது என்று உணர்ந்து தன் மகன் புருவுக்கு  மீண்டும் இளமையைக் கொடுத்து தனது மூப்பை ஏற்கிறான்   ( யயாதியின்  கதையைமிகவும் சுருக்கி இருக்கிறேன் )
 அது சரி யயாதிக்கும் இந்தப் பதிவுக்கும்  என்ன சம்பந்தம் என்னும் கேள்வி எழுகிறதல்லவா
சில நேரங்களில் எனக்கும்யயாதிபோல் இளமை திரும்பாதா என்ற எண்ணம் வருவதுண்டு யயாதிக்கு இன்பங்களைத் துய்க்க  விடாமல் தடுத்த மூப்பைக் களைய ஆசை. எனக்கு நான்விருப்பப் பட்டதைச் செய்ய விடாமல் தடுக்கும்  என் மூப்பின் மேல் வருத்தம்  யயாதி உலகியல் இன்பத்துக்காக மூப்பை வெறுத்தான் எனக்கு அம்மாதிரி இல்லை ஏதாவது செய்து மீண்டும் உடல் வலிமை பெற்று நினைத்ததை செய்ய முடியுமா என்னும்  எண்ணம் நான் ஒரு வேளை இதன் காரணமாகத்தானோ ஏனோசெய்யாத குற்றம் என்னும் பதிவில் என் இயலாமைகளை (அது எனது மட்டுமல்ல என்பதையும்  சொல்ல வேண்டும்
 ஒரு சமயம்  இம்மாதிரி எண்ணங்கள் வயதானவர் எல்லோருக்கும் இருக்கிறதா தெரியவில்லை மூத்த பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிரலாம் வயோதிகத்தால் செய்ய முடியாத வை செய்ய நினைக்கும் போது இம்மாதிரி எண்ணங்கள் வருகிறதோ. ஆனால் நான் யயாதி மாதிரி என் வயோதிகத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.வயதாவதும்  அதனால் உடல் சோர்வதும் இயற்கையின்  நியதி என்றும் அறிவேன் அதை உணர்ந்ததாலேயேமுதுமை ஒரு வரம்  என்றும் எழுதி ஆறுதல் அடைந்திருக்கிறேன் ஒரே தலைப்பிலிருபக்க வாதங்களையும் அறிய இவ்விரண்டு பதிவுகளும் உதவுகின்றன (சுட்டிகளைப் பார்க்கவும்  )

எப்பவுமே என்னை ஒரு மாதிரியாக நினைக்கும் நண்பர்கள் கருத்துகளைப் பகிரலாமே