கந்தனிடம் ஒரு கேள்வி
----------------------------------------
வலைப் பதிவுகளில் நாளும் முருகனைப் பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன காலத்துக்கு ஏற்ற பதிவுகள் நேற்று திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் இன்று சஷ்டி எனக்கும் முருகனைப் பிடிக்கும் நான் படித்த கதைகளில் இருந்து திரட்டியவை என் பாணியில் பக்தியாகவும் ஒரு வேளை தென்படலாம் முன்பு நான்
எழுதிய ஃப்லோ இப்போது இல்லை என்கிறார் ஏகாந்தன் சரியென்றே தோன்று கிறது அதனால் என்ன முன்பு எழுதியதையே மீண்டும்
வெளியிடலாமல்லவா
நாளும் என் நினைவிலும் நாவிலும்
வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
ஐயா, எனக்கொரு ஐயம்—எனக்குனைப்
பிடிக்கும் ,உனக்கெனைப் பிடிக்குமா.?
நாளும் நெறி தவறி குணங்கெட்டு
கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
“ சரவண பவ “ என எழுதி –
“ முத்தை திரு பத்தித் திரு நகை “என
அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
புகழ் பாட அருள் புரிந்தாயே
எனக்கென்ன செய்தாய் நீ. ?
மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
வாய் பேசாது ஊமையாய் நின்ற்வருக்கு
வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே
எனக்கென்ன செய்தாய் நீ. ?
கந்தா.! உன் புராணம் பாட வந்த
கச்சியப்ப சிவாச்சாரியருக்கு
எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி
“ திகட சக்கர செம்முக மைந்துளான் “
இலக்கணப் பிழை கொண்ட தென்று
குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
சோழ நாட்டு வீர சோழியம் என்ற
இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே,
எனக்கென்ன செய்தாய் நீ. ?
மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
மருகா, மாயையில் கட்டுண்டு மனம் பிதற்றும்
எனக்கென்ன செய்தாய் நீ .?
முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த
என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்
உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை
அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்
!
முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் போன்ற பதிவுகள் சிலருக்கு நினைவுக்கு வரலாம்பதிவுகளைப் படிக்க சொடுக்கவும்)
(ஐயோ என்பது யமனின் மனைவி பெயர் )
>>> நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
பதிலளிநீக்குவேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்?.. <<<
அன்பின் ஐயா அவர்கள் கேட்டிருக்கின்றார்கள்..
அவர்களுக்கு என்னென்ன செய்தாயோ ..
அடியேனுக்குத் தெரியது..
ஆயினும்
மாட மாளிகை கூட கோபுரம் என,
எல்லாவற்றையும் விட
என்னை நலமுடன் நோய் நொடியின்றி
வைத்திருக்கின்றாயே!..
அது ஒன்று போதாதா!..
அடியேன்,
துரை செல்வராஜூ..
நோய் நொடிகள் என்பது வரும்போகும் இல்லதபோது இறைவன் அருள் என்றும் வரும்போது எனக்கு மட்டும் ஏன் என்று புலம்புவோரும் உண்டுதானே சார்
நீக்குபடித்தேன்... ரசித்தேன்...
பதிலளிநீக்கு"எனக்கென்ன செய்தாய் நீ. ?" - என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... 'நமக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவோம்' அல்லவா?
நலத்துடன் வைத்திருக்கிறார்... சந்தோஷமான குடும்பம். உணவு, உடை, இருப்பிடத்துக்குக் குறையில்லை. வேறு என்ன வேண்டும்? கந்தவேள் நம்மை நல்ல உடல் நலத்துடன் வைத்திருந்தால் போதாதா?
நமக்கும் கீழே உள்ளவர் கோடி அவர்கள் எல்லோரும் ஏன் அப்படி என்று கெட்டால் அதற்கும் வ்யாக்கியானம் கூறாஉவோரும் உண்டு சார் உடல் நலம் இச் நாட் எ பெர்மனெண்ட் திங்
நீக்குஅவன் எதுவும் செய்யலைன்னா இந்தப் பாடலே வந்திருக்காது! இதுவே அவன் அருள் தானே! எனக்கெல்லாம் இம்மாதிரி பாடும் திறனை அவன் கொடுக்கலை! அதிலிருந்து தெரிகிறது! உங்களுக்கு அவன் எல்லாமும் செய்திருக்கிறான் என! :)))) இதுக்கு மேலே என்ன வேண்டும்?
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் என்றால் அதற்கும் வியாக்கியானங்கள் வரும் இப்போது என்னாலும் இப்படியெல்லாம் எழுத முடிவதில்லையே அவன் அருள் போய் விட்டதோ
நீக்குஇக்கவி எழுதும் ஆற்றலைக் கொடுத்த கந்தனுக்கு நன்றி சொல்லலாமே ஐயா.
பதிலளிநீக்குஇக்கவி எழுதும் ஆற்றலுக்கு அவனுக்கு நன்றி என்று சொல்லி விட்டால் போதுமா மனம் நம்ப வேண்டாமா ஜி
நீக்குதமன்னா - 3
நீக்குஜி எம் பி ஐயா... எனக்கொரு டவுட்டூஊஊ... உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா? இல்லையா?:)... உண்மையை மட்டும் சொல்லவும் :)...
பதிலளிநீக்குநீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி அதிராவைக் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? எல்லாருமே இரண்டு குணங்களும் கலந்தவர்கள்தானே... கடவுள் இருக்கு என்ற நம்பிக்கை, அப்புறம், கடவுள் இருந்தால் இவையெல்லாம் ஏன் நடக்கிறது என்ற அவ நம்பிக்கை இரண்டும் கலந்ததுதானே சிந்திக்கின்ற மனித மனம்?
நீக்குநீங்க சொல்வது சரிதான் நெல்லத் தமிழன், அது நம்போன்றோருக்கு..., ஆனா ஐயாவின் விஷயத்தில் அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அவரின் பேச்சுக்களில் கடவுளை நம்பாமல் அனைத்தும் மூட நம்பிக்கை என்பதுபோலப் பேசுகிறார்...
நீக்குஆனா அவரின் பொடி லங்குவேஜ் ஐப் பார்த்தால் அவருக்கே தெரியாமல் கடவுளை நம்புகிறார்... இப்படித்தான் எனக்குத் தோணுது:)..
உங்ஜளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது அதிராவின் அதிரடிக் கேள்வி பகுத்தறிவு பெரியாரிடம் யாரோ கடவுள் உங்கள் முன் வந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டனராம் அவரும்கண் இமைக்காமல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிச் செல்வேனென்றாராம்
நீக்குநெத நீங்கள் இப்போது சிந்திக்க ஆரம்பித்துளீர்கள் என்று தோன்றுகிறது
நீக்குஅதிரா என் எழுத்துக்களையும் என்னையும் புரிந்து கொண்ட விதம் அது. நான்கடவுள் பெயரால் செய்யப்படும் மூடப் பழக்கங்களையே எதிர்த்து வருகிறேன் ஒருவனுக்கு தன்மேல் நம்பிக்கை இல்லாமல் கடவுள் பெயரைச்சொல்லி பாவிக்கும் மூட வழக்கங்களையே எதிர்த்திருக்கிறேன் உதாரணமாக என்வீட்டிலொரு தேவைஇல்லாத மரம்கட்டடத்துக்கே பங்கம் விளைவிக்கும் என்று தோன்றியபோது அதைவெட்ட ஒருவரை அணுகினேன் அது சாமிமரம்வெட்டினால் உயிருக்கு ஆபத்து என்றார் பின் நானே அரிவாளைவாங்கி வெட்டத்துவங்கினேன் எனக்கு ஏதும் ஆகவில்லை இது நடந்து ஆயிற்று இருபது வருடங்கள்மூட நம்பிக்கைகளை ஸ்பேட் இஸ் எ ஸ்பேட் என்று சொல்ல என்றும் பொடி வைத்துச் சொல்வதில்லை
நீக்குகில்லர் ஜி தம வாக்குக்கு நன்றி
நீக்குஎனக்கென்ன செய்தாய்?!
பதிலளிநீக்குஇப்படி கேள்வி கேக்குமளவுக்கு அறிவை கொடுத்திருக்காரே
இப்படி நம்புவதும் என் அறிவுக்கு சரியாப் படவில்லை
நீக்கு
பதிலளிநீக்குஇப்படியுமா ஒரு கேள்வி?
எனக்கென்ன செய்தாய் நீ
என்கிறீர் எனதருமை முருகனை
ஏறிட்டுப் பார்த்து
உமக்கு மட்டும் செய்யாமல்
ஊருக்கெல்லாம் செய்தானா
பன்னிரு விழிகளிலே
பரிவுடன் ஒரு விழியால்
கனிவுடன் உமைப் பார்த்தே
காத்தருள்கிறானே நாளெல்லாம்
எப்படித்தான் தெரியாமல்போயிற்றோ
எனக்குனைப் பிடிக்கும்
உனக்கெனைப் பிடிக்குமா என்கிறீர்
உமைத்தான் உவகையோடு
உளமாறப் பிடித்திருக்கிறான்
உமையாளின் அழகு மகன்
உமக்குள்ளேயே புகுந்து பாரும் புரியும்
எனக்கென்ன செய்தாய் என்றே
எப்படி இப்படிக் கேட்டுவிட்டீர்
கேள்வி கேட்பது எளிதுதான் ஐயா
வேள்வியாகிய வேலவனின் பக்தியில்
நாள்தோறும் புடம்போட்டுப் பாரும் மனதை
அவனும் தெரிவான்
அதற்கு மேலும் தெரியும்
அவன்தான் சொல்லச் சொன்னான்
அடியேனுக்குத் தெரியாது வேறொன்றும்..
**
////அவன்தான் சொல்லச் சொன்னான்
நீக்குஅடியேனுக்குத் தெரியாது வேறொன்றும்..
**////
ஹா ஹா ஹா சூப்பர்.... அவரின்றி ஓரணுவும் அசையாதே:).... இப்போ ஐயா வந்து இதுக்குத் திட்டுவார் எனக்கு ஹா ஹா ஹா:)..
என் பதிவு உங்களிடமிருந்து ஒரு கவிதையை வரவழைத்து விட்டது பாராட்டுகள் கதையில் படித்த முருகனின் வெளிப்பாடுகளே நான் எழுதுவது சூரனை வேலால் இரு கூறாகப் பிளந்து ஒரு பாகம் சேவலாகக் கொடியிலும் மறுபாகம் மயிலாகதப் வாகனமாகவும் ஆக்கினான் என்பது கதை அதை படித்தபோது எழுந்த கேள்வியும் எழுதி இருக்கிறேன்
நீக்குதோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !............
பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? . கதைகளையும் நிஜங்களையும் ஒன்று சேர்க்க மனமொப்புவதில்லை சார் எல்லாம் தெரிந்தவனுக்கு இது கூடத்தெரியவில்லையா
எல்லாச்செயல்களுக்கும் தனக்கும் எந்த பொறுப்பும் இல்லை என்றுநினைப்பதையே பலைடங்களி கூறி இருகிறேன்
நீக்கு’கந்தனிடம் ஒரு கேள்வி’ -ஐ நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்களது கவிதையைப் படித்தவுடன் மனதில் தோன்றியதை வேகமாய் வடித்து அனுப்பினேன் ..
பதிலளிநீக்கு"பன்னிரு விழிகளிலே
நீக்குபரிவுடன் ஒரு விழியால்
கனிவுடன் உமைப் பார்த்தே"
மனதில் பதிந்த பாடல்களையோ வரிகளையோ ஒதுக்கிவிட்டு கவிதை எழுதுவது கடினம். எனக்கு ஞாபகம் வந்த பாடல், ( நான் அப்போ அப்போ முணுமுணுப்பது)
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும் - முருகா
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும் - வாழ்வில்
இடரேதும் வாராது எப்போதும்
சீர்காழியின் குரலில் இறையுணர்வைக் கொண்டுவரும் பாடல்
ஏகாந்தன் நன்றியும் பாராட்டுகளும்
நீக்குநெத இந்தமாதிரி பாடல்கள்மனடில் நெகிழவை உண்டாக்கவல்லது இதுவே தமிழில் இறைப்பாடல்களுக்குக் காரணமோ
நீக்கு>>> பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
பதிலளிநீக்குஎன்னை நீ பார்த்தாலும் போதும் - வாழ்வில்
இடரேதும் வாராது எப்போதும் - முருகா..<<<
எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்..
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் உருகுதடி கிளியே ஊனும் உருகுதடி
நீக்குமாடு மனை போனால் என்ன மக்கள்சுற்றம்போனால் என்ன கோடிச் ச்டெம்பொன் பொனாலென்னகிளியே
குறு நகை போதுமடி ஐயன் குறு நகைப் போதுமடி
இப்பாடல் என் தந்தைக்குப் பிடித்தது
"தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவது வயதானவர்களின் பொழுதுபோக்கு" என்று எங்கள் குடியிருப்பில் ஒரு பெண்மணி கூறினார். (தன் கணவனாரைப் பற்றித்தான் அவர் கூறினாராம்...என் மனைவி சொன்னது.)
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னையில் இருந்து.
ஒரு வேளை உங்களைப்பற்றிய மறைமுகக் குறைபாடோ
நீக்கு@ நெல்லைத்தமிழன்:
பதிலளிநீக்குபன்னிரு விழிகளிலே… என ஆரம்பிக்கும் பாடலில் உருகிக் கரைந்திருக்கிறார் கோவிந்தராஜன். அவர் பாடிய பக்திப்பாடல்களில் எனக்குப் பிடித்த பாடலிது. அந்த வரிகள் இடையில் நினைவில் தட்டியதால் இணைந்துகொண்டன அவையும் கவிதையோடு.
அது கவிதைக்கு அணி சேர்த்தது போல் அமைந்தது.
நீக்குஅப்படீன்னா சரி !
பதிலளிநீக்குரசனை. பதிவும் ரசனை. பதிவை விட பின்னூட்டங்கள் அதிக ரசனை. அதிராவின் பின்னூட்டம், நெல்லையின் விளக்கங்கள், ஏகாந்தன் ஸாரின் எசப்பாட்டு... எல்லாமே ரசனை.
பதிலளிநீக்குரசனைகள் பலவிதம் நன்றி ஸ்ரீ
நீக்குபதிவினைவிட பின்னூட்டங்கள் அதிகம் கவர்ந்தன ஐயா
பதிலளிநீக்குநண்பர் ராம் அவர்களும் இதோ பதில்தான் கொடுத்திருக்கிறார்
என் கருத்தும் அதுதான்
அருமை
அருமை
பதிவுகள் கலந்துரையாடலை வளர்க்க வேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி சார்
நீக்குசார், உங்கள் பதிவும், எல்லோருடைய பின்னூட்டங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குகந்தனின் புகழை என்ன செய்தாய் என்ன செய்தாய் என்று கேட்டு பக்தியாளர்களை விட அதிக சிறப்பாய் முருகனின் புகழை பாடி விட்டீர்கள். கந்தசஷ்டி சமயத்தில்.
ஏகந்தன் அவர்கள் பகிர்ந்த பாடல் மிகவும் பிடித்தது நேற்று முழுவதும் டி.எம்.எஸ் முருகன் பாடல்கள் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் தான் கேட்டு மகிழ்ந்தேன்.
நீங்கள் சொன்ன வள்ளி கணவன் பாட்டும் மிகவும் பிடிக்கும்.
எதையும் பாசிடிவாகக் காணும் இந்தக் குணம் பிடித்திருக்கிறது நன்றி
நீக்குகந்தனை நோக்கி இப்பித்தன் என்று நீங்கள் கூறிக்கொண்டாலும் அந்த சொல் அனைவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். கந்தப்பெருமானுடன் அணுக்கமாக நீங்கள் பேசுவதைப் பார்த்தபோது சிவபெருமானின் தோழர் சுந்தரர் நினைவிற்கு வந்தார்.
பதிலளிநீக்குஇதையெல்லாம் பொயெடிக் ஜஸ்டிஸ் என்று குறலாம் தானே வருகைக்கு நன்றி சார்
நீக்கு"தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
பதிலளிநீக்குபொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்?"
என்ற கேள்வி அருமை - அதற்கான
பதில்களும் எம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
அதற்கும் பின்னூட்டங்களில் பதில் எழுதி இருக்கிறார்களே
பதிலளிநீக்குதாம்தமாக வந்ததால் பல நல்ல கருத்துகளை ரசிக்க முடிந்தது. உங்கள் பதிவு அருமை! மனதிற்குப் பிடித்த முருகன் என்பதாலோ என்னவோ!!
பதிலளிநீக்குஅதிராவின் கேள்வி, நெ தவின் கருத்து அப்புறம் ஏகாந்தன் சார்/சகோவின் வரிகள் என்று அசத்தல். அனைத்தையும் ரசித்தோம் ஸார்.
----இருவரின் கருத்தும்...
என் பதிவுகள் பலருடைய கருத்தாடல்களையும் தாங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது லேட்டாக வருவதால் உங்கள் கருத்து தெரிய முடியலை வருகைக்கு நன்றி
நீக்கு