Monday, October 2, 2017

கற்றது கடுகளவு


                                         கற்றது கடுகளவு
                                         ----------------------------
ஒவ்வொரு முறையும் எழுத நினைக்கும் போது  என் எழுத்துகள் ஏதாவது செய்தியைச் சொல்கிறதா என்று யோசிப்பேன்  ஒரு பதிவின்மறு மொழியாக  என் பதிவுகள் எல்லாம்  என்  சொந்த சிந்தனையில்  எழுந்தாலும் அதனுள்ளிருக்கும்  செய்திகள் பலவும் பகிர்ந்து கொள்வதே  விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதினேன்   அருணகிரியாரின்  பல்லுடைக்கும் பாட்டுக்கும்   பொருள் தேடி எழுதினேன்  அந்தவகையில் இதோ இன்னொன்று
 .?தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார். அவருடைய புலமையே அவருக்கு ஆணவம்  வரக் காரணமாக இருந்தது அவ்வூரில் புலவர்கள் பலரும் காது அறு பட்டுக் கிடந்தனர்
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே
முத்தை திரு பத்தித் திருநகைஎன்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆனல் அந்தப் பாடல்தான் என்ன  தெரிய வேண்டாமா. முருகனின்  அருள் பெற்றவரின்  பாடலுக்கு பொருள் தெரியாமல் வில்லிபுத்தூரார்  தொல்வியை சந்தித்து அகம்பாவம்  ஒழியப் பண்ணிய  பாடல்தான்  என்ன  , வாசகர்களே முயன்று பார்க்கிறீர்களா  முதலில் படிக்க முடிய வேண்டும் பின்   பொருள் புரிய வேண்டும் எனக்கு மட்டும் தெரிந்ததா என்ன. இல்லையே இணைய உதவி நாடினேன்   பாடல் இதோ கீழே

திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

 இதற்கு அந்த முத்தைத் திரு பத்தி என்னும் பல்லுடைக்கும் பாடலே மேல் என்று தோன்றுகிறது

திதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.

சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.

(எல்லாப் புகழும்  இணையத்துக்கே )

48 comments:

 1. Replies
  1. ஏதோ எனக்குத் தொன்றியது வருகைக்கு நன்றி மேம்

   Delete
 2. ஆண் கவியை வெல்லவந்த பெண்கவியே வருக..' எனும் வானம்பாடி படப் பாடலில் இதுபோன்ற வரிகள் வரும்.​ ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. படல் வரிகளையும் கொடுத்திருக்கலாமோ நன்றி ஸ்ரீ

   Delete
 3. சம்பவத்தை ரசித்துப் படித்தேன். ஆனால் பாடலையும் அதன் அர்த்தத்தையும் இரண்டு மூன்றுமுறை படித்தும் என்னால் ரிலேட் செய்து புரிந்துகொள்ள முடியவில்லை. இதுக்கு இன்னும் தமிழறிவு வேண்டும். எனக்கு அது இல்லை. பகிர்வுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. பதிவின் லேபிலில் கூறி இருக்கிறேனே பகிர வேண்டும் என்று தோன்றியது நன்றி சார்

   Delete
 4. காதறுந்த கதை அருமை
  பாடலை படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறதே

  ""எல்லாப் புகழும் இணையத்துக்கே""
  ஹா ஹா ஸூப்பர் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. அறிவின் அகம்பாவம் தொலைத்தபாடல் என்று சொல்லி இருக்கலாமோ எனக்கு இணையத்தை மேய்ந்த போது கிடைத்த பாடலு ம்பொருளும்

   Delete
  2. தமவுக்கு நன்றி ஜி

   Delete
 5. வாய் சுளுக்கிக் கொண்டிருக்குமே, அதற்கு காது போனால் பரவாயில்லை என்று எண்ணியிருப்பார். அருமையான தகவல் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. இது காது காத்த பாடல் ஐயா வருகைக்கு நன்றி

   Delete
 6. பாடலை எழுத்துக்கூட்டி வாசிக்கவே முடியவில்லை.. நீங்கள் எப்படிக் கருத்தும் சொல்லிட்டீங்கள்... எல்லாப் புகழும் இணையத்துக்கே...:)..

  ReplyDelete
  Replies
  1. கூடவே எனக்கும் தமிழ் தெரியவில்லை என்று வாக்கு மூல கொடுத்திருக்கிறேனே லேபிலில்

   Delete
 7. ‘திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா’ என்று தொடங்கும் பாடலை படிக்கும்போது, தாங்கள் சொன்னது போல் ‘முத்தைத் திரு பத்தி’ என்னும் பல்லுடைக்கும் பாடலே மேல் என்று தோன்றுகிறது ஐயா.

  கடினமான பாடலை பொருளுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத பாடல் ஐயா வருகைக்கு நன்றி

   Delete
 8. அறியாத கதையை அறிந்து கொண்டோம். பாடல் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ரசித்தோம். மீண்டும் மீண்டும் வாசித்தால்தான் வாசித்துப் பொருள் நீங்கள் சொல்லியிருந்தாலும் வார்த்தைகளோடு பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

  பதிவை ரசித்தோம் சார்..எல்லாப் புகழும் இணையத்துக்கே/ ஹாஹாஹாஹாஹா

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. பாடலைப் பதம் பிரித்துப் படிக்கத்தெரிய வேண்டும் போல புகழ் இணையத்துக்குத் தானே

   Delete
 9. அருணகிரி நாதர் திரைப்படத்தில் இப்பாடல் காட்சி அருமையாக இருக்கும்..

  TMS அவர்கள் முழுமையாகப் பாடியிருப்பார்..
  சந்தக் கவியை சுவையாக பதிவினில் தந்தமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் அந்தப் பாடல் கிடைக்கிறதா எந்த முகவை அல்லது தளம்

   Delete
 10. சுவாரசியமான கதை. அறியாத விவரம். ரசித்தேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 11. தமிழில் பொருள் என்னவோ கொஞ்சம் உடான்ஸ் என்று தான் நினைக்கிறேன். இதையே நான் எழுதியிருந்தால் தமிழில் அப்படியெல்லாம் பொருள் கிடையாது என்றிருப்பார்கள் :-).

  ReplyDelete
  Replies
  1. எனக்கு முன் ஒருவர் ஏதோ கன்னா பின்னா என்று எழுதினாராம் அதற்கும் பொருள் கூறி அவருக்கு பணமுடிப்பைப்பெற்றுத்டந்தனராம் என்னும் கதை நினைவுக்கு வந்தது

   Delete
 12. என்னுடைய காதை அறுத்திருப்பார்களோ என்னவோ..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வாதுக்குச் செல்வீர்களா வருகைக்கு நன்றி சார்

   Delete
 13. திதத்த ததித்த ..திதத்த ததித்த என்னும் தாள வாத்திசைகளை,

  திதி … தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,

  தாதை … உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,

  தாத … மறை கிழவோனாகிய பிரம்மனும்,

  துத்தி … புள்ளிகள் உடைய படம் விளங்கும்,

  தத்தி … பாம்பாகிய ஆதிசேஷனின்,

  தா … முதுகாகிய இடத்தையும்,

  தித … இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)

  தத்து … அலை வீசுகின்ற,

  அத்தி … சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),

  ததி … ஆயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக் கொண்டு,

  து … அதை மிகவும் வாங்கி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற,

  இதத்து … போ¢ன்ப சொரூபியாகிய,

  ஆதி … மூலப்பொருளே,

  தத்தத்து … தந்தங்களை உடைய,

  அத்தி … யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

  தத்தை … கிளி போன்ற தேவயானையின்,

  தாத … தாசனே,

  திதே துதை … பல தீமைகள் நிறைந்ததும்,

  தாது … ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,

  அதத்து உதி … மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,

  தத்து அத்து … பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)

  அத்தி தித்தி … எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),

  தீ … அக்னியினால்,

  தீ … தகிக்கப்படும்,

  திதி … அந்த அந்திம நாளில்,

  துதி தீ … உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,

  தொத்ததே … உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

  நன்றி: குவிகம்.

  பதம் பிரித்துப் பொருள் சொல்லப்பட்டுள்ளது!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு வர்த்த த வுக்கும் பொருள் கூறி விளங்க வைத்ததற்கு நன்றி மேம்

   Delete
  2. தீ தா திதி போன்றவை தவிர தமிழின் அகராதிகளில் இப்படி 'த'கர ஒற்றைச்சொல் இரட்டைச்சொற்களுக்கு
   பொருள் காண முடியவில்லை.. அருணகிரி சொன்னாருன்னா பொருள் இல்லாமலா இருக்கும்? அப்படி நெனச்சுக்க வேண்டியது தான்.

   'என் ஜன்னலுக்கு வேர்க்கும்' என்று வைரமுத்து கவிதை எழுதிவிட்டு அதற்கு பொருள் உண்டு என்று சாதித்தது நினைவுக்கு வருகிறது.

   Delete
  3. மேடம் கீத சாம்பசிவம் பதம் பிரித்துப் பொருள் சொல்லி யிருக்கிறாரே (நன்றி குவிகம் என்றும் எழுதி இருக்கிறார்.இதனால்தான் நான் தலைப்பிட்டிருக்கிறேன்கற்றது கடுகளவு
   பெயர் வந்து விட்டால் ஜன்னலுக்குஎன்ன எதற்கெல்லாமோ வேர்க்கலாம் சாதிக்கலாம் மனதில் பட்டதைக் கூறியதற்கு நன்றி சார்

   Delete
 14. இதே போல் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரமும் உள்ளது. அதை மாலை மாற்று என்பார்கள். மேற்குறிப்பிட்ட அருணகிரியாருடையது யமகம் என எண்ணுகிறேன். திருஞானசம்பந்தரின் இந்தப்பாடலைப் பாடகி திருமதி சௌம்யா அவர்கள் மிக அழகாகப் பண் அமைத்துப் பாடி இருக்கிறார்.

  http://shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm

  ReplyDelete
  Replies
  1. பாடியவரின் சுட்ட் இல்லையே நான் இதுவரை கேட்காதது

   Delete
 15. http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=31170&padhi=117 மூன்றாம் திருமுறையில் காணலாம்.

  ReplyDelete
 16. அறியாத கதையினை அறிந்து கொண்டேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஏதோ இணையத்தில் கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன் நன்றி சார்

   Delete
 17. அதிகமான விவாதம், ஆனால் தலைப்போ கற்றது கடுகளவு. உங்கள் மூலமாக அரிய செய்திகளை அறிகிறோம் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சில விவாதங்கள் புதிய செய்திகளைக் கொடுக்கின்றதே

   Delete
 18. ஆஹா! சுவாரசியம் . பல முறை படித்து பார்த்தபின்பே சகஜமாக படிக்க வருகிறது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

   Delete
 19. இதற்கு அர்த்தம் இதுதான் என்று எழுதியவர் சொன்னால் தவிர யாராலும் இதை புரிந்து கொள்ளமுடியாது ,காதறுத்ததெல்லாம் நடந்து இருக்காது ,திருவிளையாடல் கதை போன்றதே இதுவும் :)

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் சுவாரசியம் தானே ஜி

   Delete
  2. கரெக்டு பகவான்ஜி.. அதுவும் எழுதியவர் அருணகிரியா இருந்தாத்தான் பொருளை ஏற்கவும் முடியும்.. ஆகா சரி சரின்னு காதைப் பொத்திக்கிட்டுப் போவோம்..

   Delete
  3. தமிழ் வலை உலகில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் காதைப் பொத்திக் கொள்வதில்லை நமக்கேன் வம்பு என்கிறார்கள்

   Delete
 20. அந்நாளில் எழுதிய most cryptic to be decoded வகையை சார்ந்த பாடல்கள். எத்தனை புலமை! எப்பேர்பட்ட மேதமை. பகிர்ந்ததற்கும் விளக்கியதற்கும் நினைவூட்டியதற்கும் மிக்க நன் றி.

  ReplyDelete
  Replies
  1. பிறர் விளங்க முடியாமல் எழுதுவதுதான் புலமையா மேம் வருகைக்கு நன்றி

   Delete
 21. எளிமையா பொருள் புரிய பாடலையே பலபேர் படிப்பதில்லை
  என்றால்!!!!?

  ReplyDelete
  Replies
  1. அதுநன்றாகவே தெரிகிறது இருந்தும் பொருள் புரியாமல் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் அல்லவா ஏதோ என்னால் முடிந்ததை அங்கும் இங்கும் வாசித்துப்பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்

   Delete